தன்சான்னியா பிராந்தியப் பேச்சுவார்த்தை ஒன்றில் கலந்து கொண்டு விட்டு ஒரே விமானத்தில் பயணம் செய்த ருவாண்டா நாட்டு ஜனாதிபதியும் புருன்டி ஜனாதிபதியும் ராக்கெட் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து ருவாண்டா அரசாங்க ஆதரவுடன் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இன்று உத்தியோக புள்ளிவிபரப்படி இரண்டு லட்சம் டுட்ஸ் இனத்தவர் கொல்லப்பட்டு உள்ளனர். ஆனால் இத்தொகை அதிகமாகும். 85 வீதம் ஹிடு இனத்தவரும் வாழும் ருவாண்டா நாட்டில் சிறுபான்மை இன அடக்குமுறைக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடுகின்றனர்.

அதுபோல் புருண்டி நாட்டில் இதே போன்ற இரு தேசிய இனம் இதே விதத்தில் உள்ளனர். இரு நாட்டின் மொத்த நிலப்பரப்பே இலங்கையளவாகும். இரு நாட்டிலும் சிறுபான்மை இன மக்கள் பெருந் தேசிய இனவெறிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடி வருகின்றனர். கடந்த வருடம் புருண்டியில் ஜனாதிபதி கொல்லப்பட்டதை அடுத்து 50,000 டுட்ஸ் இனத்தவர்கள் கொல்லப்பட்டனர். இதுபோன்று கடந்த பல வருடங்களாக அங்கு பெரும்பான்மை சிறுபான்மை மக்கள் இருபகுதியினரும் கொல்லப்பட்டு வருகின்றனர். ஏகாதிபத்தியங்களோ கம்யூனிசம் இறந்து விட்டது என அறிவித்தபடி முதலாளித்துவம் சிறந்ததும் ஜனநாயகமானதும் என அறிவிக்கின்றனர்.

 

ஆனால் ருவாண்டா, புருண்டியில் இவ்வளவு மனிதப் படுகொலைகள் நிகழ்வது மட்டுமின்றி தொடர்கிறது. தேசிய இன முரண்பாட்டுக்குத் தீர்வு சுயநிர்ணய உரிமையை ஏற்பதே. ஆனால் அவை கம்யூனிசத்தின் ஜனநாயகமற்றது என அறிவித்து முதலாளித்துவ ஜனநாயகத்தின் சவக்குழி கும்பல்களை காணமுடிகிறது. ஒரு கோயிலில் அடைக்கலம் புகுந்திருந்த 1800 டுட்ஸ் இனத்தவர் கூட கொல்லப்பட்டனர். முன்னைய ஸ்பானிய காலனியாதிக்கத்தில் இருந்தே உருவான இனமுரண்பாடு ஸ்பானிய ஆதிக்க வெறியர்களால் திட்டமிட்டு வளர்க்கப்பட்டவையே. பெயரளவில் சுதந்திரம் பெற்ற ருவாண்டா வில் மேற்குநாடுகளின் கைக்கூலியாகி அவர்களின் உதவியுடன் இனமுரண்பாட்டை வளர்த்து ஏகாதிபத்திய கனவுகளை பூர்த்தி செய்ய முயன்று வருகின்றனர். கொல்லப்பட்டதை மனித உரிமை மீறல் என அறிவித்தபடி தொடர்ந்து நிதி உதவி வழங்கி வரும் ஏகாதிபத்தியங்கள் அக்கொலைக்கு பொறுப்பாளிகளாகும்.