கலையரசனின் [கலையரசனின் அரபு விலைமாதர்கள் - நுகர்பொருள் பலியாடுகள் என்ற பதிவினை facebook இல் பகிர்ந்ததைத்தொடர்ந்து அங்கே அறுபதையும் தொட்டு நீளுகிற உரையடால் ஒன்று ஆரம்பித்தது. இவ்வுரையாடலை தொடர்ந்தும் மூடிய நிலையில் fb இல் செய்வது பொருத்தமாயில்லாத காரணத்தால் இங்கே பதிவிடுகிறேன். மிக நீண்ட உரையாடல். ஆர்வமிருந்தால் மட்டும் படியுங்கள்]

1 பிற்சேர்க்கைகள்:

மு.மயூரன் said...

//சரி/பிழை (அறம்) என்றொன்று உண்மையாகவே உள்ளது ,அறம் என்றொன்று இருக்கிறது என்று நீங்கள் எனக்கு நிரூபிக்கவில்லை, எனினும் இரண்டையும் சேர்த்தால் கேள்வி குழம்பிவிடும் என்பதால் அறம் என்றொன்று உள்ளது என எடுத்துக் கொண்டு மேலே கேட்ட கேள்விக்கு விடை தரவும்.//

முன்னர் நிகழ்ந்த உரையாடல்கள் வழியாக, அறம் என்பது பக்கசார்பானதென்றும் நீங்கள் எந்தப்பக்கம் சார்ந்து நிற்கிறீர்களோ அந்தப்பக்கத்துக்கு சரியானதை அறம் என்பீர்கள் என்றும் நான் விளங்கிக்கொண்டதாகச் சொல்லியிருக்கிறேன். 


அதனடிபடையில் தான் இந்தக் கேள்வியையே கேட்டேன். 


நான் ஒடுக்குமுறைக்கு உள்ளாகுபவர்களுக்குச் சார்பானவன். 

எனவே அவர்கள் பக்கத்து நியாயம் தான் எனக்கு அறமாகப் படும். 

இங்கே எடுத்துக்கொள்ளப்பட்ட பால்வினைத்தொழிலாளர் எடுத்துக்காட்டையே பார்ப்போம். 

இதில் பல்வேறு புறக்காரணிகளால் ஏதுமற்ற வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டு, பின் மாபியா கும்பல்களிடம் மாட்டுப்பட்டு, வேறு வழியின்றி நிர்ப்பந்தத்தின் பேரில் பால்வினைத்தொழிலில் ஈடுபடும் ஒரு பெண்ணை நான் ஒடுக்கப்படும் ஒருவராகப் பார்க்கிறேன். 

அவரைத் தண்டிப்பதை நான் "பிழை" எனக் காண்கிறேன். 

ஏனென்றால் நான் ஒடுக்கப்பட்டவர்களுக்குச் சார்பாகத்தான் சிந்திப்பேன். 

இதிலிருந்து தான் எனது கேள்வி வந்தது.

குர் ஆன் ஒடுக்கப்பட்டவர்களுக்குச்சார்பாக 9எனது பார்வையில்) பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளது. ஒடுக்குவோருக்குச் சார்பாகவும் கூறியுள்ளது.

இந்தப் பால்வினைத்தொழிலாளர் விடயத்தில், நீங்ன்கள் குர் ஆன் சொல்லிவிட்டது என்பதற்காக ஒடுக்கப்பட்ட அந்தப்பெண்ணை தண்டிப்பீர்களா, அல்லது குர் ஆனை மீறி, அப்பெண்ணின் நிலை கண்டு அவளை தண்டிக்காமல் விடுவீர்களா?

2:58 AM

அரபு விலைமாதர்கள் - நுகர்பொருள் பலியாடுகள் என்ற பதிவினை facebook இல் பகிர்ந்ததைத்தொடர்ந்து அங்கே அறுபதையும் தொட்டு நீளுகிற உரையடால் ஒன்று ஆரம்பித்தது. இவ்வுரையாடலை தொடர்ந்தும் மூடிய நிலையில் fb இல் செய்வது பொருத்தமாயில்லாத காரணத்தால் இங்கே பதிவிடுகிறேன். மிக நீண்ட உரையாடல். ஆர்வமிருந்தால் மட்டும் படியுங்கள்]

Muralitharan Mayooran மு. மயூரன் 

உலகமயமாக்கலின் பின்னர் பாலியல்
தொழிலாளிகளின் நோக்கமும் மாறியுள்ளது. முன்னரெல்லாம் இந்த தொழிலில்
ஈடுபடும் பெண், வறுமை காரணமாக, தனது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய
இதை தேர்ந்தெடுத்தாள். நுகர்பொருள் கலாச்சாரம் சராசரி மொரோக்கர்களின்
கனவுகளை மாற்றி விட்டது. சந்தையில் கடைசியாக வந்துள்ள செல்லிடத்
...தொலைபேசிக்காக, அழகான ஆடைக்காக, விலைமதிப்பற்ற நகைகளுக்காக இளம் பெண்கள்
ஆசைப்படுகிறார்கள். இவற்றை அடைவதற்காக அவர்கள் தமது உடலை விலை பேச தயாராக
இருக்கிறார்கள்.

August 26 at 11:50pm

Mayu Mayooresan, Jamalan Jahir Hussain, Sivarasa Karunagaran and 4 others like this.

 

Ashok Vish 

this is what they call FM.....try to guess it


[குர் ஆனில் பால்வினைத்தொழிலாளிகள் குறித்துவரும் அத்தியாயத்தின் பல வாசகங்களை நண்பர் Nirzaf N Nirzaf தந்திருந்தார். பின்னர் அவற்றை நீக்கிவிட்டார்]


Muralitharan Mayooran மு. மயூரன்

‎@Nirzaf N Nirzaf குர் ஆனின் பால்வினைத் தொழிலாளர்கள் தொடர்பான அந்த அத்தியாயம் படித்துள்ளேன். அடிமைகள் பால்வினை அடிமைகளாகவும் நடத்தப்படுவது பற்றி அதில் எதுவுமில்லை. ஆனாலும், விபசாரன் என்கிற விஷயம் குறித்து அது பேசுவது முக்கியமானதும் முற்போக...்கானதுமாகும். விபசாரம் நடக்கிறதென்றால் அங்கே ஆண் பெண் இருவரும் விபசாரம் செய்தாகவேண்டும்.

ஆணுக்கும் தண்டனை என்று சொல்வது ஒப்பீடளவில் முற்போக்கானது. இயேசு நாதர் காலத்தில் அவர் மிகுந்த மனவருத்தத்துடன் நேரடியாகச்சொல்லவும் முடியாத சூழலில் "முதலில் கல்லெறியட்டும்" என்று சொல்லி அமைதியானார்.

 

Muralitharan Mayooran மு. மயூரன் 

சிக்கல் எங்கே வருகிறதென்றால், கடுமையான இசுலாமிய நாடுகளாகக் கருதப்படும் நாடுகளில், விபசாரம் செய்யும் ஆணுக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்கப்படுகிறதா என்பதுதான். பெண் மட்டுமே பாதிக்கப்படும் நிலை தான் தொடருகிறது.


Muralitharan Mayooran மு. மயூரன்

பெண் பலவந்தமாக பால்வினைத்தொழிலுக்குள் திணிக்கப்பட்டு சுரண்டப்படுகிறாள் என்கிற அடிப்படையில் சமூக நீதி ஆர்வலர்கள் பால்வினைத்தொழிலை எதிர்க்கிறார்கள்.

 

Muralitharan Mayooran மு. மயூரன்

குர் ஆனோ, ஷரீஆ வோ, பவுத்தமோ எதுவோ எந்தக்கருத்தை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அவ்வம்மதங்களைக் காக்கும், பின்பற்றும் நாடுகளாக தம்மை அறிவித்துக்கொள்பவை, அந்நாடுகளின் அதிகாரத்தில் உள்ளவர்களின் நலன்களின் அடிப்படையிலேயே சட்டங்களை அமுலாக்குகிறா...ர்கள்.

