ஆரியர் முற்றாக தமது முந்தைய சமுதாயத் தொடர்ச்சியையும் வாழ்வையும் இழந்தே சிதைந்தனர். இதனால் அந்த சடங்குமுறை கொண்டிருந்த வாழ்வுமுறையை இழந்ததால், உயிரற்றதாகியது. அது உயிர் உள்ள சமூகத்தில், வெறும் சடங்கு மந்திரமாக மாறியது. சிலரின் பிழைப்புக்கான சடங்காகியது.

இதற்கு ஏற்ப ஆரிய பூசாரிகள் தமது செல்வத்தைக் கொண்டு, ஏமாற்றிப் பிழைக்கும் அறிவைக் கொண்டு, தம்மைத்தாம் புதிய சமுதாயத்தில் நிலைநிறுத்திக் கொண்டனர். பூசாரிகளாக இருந்த இவர்களிடம், சடங்கின் சில வடிவம் மட்டும், ஆரிய வடிவில் எஞ்சியது. தம் மொத்த வாழ்வியல் முறையையும் இழந்தனர். இதனால் தான் அவர்கள் தமது சமுதாயத்தையும், சொந்த மொழியையும் பாதுகாக்க முடியாது போனார்கள். இப்படி வேத-ஆரிய கால சடங்குகள், அவர்களின் மூதாதைகளின் வாழ்வுடன் தொடர்பற்ற வெறும் சடங்காக, மந்திரமாக எஞ்சியது.

இதைப் பூசாரிகள் தம் கடவுளின் பெயரிலும், கடவுளுடன் தொடர்புடைய ஒரு மந்திரமாகவும் அதைப் பேனினர். இப்படி கடவுளுடன் பேசும் ஒரு மொழி ஊடாக, வெறும் சடங்குக் கோசங்களை பேணிப் பாதுகாக்க முடிந்தது. இதன் மூலம் சடங்கு மொழி இவர்களின் இரண்டாம் மொழியாகியது. இப்படி ஆரிய சடங்குகள் தப்பிப் பிழைத்தது.

மறுபக்கத்தில் சமுதாயத்தில் இவர்கள் சிதைந்ததன் மூலம், ஆரிய-வேத மூலமொழியை அதன் சுவடு தெரியாத வகையில் இழந்தனர். மொழியே இழக்குமளவுக்கு, சமூகக் கலப்பும், இரத்தக் கலப்பைக் கொண்டதாக அமைந்தது. இது வேத-ஆரிய மொழியை இல்லாததாக்குமளவுக்கு, பெரும்பான்மை மக்களுக்குள் சிறுபான்மையின் சிதைவாக அல்லது அழிவாக இருந்தது. நாகரிமற்ற நாடோடிக் காட்டுமிராண்டி கொள்ளைக்காரர்களின் சிதைவு, உழைத்து வாழும் நாகரீக சுரண்டல் அமைப்பில் இயல்பானது, இயற்கையானது. 

இந்த நிகழ்வுகள் நீண்ட நீடித்த ஒரு கால பகுதியில்; நடந்துள்ளது. அதாவது சில தலைமுறைக்கு உட்பட்ட ஒன்றாக இருந்துள்ளது. அதில் ஒரு பிரிவினரிடம் எஞ்சி இருந்தது, அவர்கள் கொள்ளையடிக்க உதவிய முன்னைய யுத்த மதச் சடங்குமுறைகளும், கடவுளின் பெயரில் ஏமாற்றிப் பிழைக்கும் பண்பும் தான்;.

இதையே புதிய சமுதாயத்தில், சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தின், (யுத்தப்) பொதுச் சடங்காக மாற்றினர். நாட்டை விஸ்தரிக்கும் யுத்தங்களுக்கும், கொள்ளையடிக்கும் யுத்தங்களுக்கும், இந்த சடங்குகள் உளவியல் ரீதியாக உதவத் தொடங்கின. இப்படி ஆரியச் சடங்குகள், ஆரியல்லாத மன்னர்கள் ஆட்சி விரிவாக்கத்துடன் புத்துயிர் பெற்றன.

இதனடிப்படையில் இதை மெருகூட்டவே சமஸ்கிருத மொழி உருவானது. சடங்கு மந்திரத்தையும், சிதைந்த மூல மொழியையும், அவர்கள் சிதைந்து வாழ்ந்த சமுதாயத்தின் மொழிகளையும், ஒன்று கலந்து உருவானதுதான் சமஸ்கிருதம். இதனால் இது, வெறுமனே பூசாரிகளின் சடங்கு மொழியானது.

