"விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு போக வேண்டும்" உங்களைப்போன்ற  அனைத்துத் தரப்பும் வீதியில் இறங்கி கோரிய போது, நாங்கள் மட்டும் விதிவிலக்காக மாறுபட்ட கோசத்தை முன்வைத்து அதைக் கோரினோம். இதன் மூலம் தான் இதில் இருந்து மீள வழி பிறக்கும் என்று கூறினோம்;. இதுவல்லாத உங்கள் கோசம் மக்கள் மற்றும் புலியின் அழிவைத் தவிர, வேறு எதையும் பெற்றுத்தராது என்ற உண்மையினை நாம் மட்டும் சொன்னோம்.   

இப்படி 03.02.2009 அன்று நாம் "தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு, நாம் விடுக்கும் பகிரங்க வேண்டுகோள்" மூலம் விட்டதை, இன்று சுட்டிக்காட்டுவது இங்கு மீளப் பொருத்தமான உள்ளது. அதில் "வரலாறு உங்களை தூற்றக் கூடாது. இன்று உங்களைப் போற்றுபவர்கள் தான், நாளை உங்களை முதன்மையாக தூற்றுவார்கள். அப்போது உங்களின் சரியான பக்கத்தை, நாம் மட்டும் தான் காப்பாற்றுவோம்.
 
உங்கள் நாட்கள் எண்ணப்படும் இன்றைய நிலையில், இன்றும் நீங்கள் மக்களுக்கு செய்யக் கூடியதுண்டு.    
  
1. நீங்கள் கடந்தகாலத்தில் மக்களுக்கு இழைத்த அனைத்து தவறுகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் அதை உணரும் வண்ணம், அதை பகிரங்கமாக சுயவிமர்சனம் செய்யுங்கள். நாளை அவர்கள் உங்களை மதிக்கும் வண்ணம், தவறை உணர்ந்ததற்காக நன்றி கூறும் வண்ணம், உங்கள் வரலாற்றை அவர்களுக்கு விட்டுச்செல்லுங்கள்.
 
2. நீங்கள் மக்களை விடுவிக்காவிட்டால், அவர்களின் அழிவுக்கு அவர்களே பொறுப்பு என்று பேரினவாதம் கொக்கரித்துள்ளது. பேரினவாதம் உங்கள் இரத்த உறவுகளையும் உங்களுடன்  சேர்த்து கொல்வதை, நீங்கள் அனுமதிக்க போகின்றீர்களா!? தயவு செய்து அவர்களை விடுவித்து, மக்கள் நலன் சார்ந்த உணர்வுடன் வரலாற்றை முடியுங்கள். தவறுகள் தவறாக இதனுடனாவது நிறுத்திவிடுங்கள். 
 
3. உங்களுடன் சண்டையில் நிற்கின்றவர்களில், சண்டை செய்ய விரும்பாதவர்களை விடுவியுங்கள். அவர்களால் சண்டை செய்ய முடியாது. இந்தத் தவறையும் திருத்திக் கொண்டு, மொத்த தவறுகளையும் ஓத்துக்கொண்டு, அதற்காக போராடுங்கள். அதன் பின் ஒருநாளும் சரணடைந்து விடாதீர்கள். மக்களுக்காக போராடி மரணியுங்கள். வரலாறு அதைத்தான்  உங்களிடம் எதிர்பார்க்கின்றது.    
 
4. நாம் ஏன் தோற்றுப்போனோம்? அதை வழமையான உங்கள் பதிலுக்கு பதில், மனித வரலாற்றில் தேடுங்கள். அதிகாரம் முதல் நவீன ஆயுதங்கள் எல்லாம் இருந்தும், பெரும் படையிருந்தும் ஏன் தோற்றோம்? வரலாற்றை தீர்மானிப்பவர்கள் மக்கள். இதை கடந்தகால மனித வரலாறு காட்டுகின்றது. ஏன் உங்கள் வரலாறு இன்று காட்டுகின்றது. இதை இன்றாவது உணர்ந்து, அதை ஓத்துக்கொண்டு, உங்கள் காலத்தில் அதை திருத்திக் கொள்வதன் ஊடாக, மனித வரலாறு உங்களைப் போற்றவையுங்கள். தியாகங்களை வரலாறு கொச்சைப்படுத்த விட்டுவிடாதீர்கள்.
 
