தமிழில் எழுதிக் கொண்டிருப்போர், தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான இனவாத ஒடுக்கு முறையையோ, அந்த மக்களின் அனைத்து ஜனநாயகக் கோரிக்கைகள் போராட்டங்கள் தியாகத்தைப் பற்றி அக்கறையோ, எழுத்தையோ முன்வைக்க முடியாது, தமிழ் மக்களில் இருந்து அன்னியப்பட்ட தமது தனிமனித வக்கிரங்களால் படைப்புக்களை இலக்கியங்களாக பேந்து விடுகின்றனர்.

 

 

மக்களின் துயரம் மலையானது அதில் ஒரு சிறு துளியைக்கூடப் படைப்பாக்க முடியாது சூனியவாதத்துக்குள் சென்றுள்ள நிலையில் புதிதாக அதற்குள் இருந்து இன்று ஒரு இலக்கிய மரபு உருவாகத் தொடங்கி உள்ளது. இது கவிதை, சிறுகதை, ...... சஞ்சிகை, மலர்கள் என புறப்பட்டுள்ள போக்கு அவர்களின் இருப்புப் பற்றி நிலை நிறுத்தலுடன் நீடிக்கவும, சீரழியவும் என புலம் பெயர் இலக்கிய களம் சீரழிந்துள்ளது.

ஆரம்பங்களில் கோட்பாடு பற்றிய விவாதங்கள, சந்திப்புகளில் தொடங்கி, பின் கூடி வாழும் கோட்பாட்டை தொழிலாக்கியும, இன்று அதையும் கடந்து ஏகாதிபத்திய சீரழிவுப் பண்பாடுகளை உயர்த்தத் தொடங்கி விட்டனர்.

குறிப்பாக பெண்ணியம் தொடர்பாக வெளிப்பட்டு வரும் ஆணாதிக்க வக்கிரத்தை பெண்ணியமாகக் காட்டியும, அங்கீகரிக்கும் போக்கும, பெண்ணியம் கதைத்தோர் தொகுத்து வெளியிடும் போக்கும, அதை மாற்றுக் கருத்தின் ஜனநாயகமாக காட்டி பின் ஒழித்து நறுமணம் தெளித்து சாமரை வீசுவதும் தொடக்கப்பட்டு விட்டது. நாம் அண்மையில் வெளியாகியவற்றில் சில வக்கிரங்களைப் பார்ப்போம்.

நோர்வே சுவடுகள் 75 இல் "சார்ள் து கோல் விமான நிலையம்" என்ற கவிதையில் சுகன்

"நோர்வேப் பெண்கள் அழகானவர்களா?

பேரழகிகள் அல்ல, ஒரே ஒருதரம் படுத்தவுடன்

களைத்துப்போய் விடுகிறார்கள, பிரஞ்சுப் பெண்கள்

அப்படியல்ல, ஓரிரவில் ஆறுமுறை படுத்தும் களைக்க மாட்டார்கள்"

சுவடுகள் 75 இல் "ஒஸ்லோவில் இருந்து துரம்சோவிற்கு" என்ற கவிதையில் சுகன்

"விமானப் பணிப்பெண்ணே, குடிப்பதற்கு

ஏதாவது தா

என்ன குடிக்க விரும்புகிறீர்கள்?

உனது முலைப்பால் ......."

அம்மா இலக்கம் 5 இலும் , இந்தியா ருடெ இதழ் மே 13, 1998 இல் நா.கண்ணன் பெண்பற்றிய ஆணாதிக்க வக்கிரம் "நெஞ்சு நிறைய" என்ற சிறுகதையில் "எனக்கு பாதி உயரம் தான் இருந்தால் இந்த ஜேர்மனியருள் பனை உயரத்திலிருந்து, பருத்திச்சேடி உயரம் வரை பல தினுசுகள் இருக்கின்றன. எதிர்க்க வருபவரை நாலுஅடி முன்னாலே நின்று பேசவைக்கும் பருத்த,குத்திட்டி முலைகளில் இருந்து, பூதக் கண்ணாடிபோட்டுத் தேடும் மார்பகம் உடைய மங்கையர் பல தினுசுகளிலும் இங்குண்டு. பொலாய் பணங்கிழங்கு பிழந்தது போன்ற மெல்லிய உதடுகள் தான் அதிகம் என்றாலும, ஆபிரிக்க தடித்த உதடுகள் கண்ணில் படுவதுண்டு ........... இந்த வெள்ளை நிறம் இல்லை என்றால் இவர்களை இந்தியாவிற்கு கூட்டிச் சென்று தாராளமாய் பரிசம் போடலாம். ........... நான் கிளம்பு முன, அவள் என்னிடம் வந்து ஆரத் தளுவிக் கொண்டாள். மிக மிக இறுக்கமாக .......... ஆண்டாள் நாச்சியார் மொழியில் செல்லவது போல் "குற்றமற்ற முலை தன்னை குமரன் கோலப் பனைத் தோளோடு அற்ற குற்றம் அவைதீர அனைக்க அழுக்கிக்கட்டீரே" என்று கட்டிக் கொண்டாள். ........... "சரி நாங்கள் வருகிறோம் .... அடுத்து ஒரு டிஸ்கோவிற்குப் போகவேண்டும, யாராவது வாரீர்களா" " என பலவாகத் தொடர்கிறது.