பிழைப்புக்கு உதவிய இந்த பார்ப்பனிய மொழியை, தொழில் சார்ந்து (ஆரிய மொழியல்ல) இரகசியமானதாக்கினர் ப+சாரிகள். இதை தமக்கும் கடவுளுக்கும் மட்டும் தெரிந்த கடவுள் மொழியாகவும், ஏன் இதை ஒரு மந்திர மொழியாகவும் கூட கட்டமைத்தனர். இதுவோ எந்த ஒரு சமுதாயத்தினதும், பேச்சுமொழியாக உருவாகவில்லை. அதாவது உழைத்து வாழும் மக்களின், பேச்;சு மொழியாக இருக்கவில்லை. சொல்லப் போனால் ஆரியர்கள் அனைவரும் பேசும் மொழியாக அல்லது அவர்கள் வாழ்ந்த சமுதாயம் பேசும் மொழியாக, இது மீள் உருவாக்கம் செய்யப்படவேயில்லை. வெறுமனே ஆரிய-வேத-பார்ப்பனப் பூசாரிகள் மட்டும் பேசும், ஒரு கடவுள் மொழியாக, சடங்கு மொழியாக உருவானது.

இந்த மொழி சிறுபான்மையின் பிழைப்பு மொழியாக, இது சாதிய அமைப்பில் சாதி (பிழைப்பு) மொழியாகி, மிகக் குறுகிய எல்லையில் வாழ்ந்தது, வாழ்கின்றது. 1991இல் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், இந்த மொழியை நன்கு தெரிந்தவர்கள் வெறும் 50000 பேர் மட்டும் தான். ஆனால் இதை கொண்டு உழையாது நக்கிப் பிழைக்கும் கூட்டமோ, பல இலட்சங்கள்;.

இந்த மொழியின்; இருப்பு, கடவுளின் பெயரில் மக்களை சூறையாடி வாழும் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டது. இப்படி ஏமாற்றி பிழைக்கும் கூட்டத்தின் பிழைப்பு மொழி;யாகியது. இது தப்பிப் பிழைத்ததும், பிழைப்பதும், கடவுளின் பெயரில்தான். ஊர் உலகத்தை ஏமாற்றி வாழ உதவும் இந்த கடவுள் மொழிக்கு, அதிகாரப் பிரிவுகள் கொடுத்த சமூக அங்கீகாரங்கள் தான், இதை வாழவைத்தது, வாழவைக்கின்றது.

இப்படி ஒரு இரகசிய பார்ப்பனிய சாதி மொழி, மக்களை சூறையாடும் சமூகத் தகுதியைப் பெற்றது. இதனால் இது இயல்பில் இரகசியமான மொழியாக, அது பரம்பரைத் தன்மை கொண்ட ஒரு குறித்த சாதியின் மொழியாக மாறியது. இது பார்ப்பனியருக்கு இடையிலான சாதிய மொழியாக, இது சமூகத்துக்கு எதிரான  சதி மொழியாகியது. இது மனித குலத்தை கடவுளின் பெயரில் கொள்ளையிடவும், அவர்களை சூறையாடவும், அவர்களை அடிமைப்படுத்தவும் உதவியது.

தொடரும்

பி.இரயாகரன்
 

5.ஆரியர் யார்? பார்ப்பனர்கள் யார்? : சாதியம் குறித்து பாகம் - 05 

4.முரண்பாடுகள் சாதிகளாகின, முரண்பாடுகள் சாதியை உருவாக்கவில்லை : சாதியம் குறித்து ... பாகம் - 04

 

3.எங்கே? எப்படி? ஏன்? ஆரிய மக்கள் வரலாற்றிலிருந்தும் மறைந்து போனார்கள்! : பாகம் - 03

 

2.பார்ப்பனிய இந்துத்துவத்தை முறியடிக்காமல், சாதிய–தீண்டாமையை ஒழிக்க முடியாது : பாகம் - 02

 

1.பார்ப்பனியம் மீதான போர் : ஆரியம் பார்ப்பனியமாக சிதைந்தது எப்படி? சாதியம் தோன்றியது எப்படி? : சாதியம் குறித்து… பாகம் - 01