Sat05182013

Last update08:07:22 PM

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 54

  • PDF

மக்கள் நலன்களை நிராகரித்த புலிகளுக்கும் இந்தியாவுக்குமிடையேயான போர்: "ஒப்பரேசன் பவான்"

பலாலி இராணுவ முகாமில் சயனைட் வழங்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினர்களான குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 பேரினதும் மரணத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவுக்கும், இந்திய அமைதி காக்கும் படைக்கும் எதிரான போர்ப் பிரச்சாரமாக மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். குமரப்பா, புலேந்திரன் உட்பட இறந்த 12 பேரினது புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகளுடனும், கிராமங்கள் தோறும் ஒலிபெருக்கிகளில் சோக இசையுடனும் அவர்களது மரணச் சடங்குகள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கும் இந்திய அமைதிகாக்கும் படைக்கும் எதிரான "மக்கள் எழுச்சி" நாளாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பத்திரிகைகள், "நிதர்சனம்" ஒளிபரப்பு நிலையம் போன்றவை இந்தியா-இலங்கை ஒப்பந்தத்திற்கும், இந்திய அமைதி காக்கும் படைக்கும் எதிராக மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் பிரச்சாரங்களை ஆரம்பித்திருந்தன.

பலாலி இராணுவ முகாமில் சயனைட் வழங்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட 12 பேரினதும் உடல்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழு அளவிலான மரியாதையுடன் தீருவிலில் (வல்வெட்டித்துறை) தீயுடன் சங்கமமாகிக் கொண்டிருந்தது. சாகும்வரை உண்ணாவிரதப் பேராட்டத்தில் உயிரிழந்த திலீபனின் இறப்பாலும், குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் இறப்பாலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்திய எதிர்ப்புப் பிரச்சாரத்தாலும் உணர்ச்சியூட்டப்பட்ட மக்கள் இந்திய அமைதிகாக்கும் படையினருக்கெதிராகவும் இலங்கை அரசபடைகளுக்கெதிராகவும் செயற்படுமாறு தமிழீழ விடுதலைப் புலிகளால் ஏவிவிடப்பட்டனர்.

இந்திய அமைதி காக்கும் படையினரின் வாகனங்கள் மீதான கல்வீச்சுத் தாக்குதல்களும், இலங்கைப் பொலிஸ் நிலையங்கள் மீதான கல்வீச்சுத் தாக்குதல் சம்பவங்களும் தீவைப்புச் சம்பவங்களும் கூட இடம்பெறத் தொடங்கின. இதே வேளை வடமராட்சியில் இலங்கை அரச படைகளைச் சேர்ந்தவர்கள் மீதான தாக்குதல்களும், படுகொலைகளும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த சிங்கள மக்கள் மீதான தாக்குதல்களும், படுகொலைகளும் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டன.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன் கைது செய்யப்பட்டிருந்த எட்டு இலங்கை இராணுவத்தினரை சுட்டுக் கொலை செய்து யாழ்ப்பாண மத்திய பஸ் நிலையத்தில் மக்கள் பார்வைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்திருந்தனர். அப்பாவிச் சிங்கள மக்களும் நிராயுதபாணிகளாக நடமாடிய இலங்கை அரச படைகளைச் சேர்ந்தவர்களும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் படுகொலைக்கு இலக்கானார்கள்.

இந்திய அமைதி காக்கும் படைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான உறவில் என்றுமில்லாதளவுக்கு விரிசலைக் காணமுடிந்தது. தமிழ் மக்களின் பாதுகாப்பை இந்தியாவிடம் கையளிப்பதாகக் கூறி தமது ஆயுதங்களை இந்திய அமைதி காக்கும் படையிடம் கையளிப்பதை ஆரம்பித்துவிட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் தமது உறுப்பினர்களையே இந்திய அமைதி காக்கும் படையால் பாதுகாக்க முடியாமல் இருப்பதாக இந்தியா மீது குற்றம் சுமத்தினர்.