விபசாரத்துக்கான தண்டனை சவூதியின் சாதாரண மக்களுக்கு நிறைவேற்றப்படும், ஆனால் பெரிய பணக்கார ஷேக்குகளுக்கு இல்லை.

அதிகார வர்க்கம் குர் ஆனையோ வேறு மத நூல்களையோ தமது நலனுக்காகப் பயன்படுத்தும்போது அம்மதநூல்களை "அனுப்பி" வைத்த கடவுளர் கண்டும் காணாமல் இருந்து விடுகிறார்கள் :)

ஆனால் ஒரு பெண் தன் சொந்த உடலை தன் சுயவிருப்பின் பேரில் வருவாய் வழியாகப் பயன்படுத்த விரும்பின...ால் அதைத்தடுக்க எவருக்கும் உரிமை உண்டா என்ற கேள்வி தற்போது எழுகிறது.

 

Sivarasa Karunagaran 

ஏறக்குறைய இதை மாதிரி இல்லாவிட்டாலும் வன்னியில் வறுமை பாலியல் தொழிலுக்கு ஊக்கத்தைக் கொடுக்கப் போகிறது. இப்போது ஆடைத் தொழிற்சாலைகளுக்குப் போக முயற்சிக்கிறார்கள். அதற்கும் தடை எனடறால், அவர்கள் தங்கள் வாழ்க்கைக்காக தங்களைக் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், அடுத்த கட்டமாக அவர்களும் நாகரீகத்தை நோக்கி அதன் தேவைகளை நோக்கி நகருவார்கள்.


Muralitharan Mayooran மு. மயூரன்

பால்வினைத்தொழில் தொடர்பான மதங்களது கண்ணோட்டத்துக்கும் சமூக நீதிப் போராளிகளின் கண்ணோட்டத்திற்கும் அடிப்படையில் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு.

மதங்கள் தம் வழக்கப்படி,

1. இம்மை, மறுமை, பாவம் புண்ணியம் என்கின்றன.
...
2. இதனைத் தனிமனித ஒழுக்கப்பிரசிச்னையாக பார்க்கின்றன.

3. தனிமனிதர்களிலிருந்து சமூகத்துக்கு தொற்றி விடப்படும் கேடு என்று பார்க்கின்றன.

4. இதனடிப்படையில் சம்பந்தப்பட்ட தனி மனிதர்களைத் தண்டிப்பதன் மூலம் இப்பிரச்சினைய தீர்க்கலாம் என்று நினைக்கின்றன

 

Muralitharan Mayooran மு. மயூரன்

ஆனால் சமூக விஞ்ஞானிகளின் பார்வை இதற்கு எதிர்மாறாக இருக்கின்றது.

1. பால்வினைத்தொழில் பெண்களை மட்டுமே உடலாலும் உழைப்பாலும் ஒட்டச்சுரண்டும் ஆணாதிக்க உலகின் உருவாக்கமாக பார்க்கப்படுகிறது.

2. இத்தொழில் ஈடுபடும் பெண்கள் அல்ல, மாறாக அப்பெண்களை இத்தொ...ழிலுக்குள் தள்ளும் பெரும் மாபியா வலைப்பின்னல்களும் அதனால் லாபமீட்டும் பெரும் பால்வினைத் தொழிற்றுறை முதலாளிகளும் தான் குற்றவாளிகள் என்ற உண்மை வலியுறுத்தப்படுகிறது.

3. சமூக அமைப்பும், பொருளாதார அமைப்பும் தனிமனிதர்கள் மீது செய்யும் கேடாகவே இது பார்க்கப்படுகிறது.

4. தனிமனிதரைத்தண்டிப்பதல்ல, மாறாக, பால்வினைத்தொழில் எனும் பெண்கள் மீதான பெரும் சுரண்டலை ஒழிக்க சமூக - பொருளாதார அடிப்படைகள் மாற்றம் காண வேண்டும் என்ற பார்வை முன்வைக்கப்படுகிறது.

 

Muralitharan Mayooran மு. மயூரன்


மத நூல்களின் அடிப்படையில் சிந்திக்க, சட்டமியற்ற, தண்டிக்க வெளிக்கிடும்போது, அது உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களையே தண்டிக்கிறது.

உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல், ஒட்டுமொத்த குற்ற வலைப்பின்னலும், மோசமான சமூக-பொருளாதார அமைப்பும் இலகுவாக...க் கட்டிக் காக்கப்படுகிறது.

 

Shafie Salam

@ Mauran

சரி,இறைவன்,மதம்,கட்டுப்பாடு,மறுமை என்ற வட்டத்தை விட்டு வெளியே வந்து ஒரு கேள்வி கேட்கிறேன்.

...உங்கள் முடிவு என்ன ?

விபச்சாரம் அனுமதிக்கப்பட வேண்டுமா ?

அல்லது தண்டிக்கப்பட வேண்டுமா ?

 

Muralitharan Mayooran மு. மயூரன்

‎@Shafie Salam

முதலில் விபசாரம் என்றால் என்ன என்று வரைவிலக்கணப்படுத்திவிடுவோம். ஏனென்றால் அரசியல் விபசாரம் தொடக்கம் அறிவு விபசாரம் வரைக்கும் இருக்கிறது. :)

"ஓர் ஆணோ பெண்ணோ மாற்றுப் பாலினரோ தம் உடலைப் ஏதுமொரு பால்வினை நோக்கத்துக்குப் பயன்படுத்...தவென இன்னொருவருக்கு வாடகைக்கு விடுவது, அவ்வாறு வாடகைக்கு விடப்படும் உடலைப் பணம் கொடுத்துப் பயன்படுத்துவது விபசாரம் எனப்படும்" இல்லையா?

இன்னும் தெளிவாக உடலை வாடகைக்கு விடுபவரைப் "பால்வினைத் தொழிலாளி" என்றும் வாடகைக்குப் பெறுபவரைப் "பால்வினை நுகர்வோர்" என்றும் பிரித்துக்கொள்வோம்.

விபசாரம் ஆதிகாலம் தொட்டே மிகப்பெரும் தொழிற்றுறையாக இயங்கி வருகிறது.

 

Muralitharan Mayooran மு. மயூரன் 

சிறுபான்மை ஆண் பால்வினைத்தொழிலாளிகள் இருந்தபோதும் மிகப்பெரும்பான்மையான பால்வினைத்தொழிலாளர்கள் பெண்களும் மாற்றுப்பாலினருமே.

மற்றப்பக்கமாக, ஆதிகாலம் தொட்டே மிகப்பெரும்பான்மையான பால்வினை நுகர்வோர் ஆண்களே

Muralitharan Mayooran மு. மயூரன்

பெண்களுக்கு சொத்துரிமை இல்லாதிருந்தது, பெண்கள் ஆண்களின் தனிச்சொத்தாக மட்டுமே இருந்தது, பெண்களுக்கான பாலியல் சுதத்நிரம் முற்றாகவே மறுக்கப்பட்டு ஆண்களுக்கு கட்டற்ற சுதந்திரம் பெற்றுத்தரப்பட்டது முதல்,

இன்று பெண்களை விட ஆண்கள் அதிக சொத்துடைமைய...ும், பாலியல் சுதந்திரமும் கொண்டிருக்கும் காணம் வரை பல காரணங்களால்,

பால்வினைத்தொழிற்றுறை ஆண்களால் ஆண்களுக்காக நடத்தப்படும் தொழிற்றுறையாக இருக்கிறது. அங்கே பெண்களும் மாற்றுப்பாலினரும் தொழிலாளிகளாக உள்ளனர்.

இதனாற்றான் பால்வினைத்தொழிலை முழுமையான ஆணாதிக்கத் தொழிற்றுறையாகப் பார்க்கின்றனர்.