சுகன் தொகுத்த இருண்ட "இருள் வெளி"யில் "அனுபவம் தனிமை" என்ற சிறுகதையில் அரவிந் அப்பாத்துரையின் வக்கிரத்தைப் பார்ப்போம்.

"சினிமா எக்ஸ்பிரஸ் என்ற திரையுலக வாழ்க்கையை விமர்சனம் செய்யும் பத்திரிகையை புரட்டிப் பார்த்தால் கமல, ரஜனி, சிவாஜி, பாரதிராஜா, மற்றும் புதுமுகங்களின் புகைப்படங்களாவது அவள் கவனத்தை ஈர்த்தன. என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதைப் படிக்க அவளுக்கு ஆர்வமும் இல்லை, இஸ்டமும் இல்லை. .......... "ஏன் எனக்கு சத்தமாகப் பேசி நித்திரையைக் குழப்புபவர்களை போய் பார்த்து வாயை மூடுங்கள் என்று சொல்ல துனிச்சலில்லை" தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள் "அடுத்தமுறை அப்படி நடக்கும் போது, நிச்சயமாக போய்ச் சொல்வேன்." அப்படி பேசிக் கொண்டிருக்கும் நபர்கள் கொட்டவர்களாக இருந்து தன்னை பலாத்காரம் செய்து விட்டார்கள் என்றால்? விஜிக்கு பயமாக இருந்தது..... விஜியால் தூங்க முடியவில்லை. அத்துடன் டீவியில் பார்த்த ஆபாசக் காட்சிகள் வேறு அவளுக்கு காம உணர்ச்சியைக் கிழப்பிவிட்டிருந்தன. திடீர் என விசித்திரமான எண்ணங்கள் விஜியின் மனதில் தேன்றின பக்கத்து ரூமில் பேசிக் கொண்டிருக்கும் மூன்று பேரோடும் உடலுறவு கொள்ள வேண்டும் எனும் ஆசை  அவள் மனதில் தேன்றியது. எப்படி அவர்களைக் கோட்பது ? மெல்ல கட்டிலில் இருந்து எழுந்தாள் கதவை திறந்து பக்கத்துக் கதவைத் தட்டினாள். அந்த அறை ஒரே புகைமூட்டமாக இருந்தது. "என்ன வேண்டும் பெண்ணே?" என்றான் அவன். "உங்கள் மூன்று பேருடனும் உடலுறவு கொள்ள வேண்டும்" எனக் கூற விஜிக்குத் தைரியமில்லை " என்று தொடர்கிறது கதை.

அடுத்து சரிநிகர் 149 இல் " வக்கற்றத் தாவும் முற்போக்காளார்!" எனக் கிண்டல் செய்து எழுதும் நட்சத்திர செவ்விந்தியன் "ஒரு பாலுறவு பற்றி ஒரு பிற்போக்கு "தமிழ் எழுத்தாளர்" கீழ்தரமாகவே இயற்கைக்கு ஒவ்வாததாக கூறுவது ஆச்சரியப்படக் கூடியதல்ல. ....... மனிதர்கள் உருவாகிய காலத்தில் இருந்து பாலுறவும் இருந்து வருகிறது. இது இயற்கையானது பிறப்பினால் வருவது. ஓருவர் ஒரு பாலுறவுக்காறராகப் பிறப்பதற்குரிய ஒரு நிகழ்தகவு 0.03-100 நபர்களில் மூவர் (0.3 வீதம்) என்ற பாலியற் கல்வி கூறுகிறது." என்கின்றார்.

