இதைவிட இனம், மதம், சாதி என பலவாக மக்களை மோத விட்டு வேடிக்கையாக தங்கள் கொள்ளை போகத்தை பாதுகாக்க முனைகின்றனர். இன்று இந்தியாவில் பல பாகங்களில் எழிச்சி பெற்று வரும் புரட்சியாளர்களில் பீகார் புரட்சிகர மார்க்சிச அமைப்பினர் வெற்றிகரமாக சாதி, மத எல்லைகதை; தகர்த்தெறிந்த முன்னேறி வருகின்றனர்.

பீகாரில் 25 லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகளை அமைப்பாக்கி, அவர்களை பீகார் மாநில உழவர் அவையாகக் கட்டி அமைத்ததுடன், இவர்கள் ஒரு தற்காப்பு குழுக்களாக ஆயுதமயப்படுத்தப்பட்டும் உள்ளனர். இலங்கைத் தமிழர்களின் மொத்தத் தொகை அளவிற்கு மக்களை அமைப்பாக்கியதுடன், அவர்கள் சாதி மத, வயதுகள் கடந்து ஆயுத மேந்திய அமைப்பாகியும் உள்ளனர்.


அப் பிரதேசங்களில் பெருங் கூட்டங்கள், ஊர்வலங்கள், நிலவுடமையாளர்களின் களஞ்சியங்களைச் சூறையாடல், நிலவுடமையாளரிடம் இருந்த கட்டணம், அபராதங்கள் வசூலித்தல், கிராமத்திலிருந்து வெளியேற்றல் போன்ற பல சட்டப+ர்வ சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்தியா எங்கிலும் புரட்சியை இவ் எழுச்சிகள் நகர்த்திச் செல்ல முனைவதுடன், கிராமத்திலிருந்து நகரத்தை மீட்க்கும் போராட்டத்திற்கு இவை முன்னோடியாக, ஒரு நம்பிக்கையின் கீற்றாக இன்றுள்ளது.


இலங்கை ஒரு பெரு முதலாளித்துவ நாடு எனக் கூடக் குறிப்பிட்டனர். தேசிய விடுதலைப் போராட்டத்தை எதிர்த்தனர். இன்று அவர்கள் தலை கீழாக மாறி இந்தியாவில் தமிழ் நாட்டுக்கு தனிநாடு கோருகின்றனர். இது அவர்களின் சீரழிவுடன் கூடிய நேர் எதிரான குத்துக்கரணமே! அன்று ‘இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கான தீரு;வு என்ன’ என்ற புத்தகத்திற்கு விமர்சனத்தை ‘இலக்கு’ – 1 செய்திருந்தது. இவர்கள் தலை குப்புற விழுந்து செல்கின்றனர். இனி, இவர்களின் மீட்சி என்பது கிடையாது. அதை மூடிறைக்கக் கோர தன்னியல்பு வாதம் இருந்தது என புரட்சிக்கனல் பந்தல் போட்டனர்.


இவர்கள் குத்துக்கரணம் அடித்தவுடன் என்ன செய்கிறார்கள் எனின்: புலிகளுடன் இரகசியமாகக் கூடிக் குலாவிவிட முயல்கின்றனர். இவர்கள் எம்முடன் தொடர்பு இருந்த காலத்தில் எம்மூடாகப் பிரான்சுப் புலிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினர். ஆம் முகவரி புலிகளுடையது எனத் தெரிந்தது. அதை உடைக்காது அனுப்பி வைத்தோம். இவர்களின் செயல் மீது நாம் சந்தேகம் கொள்ளவில்லை நேர்மையான தொடர்பாகவே கருதினோம்.ஆனால் பின் வேறு சிலர் இது தொடர்பாக எழுதியதுபோது. “அப்படி நாங்கள் தொடர்பு கொள்ளவில்லை” என அடித்துச் சத்தியம் செய்து விட்டனர். ஆனால் அக்கடிதம் எமக்கூடாக அனுப்பப்ட்ட போது, எமது கேடயத்துக்காக செல்வம் 14,593ல் எழுதிய கடிதத்தில் அது பற்றி ஒரு தகவலை விட்டுச் சென்றள்ளார். அதில செல்வம்:


