குற்றச்சாட்டுகள் 18….

"புளொட் அமைப்பின் அரசியல் ஆளுமை கொண்டிருந்த பெண்களை கொச்சைப்படுத்தும் இராயாகரனின் கீழ்த்தரமான மனோ நிலையை அவதானிக்கும்போது அருவருப்பாக இருக்கிறது. எந்தவித ஆதாரமும் அற்று புளொட் அமைப்பைச் சேர்ந்த பெண்கள் பாலியல் ரீதியில் அணுகப்பட்டார்கள் என்ற இராயாகரனின் அயோக்கித்தனமான தன் ஆதிக்க பாலியல் வக்கிரக மன நிலை கொண்ட கேவல அரசியலை இராயாகரன் தொடர்ச்சியாக செய்துவருகிறார்."
 
"எந்தவித ஆதாரமும் அற்ற முறையில் புளொட் அமைப்பில் அங்கம்வகித்த பெண்கள் அனைவர் மீதும் சேறு பூசும் இராயாகரனின் இந்த வக்கிர புத்தி அப் பெண்களின் வாழ்க்கையை எந்தளவுக்கு பாதிக்கும் என்பதை நாம் உணரவேண்டும்."

"இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்ட பெண்களைப் பாலியல் பாவனைக்கு உட்படுத்தினார்கள் என எழுதுகிறார்."

"இலங்கை அரசுக்கு அணுசரனையான அரசியல் கொண்ட பெண்களை மகிந்தாவுக்கு முந்தானை விரித்தார்கள் என எழுதுகிறார். இவர் அறமும் ஒழுக்கமும் நேர்மையும் பேசுகிறார். கொடுமையிலும் கொடுமை."

"உங்களுடைய ஒவ்வொரு எழுத்துக்களும். உங்களுடைய ஆணாதிக்க பிற்போக்குவாதத்தை தோலுரித்து காட்டிவிடுகிறது."

 

இப்படி குற்றம் சாட்டுகின்றாhர் அசோக். பெண் விடுதலை பற்றிய உங்கள் அரசியல் பார்வை என்ன என்றால், எதுவும் கிடையாது. மாறாக

 

1. பயன்படுத்தும் சொற்களை வைத்து பெண்ணிய வம்பு பேசுவது


2. தங்கள் கூட்டம் மீதான ஆணாதிக்க குற்றச்சாட்டை மூடிமறைக்க, அனைத்து பெண்கள் மீதும் நாம் குற்றம்சாட்டுவதாக கூறி இட்டுக்கட்டி, தங்கள் ஆணாதிக்கத்தை மூடிமறைத்து பெண்ணியம் பேசுவது இதுதான் இவர்கள் பெண்ணியம். 

 

இது வெறும் அசோக் மட்டுமல்ல, பெண்ணியம் பேசுவோர்கள் வரை இதுதான் அவர்களின் பெண்ணிய அரசியலாகும்;. சமூகத்தின் மற்றயை எந்த முரண்பாடு மீதும், ஒரு சரியான அரசியலை முன்வைக்க முடியாதவர்கள், எப்படி பெண்ணியத்தில் மட்டும் ஒரு சரியான அரசியலை வைத்துவிட முடியும்!

 

குற்றச்சாட்டு 18.1
 
"பெண்கள் அனைவர் மீதும் சேறு பூசும் இராயாகரனின", "இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்ட பெண்களைப் பாலியல் பாவனைக்கு உட்படுத்தினார்கள் என எழுதுகிறார்."

 

என்று அசோக் கூறுகின்றார். அவர்கள் தயாரித்த  பின்னூட்டத்திலும் கூட, அனைத்து பெண்களையும் நான் இப்படி கூறுவதாக கூறி அவதூறு செய்தனர். இந்த விடையத்தில் நாங்கள் எந்த இடத்திலும், எங்கும் அப்படி கூறியது கிடையாது.