எக்சில் இரண்டில் "மதிப்பு மறுப்பறிக்கை" என்ற கதையில் செக்ஸ் மனநோயாளி சுகன் கூட்டுக் கலவியைப் போற்றி "வழமையான நித்திரை இன்மைக்கு குளிசை போடுவதற்குப் பதில் அன்று ஏதாவது செய்தாக வேண்டி இருந்தது. முதலில் சுவரிற்கு கையால் இரண்டு தரம் குத்தினேன். பக்கத்து றூம் கிழவன் ஸாபிக் வந்து கதவைத் தட்டினான் என்ன? "கொஞ்ச நாளைக்கு ஆரும் அரேபியப் பேரழகியை என்னோடு தங்குவதற்கு உண்ணால் ஒழுங்கு பண்ண முடியுமா?" ........ "பெரிய முலைகளுள்ள பெரிய பெண்ணவள் தெருவில் நடந்து வந்தால் முலைகள் "இந்தாபிடி இந்தாபிடி" என்று என்னைக் கேட்பது போல் இருந்தது." .......... "சொன்னால் நம்ப மாட்டாய் இரவு முழவதும் ஒரே கூட்டுக் கலவி ..... இந்தப் பெண்களுக்கு  கூட்டுக் கலவிக்கு நல்ல விருப்பம் தான் ....... இல்லையா? உங்கள் புருசனுடன் நீங்கள் சந்தோசமாக இல்லை என்பதற்காக .......உனக்கு எப்படித் தெரியும் நானுப் புருசனும் தொடர்ந்து சண்டை என்று ......... உங்கள் மீது கொண்ட அன்பின் விளைவால் எனக்கு அப்படி ஒரு எண்ணம் ஏற்படுகிறது போலும்......... நீ முதலில் எனது --------- சூப்பு நான் பிறகு உனது சப்பாத்தைத் துடைக்கிறேன் .......... வேறு எல்லோரையும் விட மகிழ்சியாக அதியற்புத சந்தோசத்தில் நீங்கள் சுகித்திருக்கும் அந்த இனிய நாளுக்காக ........ ஒழுங்கையில் இருந்து வந்த ஒருத்தி நீ உன்ரை அம்மாவிற்கு முன்னுக்குச் செய்தால் என்ன பின்னுக்குச் செய்தால் என்ன ........ அங்கு வந்த கழுதையுடன் ஒரு நாள் உடலுறவு கொண்டான் ...... இருவரும்  அவனது ஆடைகளைக் களையத் தொடங்கினோம். சாந்தி என்னை களையத் தொடங்கினாள்" எனத் தொடர்ந்து செல்லம் வக்கிரங்கள்.

இன்று இப்படி பலர் எழுதத் தொடங்கி உள்ளனர் யமுனா ராஜேந்திரன் ஓரினச் சேர்கை முதல் எல்லாச் சினிமாக் குப்பைகளையும் மறுவாசிப்பு, வேறுபடுத்திப் பார்த்தல, பன்முகத் தன்மை என்பதன் ஊடாக அதில் உள்ள ஆணாதிக்க வக்கிரங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரிக்கின்றனர்.

ஆணாதிக்க வக்கிரங்களை, இந்த ஆணாதிக்க உலகம் கொடுத்த கொடைகளை பெண்விடுதலை அங்கமாக சித்தரிப்பதில, காட்டுவதில் இன்று இவர்கள் மட்டுமல்ல இவர்களுடன் சேர்ந்து பலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பிரசுரிப்பதும, கூடி விவாதிப்பதன் மூலம, இன்று ஆதரித்து பெருமை பேசி நிற்கின்றனர்.

இது தமிழிற்குப் புதிதா? இல்லை. ஈழத் தமிழர்களுக்கு மட்டும் புதியது. இப்புதியது தமிழ் மக்கள் ஜனநாயகக் கோரிக்கை மீதும, வர்க்கப் போராட்டத்தின் மீதும, அதை ஒட்டிய பெண்ணிய விடுதலை மீதும, சாதி ஒழிப்பு போராட்டத்தின் மீதும, சுயநிர்ணய போராட்டத்தின் மீதும் அதை அடைய இதை முன்வைப்பதாகக் காட்டும் போக்கில்  தான் இது புதியதாக உள்ளது.

இந்தியச் சினிமாவில் பாலச்சந்திரன, பாலுமகேந்திரா, முதல் எல்லா சினிமாத் தயாரிப்பாளர்களும் ஒரு பெண்ணின் மார்பகம, அவளின் செக்சை காட்டாததையா இவர்கள் முன்வைக்கிறார்கள். அதையே முற்போக்கில் வைக்கின்றனர்.

சிலுக்கு கமார முன் அறிமுகமாகியதை விடவா சுகன, நா.கண்ணன, அரவிந் அப்பாத்துரை முன்வைக்கின்றனர். இல்லை. அதையே மீள வாந்தி எடுக்கின்றனர்.