இந்திய அமைதிகாக்கும் படை மீதும், இலங்கைப் பொலிசார் மீதும், அப்பாவிச் சிங்கள மக்கள் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளால் தூண்டிவிடப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் இந்தியாவை தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்த ஒரு நிலைப்பாட்டை எடுப்பதை நோக்கி இட்டுச் சென்றது. இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில் கால்பதித்த ஆரம்பகாலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதி காக்கும் படைக்குமிடையில் நிலவிய "தேனிலவு" முடிவுக்கு வந்திருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளால் இந்திய அமைதிகாக்கும் படை குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளும், இந்திய அமைதி காக்கும் படையினருடனான முரண்பாடுகளும், வன்முறைத் தாக்குதல் சம்பவங்களும் இந்திய அமைதி காக்கும் படைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் எந்நேரமும் போர் மூழலாம் என்றளவுக்கு ஒரு பதட்ட நிலையை உருவாக்கிவிட்டிருந்தது.

குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 தமிழீழ விடுதலைப் புலிகளின் உடல்கள் மட்டும் தான் தீருவிலில் (வல்வெட்டித்துறை) தீயுடன் சங்கமமாகியதை மக்கள் அனைவரும் கண்ணுற்றிருந்தனர். ஆனால் குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 பேருடன் இந்திய-இலங்கை ஒப்பந்தமும் கூடவே தமிழீழ விடுதலைப் புலிகளால் தீயுடன் சங்கமிக்க வைக்கப்பட்டுவிட்டதை மக்கள் அறிந்திருக்கவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்து நடவடிக்கைகளையும், அவர்களது இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கெதிரான பிரச்சாரங்களையும், இந்திய அமைதிகாக்கும் படையினர் மீதானதும், இலங்கைப் பொலிசார் மீதானதும், அப்பாவிச் சிங்கள மக்கள் மீதானதுமான வன்முறைகளையும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு விடுக்கப்படும் ஒரு எச்சரிக்கையாகவும், அச்சுறுத்தலாகவும் கருதிய இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான செயற்பாடுகளில் இறங்கியது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த "ஈழமுரசு", "முரசொலி" ஆகிய பத்திரிகைகள் இந்திய அமைதிகாக்கும் படையால் சீல் வைக்கப்பட்டதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒளிபரப்பு நிலையமான "நிதர்சனம்" செயலிழக்க வைக்கப்பட்டது. இந்திய அமைதி காப்புப் படையினரால் யாழ்ப்பாணம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான ழுழுஅளவிலான யுத்தத்தை இந்திய அமைதி காக்கும் படை ஆரம்பித்து வைத்தது.

இலங்கையின் ஜே.ஆர். ஜெயவர்த்தனா அரசால் மேற்கொள்ளப்பட்டுவந்த "ஒப்பரேசன் லிபரேசன்" இராணுவ நடவடிக்கையை தனது "ஒப்பரேசன் பூமாலை" என்ற "மனிதாபிமான" நடவடிக்கையால் வானிலிருந்து உணவுப் பொதிகளை வீசியதன் மூலம் தமிழ் மக்களால் ஆபத்பாண்டவனாக காணப்பட்ட இந்தியாவும், இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்டவென வடக்கு-கிழக்கில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிகாக்கும் படையும் தமிழ் மக்களை அச்சமூட்டும் வகையிலான நடவடிக்கைகளில் இறங்கின. இந்திய விமானப்படை விமானங்களினதும் ஆயுதம் தாங்கிய உலங்குவானூர்திகளின் துணையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான "ஒப்பரேசன் பவான் (காற்று)" என்ற இராணுவ நடவடிக்கை ஆரம்பமானது.

இந்தியப் படையினரின் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்த தவறான கணிப்பீடும், நன்கு திட்டமிடப்படாத இராணுவ முனைப்புகளும் போரின் ஆரம்பத்தில் பெருமளவிலான இந்தியப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கரங்களில் இறப்பதில் முடிவடைந்திருந்தது. போரின் முதல்நாள் அன்றே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்வதற்கு அல்லது கொலைசெய்வதற்கு இந்தியப் படையினரால் அதிகாலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சி பிரம்படியில் (கொக்குவில்) தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு பிரபாகரன் அப்பகுதியிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு இருந்ததுடன் அப்பகுதியில் ஏற்பட்ட மோதலில் பல அப்பாவிப் பொதுமக்களும் இந்தியப் படையினரும் கொல்லப்பட்டிருந்தனர்.

இதேநேரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பகுதியில் உலங்கு வானூர்திகளில் வந்திறங்கிய சீக்கிய அதிரடிப் படைப் பிரிவைச் சேர்ந்தவர்களைச் சுற்றிவளைத்த தமிழீழ விடுதலைப் புலிகள் வந்திறங்கிய அதிரடிப் படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் சுட்டுக்கொலை செய்திருந்தனர்.

