இலங்கை அரசாங்கம் இந்த வருடத்தை தேர்தல் ஆண்டாக அறிவித்ததுடன் எல்லாக் கட்சிகளும் கதிரைகளைக் கைப்பற்ற ஆலாய்ப் பறக்கின்றனர். இவ்வருடத்தில் கிழக்கு தேர்தலையும் தென்மாகாண சபை தேர்தலையும் நடத்தி முடித்துள்ள அரசு பாராளுமன்ற தேர்தலையும் நடத்தி முடிக்கவுள்ளனர். கிழக்கு தேர்தலில் யூ.என்.பி அரசு சகல தில்லுமுல்லுகளையும் நடத்தி கட்டாயப்படுத்திய வேட்ப்பாளர்களையும் நிறுத்தியும்,பொலிஸ்,இராணுவம் மூலம் கள்ள வோட்டுக்களை போட்டும் வெற்றிய பெற்று விடமுடியவில்லை.

இது போன்று தென்மாகாண சபை தேர்தலிலும் யூ.என். பி. வழைபோலான மிரட்டல் மோசடி எனப் பலவழிகளைக் கையாண்டும் தோற்றுப் போனது. ஆனால் பொதுசன ஜக்கிய முண்ணனியோ பதிலுக்கு வன்முறைகளையும், மோசடிகளையும் செய்து வெற்றி பெற்றனர்.

தென் மகாண சபைத் தேர்தலுக்கு முன்பு ஆட்சில் உள்ள யூ.என்.பி இனவாதத்தின் உச்சநிலைக்கே சென்று சிறுபான்மை இனங்களைத் தாக்கினர். பெரிய மரத்தில் படரவேண்டிய கொடிகள் தான் சிறுபான்மை மக்கள் எனக் கூறி தமது இன வெறிக் கூச்சலை எழுப்பினர். அதன் அறுவடைகளை தென் மாகாண சபைத்தேர்தலில் பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்ற புதிய வியூகங்களை அமைக்கத் தொடங்கியுள்ளனர். தொண்டமான்-யூ.என்.பிக்கு இடையில் சிலகாலமாக நிலவி வந்த கௌரவ அவமதிப்பு என்ற நிலையை மீண்டும் சரி செய்ய யூ.என்.பி முனைந்துள்ளது. இதன் ஊடாக சிறுபான்மை தேசிய இனம் மீதான இனவெறியை தொண்டமான் துணையுடன் சரி செய்ய தீவிரமாக முனைந்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெல்லவேண்டும் னெ பொதுசன முன்னணியும்,யூ.என்.பியும் தம்மால் இயன்றளவு முனைகிறது. இதை மதிப்பிட தென்மாகாணசபை தேர்தலை தமது மதிப்பிட்டு மாதிரியாகக் கொண்டுமுள்ளனர். இலங்கையில் தேர்தலில் யார் வெல்வது என்பது மக்களால் தீர்மானிக்கப்படுவது இல்லை. மாறாக ஏகாதிபத்தியங்களால் யார் வெல்லப்பட வேண்டும் எனத் தீர்மானித்து வெல்ல வைக்கப்படுகிறது அதற்குத் தேவையான பணம் முதல் கொண்டு தமது உளவு ஸ்தாபானங்களையும் பறன்படுத்துகின்றனர். இந்த வகையில் இலங்கையில் கடந்த17 வருடகாலமாக ஆட்சியில் உள்ள யூ.என்.பி என்ற தரகு கைக்கூலிகளை தொடர்ந்து ஆட்சியில் இருத்துவதையே சி.ஜ.ஏ முதல் கொண்டு எல்லா முதலாளித்துவ ஆட்சிகளும் விரும்புகின்றன. பொது சன ஜக்கிய முண்ணனியில் சீரழிந்து போன கம்யுனிஸ்டுக்கள் உள்ளதாலும்,1970 களில் அனுபவமும் பெற்ற மேற்க்கு நாடுகள், என்ன தான் நாம் இன்றைய பொருளாதார கொள்கையை (கொள்ளையை)பேணுவோம் என சிறிமா அறிக்கை விட்ட போதிலும் ஏகாதிபத்திய விருப்பு யூ.என். பியை வெல்ல வைப்பதே. இதனால் யூ.என்.பி மோசடி மூலம் வென்றவைகளை கூட பெரும் மோசடிகள் ஊடாக வெல்ல முடியாத இன்றைய நிலையில் அதை வெல்ல முடியாத இன்றைய நிலையில் அதை வெல்ல வைக்க சி.ஜ.ஏ முதல் எல்லா மேற்க்கு நாடுகளும் தீவிரமாக முயன்று வருகின்றனர். இதற்காகப் பலியிடப்படப் போவது தமிழ் தேசிய இனமே. அதற்க்கான இருவழிகளை ஏகாதிபத்தியங்கள் முன்தள்ளி இரண்டுக்கு உதவ முயல்கின்றனர்.

1) பெரிய அளவிலான தாக்குதலை நடத்தி புலிகளைப் பின்வாங்க வைத்து வெற்றி வீரனாக சிங்கள மக்கள் முன் பவனி வந்து வெற்றி பெறுவது.

2)தாக்குதல் வெற்றி பெறாவிட்டால் புலிகள் உடன் ஒரு தேன் நிலவை தற்காலிகமாக(1990 ஆண்டு நிலையை) ஏற்படுத்தி தமிழ் மக்களையும் ஏமாற்றி வெல்வது. இதில் இரண்டையும் அல்லது ஏதாவது ஒன்றை கொண்டும் வெல்ல ஏகாதிபத்தியங்கள் உதவியுடன் செயற்படத் தொடங்கி விட்டனர். இதன் தொடர்ச்சியாக புலிகள் கூட (மேற்கு நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க) தாம் தமிழ் தேசியத்தின் விடுதலையைக் கைவிடத் தயார் என அறிவித்துள்னர். இதன் ஊடாக சமஸ்டி அல்லது எதற்க்கும் பேசத் தயார் என அறிவித்துள்ளார். நீண்ட பேச்சுவார்த்தையும், அதன் ஊடாக பெற முயலும் யூ.என்.பியும் மீண்டும் யுத்தத்தை தொடர புலிகள் துணை போகவும் முயல்கின்றனர். இங்கு தமிழ் மக்கள் சரி சிங்கள் மக்கள் சரி ஏமாற்றப்பட்டு தொடர்ந்து ஏமாற்றப்பட போகின்றார்கள். இது போன்ற தேர்தல்களை நிராகரிப்பதே ஒவ்வொருவரும் எடுக்க கூடியவழி மட்டுமின்றி புதிய சமுதாயத்தை படைக்க இதற்க்கு எதிராக போராடுவதே ஓரே வழியாகும்.