 

Muralitharan Mayooran மு. மயூரன்

இவ்வாறான மாபியாத்தனமான தொழிற்றுறையாக இயங்கும் சிவப்பு விளக்குத் தொழிற்றுறையினுள் விற்பனைப்பண்டமாகவும் தொழிலாளராயும் இயங்கும் பெண், மாற்றுப்பாலினப் பால்வினைத்தொழிலாளிகள் அடிமைகள் போல, கூட்டம் கூட்டமாகப்பிடித்துவரப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டு ...சித்திரவதைகளினூடாகவும் ஒட்டச்சுரண்டப்படுகின்றனர்.

சட்டத்துக்குப்புறம்பான தொழிற்றுறையாக இருக்கும் காரணத்தால் தொழிலாளருக்குரிய அடிப்படை உருமைகள் தொடக்கம், மனித உரிமைகள் வரைக்கும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அவ்வுரிமைகளைக் கோரி ஒன்றிணைந்து போராடவும் அவர்களுக்கு முடிவதில்லை.

 

Muralitharan Mayooran மு. மயூரன்

இப்போது உங்கள் கேள்விக்கான பதிலுக்கு வருகிறேன்.

பெண்களையும் மாற்றுப்பாலினரையும் ஆண்களையும் கூட கொத்தடிமையாக்கி, சித்திரவதை பண்ணி ஒட்டச்சுரண்டும் இந்த விபசாரத்தொழிற்றுறை அழித்தொழிக்கப்படவேண்டியதே.

இத்தொழிற்றுறையை நிர்வகித்து நடத்தும் மாபியா ...வலையமைப்பு, அதன் முதலாளிகளும் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டியவர்களே.

 

Muralitharan Mayooran மு. மயூரன் 

ஆனால் ஏற்கனவே சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கும் பால்வினைத்தொழிலாளிகள் தண்டனைக்குரியவர்கள் அல்ல. மாறாக அவர்கள் மறுவாழ்வளிக்கப்படவேண்டிய பாதிக்கப்பட்ட மனிதர்கள். அவர்கள் மீது சமூகமும் சட்டங்களும் அன்பும் ஆதரவும் கொண்டிருக்கவேண்டும்

 

Muralitharan Mayooran மு. மயூரன் 

இப்பொழுது நான் உங்களிடம் கேட்கிறேன்.

பல்வேறு அடக்குமுறைகளூடாகவும், சமூக பொருளாதார நிர்ப்பந்தங்களினூடாகவும் பலியாடுகளாக்கபப்ட்டுச் சுரண்ட்ப்படும் இந்த

விபசாரிகள் தண்டிக்கப்பட வேண்டுமா?

 

Shafie Salam

இதற்கு பதில் சொல்ல கொஞ்சம் Time வேணும் .

 

Shafie Salam

நான் கேட்ட கேள்விக்கு உங்கள் பதிலின் சுருக்கம் .

கட்டாயப்படுத்தி விபச்சாரம் செய்விப்பவர்களை தண்டிக்க வேண்டும்.

...Okay.

சுய விருப்பத்தின் பெயரில் Or பணத்துக்காக செய்பவர்கள்/செய்விப்பவர்களை என்ன செய்ய வேண்டும் ?
இன்ஷா-அல்லாஹ், முடிந்தவரை உடனடியாகப் பதில் தருகிறேன்.

 

Muralitharan Mayooran மு. மயூரன்

நான் சொன்ன பதிலின் பாதியைத்தான் உங்க்ள் சுருக்கம் சொல்கிறது.

நான் சொன்னது இதுதான்.

1. ஒரு பால்வினைத்தொழிலாளி சுரண்டப்படும், சித்திரவதைக்குள்ளாகும் பாதிக்கப்பட்ட ஆளாக இருப்பதால் அவர் தண்டிக்கப்படக்கூடாது.
...
2. பால்வினைத்தொழிற்றுறையை அமைத்து ஆளும், பால்வினைத்தொழிலாளிகளை வதைத்துச் சுரண்டும் மாபியா, முதலாளி வலையமைப்பு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

 


Muralitharan Mayooran மு. மயூரன் 


உங்கள் இரண்டாவது கேள்விக்கான பதிலையும் இந்த இடத்திலேயே தொடங்குவது உரையாடலை மேலும் சிக்கலாக்கும் என்பதால் இந்த விடயத்தை முடித்துக்கொண்டு அதற்கடுத்து அங்கே வருவோம்.

 


Shafie Salam

//பால்வினைத்தொழிற்றுறையை அமைத்து ஆளும், பால்வினைத்தொழிலாளிகளை வதைத்துச் சுரண்டும் மாபியா, முதலாளி வலையமைப்பு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். \\

நல்லது.

...1)ஒரு மனிதனை அல்லது மனிதர்களை வேறு ஒரு மனிதன் அல்லது மனிதர்கள் துன்புறுத்துவதனால் , அத் துன்புறுத்தும் மனிதனை அல்லது மனிதர்களை மீண்டும் ஏன் துன்புறுத்த வேண்டும் ? அல்லது தண்டனை வழங்க வேண்டும் ? .

2)அநீதி இழைக்கப்பட்டவர்களுக்காக இப்படி தண்டனை வழங்க முற்பட்டு அதற்காக குழுக்கள்,நீதிமன்றங்கள்,சட்டங்கள் எல்லாம் அமைத்துக் கொண்டு இருப்பதனால் நேரமும்,பணமும் தான் விரயம் எனக் கருதுகிறேன்.நீங்கள் சொல்வது போல தண்டனை வழங்குவதனால், அதற்காகப் போராடுவதனால் , அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு ஞாயத்தைப் பெற்றுக் கொடுப்பதனால் என்ன பயன் இருக்கிறது ?

3)இப்படி ஒரு முறையை யார் உருவாக்கியது ?

4)ஒரு பேச்சுக்கு நான் இந்த அநீதி இழைக்கப்பட்ட தொழிலாளர்களுக்காக , அல்லது வேறு யாராவது இந்தத் தொழிலாளர்களுக்காகப் போராடி , அவர்களுக்காக ஞாயத்தையும் , முதாலாளி வர்க்கத்துக்காக தண்டணையையும் பெற்றுக் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.இதனால் எனக்கு அல்லது இதற்காகப் போராடியவருக்கு என்ன லாபம் ?

கோபித்துக் கொள்ளாமல் இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்லுங்கள்.

 

Muralitharan Mayooran மு. மயூரன் 

நீதிக்காகப் போராடுவதால் , அநீதியைத் தண்டித்துத் தோற்கடிக்க முயலுவதால் யாருக்கு என்ன லாபம் என்று கேட்கிறீர்கள் இல்லையா?

 

Muralitharan Mayooran மு. மயூரன்

இது எது நீதி எது அநீதி என்ற கேள்விக்கூடாக வந்து சரி என்றால் என்ன தவறு என்றால் என்ன என்ற வரைவிலக்கணத்தைச் சொல்லச்சொல்லிக் கேட்கிறது.

இது ஓர் அடிப்படை மெய்யியல் கேள்வி. மிக மிகச் சிக்கலான கேள்வி.

கூடவே தவறுக்கு எதிராக ஏன் போராட வேண்டும் என்று... இன்னொரு மெய்யியல் கேள்வியையும் கேட்கிறது

 

Shafie Salam

இந்த இடத்தில் தான் நாத்தீகத்தை நான் மறுக்க வேண்டி வருகிறது.

ஏனென்றால் இந்தப் பிரபஞ்சம் ஆரம்பமானது பெரு வெடிப்புடன்.அதற்கு முன் ஒன்றும் இருக்கவில்லை, வெறும் சூனியத்திலிருந்தும்/இல்லாமையிலிருந்தும் இந்தப் பிரபஞ்சம் ஆரம்பமானது.பின் பல கோடி ஆண்ட...ுகளுக்குப் பிறகு நாமெல்லாம் குரங்குகளிலிருந்து கூர்ப்படைந்து வந்தோம் . சரியா ?