(பரசூட்டில் தரையிறக்கப்படும் இந்திய இராணுவப் படை - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)

இதன் மூலம் தமிழ் மக்களின் நலன்களுக்காகவே தாம் போரில் ஈடுபடுவதாகக் கூறிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளும் இந்தியப் படையினரும் தமிழ்மக்கள் மீது அவர்கள் விரும்பியிராத ஒரு போரைத் திணித்துவிட்டிருந்தனர். ஆனால் இந்தப் போரானது தமிழ் மக்களின் நலன்களிலிருந்தல்ல, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் நலன்களுக்கும் இந்தியாவின் நலன்களுக்குமானதொன்றாகவே காணப்பட்டிருந்தது.

முகாம்களுக்குள் இலங்கை இராணுவம் முடங்கிக் கிடந்த அதே வேளை, இந்தியப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரை ஈவிரக்கமின்றி முன்னெடுத்துச் சென்றது. போர் ஏற்படுத்திக் கொண்டிருந்த அழிவுகளையும் இழப்புகளையும் அப்பாவிப் பொதுமக்களே சுமந்து கொண்டிருந்தனர். இந்தியப் படையினரின் யாழ்ப்பாண வைத்தியசாலை மீதான தாக்குதலும், மக்கள் அகதிகளாத் தஞ்சமடைந்திருந்த பாடசாலைகள், வணக்கத்தலங்கள் மீதான தாக்குதலும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பலிகொள்ளக் காரணமாய் அமைந்தது.

(உரும்பராயில் நடந்த உக்கிரமான போரில் இந்திய படைகளின் இழப்பு)

யாழ்ப்பாணத்தில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் மற்றும் மாற்றமடைந்து கொண்டிருந்த சூழ்நிலைகள் குறித்து தொடர்ச்சியான விவாதங்களை நடத்திக் கொண்டிருந்த நாம், இந்தியப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் ஆரம்பித்துவிட்டிருந்த போரிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக யாழ்ப்பாண நகர்ப்பகுதியிலிருந்து தென்மராட்சி நோக்கிச் சென்றுகொண்டிருந்த மக்களுடன் இணைந்து தென்மராட்சிக்குச் சென்றோம். "தீப்பொறி"க் குழுவின் ஆரம்பகாலங்களில் எம்முடன் இணைந்து செயற்பட்டு பின்பு எம்மில் இருந்து விலகியிருந்த மைக்கல் நாம் தங்குவதற்காக வீடொன்றினை தந்துதவியிருந்தார்.

இந்தியப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் யாழ்ப்பாண நகர்ப்பகுதிகளில் உக்கிரமடையத் தொடங்கியிருந்ததுடன் இந்தியப் படையினர் யாழ்ப்பாண நகரின் பெரும்பகுதி இடங்களை கைப்பற்றி முன்னேறிக் கொண்டிருந்தனர். இதன் வெளிப்பாடு இந்தியப் படையினரின் தாக்குதல் நடவடிக்கைகள் தென்மராட்சிப் பகுதிக்கும் விரிவடையத் தொடங்கியது. இந்திய விமானப்படையின் விமானங்கள், ஆயுதம் தாங்கிய உலங்கு வானூர்திகள் சாவகச்சேரி நகர்ப்பகுதிகளில் சரமாரியான தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்திருந்தன. இத்தாக்குதலால் பல பொதுமக்கள் சாவகச்சேரி நகர்ப்பகுதியில் கொல்லப்பட்டிருந்தனர்.

(சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் இந்தியப் படைகள்)

யாழ்ப்பாணப் பகுதியை தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்த இந்தியப் படையினர் இடம்பெயர்ந்து சென்ற அனைத்து மக்களையும் யாழ்ப்பாணப் பகுதிகளுக்கு திரும்பி வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர். தென்மராட்சியில் அகதிகளாகத் தங்கியிருந்து யாழ்ப்பாண நகரை நோக்கி சென்று கொண்டிருந்த மக்களுடன் இணைந்து நாமும் யாழ்ப்பாணத்துக்குச் சென்றோம்.