கடந்த வரலாற்றில் அதன் தவறுகளையும் உணர்வதன் மூலம், இன்றே வரலாற்றை மாற்றமுடியும். நாளைய தலைமுறை அதை உணரும்; வண்ணம், மக்களை இன்றே நேசிக்க முனையுங்கள். இந்தக் கணமே, அதை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்."

என்று நாம் கோரினோம். நான் சொன்னது மிகச்சரியாக உள்ளது என்பதை வரலாறு காட்டுகின்றது. இப்படி ஏன் உங்களால் மக்களுக்காக கோர முடியாமல் போனது. இன்று கூட இதை பார்க்க மறுப்பது, உங்கள் வலதுசாரிய மக்கள் விரோத அரசியல் தான் என்பது வெளிப்படையான அரசியலாக உள்ளது.

அன்று மக்களை மீட்க நாம் வைத்த கோசமென்ன?

"1. இலங்கை அரசே! யுத்தத்தை நிறுத்து!
2. புலிகளே! மக்களை விடுவி!
3. சர்வதேச சமூகமே! மக்களை பொறுப்பெடு!
4. புலிகளே! மக்களை விடுவியுங்கள்! நீங்கள் உங்கள் வழியில் போராடி மீளுங்கள்!"

பொது மக்கள் இதை தான் முன்வைத்து போராடியிருக்க வேண்டும்;. புலிகள் இதை மறுத்;ததால், மக்கள் கொல்லப்பட புலிகள் மீட்சியின்றி அழிந்தனர். நாங்கள் இப்படி கோரியதன் மூலம், நாம் மக்களை பலியிடும் யுத்தத்தையும், யுத்த தந்திரத்தையும் மறுதளித்தோம்.

யுத்தத்துக்கு எதிரான போராட்டங்கள், மக்களை பலியிடும் எல்லைக்குள் வைத்து தான் யுத்தத்தை நிறுத்தக்கோரியது. இதனால் பேரினவாதம் தொடர்ந்து யுத்தத்தை மக்கள் மேல் நடத்த முடிந்தது. மக்களை விடுவிக்கவும், பொறுப்பெடுக்கவும் கோரும் கோசம், அதற்காக யுத்தத்தை நிறுத்தியிருக்கும். இதை யாரும் இன்று சந்தேகிக்கத் தேவையில்லை. புலிகளும் நீங்களும், இதற்கு மாறாக இதை "நாங்கள் எங்கள் மக்களுக்காக நடத்திய போராட்டம்" என்று கூறி, மக்களைப் பலியிட்டனர். இது தான் நடந்தேறியது. இன்று தீபச்செல்வன்கள் பூசி மெழுகி மறுத்து திரிப்பதன் மூலம், தோற்றுப்போன இந்தப் பலியீடு அரசியலை மீள முன்னிறுத்துவது, மக்களை தொடர்ந்து மூட்டைப் ப+ச்சி போன்று நசுக்கிக் கொல்வதுதான். 

இப்படி மக்களைப் பலிகொடுத்த நிலையில் நீங்கள் இன்று "எங்களைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகள் எமது மக்களை பாதுகாப்பவர்கள் என்றே கருதுகிறோம். எமது மக்களை ஆயுதமாக, காயாகப் பாவித்து போராட்டத்தை அழித்துக்கொண்டிருந்த அரசை அதை நிறுத்த வேண்டும் என்று கேட்டோம்" என்ற கூறுவது அபத்தமானது.