ஆக எல்லாமே இந்தப் பெரு வெடிப்புக்குப் பிறகு தான் தற்செயலாக உருவானது , மேலும் மனிதன் தான் அவன் கூர்ப்படைந்த பிறகு சட்டங்களை/வரையறைகளை தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். நீதி/அநீதி, ஞாயம்/தர்மம் , நல்லது/கெட்டது , இவையெல்லாம் யாராவது அல்லது ஏதாவது ஒன்றினது உருவாக்கமாகத்தான் இருக்க வேண்டும் . இல்லையா ?

அதனால் நாம் இதற்கெல்லாம் யாரையும் கட்டுப்படச் சொல்லவோ , அல்லது நாமே அந்த வரையறைகளுக்கு கட்டுப்படவோ தேவை இல்லை. ஏனென்றால் அதனால் நமக்கொன்றும் நிகழப் போவதில்லை. இந்த நீதி/அநீதி, ஞாயம்/தர்மம் , நல்லது/கெட்டது என்பவற்றையெல்லாம் எங்களுக்கு முன்னிருந்த ஏதாவது ஒரு மூத்த குரங்கு தான் உருவாக்கி இருக்க வேண்டும்.

 

Shafie Salam

So , ஒருவரை நான் கொலை செய்தாலும் என்னை யாரும் தடுக்கவோ/தண்டிக்கவோ வரக் கூடாது.ஏனென்றால் தவறு என்று ஒன்றுள்ளது, அதை நாம் செய்யக் கூடாது , அந்த தவறு என்ற பட்டியலில் இந்தக் கொலை அடங்கும் என்று வரையறுத்தது ஒரு குரங்கு , அல்லது கொஞ்சம் கூர்ப்படை...ந்த மனிதக் குரங்கு சரியா ? .அதற்கு நாம் ஏன் கட்டுப் பட வேண்டும் ? சொல்லுங்கள் பார்ப்போம்.

இப்படியே மனிதனால் வரையறுக்கப்பட்ட எல்லாத் தவறுகளையும் சொல்லாம், எல்லா நல்லதையும் சொல்லலாம்.அதை சிலர் ஏற்கலாம் , பலர் மறுக்கலாம்.யாரும் யாரையும் கேள்வி கேட்க முடியாது. அப்படியானால் கடைசி முடிவு என்ன ? எல்லோரும் அவர் அவர் இஷ்டத்துக்கு வாழ வேண்டும்.யாரையும் கொல்லலாம்,எதையும் அழிக்கலாம்.எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.நாமெல்லாம் சிறிது காலத்தில் அழிந்து போகப் போகின்ற (மரணம்) Intelligent குரங்குகள் சரிதானே ?

அது தான் நான் சொல்கிறேன். ஒரு மனிதன் செய்வதை தவறு அல்லது நல்லது என்று கூட நம்மால் சொல்ல முடியாது.ஏனென்றால் அது சிலர் பார்வையில் தவறாகும்.சிலர் பார்வையில் சரியாகும்.இதெல்லாம் மனிதனின் உருவாக்கம் தானே ? .இதில் யாரும் கட்டுப் படத் தேவை இல்லை.


Shafie Salam

அதனால் அங்கு இப்படி நடக்கிறது , இங்கு அப்படி நடக்கிறது என்று நாம் புலம்புவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. நல்லது கெட்டது என்றே ஒன்றில்லை எனும் பொழுது , எப்படி நாம் புலம்புவது ,எதை வைத்து புலம்புவது.
ஆகவே இத்தொழிற்றுறையை நிர்வகித்து நடத்தும் மாபி...யா ,வலையமைப்பு,அதன் முதலாளிகளும் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட முடியாது.

இந்த Main பிரச்சினையை நாத்தீகர்கள் பார்ப்பதே இல்லை. அவர்கள் செய்வதெல்லாம் "அங்க பாருங்க மதம் என்ற பெயரில் சண்ட பிடிச்சிக்கிறாங்க" , "ஐயோ அங்க அநியாயம் நடக்குது" என்று புலம்புவது மட்டுமே.

இதில் வேடிக்கை என்னவென்றால் நாத்தீகர்கள் , வெகுவாக Blood Donation செய்வார்கள் .ஏனென்று கேட்டால் விடை இல்லை.

மயூரன் மேலே நான் சொன்ன விடயங்களுக்கு உங்களால் முடிந்தால் பதில் தாருங்கள். இது வரை எத்தனையோ நாத்தீக/ஆத்தீகர்களுக் கிடையிலான விவாதங்களைப் பார்த்துள்ளேன்.எந்த ஒன்றிலும் எந்த நாத்தீகனும் இந்தக் குழப்பத்துக்கு விளக்கம் சொன்னதே இல்லை.

ஒரு விடயத்தை நன்கு கவனியுங்கள்,

இறைவன் என்றொருவன் இல்லையென்று நாம் வாதிக்கத் துவங்கினால் , நாமே பொய்யாகிப் போகிறோம் . பார்த்தீர்களா ?

 

Muralitharan Mayooran மு. மயூரன்

Shafi, நீங்கள் கேட்டதற்கு நான் இன்னும் பதில் சொல்லி முடிக்கவில்லை. :)

முன் தோன்றிய மூத்த குரங்கொன்றோ அல்லது தனி மனிதர் ஒருத்தரோ போதனை போல இதுதான் சரி இதுதான் தவறு என்று சொன்னதாகவும், அதிலிருந்தே சரி தவறு என்கிற கண்ணோட்டம் உற்பத்தியாவதாகவும் ...நம்புகிற உலகப்பார்வை அல்ல என்னுடையது.

எது சரி எது தவறு என்கிற கண்ணோட்டம் காலத்துக்குக்காலம், சமூகத்துக்குச்சமூகம், சூழலுக்குச்சூழல், ஆட்களுக்கு ஆட்கள் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. மாறிக்கொண்டே இருக்கிறது.

நேற்று சரியாயிருந்தது இன்று தவறாகலாம். நேற்று தவறாயிருந்தது இன்று சரி என ஏற்றுக்கொள்ளப்படலாம்.

இலங்கையில் சரியான ஒன்று இங்கிலாந்தில் தவறெனக் கருதப்படலாம்.

மொத்தத்தில் எது சரி எது தவறு என்பதை சூழலும் தேவைகளும், நிர்ப்பந்தங்களும், வாழ்க்கை முறைகளும், உற்பத்தி முறைகளுமே தீர்மானிக்கின்றன. தனிமனிதர்கள் தீர்மானிக்க முடியாது.
இவ்வாறான சூழல் காரணிகள் குறித்த மக்கள் கூட்டத்திடையே சரி தவறு பற்றிய கண்ணோட்டங்கள் உருவாகக் காரணமாகின்றன.

இவ்வாறு மக்களிடையே உருவாகும் கண்ணோட்டங்கள் திரண்டெழுந்து நீதி நூல்களாக, மதங்களாகத் தோற்றம் பெறுகின்றன.

பாலில் திரளுகிற வெண்ணெயை ஏதாவதொரு கரண்டியால் அள்ளுவதைப்போல மக்கள்டையே உருவாகும் சரிதவறு குறித்த கண்ணோட்டங்களைத் திரட்டி பொழிப்பாக திருவள்ளுவர் போன்றோ புத்தரைப்போன்றோ ஒருவர் வந்து நூலுருவில், போதனையாக சொல்லிவிட்டுப்போகிறார்.


Muralitharan Mayooran மு. மயூரன்

சரி தவறு பற்றிய கண்ணோட்டம் ஒவ்வொரு வரலாற்றுக் காலகட்டத்திலும் ஒவ்வொரு மாதிரி இருந்ததற்கு மேலதிகமாக, அதற்கு ஒரு வர்க்கச்சார்பும் இருந்தது.