போரின் கொடூரத்தையும், கோரத்தையும் வழிநெடுகிலும் போரினால் ஏற்பட்ட அழிவுகள் எடுத்துக் காட்டிய வண்ணம் இருந்தன. திரும்பும் இடமெல்லாம் இந்தியப் படையினரும் அவர்களது முகாம்களுமே காணப்பட்டன. இந்தியப் படையினர் கைப்பற்றிய பிரதேசங்களிலிருந்து இழப்புக்களுடன் பின்வாங்கிச் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் வன்னிக் காடுகளை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

இந்தியப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பெரும் பகுதிகள் இந்தியப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தது. இலங்கை இராணுவம் போலல்லாது இந்தியப் படையினர் தமது இராணுவ முகாம்களை யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான கிராமங்களில் அமைத்திருந்தனர்,

இந்திய அரசு "ஒப்பரேசன் பூமாலை" என்ற நடவடிக்கை மூலம் "மனிதாபிமான" உதவிகளை வானிலிருந்து வீசிய போது ஆர்ப்பரித்த மக்கள், இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் கால் பதித்த போது அவர்களைக் கையசைத்து வரவேற்ற மக்கள், இந்திய அமைதி காக்கும் படையின் வருகை இலங்கையில் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்தும் என எதிர்பார்த்திருந்த மக்கள் இந்தியப் படையினரால் தாம் சிறைப்படுத்தப்பட்டுவிட்டதாக உணரத் தலைப்பட்டதுடன் இலங்கையில் அமைதியும் சமாதானமும் இன்னமும் எட்டாக் கனியாகவே இருப்பதைக் கண்டனர்.

போரினால் ஏற்பட்ட அழிவுகளையும் இழப்புக்களையும் சுமந்து கொண்டிருந்த மக்கள் ஒரு "புதிய" அத்தியாயத்துக்குள் - இலங்கை இராணுவத்தினரோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளோ ஆதிக்கம் செலுத்தாத ஒரு வாழ்வுக்குள் - சென்று கொண்டிருந்தனர். ஊரடங்குச் சட்டங்கள், வீதிச் சோதனைகள், கிராமங்களைச் சுற்றிவளைத்துத் தேடுதல் என இந்தியப் படையினரின் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருந்தன.

(இந்தியப் படையினரின் வீதிரோந்து)

தென்மராட்சிப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்த நாம், எமது அரசியல் செயற்பாடுகளைத் தொடர்ந்து கொண்டிருந்தோம்.

இந்தியப் படையினரின் தீவிரத் தேடுதல் நடவடிக்கைகளுக்கும், வீதிரோந்து நடவடிக்கைகளுக்கும் மத்தியில் எமது செயற்பாடுகள் அமைய வேண்டியிருந்ததுடன் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் தலைமறைவாக இருந்த டொமினிக், ரகுமான் ஜான் உட்பட நானும் தங்குவதற்கு பாதுகாப்பான இடங்களைத் தேட வேண்டியிருந்தது. டொமினிக், ரகுமான் ஜான் ஆகியோர் எம்முடன் செயற்பட்டுக் கொண்டிருந்த சுரேன், தேவன், ரகு, விஜயன், கரோலின், சண்முகநாதன், தர்மலிங்கம் ஆகியோரின் வீடுகளிலும் எமது ஆதரவாளர்களான யுவி, லிங்கம், தயாளன் ஆகியோரின் வீடுகளிலும் தலைமறைவாகத் தங்கியிருந்து "தீப்பொறி"ச் செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கியிருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான "ஒப்பரேசன் பவான்" என்ற இராணுவ நடவடிக்கையின் தொடர்ச்சியான இந்தியப் படையினரின் தீவிரத் தேடுதல் நடவடிக்கைகளுக்கும், வீதிரோந்து நடவடிக்கைகளுக்கும் மத்தியில் எனது வீட்டில் இருந்துகொண்டே "தீப்பொறி"ச் செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கியிருந்தேன். இந்திய-இலங்கை ஒப்பந்தம் குறித்து "தீப்பொறி"ச் செயற்குழுவுக்குள் உறுதியான முடிவுகள் எதுவும் எடுக்கப்பட்டிராத நிலையில், இந்தியப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் ஆரம்பமாகியிருந்தது. இப்பொழுதோ இந்தியப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போர் குறித்தும் இப்போரில் இந்தியப் படையினரையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் நாம் எப்படி நோக்குவது என்பது குறித்தும் பேசுவதற்கென "தீப்பொறி"ச் செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டது.

