Wed03202019

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் சிங்களவர்கள் அனைவரும் தமிழர்களுக்கு எதிரானவர்களா?

சிங்களவர்கள் அனைவரும் தமிழர்களுக்கு எதிரானவர்களா?

  • PDF

தியாக ராஜன்: கலையரசன், தமிழர்களுக்கு எதிரான போக்கு என்பது அனைத்து சிங்கள பொதுஜனமத்தியிலும் ஊடுறுவி உள்ளபோது அவர்களை தமிழர் நலனுக்காக திரட்டுவதில் பின்னடைவு ஏற்படுவது இயல்புதானே இதற்கு உங்கள் பதில் என்ன?

 

 

Kalaiy Arasan: தியாகராஜன், அதை எப்படி நீங்கள் அறுதியிட்டுக் கூற முடியும்? சிங்கள மக்கள் அனைவரும் தமிழருக்கு எதிரானவர்களா? இந்தியாவில் பெரும்பான்மை இந்துக்கள் முஸ்லிம்களை சந்தேகக்கண் கொண்டு பார்ப்பதைப் போலத்தான் இலங்கையில் சிங்களப் பொதுஜனத்தின் மனப்பான்மையும் உள்ளது. ஆதி காலத்தில் இருந்தே தமிழர்கள் இந்திய மேலாண்மையின் ஆதரவாளர்கள் என்ற கருத்து சிங்களவர்கள் மனதில் உண்டு. பிற்காலத்தில் அந்த அச்சத்தை பயன்படுத்திக் கொண்ட அரசியல்வாதிகள் அதனை இனவாதமாக வளர்த்தெடுத்தார்கள். இருப்பினும் அவர்களால் எல்லோரையும் இனவாதிகளாக மாற்ற முடியவில்லை.

 

எனக்குத் தெரிந்த வரையில் பெரும்பான்மை சிங்களவர்கள் தமிழர்களுடன் நல்லுறவைப் பேணி வருகின்றனர். இலங்கையின் மொத்த சனத்தொகையில் தமிழர்களின் எண்ணிக்கை 20 % இருக்கலாம். அதில் அரைவாசிப் பேராவது இன்றும் சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இனக்கலவரங்கள் நடந்த காலங்களில் தமிழர் படுகொலையை பெரும்பான்மை சிங்களவர்கள் தடுக்கவில்லை என்பது உண்மை தான். (விதிவிலக்காக சிலர் இருந்தனர்.) குஜராத்தில் முஸ்லிம்களை படுகொலை செய்யும் போது பெரும்பான்மை இந்துக்கள் தடுக்கவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

 

சாதாரண சிங்களப் பொதுமக்கள் அன்பாகப் பழகக் கூடியவர்கள். இருப்பினும் அவர்களுடன் அரசியல் பேசப் போனீர்கள் என்றால், கருத்து முரண்பாடு எழுவதை தவிர்க்க முடியாது. இங்கே  தமிழர் பக்கத்தில் மட்டுமே நியாயம் இருப்பதாக பேசியதைப் பார்த்தீர்கள் தானே? சராசரி சிங்களவரும் அதே மாதிரித் தான் பேசுவார். அதாவது சிங்களவர் பக்கத்தில் மட்டுமே நியாயம் இருப்பதாக பேசுவார். இப்படியான சராசரி சிங்கள/தமிழ் பொதுஜனத்துடன் நீங்கள் அரசியல் பேச முடியாது. சொல்வதற்கெல்லாம் ஆம் என்று தலையாட்டி விட்டுப் போகலாம். அவர்களின் கருத்தை தவறென்று விமர்சித்தீர்கள் என்றால், உங்களை எதிரியைப் போல பார்ப்பார்கள். இது தான் யதார்த்தம்.

 

தியாக ராஜன் ஒரு ஒப்பீடு செய்கிறீர்கள் பெரும்பான்மை இந்துக்குகள் மற்றும் பெரும்பான்மை சிங்களவர் என்று இந்தியாவில் பெரும்பான்மை இந்துக்கள் இருப்பினும் இடதுசாரிகள் முக்கிய இடத்தில் வலுவான குரல் எழுப்புகிறார்கள் அது காஸ்மீர் ஒடுக்குமுறைக்கு எதிராக அதைபோன்ற குரலை அங்குள்ள புதியஜனநாயகம் போன்ற கம்யூனிஸ்டுகள் கூட எழுப்பாமல் மழுப்புவது ஏன்?

 

Kalaiy Arasan: தியாகராஜன் நீங்கள் முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையின் இனப்பிரச்சினை நீங்கள் அறிந்திருப்பதைப் போன்று அத்தனை இலகுவானதல்ல. தமிழர்கள் ஒடுக்குமுறைக்குள்ளான போதெல்லாம் இடதுசாரிக் கட்சிகள் எதிர்த்துப் போராடி வந்துள்ளன. எழுபதுகளில் வட இலங்கை அரசியல்வாதிகள் பிரச்சினையை இனவாதக் கண்ணோட்டத்துடன் அணுகும் வரையில், அவர்கள் தமிழரின் உரிமைகளுக்காக வாதாடினார்கள்.