கூட்டுக்கலவி, ஓரினச்சேர்க்கை, சகோதரர் சகோதரி உறவு, பெற்றோர் பிள்ளை உறவு, காட்டும் மார்பகம, பலபேர் உறவு என்பது இச்சமூகத்தில் காலாகாலமாக இருக்கின்றது. இவை அரசு மாளிகைகளில, நிலப்பிரபுக்களின் மனைகளில, வணிகர்களின் மாடமாளிகைகளில, பிரபுக்களின் வீடுகளில் இருந்து இன்று டிஸ்கோக்களில, மசாச் நிலையங்களில, சினிமாக்களில, நீலப்படங்களில, .......... என பணக்காரர்கள் எங்கெங்கெல்லாம் குந்தியபடி சுகித்துக் கிடக்கின்றானோ அங்கெல்லாம் இது உள்ளது. இல்லையா? இதை மறுக்க முடியுமா?

இது சிற்பம, ஓவியம, சினிமா, நீலப்படம, ........ என எங்கும் உள்ளது. இன்று தமிழில் இதை முன்வைப்பவர்கள் டிஸ்கோ முதலாளிகளும, நீலப்படத் தயாரிப்பாளர்களும் தான் பெண்விடுதலையினதும, ஜனநாயக வாதிகளினதும் உண்மையான பின்நவீனத்துவ கட்டுடைப்பு நபர்களாக இருக்கின்றனர்.

இங்கு குடும்பம் உருவாகமுன் இருந்த கூட்டு பாலியல் நுகர்வு அச்சமுகத்தின் அங்கமாக இருந்தது. அதைக் குறித்து அல்ல இக்கட்டுரை.

அண்மையில் பிரான்சில் இருக்கும் ரொட்ஸ்கிய அமைப்புப் போல்சவிக் பத்திரிகையை வெளியிடுவோர் ஓரினச் சேர்க்கை, கூட்டுக் கலவி, சகோதரர் சகோதரி, தாய் தந்தையருக்கிடையிலான உறவுகளை தனிநபர் பிரச்சனையாக அங்கீகரித்து இது இன்பத்தின் செயலாக வருணித்து நியாயப்படுத்தினர்.

தனிநபர் ஜனநாயகம, தனிநபர் இன்பம, என்ற எல்லைக்குள் மட்டும் சமூகத்தை மதிப்பிடும் போகும் சமூகத்திற்கு முதல் தனிநபர் என உயர்த்தும் இந்த கடைந்தெடுத்த போக்கு இன்றைய உலகம் தழுவிய முதலாளிகளின் நிலையை மீள வைப்பதாக இருக்கிறது.

சுகன் போன்றோருக்கு ஒரு பெண்ணை யாராலும் கொடுக்க முடியும். எனெனின் அவரின் அரசியல, கவிதை எல்லாம் முடிவுக்கு வந்து விடும். அந்தளவுக்கு மிகவும் வக்கிரமான செக்ஸ் மனநோயாளியாக அ.மார்க்ஸ் அருள் பெற்று உலாவுபவர் தான் இவர்.

ஓரு பெண்ணை பாலியல் பலாத்காரப் படுத்த முனைபவன் எந்த விதத்திலும் இவர்களை விட வக்கிரமானவன் அல்ல. ஏன் எனின் இவர்களின் எழுத்துக்கள, செயல்கள் அரசியல் வன்முறை பாடத்தைக் கற்று தான் அவன் ஒரு வன்முறை பாலியல் பலாத்காரப் படுத்துபவனாகத் தோற்றம் பெறுகிறான். அவனுக்கு முன்னால் உள்ள நெருக்கடியான செக்ஸ் நுகர்வு இன்மையுடன் சேர்த்து, திணிக்கும் வக்கிரமான அசிங்கங்கள் அவனை மிருகமாக்கின்றது. இதில் அவன் குற்றவாளியாக இருப்பது என்பது ஒரு பங்குதான். மாறாக இதற்கான உணர்ச்சியைத் துண்டும் எழுத்துக்கள, அதை ஒட்டிய சமூக அமைப்புத்தான் முதல் குற்றவாளியாக உள்ளது. இவர்கள் தான் மிக மோசமான ஆணாதிக்க நடத்தை கொண்ட வண்முறையாளர்கள்.

ஓரு பெண்ணின் இயற்கையைப் படைப்பு, இலக்கியம, அழகு என்பதன் ஊடாக அவளை செக்ஸ் பிண்டமாக, கேவலமாக காட்டி ஆணாதிக்க வக்கிர வரைவிலக்கணத்திற்கு போதை ஏற்றும் எல்லா ஆணாதிக்க செக்ஸ் நோய் எழுத்துக்களும, வருணனைகளும் மிக மோசமான சமுதாய இழி பிறவிகளால் முன்வைக்கப் படுபவைதான்.