 

(தொடரும்)

 

1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2

3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3

4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4

5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5

6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6

7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7

8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8

9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9

10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10

11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11

12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12

13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13

14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14

15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15

16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16

17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17

18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18

19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19

20. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 20

21. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 21

22. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 22

23. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 23

24.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 24

25.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 25

26.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 26

27.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 27

28.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 28

29. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 29

30 .புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 30

31.  புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 31

32. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 32

33. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 33

34. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 34

35.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 35

36.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 36

37.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 37

38.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 38

39.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 39

40. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 40

41.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 41

42. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 42

43. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 43

44.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 44

45. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 45

46. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 46

47. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 47

48. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 48

49. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 49

50 .புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 50

51.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 51

52. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 52

53.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 53

Last Updated on Friday, 27 April 2012 22:20

Comments  

 
#5 சுப்ரமணியம் குகதாசன் 2012-04-29 22:32
இந்தியப் படைக்கும் புலிகளுக்குமிடை யிலான முறுகல்நிலை முற்றி இரு வாரங்களின் பின்னர் 21ஆம் திகதி மோதல் சூழ்நிலை நிலவியதால் யாழ்ப்பாணத்திலு ம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட் டிருந்தது. ஆஸ்பத்திரிக்குச ் சற்று அப்பால், சாந்தி தியேட்டருக்கு அண்மையில் இந்தியப் படையின் சோதனைச் சாவடியொன்றும் அமைந்திருந்தது. இந்தியப் படையின் ஹெலிகொப்டர்கள் வானத்தில் பறந்துகொண்டிருந ்த காலை பத்து மணியிருக்கும் புலிகளின் ஆயுதக்குழு ஒன்று யாழ்ப்பாண ஆஸ்பத்திரிக்குள ் நுழைந்து பதுங்கியது. ஆஸ்பத்திரி வளவுக்குள் நின்று கொண்டு ஹெலிகொப்டர்களை நோக்கி வேட்டுவைப்பதுதா ன் அவர்களின் திட்டம். ஏற்படக்கூடிய ஆபத்தைப் புரிந்து கொண்ட டாக்டர் கணேசரட்ணம், 'தம்பியளே வெளியே போங்கள்' என்று மன்றாட்டமாகக் கேட்டுக்கொண்டார ். ஆஸ்பத்திரிக்குள ் நின்றிருந்த பலரும் மன்றாட்டமாக விடுத்த வேண்டுகோளையடுத் து அந்தக்குழு ஆஸ்பத்திரியின் பின்பக்க மதிலேறிக் குதித்து வெளியே சென்றுவிட்டது. பகல் பதினொன்றரை மணி போலிருக்கும். ஆஸ்பத்திரிப் பக்கமாக வெளியே ஷெல் வீச்சுச் சத்தங்கள் கேட்டன. மீண்டும் பிற்பகல் ஒன்றரை மணிபோல மற்றொரு புலிகளின் ஆயுதக்குழு ஆஸ்பத்திரிக்குள ் நுழைந்தது. ஆஸ்பத்திரிக்குள ் புலிகள் நடமாடுவதாக இந்தியப் படைக்குத் தகவல் கிடைத்தது. இந்தியப் படை ஆஸ்பத்திரிக்குள ் வந்து சேர்வதற்கு முன்னதாகவே இரண்டாவது புலிக்குழு தப்பிச் சென்றுவிட்டது. இந்தியப் படை ஆஸ்பத்திரிக்குள ் புகுந்த நேரம் பிற்பகல் இரண்டு மணியைத் தாண்டியிருக்கலா ம்.

புகுந்த இந்தியப் படை கண்மண் தெரியாமல் துப்பாக்கி வேட்டுகளைத் தீர்த்தது. நோயாளர்களும் ஆஸ்பத்திரி ஊழியர்களும் குய்யோ! முறையோ! என்று கத்திக் குளறும் சத்தத்தைக்கூட இந்தியப் படையினர் கேட்கத் தயாராக இல்லை. ஆஸ்பத்திரியின் வார்ட்டுகள் ஒவ்வொன்றுக்குள் ளும் புகுந்தே வேட்டுகள் தீர்க்கப்பட்டன. அலறியடித்துக் கொண்டு ஓட முனைந்தவர்கள் கைகளை உயர்த்திச் சரணடைய முனைந்தவர்கள் அனைவருமே சுட்டுத்தள்ளப்ப ட்டனர். ஆஸ்பத்திரி எங்கும் பிரேதமயம். சூட்டுக் காயங்களுடன் சிலர் செத்தவர்கள் போல வீழ்;ந்து கிடந்தனர்.