ஆளுவோருக்குச் சரியாக இருப்பது ஆளப்படுவோருக்கு நியாயமாக இருந்ததில்லை.

ஒடுக்குவோருக்குத் தவறாகப்பட்டது ஒ...டுக்கப்படுவோர் நிலையில் தவறானதாக இருப்பதில்லை.

ஆள்வோரும் ஒடுக்குவோரும் இதுதான் சரி இது தவறென தமக்குச்சார்பான கண்ணோட்டம் ஒன்றை தமது அதிகாரம் பலம் போன்றவற்றைக்கொண்டு தம் ஆளுகைக்குட்பட்ட எல்லோர் மீதும் திணிக்கிறார்கள். இதை நீதி, சட்டம் என்ற வடிவில் ஒடுக்கப்படுவோர் வேறி வழியின்றி ஏற்றும் சுமந்தும் வாழ்கிறார்கள்.

முரண்பாடு முற்றும் ஒரு கட்டத்தில் ஒடுக்கப்படுவோர் தமக்குச் சரியானதை நிறுவ ஒடுக்குவோரை எதிர்த்துப் போரிடுகிறார்கள். கிளர்ச்சி செய்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக யேசுநாதர் அதுவரை காலமும் ஆளும் வர்க்கத்துக்குச் சரி எனப்பட்டதை எதிர்த்து கேள்வி கேட்டார். ஆளப்படும் வர்க்கத்துக்குச்சார்பான நீதி பற்றி பேசினார். ஆளும் வர்க்கத்தால் கொல்லப்பட்டார்.

இவ்வாறான கிளர்ச்சி ஒன்றின் போது நாம் எவருடைய "சரி" யைச் சார்ந்து நிற்பது?

இந்தக்கேள்வியே எனது உலகப்பார்வையை உருவாக்கியுள்ளது.

அதிகாரத்தைக் கைப்பற்றிய ஒரு சிறுபான்மையோர், தமது நலனுக்காகவும் பேராசைக்காகவும் சுகபோகத்துக்காகவும் இயற்கை வளங்களையும் மனித உழைப்பையும் மனிதர்களையும் விலங்குகளையும் ஒட்டச்சுரண்டுகின்றனர். பெரும்பான்மையாக இருக்கும் மனிதர், உயிரினங்களின் நலன்களை தமது சொந்த சுகபோகத்துக்காக குலைக்கின்றனர்.

இவர்களே ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒடுக்கும் வர்க்கமாக இருந்துள்ளனர். இவர்கள் வரலாறு வளர்ந்து செல்வதைத் தடுப்பார்கள். உலகம் அப்படியே இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்கான மதங்களையும் நீதி நூல்களையும் ஆதரிப்பார்கள். ஏனெனில் உலகம் அப்படியே இருந்தால்தான் இவர்களது சுகபோகமும் அப்படியே இருக்கும்.

வரலாற்றில் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த ஒடுக்கும் வர்க்கம் தோற்கடிக்கப்பட்டு புதிய நிலையும் புதிய ஒடுக்கும் வர்க்கமும் தோற்றம் பெற்றுள்ளது. இதன்வழி மனித குலம் கூர்ப்படைந்து வருகிறது.

 

Muralitharan Mayooran மு. மயூரன்

முடிந்தவரை அனைவரும் நலமாக வாழ்கின்ற, இயற்கை வளங்களும் உயிரினங்களும் பேணி வளர்கிற ஆரோக்கியமான உலகம் ஒன்று கூர்ப்படையும் நிலைக்கு ஒடுக்குவோர் அச்சுறுத்தலாக அமைகிறார்கள். எனவே நான் ஒடுக்கப்படுவோரின் நியாயத்துக்கு, அவர்களின் "சரி" இற்குச் சார்ப...ாக நிற்பேன்.

இன்றைய காலகட்டத்தில் மனிதரின் அறிவும் அனுபவமும் ஆய்வறிவும் வளர்ந்திருக்கிற நிலையில் பல்வேறு தளங்களிலும் நிகழும் ஒடுக்குமுறைகளை இனங்காணத்தக்கதாக இருக்கிறது. ஒடுக்குவோர்-ஒடுக்கப்படுவோர் என்ற எளிய தெளிவான பிரிப்புக்கு மேலதிகமாக பல்வேறு தளங்களில் ஒடுக்குமுறைகள் இயங்கிக்கொண்டிருப்பதை கண்டறிந்திருக்கிறோம்.

ஒட்டுமொத்தமாக எல்லாவகையான ஒடுக்குமுறையிலிருந்தும் சுரண்டல்களிலிருந்தும் விடுபடுவதே மனிதகுலமும் இந்த உலகமும் அடுத்த சிறப்பான மேன்மையான கட்டத்தை அடைவதற்கான வழி என்று கண்டுபிடிக்கிறோம்.

இதை உயிரியல் விஞ்ஞான ரீதியாக அணுகினால் உயிரினங்களினதும் மனிதர்களினதும் "பிழைத்துவாழ்வதற்கான" உந்துதல் என்று சொல்லலாம்.

நாம் எதற்காகப் போராடுகிறோம், எந்த நலனுக்காகப் போராடுகிறோம் என்று நீங்கள் கேட்கும்போது, அதற்கான பதில் இதுதான். நாமும் எமது சந்ததியும் கூடவாழும் இயற்கையும் உயிரினங்களும் சிறப்பான உலகொன்றில் வாழ்வதற்காகப் போராடுகிறோம். அனைவரும் "பிழைத்துவாழ்வதற்காக" போராடுகிறோம். strugle for the survival. இது ஓர் உயிரியல் விஞ்ஞான நிகழ்வு.

அடக்குமுறை செய்வோரைத் தண்டித்து, அவர்களைப் பலவீனப்படுத்தி அடங்கியிருக்கும் பெரும்பான்மையோரை விடுவிக்கப்போராடுகிறோம். அப்போது இன்னும் அதிகம் பேர் இந்த உலகில் ஆரோக்கியமாவும் நன்றாகவும் வாழ்வர். அவர்களது சந்ததியும் அந்த ஆரோக்கிய வாழ்வை அனுபவிக்கும்.

 

Muralitharan Mayooran மு. மயூரன்

இந்த விஞ்ஞானப்பார்வைக்கு மேலதிகமாக, மனித அடிப்படை இயல்புகளான இரக்கம், அன்பு, கருணை போன்றவை வருகின்றன.

(இவை கூட உயிரியல் ரீதியாக பிழைத்துவாழும் உந்துதலை வைத்து விளக்கப்படுகின்றன)

உயிர்களிடத்தில் அன்பாயிரு. பாதிக்கப்படுவோர் மீது அனுதாபம் கொள்ள...ு என்று போதிக்காத மதநூல்களே இல்லை என்று நினைக்கிறேன் (அவை இந்தப்போதனைக்கு முரணான வேறு போதனைகளை சொல்லிச்சென்ற போதிலும்)

அன்பு, அனுதாபம் என்பது மனித விலங்கின் அடிப்படை இயல்பாக இருப்பதால் அதனைப்போதிக்காமல் மதமொன்று மக்கள் மத்தியில் செல்வாக்குப்பெற முடியாது.

கண்முன்னே ஓர் அநியாயம் நடக்கும்போது, ஓர் அப்பாவி பாதிக்கப்படும்போது அதைக்கண்டு மனம் வெம்பாமல் இருக்கும் ஒருவர் மனிதராகவே இருக்க முடியாது. விலங்குகளுக்குக்கூட இந்த உந்துதல் உண்டு.

இதற்கு முன் நான் நீள எழுதிய விஞ்ஞானரீதியான காரணங்களைத்தான் ஏற்கவேண்டாம், இவ்வாறானதொரு மனிதாபிமானப் பார்வையைக்கூட நீங்கள் கொண்டிருக்க மாட்டீர்களா?