பல்கலைக்கழக ராக்கிங் பெயரால் ஆண்கள் பெண்களிடம் கேட்கும் அனைத்து ஆணாதிக்க வக்கிர  வன்முறையை இலக்கியத்தின் பெயரால் தனிமனித உரிமையின் பெயரால் மேற்கூறிய படைப்பு நேரடியாக, மறைமுகமாகவும் நியாயப்படுத்தி உள்ளது. அங்கு "உனது சைஸ் என்ன, என்ன உள்ளாடை போட்டிருக்கிறாய, எப்படிக் குளித்து விட்டு உடுப்புப் போடுவாய, செய்து காட்டு, உள்ளடை நிறத்தை தெரிந்து கொண்டால் அதைக் கேட்பது, காதலன் உண்டா?, என்ன கதைப்பான, ........." என நீளும் இந்த வக்கிரத்தை இன்று முற்போக்கு பெயரால் மீள வைக்கப்படுகிறது. இதையொட்டி 1985 இல் வெளியான ஒரு துண்டுப் பிரசுரத்தை சஞ்சீவி 27 இல் மறுபிரசுரம் செய்துள்ளது. பார்க்க. இதைப் பின் புலம்பெயர் இவக்கிய ஆணாதிக்க கதையைப் போல் பல்கலைக்கழக மாணவர்கள் பெண்களையும, ஆணாதிக்க வக்கிரங்களையும் வருணித்து பேசிக் கொள்கின்றனர்.

வீதியில் போகும் ஒரு பெண்ணை ஆண்கள் பார்க்கும் பார்வை, கேட்கும் கேள்வி, கதைக்கும் உள்டக்கம, இந்த படைப்பாளிகளின் அதே உள்ளடக்கம் தான்.

ஐரோப்பாவில் ரெலிபோன்களில் தமிழ் பெண்களுக்கு எடுக்கும் முகம் தெரியாத (உங்களைப் போன்றோர்) கதைக்கும் விடையங்கள் உங்கள் கதைகளில, செயலில் செறிந்து போய் உள்ளது.

எங்கும் பெண்கள் பற்றிய வக்கிரங்கள் அதை ஆணாதிக்க  வாதிகள் தமது தனிநபர் உரிமை மீது, சுதந்திரம் மீது, இலக்கியம் மீது, ரசனை மீது, அரசியல் மீது, முன்வைப்பதும, பாதுகாப்பதும் தான் இன்றைய ஈழத் தமிழர்கள் மீது முன் வைக்கும் புதிய ஆணாதிக்க வக்கிரங்கள் இவை.

தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தால் கடந்த 20 வருடங்களில் இது தோன்றுவதற்கு தடையாக இருந்தது. சர்வதேச ரீதியான மாற்றங்கள் வேகம் பெறப் பெற, ஏகாதிபத்திய களம் சோவியத் சிதறலுடன் வேகம் பெற்றது. ஏகாதிபத்திய ஆணாதிக்க வக்கிரக் கலாச்சாரம் ஊடுருவ ஊடுருவ அதற்கான எழுத்தாளர்கள் தரகு முதலாளிகள் போல் உருவாகின்றனர்.

இந்த வகையில் இந்தியாவில் இந்தியாரூடே, ஆனந்தவிகடன, குமுதம, ...... எனத் தொடங்கி சினிமா இதழ்கள, சினிமாக்கள, தொலைக்காட்சி நிகழ்சிகள, அழகு ராணிப் போட்டிகள் எல்லாம் இது போன்ற படைப்பு, இலக்கியங்களை, நியாயங்களை உற்பத்தி செய்து குவித்துள்ளது குவிக்கின்றனர்..

இது போன்ற தரகுப் பிரிவுகள் ஈழ இலக்கியத்தில் உருவாகாது இருந்த போராட்ட தடையை மீறி இன்று புறப்பட்டவை தான் இந்த இலக்கியங்கள். இதற்குப் பக்க துணையாக இந்திய எழுத்தாளர் கைகோர்க்க, புலம் பெயர் சஞ்சிகைகள் தமது வக்கிரத்தை அண்மைக்காலமாக வெளிப்படுத்த தொடங்கி உள்ளன. இதை எதிர்க்கும் மார்க்சியத்தை, எதிர்க்கும் போராட்டத்தில் முதலில் கூட்டு அமைத்து தொடங்கியதே இந்த, இதன் ஆரம்பப் போக்கு.

இங்கு முதலில் கோட்பாடு அற்ற சந்திப்பு, மார்க்சிய எதிர்ப்புடன் கூடி உண்ணும் சந்திப்புகள, என தொடங்கி மேல் தட்டு ஏகாதிபத்திய கலாச்சாரத்தால் பண்பாடல, எழுத்தால் அணை கட்டி புறப்பட்டுள்ளது.