சுமார் 18 மணித்தியாலங்களு க்கு மேலாக இந்தியப் படையினர் ஆஸ்பத்திரி வளவுக்குள்ளேயே நிலை கொண்டிருந்தனர். மறுநாள் 22ஆம் திகதி காலைக் கடமைக்கு வந்த டாக்டர் சிவபாதசுந்தரமும ் தண்ணீர் பிடிக்கச் சென்ற ஒரு ஆறுவயதுச் சிறுவனும் வேட்டுக்களுக்கு இலக்கானார்கள். காலை பதினொரு மணியிருக்கும் யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டிருந்த இந்தியப் படை உயரதிகாரிகளுக்க ு அறிவித்து விட்டுப் பெண் டாக்டரொருவர் ஆஸ்பத்திரிக்குள ் வந்தார். உயிர்தப்பி இருப்பவர்களை கையை உயர்த்திக்கொண்ட ு வருமாறு இந்தியப் படை அதிகாரி உத்தரவிட்டார். பத்துப் பேர் வெளியே வந்தனர்.
Quote
 
 
#4 சுப்ரமணியம் குகதாசன் 2012-04-29 20:42
போட்டி பொறாமை வஞ்சகப் புத்தி போன்ற மலிந்து விட்ட தமிழர் மத்தியில் இருந்த உருவான இயக்கங்கள் மத்தியிலும் போட்டி பொறாமை வஞ்சகம் எல்லாம் தலை விரித்தாடின.
தமது காமாலைக் கண்களுக்கு ஊடாக கண்ட அனைத்தையும் மஞ்சளாகவே கண்டனர்
பத்மநாபாவுக்கு குழி பறித்தார் சுரேஷ் என அழைக்கப்பட்ட ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன் .
குட்டிமணிக்கும் தங்கதுரைக்கும் ஆப்பு வைத்தார் பிரபாகரன்.
மாத்தையாவுக்கும ் கருணாவுக்கும் தண்ணி காட்டினார் பொட்டம்மான்
இந்த வகையில் புளட்டுக்குள்ளு ம் போட்டி பொறாமை வஞ்சகம் தலை விரித்தாடியது. பதவி ஆசைகளுக்காக அநியாயமாக பலரை பலர் போட்டு கொடுத்தனர். அபாண்டமாக அள்ளி வைத்தனர் எத்தனையோ தியாகங்கள் அர்பணிப்புகளுடன ் மும்முரமாக உழைத்தவர்கள் மீது சும்மா இருந்த சிலர் அவதூறும் அநியாயமாக சந்தேகமும் பழியும் போட்டு தாம் முன்னுக்கு வரவும் உமாமகேஸ்வரனின் விசுவாத்துக்குர ியவராக இருப்பதாக காட்டிக்கொள்ளவு ம் செய்தார்கள்.
வாமதேவனின் முட்டாள்தனத்தால ் சென்னையில் ஆயுதம் வந்த கண்டெய்னர் பிடிபட்டது . ஆனால் இதனை சந்ததியாரின் தலையில் போட்டு சந்ததியாரையையும ் போட்டு தள்ளினர். இன்றும் பலர் சந்ததியார்தான் காட்டிக் கொடுத்ததாக பலமாக நம்பும் அளவிற்கு இந்த வதந்திகள் பரப்பப்பட்டன.
Quote
 