இயேசுநாதர் சொன்னதைப்போல, "உன்னை நேசி, உன்னைப்போலவே உன் அயலானையும் நேசி" என்கிற அன்பின் மிக அடிப்படையான கோரிக்கையைக்கூட நிராகரிக்கிறீர்களா?

ஒரு பால்வினைத்தொழிலாளி தண்டிக்கப்படும்போது, உண்மையாகவே மிகப்பெரும் தண்டனைக்குள்ளான அந்த மனித உயிர் மறுபடியும் அநீதியான முறையில் தண்டிக்கப்படுவதை உங்கள் மனம் எதிர்த்துக் கொதிக்காதா? அங்கே நீதிகேட்டு, அத்தண்டனைக்கு எதிராக செயற்பட அன்பும் மனிதாபிமானமும் உங்களை உந்தாதா?

நீங்கள் சொல்லும் ஆத்திகம் இந்த அன்புடைமையை மறுக்கிறதென்றால், அந்த ஆத்திகத்தைப் போதித்தது கடவுளா சாத்தானா?

மக்கள் மீது கொண்ட அன்போடு இதனை ஆழச் சிந்திதுப்பாருங்கள்.

 

 

Muralitharan Mayooran மு. மயூரன் 


ரத்ததானம் செய்கிறார்கள் என்றால் அதை உயிர்கள் மீது கொண்ட அன்பினால் செய்கிறார்கள்.

அதைத் தவறென்கிறீர்களா?

 

Shafie Salam

//இவ்வாறான சூழல் காரணிகள் குறித்த மக்கள் கூட்டத்திடையே சரி தவறு பற்றிய கண்ணோட்டங்கள் உருவாகக் காரணமாகின்றன.\\

இப்போதும் சரி தவறு என்பதை மனிதன் அல்லது மனிதர்கள் தான் முடிவெடுக்க வேண்டியுள்ளது. நான் என்ன சொல்கிறேன் என்றால் சரி/தவறு என்று ஒன்றே... இருக்க முடியாது என்று. இதுவும் மனிதனின் உருவாக்கம் தான்.இதற்கு வேறொரு மனிதன் கட்டுப்படத் தேவையில்லை.அதனால் அவனுக்கு ஒரு லாபமும் இல்லை.

//எனவே நான் ஒடுக்கப்படுவோரின் நியாயத்துக்கு, அவர்களின் "சரி" இற்குச் சார்பாக நிற்பேன்.\\

சரி அது உங்கள் முடிவு. ஆனால் நான் ஒடுக்குவோரின் நியாயத்துக்கு அதாவது நீங்கள் அநியாயம் என்று சொல்வதற்கு சார்பாக நிற்க முடிவெடுக்கிறேன். அதைத் தவறு என்று நீங்கள் சொல்லவோ, விமர்சிக்கவோ முடியாது இல்லையா ? .

ஏனென்றால் ஒடுக்குவோராக இருப்பதனால் அதிக லாபமும் , சுகமும் கிடைக்கிறது. நீங்கள் அதை மனித நேயம் இல்லை என்றால் , அது என்னவென்று நான் திரும்பக் கேட்பேன் , அல்லது நான் வரை விலக்கனப்படுத்தும் மனித நேயம் அடுத்தவர்களை ஒடுக்கி வாழ்வதே , நீங்கள் வரைவிலக்கணப்படுத்தி உள்ள மனித நேயத்துக்கு கட்டுப்பட நான் தயாராக இல்லை என்று சொல்வேன்.

//ஒட்டுமொத்தமாக எல்லாவகையான ஒடுக்குமுறையிலிருந்தும் சுரண்டல்களிலிருந்தும் விடுபடுவதே மனிதகுலமும் இந்த உலகமும் அடுத்த சிறப்பான மேன்மையான கட்டத்தை அடைவதற்கான வழி என்று கண்டுபிடிக்கிறோம்.\\

இதை நீங்கள் சரி காண்கிறீர்கள். ஆனால் இது தேவையில்லாத ஒன்று.மனிதகுலம் எனக்குப் பிறகு சிறப்படைந்தால் என்ன ? அழிந்து போனால் எனக்கென்ன ? நானோ எல்லாரையும் போல இல்லாமைக்குள் செல்லப் போகிறேன்.அப்படி இல்லாமைக்குள் (மரணம்) சென்ற பின் நீங்கள் குறிப்பிடும் இந்த மனித குலத்தின் நலத்தால் எனக்கென்ன லாபம் ?


Shafie Salam

//நாமும் எமது சந்ததியும் கூடவாழும் இயற்கையும் உயிரினங்களும் சிறப்பான உலகொன்றில் வாழ்வதற்காகப் போராடுகிறோம்.\\

இது உங்களின் போராட்டம்.இதை நீங்கள் சரி காண்கிறீர்கள்.இன்னொருவனோ தான் மட்டும் சிறப்பாக வாழ்வதை சரி காண்பான்.அதற்காக மற்றவர்களை ஒடுக்...குவான்.இதைத் தவறென்று நாம் சொல்லமுடியாது இல்லையா ?.ஏனென்றால் நமக்கு பொதுவாக ஒரு தீர்ப்பளிக்க ஒருவரும் இல்லை.

//மனித அடிப்படை இயல்புகளான இரக்கம், அன்பு, கருணை போன்றவை வருகின்றன.\\

இவை சாதாரண உணர்வுகளே.கோபம்,சுயநலம்,பொறாமை போல.சிலருக்கு இரக்கம், அன்பு, கருணை போன்றவை முன்னிற்கிறது அவர்கள் அன்னை தெரேசா ஆகிறார்கள்.சிலருக்கு கோபம்,சுயநலம்,பொறாமை என்பன முன்னிற்கிறது அவர்கள் ஹிட்லர் ஆகிறார்கள்.இதில் ஒன்றைச் சரி மற்றது பிழை என்று நாம் எப்படி சொல்வது ?.எல்லாம் வெறும் உணர்வுகள் தான்.

அடுத்தது இரக்கம், அன்பு, கருணை போன்ற குணங்களை வளர்த்துக் கொள்வது பலருக்கு கடினமான ஒன்று.ஆனால் கோபம்,சுயநலம்,பொறாமை போன்றவற்றை வளர்த்துக் கொள்வது அவர்களுக்கு சுலபம், ஏன் நான் சுலபமான ஒன்றை விட்டு விட்டு எனக்குப் பிறகு வரப்போகும் சில குரங்குகளுக்காக கடினமானதை தேர்ந்தெடுக்க வேண்டும் ?

//கண்முன்னே ஓர் அநியாயம் நடக்கும்போது, ஓர் அப்பாவி பாதிக்கப்படும்போது அதைக்கண்டு மனம் வெம்பாமல் இருக்கும் ஒருவர் மனிதராகவே இருக்க முடியாது.\\

இதுவும், அநியாயம் என்றால் என்ன என்பதிலும்,ஏன் நான் நீங்கள் அநியாயம் என்று சொல்வதை ஆதரிக்கக் கூடாது என்பதிலும் உள்ளது. லெனின் கிட்டத்தட்ட ஆறு மில்லியன் மக்களைக் கொன்றார்,ஹிட்லர் மூன்று இலட்சம் யூதர்களைக் கொன்றார்.இவையெல்லாம் அவர்கள் பார்வையில் சரியாகவே இருந்துள்ளது.அவர்களும் எங்களைப் போன்ற மனிதர்கள் தான்.

ஈழப் போரின் இறுதியில் மஹிந்த ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்றார்.இது அவர் பார்வைக்கு சரி என்று பட்டுள்ளது,இவர்களை எல்லாம் மனிதர்கள் இல்லை என்கிறீர்களா ? உணர்ச்சி ரீதியாக இவர்கள் மனிதர்களே இல்லை என நீங்கள் சொல்லலாம்.ஆனால் விஞ்ஞான ரீதியாக (டார்வின் இன் கூர்ப்புக் கொள்கை) இவர்களும் குரங்கிலிருந்து கூர்ப்பின் இறுதியை வந்தடைந்துள்ள மனிதர்கள்.