இதை பெண்களும் சேர்ந்து பாதுகாக்கும் (இனவாத அரசியலில் கதிர்காமர் உள்ளது போல்) நியாயம் பேசுவதும, அவைகளை அச்சில் ஏற்றும் போக்கு மிகக் கேவலமானது.

ஆபாசப் போஸ்டர்களை எதிர்த்து எரித்து, கிழித்து போராடிய பெண்கள் ஆனாதிக்க வாதிகளால் சிறையில் இடப்பட்டு சித்திர வதை செய்கின்றனர். இங்கு ஆபாசப் போஸ்டர்களை பெண்களே பாதுகாத்து முண்டு கொடுக்கின்றனர்.

அழகுராணிப் போட்டியை எதிர்த்து போராடிய பெண்களை சிறை செய்கின்றனர். ஆணாதிக்கக் கேள்விகள, கொச்சைப்படுத்தல்களை எதிர்த்து பெண்கள் போராட களம் காண்கின்றனர். இங்கு அவைகளை நியாயப்படுத்தி அந்த ஆணாதிக்க வனரங்கள் கூட்டுக் கலவி செய்ய திண்டு குடித்து கூத்தடிக்கவும் சுகிக்கவும் பின் நிற்காது செயல் தளத்தை தொடங்கி உள்ளனர்.

பெண்களின் மார்புகளைப் பற்றி கொச்சையாக ஆணாதிக்கமாக பெண்கள் மார்பகத்தை பிடிக்க திரிபவர்கள் என்றும, பெண்கள் எல்லோருக்கும் கூட்டுக் கலவி விருப்பம் என்றும, ........ எழுதும் வக்கிரங்களை கண்டு அதே பெண்ணியம் எனப்போற்றி பவனி வருகின்றனர்.

எதிர்ப்பவர்களின் பார்வைக்கு கோளாறு எனக் கூறி அழகுராணிப் போட்டிகளையும, கவர்ச்சி விளப்பரங்களையும, படைப்புகளை நியாயம் கற்பிக்கும் இவர்கள் ஆணாதிக்க வானரங்களின் எடுபிடிகள் தான்.

ஐரோப்பாவில் பெண்களை அரை நிர்வாணமாக உணவு பரிமாறவும, டிஸ்கோக்களில் ஆடவும, விற்பனையாளர்களாக ஆக்கியும, தொலைக்காட்சி, மற்றும் விளம்பரங்கள் பெண்ணின் முழு அரை குறை ஆடை அவிழ்புகள் எல்லாம் ஆணாதிக்க வக்கிரங்களாக, பெண்ணை செக்ஸ் பிண்டமாக நிறுவி வெளிவருகின்றது. இது தான் எம் நாட்டிலும் உள்ள நிலை.

ஆணால் இதை படைப்பாக்கின்றனர். ஐரோப்பா நீலப்படக் கதைகள் தான் சுகன, அரவிந் அப்பத்துரை கதைகள். ஓரு விமானப் பெண்ணின் தொழிலை உழைப்பை ஆணாதிக்க வக்கிரத்தால் பார்த்து, முலைப்பால் குடிக்க பார்த்த வக்கிரத்தை கண்டு எந்தப் பெண்ணியமும் எதிர்த்து போராடவோ, விவாதிக்கும் அளவிற்கு கூட கோபம் வரவில்லை ஏன்?.

பிரஞ்சுப் பெண் 5 தரம் படுத்தாலும் களைக்க மாட்டாள, எனக் கூறி சுகன் நோர்வேப் பெண்ணை ஒப்பிட்ட ஆணாதிக்கத்தைக் கண்டு கோபம் கொள்ளாதா? பெண்ணிலை வாதிகள் ஜனநாயக வாதிகளின் அரசியல் என்ன?

பெண்களை பல திணுசுகளில் வருணித்து பருத்த குத்தீட்டி, முலைகளை பூதக் கண்ணாடி போட்டு  தேடி நா.கண்ணன் முன் பல் இழித்துப் பேசும் பெண்களுக்கு முதுகெலும்பு கிடையாது என்று அர்த்தம்.

நிறம் இல்லை என்றால் பல பெண்களை இந்தியாவிற்கு கூட்டிச் சென்று பரிசம் போட முடியும் எனக் கூறிய இந்திய நாசி பார்ப்பனீய ஆணாதிக்க வக்கிரத்தை எந்த ஜனநாயக வாதியும் நிறம் கடந்து கேட்கவில்லை. ஏன்? ஓரு பெண்ணின் வஞ்சகமில்லாத அரவணைப்பை மிகக் கேவலமாக பார்க்கும் ஆணாதிக்க வக்கிரத்தை கேட்பது ஆணாதிக்கமோ?. டிஸ்கோவிற்கு போனதை ஜனநாயகமாக உயர்ந்த பண்பாடாக காட்டிய நா.கண்ணன் செயலைக் கேட்டால் ஏகாதிபத்தியக் கலாச்சாரம் கலங்கப்பட்டுவிடும் என்ற பார்ப்பனீயத்தில் நின்று பாதுகாக்கின்றனர்.