 
#3 சுப்ரமணியம் குகதாசன் 2012-04-29 13:34
சென்னையில் சிவாஜிலிங்கத்து டன் சில காலம் தங்கியிருந்த “மண்டையன் குழு” என்ற அமைப்பின் பெயரில் பல்வேறு புலி உறுப்பினர்களையு ம், பொதுமக்களையும் வேட்டையாடிய சுரேஸ் பிரேமச்சந்திரன் ராமதாஸின் மகனான மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மூலம் கனடாவில் தாயாருடன் வசித்த மகளுக்கு இந்திய மருத்துவ கல்லூரியில் அனுமதியையும் பெற்றுக்கொண்டு நாடு திரும்பியவர்.
இந்தியப்படை காலத்தில் EPRLF இயக்கத்தின் மண்டையன் குழுத் தலைவராக இருந்த சுரேஸ் பிரேமச்சந்திரனத ான்; முதன் முதலில் பிள்ளைபிடி வேலையை ஆரம்பித்தவர். மண்டையன் குழுவிற்கும் பயந்து தங்கள் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தென்னிலங்கையெங் கும் கொண்டு சென்று ஒளித்தனர். முரசொலி திருச்செல்வத்தை தேடிச்சென்ற சுரேஸ்; பிரேமச்சந்திரன் குழு திருச்செல்வத்தி ன் மகனான அகிலன் என்ற சென்ற் ஜோன்ஸ் கல்லூரி மாணவனைச் சுட்டுககொன்றுவி ட்டுச் சென்றது. யாழ் பத்திரிசியார் கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும் யாழ் வின்சர் திரையரங்கு முகாமையாளராகவும ிருந்த சுவாம்பிள்ளை ஆசிரியரை சுரேஸ் பிரேமச்சந்திரன் குழு கப்பம் கேட்டுச் சுட்டுக்கொன்றது . இந்தச் சுவாம்பிள்ளை ஆசிரியர் ஆயர் கிங்ஸலி சுவாம்பிள்ளையின ் சகோதரராவர். யாழ் ஆசனக்கோவிலுக்கு ள் புலி உறுப்பினரைத் தேடிச்சென்ற சுரேஸ் பிரேமச்சந்திரன் குழு அங்கு பியாணோ பழகிக் கொண்டிருந்த சந்திரா சக்கரியாஸ் என்ற சிறுவனைப் பிடித்துச் சென்ற கொன்று துண்டு தண்டாக வெட்டி சாக்கிற்குள் போட்டுக்கட்டி சுண்டிக்குளி மகளிர் பாடசாலைக்குப் பின்னால் வீசிவிட்டுச் சென்றது.
இப்படி மண்டையன் குழுத் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குழு தலைமையில் செய்த கொலைகளைப் பட்டியலிட்டு எழுதலாம்
யாழ் இந்துக் கல்லூரிக்கு முன் உள்ள வீதியில் இருக்கும் உதயன் பத்திரிகையின் ஹெஸ்ட் ஹவுஸில் கசாப்புக்கடையில ் ஆடுகளை வெட்டுவது போல மனித உயிர்களை சுரேஷ் பிரேமச்சந்திரன் வெட்டிக் கொன்ற விடயங்கள் மறக்க முடியாது
மின்சாரக் கம்பத்தில் கட்டி வைத்துச் சுட்டுக் கொல்லுதல். நடு வீதியில் பொது மக்கள் பார்த்திருக்க அடித்துக் கொலை செய்தல் போன்றன உட்பட புலிகள் செய்த மனித விரோத நடவடிக்கைகள் கூட சரிவர வெளிக் கொணரப்படவில்லை. பெண்களுடன் சேட்டை விட்ட நபர்களில் ஒரு சிலருக்குப் புலிகள் அவர்களின் விதைப்பையினைக் கீறி இரண்டு விதைகளையும் எடுத்த பின்னர் தைத்திருக்கிறார ்கள். இந்தச் சம்பவத்திற்கு எடுத்துக் காட்டாக யாழ்ப்பாணத்தில் தீனாக் குறூப் என்ற ஒரு இளைஞர் அடிதடிக் குழுவினரில் ஒரு சிலரை 2002ம் ஆண்டு(சமாதான காலப் பகுதியில்) கைது செய்து செம்மணியில் வைத்து புலிகளின் அப்போதைய யாழ்ப்பாண நகரப் பொறுப்பளரான ஈஸ்வரன் அவர்கள் தலமையிலான குழுவினர் இச் செயற்பாட்டினைச் செய்திருக்கிறார ்கள்.
புலிகளின் தண்டனை முகாம்களைப் பற்றிய உண்மைகளை விளக்க ஊரில் ஒரு பழ மொழி சொல்லுவார்கள், ‘மவனே நீ வட்டுவாகல் போனாய், உனக்குப் பற்பொடி தந்தால் தான் விடிஞ்சுது என்று தெரியும்’ ஆகவே கவனமாக இரு என்று மிரட்டுவார்கள். அந்தளவிற்கு வெளி உலகே தெரியாத இருட்டறைகளாகத் தான் அச் சித்திரவதைக் கூடங்கள் விளங்கியிருக்கி ன்றன.
Quote
 
 
#2 சுப்ரமணியம் குகதாசன் 2012-04-29 12:43
இலங்கை இந்திய ஒப்பந்ததம் நடைமுறைப்படுத்த ப்பட்ட போது அதற்கு பொலிஸ் அதிகாரமும் வழங்கப்பட்டிருந ்தது. அப்போது அதை தலைமை தாங்கி நடத்தி கொண்டிருந்தவர்க ளில் பிரதானமானவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் .