 


Shafie Salam


// இவ்வாறானதொரு மனிதாபிமானப் பார்வையைக்கூட நீங்கள் கொண்டிருக்க மாட்டீர்களா?\\

யாருடைய மனிதாபிமானப் பார்வையில் பார்க்க வேண்டும் என்கிறீர்கள் ? இயேசு நாதருடைய பார்வையிலா ?அல்லது லெனின் இன் பார்வையிலா?

...//இயேசுநாதர் சொன்னதைப்போல, "உன்னை நேசி, உன்னைப்போலவே உன் அயலானையும் நேசி" என்கிற அன்பின் மிக அடிப்படையான கோரிக்கையைக்கூட நிராகரிக்கிறீர்களா?\\

ஏன் அன்பின் அடிப்படையை நான் ஏற்க வேண்டும் ? வெறுப்பின் அடிப்படையான விரோதத் தன்மையை நான் தேர்ந்தெடுக்கிறேன்.இதிலென்ன தவறு இருக்கிறது ? எல்லாம் மனிதனுள் சுரப்பிகளால் தோன்றும் வெறும் உணர்வுகளே.

//ஒரு பால்வினைத்தொழிலாளி தண்டிக்கப்படும்போது, உண்மையாகவே மிகப்பெரும் தண்டனைக்குள்ளான அந்த மனித உயிர் மறுபடியும் அநீதியான முறையில் தண்டிக்கப்படுவதை உங்கள் மனம் எதிர்த்துக் கொதிக்காதா? அங்கே நீதிகேட்டு, அத்தண்டனைக்கு எதிராக செயற்பட அன்பும் மனிதாபிமானமும் உங்களை உந்தாதா?\\

சரி உங்களுக்குள் இருக்கும் சுரப்பிகளால் நீங்கள் இதை எதிர்த்துக் கொதிக்கிறீர்கள்.ஆனால் நீங்கள் குறிப்பிட்ட மாபியா முதலாளிகளின் சுரப்பிகள் அதைக் கண்டு சந்தோஷப்படும் வகையில் சுரக்கிறது. இதில் நான் ஆதரிக்கிறதுக்கும்,எதிர்கிறதுக்கும் என்ன இருக்கிறது ?.இது வெறும் ஹோர்மோன்கள் செய்யும் வேலை.இயற்கையின் அமைப்பு.

//நீங்கள் சொல்லும் ஆத்திகம் இந்த அன்புடைமையை மறுக்கிறதென்றால், அந்த ஆத்திகத்தைப் போதித்தது கடவுளா சாத்தானா?\\

இதெல்லாம் இல்லை என்ற எடுகோளோடு , ஒரு நாத்திகனாகத் தான் நான் உங்களுடன் பேசிக் கொண்டு இருக்கிறேன்.இல்லாத ஒன்றைப் பற்றி நாம் தேவையில்லாமல் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை. Reality ஐ பேசுவோம்.

 

Shafie Salam

//ரத்ததானம் செய்கிறார்கள் என்றால் அதை உயிர்கள் மீது கொண்ட அன்பினால் செய்கிறார்கள்.

அதைத் தவறென்கிறீர்களா?\\

...இதையே நான் மாறிக் கேட்கலாம் , கொலை செய்கிறார்கள் என்றால் அதை உயிர்கள் மேல் கொண்டுள்ள வெறுப்பால் செய்கிறார்கள்.

அதைத் தவறென்கிறீர்களா ?

 

Muralitharan Mayooran மு. மயூரன்

‎(சொற்சுருக்கத்துக்காக, சரி-தவறு என்கிற விசயத்தை "அறம்" என்று பயன்படுத்துகிறேன்.)

அறம் காலத்துக்குக்காலம் மாறி வருகிறது என்றும், அறம் எது என மனிதர்கள் வகுத்துக்கொள்கிறார்கள் என்றும், அறம் ஒடுக்குவோருக்கும் ஒடுக்கப்படுவோருக்கும் வேறு வேறானது ...என்றும் நான் சொன்னவற்றை நீங்கள் புரிந்துகொண்டிருப்பதில் மகிழ்ச்சி.

கடவுள் வந்து அலுவலகம் அமைத்திருந்து பூமியில் அறத்தை நிலைநாட்டிக்கொண்டிருப்பதில்லையாகையால், ஒடுக்குவோருக்கும் ஒடுக்கப்படுவோருக்கும் வேறு வேறான தனித்தனி அறங்களே இருக்கும்.

ஒடுக்குவோருக்குச் சார்பான அறத்தை ஆதரிப்போரும் ஒடுக்கப்படுவோருக்குச் சார்பான அறத்தை ஆதரிப்போரும் இருந்துகொண்டுதான் இருப்பார்கள்.

இந்திய அரசை ஆதரிப்போரும் காஷ்மீரிகளை ஆதரிப்போரும் இருந்துகொண்டுதான் இருப்பார்கள்.

அவரவர் ஆதரவு நிலைப்பாடு அவரவர் இருப்போடு சம்பந்தப்பட்டதால் இலகுவில் மனம் மாறவும் மாட்டார்கள்.

அதனால் தான் மனிதகுல வரலாறு நெடுகிலும் ஒரு கட்டத்தில் ஒடுக்குவோர்- ஒடுக்கப்படுவோர் முரண்பாடு கொதித்து போராட்டமாக வெடிக்கிறது.

இவ்வாறு கொதித்து வெடித்த பல லட்சக்கணக்கான போராட்டங்களையும் சண்டைகளையும் இந்த உலகம் பார்த்திருக்கிறது.

முட்டை உடைந்துதான் குஞ்சு வந்தாகவேண்டியிருப்பதைப்போல இந்தச்சண்டைகளூடாகத்தான் மனிதக் கூர்ப்பு அடுத்தடுத்த கட்டத்துக்குப் போகவேண்டியிருக்கிறது.

நீ என் உணவைப் பறித்துக்கொண்டே இருக்கிறாய்.. நான் கெஞ்சிக்கொண்டே இருக்கிறேன் என்றால் ஒருகட்டத்துக்குப்பிறகு கெஞ்சலும் பேச்சுவார்த்தையும் எமக்குள் இருக்காது. அடி உதைதான்.

இதில் நான் ஒடுக்குவோரின் அறம் சரி, ஒடுக்கப்படுவோரின் அறம் சரி என்று எந்த முடிவையும் சொல்லாமல் தான் கூறுகிறேன்.

போராட்டம் தவிர்க்க முடியாது. முரண்பாடு தவிர்க்க முடியாதது.


Muralitharan Mayooran மு. மயூரன்


மதங்களுக்கு "கடவுள் அமைத்த" இந்த உலகில் இப்படி வெவ்வேறு அறங்களை வைத்துக்கொண்டு தமது அறம் தான் சரி என பிடித்த பிடியாக மனிதர்கள் நிற்பது சிக்கலானது.

இதனை எப்படி விளக்குவது என்ற குழப்பத்தில்தான் மத்தியகிழக்கில் உருவான மதங்கள் சாத்தானையும் இந்த...ிய மதங்கள் மறுபிறப்பையும் கொண்டுவருகின்றன.

மதங்களுக்கு "கடவுள்" எல்லாவற்றையும் சரியாகத்தான் செய்திருக்கிறார் என்று நிரூபிக்க வெணெடிய கட்டாயம். பாவம்.

 

Muralitharan Mayooran மு. மயூரன்

விபசாரிகள் விசயத்திலும் அதைத்தான் சொல்கிறோம்.

விபசாரிகளைத் தண்டிப்பது தவறென நாம் நம்புகிறோம்.