(இந்தக் கதையை எதிர்த்து 7 பேர் கையேழுத்திட்டு ஒரு துண்டுப்பிரசுரத்தை பிரசுரித்தனர். அது பின் நவீனத்துவ பன்முகத் தன்மைக்குள் என்றுசொல்லி, ஒரு துண்டுப்பிரசுர வடிவத்தைக் கூட கொச்சைப்படுத்தி நா.கண்ணனை நியாயப்படுத்தியது. பார்க்க துண்டுப்பிரசுரத்தை. இத்துண்டுப் பிரசுரத்தை விட்டவர்கள் அதைவிட மோசமாக கூட்டுக்கலவி போன்ற கதைகளை வெளியிட்டதுடன, இப்படி எழுதி வருபவர்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து தின்று குடித்துக் கூத்தடித்து சுகித்தவர்கள் போகித்தல் மட்டுமே எஞ்சியுள்ளது. ஓரினச் சேர்க்கையையும, கூட்டுக் கலவியையும் எழுத்திலும் அதையே தொகுப்பதில, ஒன்றாக வெளியிடுவதில் எல்லாம் தொடங்கி உள்ளது. எஞ்சியுள்ள நடைமுறையும் அதைச் செய்வது தான்.

அரவிந் அப்பாத்துரை இந்திய சினிமாப் புத்தகத்தைப் பார்த்து (வாசிப்பதை மறுக்கிறார்) படத்தை பார்த்து காமத்தில் காமம் கொள்ளும் வக்கிரத்தை சொன்னதையிட்டு பெண்களே  ஏனிந்த மௌனம். உங்கள் எழுத்துக்கள, சந்திப்புகள, அதற்குக் கூடிக் குலாவி சுகிக்கப் போன போதே புரிகிறது உங்கள் ஆணாதிக்க நியாயப்படுத்தலும்.

அப்பெண் மூன்று ஆணுடன் உடலுறவு கொள்ள எண்ணினால் என்று நீலப்படக் காட்சியை அங்கீகரித்து, நீலப்படம் பார்த்துடன் ரஐனி, கமல் படத்தைப் பார்த்து எற்பட்ட அந்த வக்கிர உணர்ச்சியை, பெண்கள் மீதான கொச்சைப்படுத்தலை, பெண்கள் தன்மானம, முதுகெலும்பு அற்றவர்களாக பெண்களை நீலப்பட ஆணாதிக்க செக்ஸ் பிண்டமாக வருணித்து அலட்சியப் படுத்திய ஆணதிக்கத்தை அம்பலப்படுத்தினால் உங்களுக்கு கோபம் வருகிறது இது தேவைதானா?

சுகன் பக்கத்து வீட்டுச் சுவரில் இடிக்கும் அராஜக வன்முறையை (புலிகள் இடித்தால் குற்றமோ) பிரசுரித்த எக்ஸிலின் ஜனநாயகம் எங்கே போனது. பக்கத்து வீட்டுக்காரனிடம் பெண் வேண்டும் என்று கேட்ட வக்கிரம் ஆணாதிக்கம் அல்லவோ? பெண் என்றால் வியாபாரப் பண்டமா? ஓரு ஆண் இறுமாப்போடு ஆணால்  கேவலப்படுவதை கேட்பதை எப்படி பெண்கள் கூடி மௌனமாக ஏற்றனர்? இதைப் பெண்கள் எப்படி அச்சேற்றினர்.

ஓரு அழகிய அரபியப் பெண் வேண்டும். என்று கேட்கும் போக்கு பெண் தரகர்களிடம் அதிகார வர்க்கம் கேட்கும் அதே விடையம் தான். சைஸ் முதல் வயது, நிறம் ........ என அனைத்து வகையிலும் கூறி பெண் கொண்டா எனக் கேட்டால் பெண் விடுதலையா? அது ஜனநாயக உரிமையைக் கோரும் எக்ஸிலும, அதன் பிரதிநிதிகளுக்கு தெரியாதா?

ஓரு பெண்தான் தனது முடிவை எடுக்கும் உரிமை கொண்டவள். இதை மறுத்த சுகன் அராஜக தலித் பின் நவீனத்துவ குப்பையை இட்டு மௌனம் சாதிக்கும் பிரிவு உண்மையில் மக்களின் விரோதிகள்.