சுரேஸ் அப்போது EPRLF அமைப்பின் தீர்மானம் எடுக்கும் முக்கிய நபராக இருந்தவர். அது மட்டுமன்றி அந்த கட்சியின் செயலாளர் நாயகமாக இருந்த பத்மநாபா அவர்களின் மென்மையான போக்கை தமக்கு வசதியாக எடுத்துக்கொண்ட சுரேஸ் பிரேமச்சந்திரன் அதிகாரங்களை தமது கைகளில் எடுத்து ஆட்டம் போட்டதை யாரும் மறந்து விட மாட்டார்கள். EPRLFனுள் மண்டையன் குழு என்ற தனியான கொலைக்குழுவை அமைத்து அதற்கு தலைமை தாங்கியவரும் இந்த சுரேஸ் பிரேமச்சந்திரன் .

மாகாண பொலிஸ் அதிகாரத்தை வைத்து சுரேஸ் பிரேமச்சந்திரன் நடத்தி முடித்த வன்முறைகளையும் அடி தடி அராஐகங்களையும் சொல்லி தீர்ப்பதற்கு வார்த்தைகளே இல்லை. அதிகாரத்தை கையில் எடுத்து சுரேஸ் பிரேமச்சந்திரனே அந்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருந்தார். EPRLF. அதை சரிவரப்பயன்படுத ்தியிருந்தால் அன்றே தமிழ் மக்களின் தலைவிதி மாறியிருக்கும். பெற்ற அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தமிழ் சமூகத்தை தலைகுனிய வைத்தார் சுரேஸ் பிரேமச்சந்திரன் . இது அப்போதிருந்த JR ஜெயவர்த்தன அரசுக்கு ஒரு பொருட்டான விடயமல்ல. தமிழர்களை தமிழர்களே கொன்றிப்பதால் எமக்கென்ன நஷ்டமா என்று அமைதியாக இருந்து விட்டார் JR ஜெயவர்த்தன.

பிரபாகரன் குறிப்பட்ட விடயத்தை இங்கு ஞாபகப்படுத்துவத ு பொருத்தமானது.

இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்தில் நாம் அழிந்தோம் என்ற நிலையிலேயே இருந்தோம். ஆனாலும் நாம் அதிலிருந்து மீண்டு விட்டோம்.. EPRLF அமைப்பின் நடவடிக்கைகளும், அதனால் மக்கள் அவர்கள் மீது கொண்ட வெறுப்புமே நாம் அந்த அழிவில் இருந்து மீளக்காரணம் என்றார்.
Quote
 
 
#1 சுப்ரமணியம் குகதாசன் 2012-04-28 03:53
நாம் எதனை விதைக்கிறோமோ அதிலிருந்து வருவனவற்றையே அறுவடை செய்ய முடியும்!
தமிழரின் அனைத்து நலன் களையும் உணர்வு. உடமை, உயிர்களையும் குழிதோண்டி புதைத்த ஆயுதப் போராட்ட வரலாறு அழிவு சக்திகளின் பிடியில் திரிபு படுத்தப்பட்டு அழிவுசக்திகள் தமது அடையாளத்தை நிறுவிக் கொள்வதற்கான கருவியாகப் பயன்பட்டுப் போனது மிகவும் வேதனையான விடயம்.

சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் யாழ்ப்பாண நகரின் கோடியில் அமைந்திருந்த அசோக் ஹோட்டலில் இருந்து ஈ.பி.ஆர்.எல்.எப் இராணுவம் செயற்பட்டது. சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான மண்டயன் குழுவினர், உருத்திரகுமாரின ் மைத்துனர் கோபி உட்பட எத்தனை பேரை கைது செய்து பலரை வெட்டியே கொன்றனர்.

பின்னர் பாராளுமன்ற ஆசனத்துக்காக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஒட்டிக் கொண்ட சுரேஸ் பிரேமச்சந்திரன் விடுதலைப் புலிகளினால் கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்பட்ட தனது அமைப்பு சார்ந்த தோழர்களுக்கு என்ன நடந்தது எனக் கேட்கத் திராணியற்று மௌனித்து விடுதலைப் புலிகளுக்கு அடிவருடியானார்,
Quote
 

Add comment


Security code
Refresh