மனிதாபிமான அடிப்படையில் பாதிக்கப்பட்ட அவர்களைத் தண்டிக்க வேண்டாம் என்று கோருகிறோம்.
...
இல்லை குர்-ஆன் சொல்லி இருக்கிறது, நாம் தண்டித்துத்தான் தீருவோம் என்று அடம்பிடித்தால்,

கொஞ்சம் தீவிரமான பிரசாரங்கள் செய்துபார்ப்போம்.

முடியாத கட்டத்தில் இந்த முரண்பாடு போராட்டமாக வெடிக்க ஆயத்தம்கொள்ளும்.

தாம் ஏற்கனவே சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுச் சுரண்டப்படுகிறோம். எம்மை மதத்தின் பெயரால் மதவாதிகளும் தண்டிக்கவே நிற்கிறார்கள். எனவே இவர்களை எதிர்த்துப் போராடுவதைத்தவிர, இவர்கள் மதநூற்களை தீயிலிடுவதைத்தவிர எமக்கு வேறு வழியில்லை என்ற நிலைக்கு பாதிக்கப்பட்டவர்களும் அவர்களுக்குச் சார்பானவர்களும் வந்து சேர்வர்.

போராட்டம் வெடிக்கும்.

இந்த இயற்கை நிகழ்வை எவராலும் தடுத்துவிட முடியாது.

 

Muralitharan Mayooran மு. மயூரன்

தனித்துப்போராட முடியாத அளவு பலவீனமான சிறு குழுமமாக ஒடுக்கப்பட்டோர் இருக்கும்போது, தம்மை ஒத்த அற நிலைப்பாட்டைக்கொண்ட ஏனைய ஒடுக்கப்படுவோருடன் தம்மை இணைத்துக்கொள்ள வேண்டிய நிலை அந்த பலவீனமான குழுவுக்கு ஏற்படும்.

உலகெங்கும் ஒடுக்கப்படுவோரின் அற...ம் பெரும்பாலும் ஒத்ததே. ஒடுக்கப்படுவோரின் அறங்களின் தொகுப்பான தத்துவம் ஒன்றின் பின்னால் அணிதிரள்வது இயல்பானதே.

 

Muralitharan Mayooran மு. மயூரன்

எனவே இந்த உலகம் எந்தவித தயவு தாட்சணியமும் இன்றி ஒரு பெரும் முட்கம்பி வேலியால் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் உணருகிறீர்கள் அல்லவா?

நீங்கள் அந்த முட்கம்பி வேலிக்கு அந்தப்பக்கமா இந்தப்பக்கமா என்பதுதான் கேள்வி.

இதுவும் ஒரு தயவ...ு தாட்சணியம் இல்லாத கேள்விதான்.

 

Muralitharan Mayooran மு. மயூரன்


இந்த உரையாடல் முடிந்துவிட்டதா என்ன?

நான் ஒரு கேள்வி கேட்டிருந்தேனே..

மக்களில் ஒரு பகுதியினர் ஒடுக்குமுறைக்குள்ளாகும்போது, நீங்கள் பின்பற்றும் மத நூல் ஒடுக்குவோருக்குச் சார்பான ஒரு கருத்தைக் கொண்டிருக்கும்போது,
...
நீங்கள் மத நூலின் படி ஒடுக்குவோருக்கு சார்பாக முடிவெடுப்பீர்களா, மதநூலை மறுத்தோ அல்லது தவிர்த்தோ ஒடுக்கப்படுவோருக்கு சார்பாக முடிவெடுப்பீர்களா?

இந்த விபசார விடயத்தில் இந்தக்கேள்வி மிகத்தெளிவாக எழுகிறது இல்லையா?

 

Muralitharan Mayooran மு. மயூரன் 

இந்த உரையாடல் எனக்கு பல புதிய தெளிவுகளைத் தந்திருக்கிறது. உரையாடலில் பங்குபற்றிய அனைவருக்கும் நன்றிகள்.

 

Shafie Salam

Mauran , நன்றி , ஆனால் இந்த உரையாடலை நான் இப்போது முடித்துக் கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால் அடுக்கடுக்கான கேள்விகளும் சிக்கல்களும் உள்ளன.

இந்த உரையாடலில் ஒரு விடயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும் , நான் இதில் எல்லாவற்றையும் விட்டு வெளியே வந்து ப...ேசுகிறேன். உதாரணத்துக்கு உங்கள் இந்த "Post " ஐப் பார்த்து விட்டு நான் "இது கூடாது , குர்'ஆன் இதை தடுக்கிறது" என்றெல்லாம் வாதாடிப் பிரயோஜனம் இல்லை. ஏனென்றால் நீங்கள் குர்'ஆனையோ , அல்லது மதத் தீர்வுகளையோ முழுமையாக ஏற்றுக் கொள்வதில்லை.

அதனால் Practical ஆக உங்கள் View இலிருந்து நான் இந்த Issue வைப் பார்க்கிறேன்.

நீங்கள் கேட்பது

-----------------------------------------------------------------------------
//மக்களில் ஒரு பகுதியினர் ஒடுக்குமுறைக்குள்ளாகும்போது
, நீங்கள் பின்பற்றும் மத நூல் ஒடுக்குவோருக்குச் சார்பான ஒரு கருத்தைக் கொண்டிருக்கும்போது,
...
நீங்கள் மத நூலின் படி ஒடுக்குவோருக்கு சார்பாக முடிவெடுப்பீர்களா, மதநூலை மறுத்தோ அல்லது தவிர்த்தோ ஒடுக்கப்படுவோருக்கு சார்பாக முடிவெடுப்பீர்களா?\\
-----------------------------------------------------------------------------

இந்தக் கேள்வியில் ஒரு பெரிய சிக்கல் இருக்கிறது , என்னவென்று உங்களுக்கு புரிந்திருக்கும்.அதனால் இந்தக் கேள்விக்கு விடை சொல்லு முகமாக வேறொரு கேள்வியை நான் உங்களிடம் கேட்கிறேன்.அதன் பிறகு இதற்கு விடை தருகிறேன்.

கேள்வி:

அதாவது,ஒரு பேச்சுக்கு ஏதாவது ஒரு மத நூல் ஒடுக்குவோருக்கு சார்பாக ஒரு கருத்தை கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் ,அது பிழை என்று நீங்கள் சொல்வீர்களா ? அல்லது அது சரி என்று நீங்கள் சொல்வீர்களா ?

(இந்தக் கேள்வியை நான் கேட்கும் போது எடுத்துக் கொள்ளும் எடுகோள் : சரி/பிழை (அறம்) என்றொன்று உண்மையாகவே உள்ளது ,அறம் என்றொன்று இருக்கிறது என்று நீங்கள் எனக்கு நிரூபிக்கவில்லை, எனினும் இரண்டையும் சேர்த்தால் கேள்வி குழம்பிவிடும் என்பதால் அறம் என்றொன்று உள்ளது என எடுத்துக் கொண்டு மேலே கேட்ட கேள்விக்கு விடை தரவும்.அதன் பிறகு அறம் என்றொன்று உள்ளதா இல்லையா என்று பாப்போம்)

 

Shafie Salam


கேள்விக்கு விடை வருமா ?

 

Muralitharan Mayooran மு. மயூரன் 

வரும் :)

இந்த உரையாடலை facebook இலிருந்து எனது வலைப்பதிவுக்கு மாற்றுவோமா? மிகவும் பயன்மிக்கதாயிருக்கும்.

அத்தோடு விரிவாக உரையாட வாய்ப்புக்கிடைக்கும்.

 

Shafie Salam

//இந்த உரையாடலை facebook இலிருந்து எனது வலைப்பதிவுக்கு மாற்றுவோமா? மிகவும் பயன்மிக்கதாயிருக்கும்.\\

 http://mauran.blogspot.com/2010/09/blog-post.html