இதே சுகன் வீதியில் வந்த பெண்ணின் மார்பு இந்தா பிடி இந்தா பிடி என சொல்லிச் சென்றது என்கிறார். இந்த சுகன் முன் எப்படி பெண்கள் நடக்க முடியும். வக்கிரமான கண்கள் ஒரு பெண் என்ன குடிக்கிறாய் என்றால் உன் முலைப்பால் வேண்டும் என்ற வக்கிரம, பெண்கள் எல்லாம் அந்த நாய் முன் செக்ஸ் பின்டங்கள். ஆணாதிக்க வக்கிரம் பிடித்த செக்ஸ் மனநோயாளியின் வெளிப்பாடுகள் தான் ஒரு சாதாரன ஆணாதிக்க வாதியை விட இந்தமாதிரி கொச்சையாக வெளிப்படுகிறது. சாதாரண ஆணாதிக்கம் பெண்ணை பூசிக்கின்றது. அழகியல் பதுமையாக, ........ பார்க்கின்றது. ஆணால் வக்கிரம் பெண்ணை வக்கிரத்தால் வெளிப்படுத்தி, பெண்ணின் அற்ப்ப மதிப்பைக் கூட மறுத்து செக்ஸ் பதுமையாகக் காட்டுகின்றது.

குடும்ப முரண்பாடு உண்டு என்பதும் அதைச் சொல்லித் தேடுவது என்பது, குடும்ப முரண்பாடுகளை தனது ஆணாதிக்க வக்கிரத்துக்கு பயன்படுத்துவதே. பாரிசில் தமிழ் போதகர் ஒருவர் சுகன் போன்று தனிமையில் தனது குடும்பப் பிரச்சனையைச் சொன்னால் ஆண்டவன் தீர்ப்பார் எனக் கூறி அதில் அப்பெண்ணை பயன்படுத்தி கெடுக்க முயன்று பிராஞ் பொலிஸ் தேடுகிறது. அதேயே தான் சுகன் செய்கிறார். குடும்ப முரண்பாடுகள் இயற்கையானது. இது ஆணாதிக்கம, பொருளாதாரம, ஏற்றத் தாழ்வு என எல்லாத் தரப்பிலும் நிகழ்கின்றது. இதையே பயன் படுத்த நினைப்பவன் உண்மையில் மிகமோசமான சதியுடன் கூடிய ஆணாதிக்க வக்கிரம் கொண்டவன். புpரச்சனைக்கு தீர்வுகளை விட அதைப் பயன்படுத்தி தனது ஆணாதிக்க வக்கிரத்தை வெளிப்படுத்துபவன் கடைந்தெடுத்த நாயாவான்.

செவ்விந்தியன் பொய்களின் மேல் உருளுகின்றார். இயற்கையின் தேர்வு தான் ஓரினச் சேர்க்கை என்கின்றர். வரலாற்றுப் பொய். இயற்கையின் தேர்வு ஆண்-பெண் என்பதே ஒழிய ஓரினச் சேர்க்கை அல்ல. ஓரினச் சேர்க்கை ஆண் பெண் பிளவில் உருவானதே. அடுத்து 0.03-100 நிகழ்தகவு 100க்கு 3 அல்ல 10000க்குத்தான் 3ஆகும்.

ஓரினச் சேர்க்கை, கூட்டுக் கலவி, ........ போன்றவை இயற்கை அல்ல. மாறாக ஆண்-பெண் பிளவுகளிலும, செல்வத்தை கொள்ளையடித்து கொட்டமடித்த பிரிவுகளின் அந்தப்புறங்களில் அது போன்ற இடங்களில் உருவானது.

இன்று டிஸ்கோ, நீலப்பட வக்கிரங்களை இலக்கியப் படைப்புகளில் படைப்போர்  சமூகத்தில் ஒரு ஆரோக்கியமான பிரிவல்ல. எப்படி பொருளாதாரத்தில் தரகு முதலாளிகள் உள்ளனரோ அதே போல் இலக்கியத்தில் இவர்கள் உருவாகின்றனர், உருவாகினர்.

இன்று இந்த மாதிரிப் பிரிவுகள் மக்களின் எதிரிகள் ஆவர். மக்களின் துயரத்தில் குளிர் காயும் மக்கள் விரோதிகளாவர். இவர்கள் உடன் கூடிச் செல்வோர், விவாதிப்போர் என அனைவரும் மக்களை ஏமாற்றி அதில் நக்கித் திரிய முடியும் என்ற ஒரே ஒரு கனவு தான் எஞ்சியுள்ளது. இவர்களை இனங்காணவும, எதிர்த்துப் போராடுவதும் இன்று எம்முன் உள்ள சமூகப் பணியாக உள்ளது