400 வருடமாக இருந்த பாபர் மசூதியை இடித்து, மூஸ்லீம் மக்களைக் கொன்று குவித்த செயலை சரி என்கின்றது இந்திய நீதிமன்றம். சட்டம் அதைத்தான் சொல்லுகின்றதாம். அதாவது 400 வருடத்துக்கு முன் இதில் மசூதி இருக்கவில்லை, எனவே இடித்தது சரி. நீதிமன்றம் ஒரு தீர்ப்பு மூலம் இடிக்க வேண்டியதை, இந்து வானரக் கூட்டம் சட்டத்தை கையில் எடுத்து செய்தது சரியானது என்பதுதான் தீர்ப்பின் உள்ளடக்கம். 400 வருடத்துக்கு முன் சென்ற வரலாற்றை இந்து பாசிச கும்பலின் ரவுடிக் கும்பலாக மாறி புரட்டியுள்ளது. 

தீர்ப்பைச் சுற்றி வளைத்துச் சொன்னது, இந்திய இந்துத்துவ பார்ப்பனிய நாடு. யாரும் இதற்கு எதிராக வாலாட்ட முடியாது. இப்படி  இந்துத்துவ காவிகளின் பாசிசப் பயங்கரவாத செயல்கள் சரியானது என்று நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை அவர்கள் சொன்ன விதம் தான் வேறு. இந்து பாசிட்டுகள் எதைக் கோரினரோ, அதை நீதிபதிகள் வழி மொழிந்துள்ளளர்.

இதற்கு 18 ஆண்டுகள் தவம் இருந்து, இராமன் அருளால் இராமன் வடிவில் கட்டைப்பஞ்சாயத்து செய்துள்ளனர். இராமனின் கட்டுக்கதை புராணம் எழுதிய தீர்ப்புகள் போல், "ஜனநாயக" சட்டங்கள் மூலம் வழங்கிய இந்தத் தீர்ப்புகள், இந்த இந்துப் பாசிச பயங்கரவாத  "ஜனநாயகத்தை" தகர்க்கக் கோருகின்றது. இதைத்தான் நீதிமன்றம் இந்து பாசிட்டுகள் அல்லாத மக்களுக்கு தீர்ப்பாக சொல்கின்றது. இதற்கு வெளியில் சட்டம், நீதி கிடையாது.  

வழக்கு என்ன? 400 வருடமாக இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது பற்றியது. சட்டத்தை மீறி, நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளை மீறி, அரசு விதித்த தடையை மீறி, நடத்திய வன்முறை மற்றும் மதக் கலவரத்தைப் பற்றிய வழக்கு. இதற்கு நீதி கோரப்பட்டது. இந்த பாசிச இந்து பயங்கரவாதத்தைச் செய்ய, மத வன்முறையை இந்த சம்பவத்துக்கு முன்னும் பின்னும் ஆயிரம் ஆயிரம் முஸ்லிம் மக்களைக் கொன்று குவித்த இந்துப் பாசிச அரசியல் மீது வழக்கு. ஆனால் இந்திய நீதிமன்றத்தில் இதற்காக யாரையும் இதுவரை தண்டித்தது கிடையாது. இப்படிப்பட்ட நீதிமன்றம், அது வழிநடத்தும் சட்டத்தில் எந்த நம்பிக்கையும் கொள்ளும் நிலையில் இந்திய மக்கள் இன்று இல்லை. இதை இந்த தீர்ப்பு வழி மொழிந்துள்ளது.

ஒரு நாட்டின் சட்டம், ஒழுங்கு என்பது நீதியை அடிப்படையாக கொண்டது. இதுதான் குறைந்த பட்சம், உழைத்து வாழும் மக்கள் நம்பும் ஜனநாயகம். இது மக்களுக்கு கிடையாது என்பதை, இந்த நீதிமன்ற தீர்ப்புகள் கூறுகின்றது. இந்தத் தீர்ப்பு சட்டப்படியான எந்த நீதியையும் தம்மிடம் பெற முடியாது என்பதை, மீண்டும் உலகறிய சொல்லியுள்ளது.

எப்படி நீதியைப் பெறுவது. சட்டத்தின் எல்லைக்குள் இதற்கு இடமில்ல என்று நீதிமன்றம் கூறிவிட்டது. நீதியை தனிநபர் பயங்கரவாத பழிவாங்கும் வழிகள் மூலமும், இந்துப் பாசிச பயங்கரவாத ஆட்சி அமைப்பை மக்கள் திரள் போராட்டம் மூலம் தான் தூக்கியெறிய முடியும் என்பதை, தெளிவாக நீதிமன்றம் தன் பாசிச மொழியில் சொல்லியுள்ளது.

இதை பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கையில் எடுக்கும் போது, இந்தப் பாசிச பார்ப்பனிய பயங்கரவாதக் கூட்டம் "பயங்கரவாதம்" என்று கூச்சலிட்டு கொக்கரிக்கும். நாட்டின் சட்டத்தையும், நீதியையும் மறுக்கும் பயங்கரவாதம் என்று, இதை தன் பாசிச மொழியில் சதா அருச்சனை செய்யும். 

சட்டம், நீதி, ஜனநாயகம் எல்லாம் உளுத்துப் போய் மரணித்துவிட்டதை, இந்தத் தீர்ப்பு மறுபடியும் அனைவரும் புரியும் மொழியில் சொல்லியுள்ளது. இந்துப் பாசிட்டுகள் இதற்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர். இந்த ஊன் உண்ணும் கூட்டம், மனிதனைக் கொன்று நடத்திய வேள்வியை இராமனுக்கு சமர்ப்பித்து இருக்கின்றது.