“மேலும் ஒரு சில உதவியைத் தங்களிடம் எதிர்பார்க்கின்றோம். இத்துடன் உள்ள கடிதத்தை அந்த உரையிலுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். தமிழகத்திலிருந்து நேராக அனுப்புவது சற்று சிக்கலாக உள்ளது. இந்த உதவியைச் செய்வீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.” எனக் கேட்டிருந்தார். இது தமிழகத்திலிருந் அனுப்ப முடியாதிருந்தது. புலிகளுக்கு மட்டுமே என்பதை குறிப்பிடத் தேவையில்லை. இப் பிரச்சினை தொடர்பாக இங்கு ஒரு விவாதத்தில் எமக்கு எதிராக, இது நடக்கவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், இக்கடித வாசகந்தான் அந்நேரத்தில் எமது நேர்மையைப் பாதுகாக்க ஒரு சான்றாக இருந்தது. இவர்கள் தமது புதிய நிலைப்பாட்டை நாம் ஏற்க மறுத்து, அவர்களின் தனிநாட்டுக் கோரிக்கையை விமர்சனம் செய்தவுடன், எம்முடனான தொடர்பை நிறுத்தினர். நாம் புத்தகம் பெற அனுப்பிய பணததைக் கூட தர வேண்டுமென்ற நேர்மையை இழந்தவர்கள்.


தமிழ்நாட்டு அமைக்புக் கமிட்டியின் சீரழிந்து போன அரசியலுடன் தம்மை ஒப்பிட்டு, உயிர்ப்பு சிபார்சு செய்து, தன்னியல்புவாத விளக்கத்தைத் தருவது என்பது இவர்கள எவ்வளவு போலியான அரசியலைக் கொண்டுள்ளனர் என்பதை நாம் தமிழ்நாட்டு அமைப்புக் கமிட்டியின் அரசியல் வரலாற்றுடன் ஒப்பிட்டுக் காண முடியும்.


இனி உயிர்ப்புத் தன்னியல்பு வாதத்தை எப்படி தம்மளவில் தகர்த்துள்ளனர் எனப் பார்ப்போம். இன்று தன்னியல்புவாதமும், கோட்பாட்டுப் பணியும் முக்கியமென அழகான, நீண்ட கட்டுரை எழுதும் இவர்கள், சமருக்குப் பதிலளிக்கத் தவறுவதன் மூலம், வெறும் போலியாகவே தன்னியல்பு வாதமே பிரச்சனை என்ற தங்கள் கருத்தைதத் திணிப்பவர்களாக உள்ளனர்.


உயிரப்பின் ஊழியர்கள் மார்க்சிசத்திற்கு எதிராக பல்வேறு கூட்டத்தில் குரல் எழுப்புகின்றனர். அந்த வகையில சிவப்புப் புத்தகத்தைப் பற்றி கதைக்;கக் கூடாது என பிரகடனம் செய்கின்றனர். மாக்கிசம் பேசும் எல்லோரும் மார்க்கிச வாதிகளே என முதுலாளிக்கும் மார்க்சிச முலாமை உயிர்ப்பு அங்கத்தவர் ப+சுகின்றனர். சிவசேகரத்திறகு வேறு உயிருடன் திருத்தம் கொடுத்து தமது திரிபைச் சீராகப் பெற அறிமுக ஏறுவரிசைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்தனர். இவர்கள் தான் தன்னியல்பை உடைத்து புரட்சியைச் செய்யப் போகிறார்களாம்! மாற்றுக் கருத்தை மதிக்க விமர்சிக்க முடியாதவர்கள் எதையும் சாதிக்கமாட்டார்கள். மாறாகத் திணிபைச் செய்து புரட்சியைச் சீரழித்தே தீருவர்.