 

உங்களுக்கு ஒரு தகவலைச் சொல்ல விரும்புகின்றேன். இலங்கை சுதந்திரமடைந்த காலகட்டத்தில் இடதுசாரிக் கட்சிகள் பெரும்பான்மை வாக்குப் பலத்துடன் மூன்றாவது சக்தியாக இருந்தன. மலைநாட்டு பெருந்தோட்டத் தமிழ் தொழிலாளர்கள் இடதுசாரிக் கட்சிகளுக்கு வாக்குப் போட்டனர். அதனால் அரசு இந்திய வம்சாவளித் தமிழரின் வாக்குரிமையை பறித்தது. இந்திய அரசுடன் ஒப்பந்தம் போட்டு பெருமளவு மலைநாட்டுத் தமிழர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். இன்று அவர்களும் இருந்திருந்தால் இலங்கையில் தமிழரின் எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்கும். சிறிலங்கா அரசின் தமிழர்களுக்கு எதிரான முதலாவது ஒடுக்குமுறை இடம்பெற்ற காலத்தில், வட இலங்கைத் தமிழ்த் தேசிய தலைவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? மலைநாட்டுத் தமிழரின் குடியுரிமையை பறித்த சட்ட அமுலாக்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்கள். அவர்களை இந்தியாவுக்கு நாடுகடத்தியதையும் எதிர்க்கவில்லை. அப்போதெல்லாம் இடதுசாரிகள் மட்டுமே எதிர்த்துக் கொண்டிருந்தார்கள். தமிழ் தேசியத் தலைவர்கள் சிங்கள பேரினவாதத்துடன் கை கோர்த்துக் கொண்டு தமிழர்களை ஒடுக்கினார்கள்.

 

இன்று தமிழக இடதுசாரிகளில் எத்தனை பேர் தமிழ் தேசியவாதத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றனர் என்பது உங்களுக்கு தெரியும். அதே போன்ற சூழல் தென்னிலங்கையிலும், வட இலங்கையிலும் தோன்றியது. தென்னிலங்கையில் சிங்கள தேசியவாதமும், வட இலங்கையில் தமிழ் தேசியவாதமும் இடதுசாரிகளை பலவீனப் படுத்தினார்கள். பெரும்பான்மை சிங்களவர்கள் சிங்கள தேசியத்தின் பக்கம் நின்றதால், சிங்கள இடதுசாரிகளும் அந்த நீரோட்டத்தில் இழுபட்டுப் போக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதே போன்ற நிலைமை வட இலங்கையிலும் காணப்பட்டது. தமிழ் இடதுசாரிகள் தமிழ் தேசியத்தை ஏற்றுக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினார்கள்.

 

ஆனால் அதே நேரம், தமிழர்கள் ஒடுக்கப்பட்ட நேரத்தில் சிங்கள இடதுசாரிகள் எல்லோரும் ஆதரித்தார்கள் என்று கருதுவது தவறு. இந்தியாவில் சி.பி.ஐ., சி.பி.எம்., போன்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் அரசுடன் சேர்ந்து நிற்பது உங்களுக்கு தெரியும். அவர்கள் காஷ்மீர் பிரிந்து போவதை ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா? அதே போன்று தான் இலங்கையின் பாரம்பரிய கம்யூனிஸ்ட், சோஷலிசக் கட்சிகள் அரசுடன் சேர்ந்து நிற்கின்றன. இந்தியாவில் காஷ்மீருக்கு ஆதரவாக குரல் எழுப்புவதாக நீங்கள் குறிப்பிட்ட இடதுசாரிக் கட்சிகள்/குழுக்கள் மிகச் சிறியவை. அப்படியான கட்சிகள் இருப்பதே பெரும்பான்மை மக்களுக்கு தெரியாது. அதே போன்ற நிலைமை தான் இலங்கையிலும் உள்ளது. சில சிறிய சிங்கள இடதுசாரிக் கட்சிகள்/குழுக்கள் தமிழர்களின் உரிமைகளுக்காக வாதாடுகின்றன. உதாரணத்திற்கு, தொன்னூறுகளில் ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து, "ராவய" என்ற இடதுசாரிப் பத்திரிகை நடத்திய குழு, தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தது. அந்த காரணத்தினால் அரச அடக்குமுறைகளையும் எதிர்கொண்டது. சிறிய குழுக்களை யாரும் கணக்கெடுப்பதில்லை. அதனால் தான் உங்கள் கவனத்திற்கும் அது வரவில்லை.