தங்கள் கண் முன்னால் நடந்ததை, தங்கள் மனச்சாட்சி முன் நடந்ததை புதைத்த நீதிமன்றம், கடந்து 400 வருடத்துக்கு முன் என்ன நடத்தது என்று தீர்ப்பு வழங்குகின்றது. வரலாற்றுக் கற்பனை மூலம் இராமனுக்கு தீர்ப்பு சொல்லும் இந்த காவிக் கூட்டம் தான், இராமன் பாலம் பற்றிய புரட்டையையும் அடிப்படையாக்கி தன் தீர்ப்பை வழங்கியது.

இப்படி குற்றங்களின் இருப்பிடமே நீதிமன்றங்களாக, அதன் சட்டங்களோ சாதியம், மதம், வர்க்கம், இனம் என்ற எல்லைக்குள் விபச்சாரம் செய்கின்றது. நீதிபதிகள் மாமா வேலை செய்கின்றனர். நீதி என்ற பெயரில் கட்டைப்பஞ்சாயத்து மூலம் ஆக்கிரமிப்பையும் அடாவடித்தனத்தையும் நியாயப்படுத்தி வழங்கிய தீர்ப்பு தான் இது. இது நீண்ட காலத்தில் எஞ்சியதையும் அபகரிக்கும் சதியை, வரலாற்று அடிப்படையாக கொண்டு இந்து பாசிச வழிமுறைக்கு உட்பட்டு வழங்கிய தீர்ப்பு. ஊன் உண்ணும் இந்தப் பார்ப்பனிய இந்து பாசிசக் கூட்டம் தான், மனிதர்களைக் கொன்றும் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உள்ளடக்கியும், மற்றவன் சொத்துக்களை இந்துவின் பெயரால் புடுங்கித்தின்னும் பாசிச ஆட்டம் தான், அதன் வாழ்வியல் முறை. அதன் பண்பாட்டு சமூக நெறியும் கூட. அது எந்த சமூக நீதியின்பாலானதல்ல.  இதை தங்கள் வழிபாட்டு முறையாக கொண்ட இந்த ஊன் உண்ணும் கூட்டம், தான்  அல்லாத மனிதர்களின் ஊனைத் தின்னும் கூட்டத்தின் பாசிச பயங்கரவாத நடத்தையை இந்திய சட்டம் அங்கீகரித்து அதற்கு தீர்ப்பு வழங்கி இருக்கின்றது.

2000 ஆண்டுகளாக நிலவிய இந்துத்துவ ஊன் உண்ணும் பார்ப்பனிய தீர்ப்புகள் தான், "ஜனநாயகத்திலும்" என்பதை வரலாற்று ரீதியாக மீளச் சொல்லியுள்ளனர். இங்கு நீதிபதிகள் பார்ப்பனிய பாசிய பயங்;கரவாதத்தின் கட்டைப்பஞ்சாயத்து செய்யும் கூலி எடுபிடிகள் என்பது ஒருபுறமாக இருக்க, மறுபக்கத்தில் இந்திய சட்டம் என்பது இந்து பார்ப்பனிய பாசிச பயங்கரவாதத்தை அடிப்படையாக கொண்டது என்பதை தங்கள் தீர்ப்புகள் மூலம், இந்திய "ஜனநாயக" அரசு உலகறிய தெளிவுபடுத்தியுள்ளது.

தீர்ப்பைக் கண்டு மகிழும் இந்து பாசிச பயங்கரவாத கூட்டத்தின் அற்பத்தனத்துக்கு பதிலடியாக, பாதிக்கப்பட்டவர்கள் தனிநபர் பயங்கரவாதம் மூலம் இதற்கு தீர்வு காண முடியாது. தனிநபர் பயங்கரவாத செயல், உங்கள் பழிவாங்கும் உணர்வு சார்ந்து குமுறும் உங்கள் மனங்களுக்கு அற்பமான சந்தோசத்தைக் தற்காலிகமாக கொடுக்கலாம். ஆனால் இது தீர்வல்ல. இது எந்த தீர்வையும் தராது. மாறாக இந்துப் பாசிச பயங்கரவாத பார்ப்பனியத்தையும், இதற்கு தலைமை தாங்கும் இந்த அரசையும் தூக்கியெறியப் போராடுவதன் மூலம் தான், இதற்கு தீர்வு காண முடியும். நீங்களும் இதற்கு எதிரான மற்றவனுடன், இணைந்து நின்று போராட வேண்டும். இந்த வகையில் மத சார்பற்ற இந்துகளுடன் சேர்ந்து போராடுவதன் மூலம் தான், முஸ்லீம் மக்கள் தீர்வு காண முடியும். இதன் மூலம்தான் இந்த இந்துப் பாசிச பார்ப்பனியத்தை எதிர்கொள்ள முடியும். 

இந்தத் தீhப்பைக் கண்டு குமுறும் மத சார்பற்ற அனைவருடன் ஒன்றிணைந்த,  மக்கள் திரள் அமைப்புகள் மூலம் இந்து பாசிச பயங்கரவாத கூட்டத்தினை எதிர்கொண்டு போராட வேண்டும். இதன் மூலம் மக்கள் தமக்குரிய ஜனநாயகத்தையும், சட்டம் நீதி ஒழுங்கையும் உருவாக்க முடியும். இதன் மூலம் பார்ப்பனிய பாசிச பயங்கரவாத சட்டத்தையும் அதன் நீதியையும் மறுத்து, அந்தக் குற்றக் கும்பலை மக்கள் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க முடியும். இதைச் செய்யும்படிதான் இந்த இந்திய "ஜனநாயகம்" மக்களைக் கோருகின்றது.                

பி.இரயாகரன்
02.10.2010