"மக்களை ஆயுதமாக, காயாகப் பாவித்தது" புலிகள். "போராட்டத்தை" பாதுகாக்கின்றோம் என்ற பெயரில், "எப்படியாவது" என்று கூறி மக்களை பலியிட்ட நயவஞ்சகத்தை திரித்துக்காட்டுவது தீபச்செல்வனின் மக்கள் விரோத அரசியல்;. "எங்களுக்கு அப்பொழுது வேறு வழிதெரியவில்லை" என்று கூறிய இவர்கள் தான், "மக்களை ஆயுதமாக, காயாகப் பாவித்து போராட்டத்தை அழித்துக்கொண்டிருந்த"னர். அரசல்ல. இங்கு அரசு அதை வெற்றி கொண்டது. 

மறுதலையாக அரசு "போராட்டத்தை அழித்துக்கொண்டிருந்த"து என்ற கூற்று எதைக் காட்டுகின்றது. போராட்டத்தை புலிகள் முன் கூட்டியே அழித்துவிட்டதைக் காட்டுகின்றது. போராடப் புறப்பட்டவர்கள் அரசு அதை அழிக்கின்றது என்று சொல்லி புலம்புவது வெக்கக்கேடானது. அரச போராடுவதை அனுமதிக்கும் என்று கருதுகின்ற முட்டாள்கள் தான், இப்படிச் சொல்லி மக்களை பலிகொடுத்;ததை நியாயப்படுத்த முடியும்.  இங்கு அரசு "போராட்டத்தை அழித்துக்கொண்டிருந்த"தை தடுக்க, "மக்களை ஆயுதமாக, காயாகப் பாவித்தது" புலிகள்தான். இதை எதிர்மறையில் சொல்வதன் மூலம், உண்மை பொய்யாகிவிடுவதில்லை. "போராட்டத்தை அழித்துக்கொண்டிருந்த அரசை அதை நிறுத்த வேண்டும் என்று கேட்டோம்" என்பது முட்டாள்தனமானது. அதற்காக மக்களை "ஆயுதமாக, காயாகப் பாவித்து" அவர்களை பலியிட்டது மன்னிக்க முடியாத குற்றம். அதை திரித்து நியாயப்படுத்துவதும், பிழைப்புவாத நக்குண்ணி அரசியல்.

தொடரும்
பி.இரயாகரன் 

1.புலி அரசியலுக்கு மக்களின் பிணம் தேவைப்பட்டது. தீபச்செல்வனின் அரசியலுக்கு எது!? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 01)

 

2.வர்க்கம் கடந்து இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களுக்கான குரல்கள், வர்க்கம் கடந்ததா!? மக்கள் சார்பானதா!? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 02)

 

3.கடந்தகால விமர்சனம், சுயவிமர்சனமற்ற சாக்கடையில் தான் அரசியல் மிதக்கின்றது (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 03)

  

4.தீபச்செல்வன் பற்றிய பொதுமதிப்பீடு மீதான அரசியல் திரிபு (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 04)

 

5.இனம் வர்க்கம் சார்ந்து குறுகிய வலதுசாரிய எதார்த்தம் தான் தீபச்செல்வனின் படைப்புகள் (தீபச்;செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 05)

 

6.தமிழ் மக்கள் தோற்றது என்? புலிகள் அழிக்கப்பட்டது ஏன்? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 06)

 

7."சிலர் போராட்டத்தைச் சரியாக உணராமல்" செயல்பட்டதால், தவறுகள் நடந்ததாம்! (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 07)

 

 

8. "எங்களுக்கு அப்பொழுது வேறு வழிதெரியவில்லை" அதனால் நாங்கள் (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 08)

 

9. மக்கள் விரோதிகளால் "உண்மையான எழுத்தையும் இலக்கியத்தையும்" மக்களுக்காக படைக்க முடியாது (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 09)

 10.செஞ்சோலையில் நடந்தது என்ன? யுத்தத்தை தொடங்கியது யார்? இதை விமர்சிக்காத அரசியல் எது? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 10)