 

தியாக ராஜன்: இனிமேல் நடக்கும் போராட்டம் வர்க்க போராட்டமாக ஆக ஈழத்தில் மட்டுமல்லாமம் இலங்கை தீவு முழுக்க வேலை செய்திருக்க வேணும் அம்மாதிரி ஏற்பாடு எதாவது செய்யப்பட்டுள்ளதா அல்லது செய்யப்படுகிறதா இடதுசாரிகளால்

 

Kalaiy Arasan: தியாகராஜன், இந்த இடத்தில் சிங்கள/தமிழ் தேசியவாதிகளுடன் முரண்பாடு வருவதை தவிர்க்க முடியாது. அவர்களின் ஆதிக்கம் இன்னும் முழுமையாகப் போய் விடவில்லை. இடதுசாரிகளின் பலம் குறைவு என்பதும், மக்களின் ஆதரவு குறைவு என்பதும் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விடயங்கள். பல வருடங்களாக வர்க்கம் என்ற ஒன்றே கிடையாது என்பது போல நடந்து கொள்கின்றனர். அவர்களைப் பொறுத்த வரையில் சிங்களம், தமிழ் என்ற இரண்டு வர்க்கங்கள் தான் நாட்டில் இருக்கின்றன. இந்த சிந்தனையில் இருந்து மக்களை மீட்டெடுப்பது இலகுவான காரியமல்ல. சிங்கள, தமிழ் பொது மக்கள் வர்க்க ரீதியாக ஒன்று சேர்வது இனவாதிகளுக்கு பிடிக்காத விஷயம். பல தடவை பொருளாதாரப் பிரச்சினைகள் வேண்டுமென்றே இனப்பிரச்சினையாக மாற்றப் பட்டுள்ளன. அண்மைக்கால உதாரணம்: தமிழக மீனவர்களின் பிரச்சினை.

 

தியாக ராஜன்: //அவர்களின் ஆதிக்கம் இன்னும் முழுமையாகப் போய் விடவில்லை. இடதுசாரிகளின் பலம் குறைவு என்பதும், மக்களின் ஆதரவு குறைவு என்பதும் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விடயங்கள்//

இடது சாரி குறுகிய தேசியவாதமே பின்னடைவுக்கு காரணம் என்பதை மக்களின் மண்டையில் ஏற்றுவது சிரமமான காரியம் தான் ஆனால் அதை செய்துதானே ஆகவேண்டும்? தமிழ் நாட்டில் சாதியை மீறி கட்சிகட்டுவதை போன்றது அது (சிபிஎம் போன்ற கட்சியில் கூட சாதிபார்த்து சீட் தருவது சாதாரணம் நடைமுறையாகிபோனது பின்னடைவே)

 

Kalaiy Arasan: நிச்சயமாக, இலங்கையில் தற்போது நிலைமை ஓரளவு மாறி வருகின்றது. நீண்ட காலமாகவே யுத்தம் இரண்டு பக்கத்திலும் இனவாதத்தை வளர்த்து வந்தது. எல்லாவற்றையும் விட தேசப்பாதுகாப்பு முக்கியம் என்று அரசு கூறியது. தமிழீழம் முக்கியம் என்று புலிகள் கூறி வந்தனர்.

 

தற்போது யுத்தம் ஓய்ந்து விட்ட காலத்தில் மக்கள் பொருளாதார பிரச்சினைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். யுத்தத்தால் வட-கிழக்கு மாகாண மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். அவர்களின் பிரச்சினைகள் வர்க்கப்போராட்டத்தின் மூலமே தீர்க்கப்படும் என்ற கருத்தை இடதுசாரிகள் முன்வைக்கின்றனர். குறிப்பாக கொழும்பில் தங்கி கல்வி கற்று விட்டு ஊர் திரும்பிய தமிழ் இளைஞர்கள் இடதுசாரிக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டுள்ளனர்.

 

சிங்கள மக்கள் மத்தியில் விலைவாசிக்கு எதிரான, தனியார்மயமாக்கலுக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன. அண்மையில் கல்வியை தனியார்மயப் படுத்துவதை எதிர்த்து மாணவர்கள் போராடினார்கள். இலங்கையில் பல்கலைக்கழகம் வரையில் இலவசக் கல்வி வழங்கப்பட்டு வருவதை நான் இங்கே குறிப்பிட வேண்டும். அனைத்து பிரஜைகளுக்கும் இலவசக்கல்வி மட்டுமல்ல, இலவச மருத்துவ சேவையும் ஏழை மக்களின் வாழ்க்கை மேம்பட உதவியது. இலங்கையில் இன்னும் பல அத்தியாவசிய சேவைகள் அரசு வசம் இருந்து வந்தன. அவற்றை ஏற்கனவே தனியாரிடம் கொடுத்து விட்டார்கள்.

 

சமீபத்திய இலங்கை வரலாற்றில் பல தருணங்களில் வர்க்கப்போராட்டம் நடந்துள்ளது. ஆனால் தேசியவாத ஊடகங்கள் அந்தச் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. சிங்கள, தமிழ், ஆங்கில ஊடகங்கள் எல்லாமே முதலாளித்துவ நலன் சார்ந்து தான்

Last Updated on Wednesday, 02 February 2011 06:12