உலகின் ஜனநாயகக் காவலர்களாக வேடமிட்டு அலைந்து திரியும் ஏகாதிபத்தியங்கள் பயங்கரவாம் பற்றிய நிறையவே கூச்சல்போட்டு வருகின்றது. உண்மையில் இவ் வன்முறைகளின் ஊற்று மூலம் இவ் ஏகாதிபத்தியங்களின் இருப்பின் மீதே உள்ளதை மறைத்து, அதை ஊக்கப்படுத்துவதில் மிகவும் தீரமாக உள்ளனர்.

தொலைக்காட்சிகளில் வன்முறைக் காட்சிகளைப் பெருக்கி இளஞ் சந்ததியினர் மத்தியில் வன்முறையை ஒரு சாதாரண நிகழ்ச்சியாக காட்டிவிடுவதனூடாக ஏகாதிபத்தியங்களே வன்முறைக்குத் தூபமிட்டு வருகின்றனர். பின்னர் இதே வன்முறையினூடாகவே உலகைச் சல்லடையிட்டும் அடக்கி வருகின்றனர்.

அமெரிக்காவில் சிறுவருக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றிலும் 32 வன்முறைச் சம்பவங்கள் காட்டப்படுகின்றன. வயது வந்தவர்களுக்கான நிகழ்சிக்ளில் 6 வன்முறைச் சம்பவங்களுமாக, வாரம் ஒன்றக்கு ஏறக்குறைய ரீவி மூலம் 8000 கொலைகளை ஒரு மனிதன் பார்த்து வருகின்றான். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளினூடாக வன்முறைகளைப் பெருக்கி மக்களை  வன்முறைச் சமூகமாக மாற்றுவதில் இவ் ஏகாதிபத்தியங்கள் வெற்றி பெற்றுள்ளன.

தொலைக்காட்சிகள் ஏகபோகமாக மாறி இன்று உலகெங்கும் ஆதிக்கம் செலுத்துவதால் மிக வறுமையான மூன்றாம் உலகநாடுகளிலு; வன்முறை ஆதிக்கத்தைப் பரப்புவதில் கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் மூலமாக மூன்றாம் உலகநாடுகளில் ஜனநாயக வழிகளை இல்லாது ஒழிப்பதுடன் வன்முறையினூடாக இந்நாடுகளை குட்டிச்சுவராக்கி தமது வயிற்றுப் பிழைப்பை நடத்திருகிறது.

பிலிப்பைன்ஸ் இல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்த 7 வயதுச் சிறுவன், அவ் அலைவரிசையை மாற்றியதற்காகா அவ்வீட்டின் பணிப்பெண்ணை சுட்டுக் கொன்றுள்ளான்.

உலகை வன்முறைக்குள் மூழ்கடித்து, பாலியல் வக்கிரக் காடசிகளின் மூலம் பெண்கள் மீதான வன்முறையை ஊக்குவித்து உலகை சாக்கடைக்குள் கரைதது விடுவதில் ஏகாதிபத்தியங்களே பிராதான காரணிகளாக உள்ளன. ஜனநாயகமென மக்கள் காதுகளில் ப+ வைக்கும் இவர்களே மிகப் பயங்கரமான மனிதகுரல் எதிரிகளை உருவாக்கும் கொலையாளி.