 

இப்படியிருக்க என்பெயரால் இந்த அவதூறை பெண்கள் மீது சுமத்துவதன் மூலம் எதைச் செய்கின்றனர்.

 

1. அங்கு எதுவும் நடக்கவில்லை என்று கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக போராடுவதை மறுக்கின்றனர்.

2. நடந்த ஆணாதிக்கத்தையும், இதைச் செய்த ஆண்களையும் மூடிமறைத்து, அவர்களை பாதுகாத்து, அந்த ஆணாதிக்கத்துடன் கூடிக் கூத்தாடுகின்றனர்.

 

புளாட் முதல் இலக்கியச் சந்திப்பு வரை எந்த ஆணாதிக்கத்தை இவர்கள் அம்பலப்படுத்தி போராடியுள்ளனர்!? காட்டுங்கள்.

 

இதைச் சுற்றிய நிகழ்வுகளையும் வழமைபோல் மூடிமறைத்தே நிற்கின்றனர். அத்துடன் "அனைத்துப் பெண்களையும்" நாம் குற்றம்சாட்டுவதாக அவர்கள் இட்டுக்கட்டிக் கூறுவதன் மூலம், உண்மையில் அனைத்துப் பெண்களையும் இப்படி மறைமுகமாக அவதூறு செய்கின்றனர்.

 

குற்றச்சாட்டு 18.2

"புளொட் அமைப்பின் அரசியல் ஆளுமை கொண்டிருந்த பெண்களை கொச்சைப்படுத்தும் இராயாகரனின் கீழ்தரமான மனோ நிலையை அவதானிக்கும்போது அருவருப்பாக இருக்கிறது.

 

என்று குற்றம்சாட்டுகின்றார். புளாட் அரசியல் ஆளுமை பெற்ற அந்த கொலைகார அரசியல், ஆண் அரசியல் போல் வக்கிரமானது. புளாட் ஆண் கொண்டிருந்த கொலைகார மக்கள் விரோத உங்கள் அரசியலைத்தான், பெண்களும் கொண்டிருந்தனர். இதற்கு மாறாக புளட்டை மறுத்து, அரசியல் ஆளுமையுடன் உங்களுக்கு எதிராக போராடியவர்கள் வரலாற்றில் பதிவாகியுள்ளனர். உண்மையில் மக்கள் அரசியலை உயர்த்தியவர்களை, கொலைகார புளாட்டில் இருந்து மறுத்தவர்கள் நீங்களே ஓழிய நாங்களல்ல. அவர்கள் அன்றே எங்கள் தோழர்களாக தோழிகளாக இருந்தவர்கள். உங்கள் தோழர்களாக தோழிகளாக அவர்கள் இருந்தது கிடையாது.   

 

குற்றச்சாட்டு 18.3


"எந்தவித ஆதாரமும் அற்ற முறையில் புளொட் அமைப்பில் அங்கம்வகித்த பெண்கள் அனைவர் மீதும் சேறு பூசும் இராயாகரனின் இந்த வக்கிர புத்தி அப் பெண்களின் வாழ்க்கையை எந்தளவுக்கு பாதிக்கும் என்பதை நாம் உணரவேண்டும்."

 

என்கின்றார். நல்ல அரசியல் வேடிக்கையாக இருக்கின்றது. சாதாரணமான மக்கள் இப்படித்தான் கூறி, ஆணாதிக்கத்தையே பாதுகாக்கின்றனர். "அப் பெண்களின் வாழ்க்கையை எந்தளவுக்கு பாதிக்கும்" என்று நாடகமாடும் இந்த அசோக், தங்கள் தலைமையில் கொல்லப்பட்டவர்கள் பற்றி இதுவரை எதையும் பாதித்தவர்களுக்கு இன்று வரை கூறியது கிடையாது. இப்படியிருக்க  "பெண்களின் வாழ்க்கையை எந்தளவுக்கு பாதிக்கும் என்பதை நாம் உணரவேண்டும்." என்று கூறுவது, நகைச்சுவையான அரசியல் வேடிக்கைதான்.

 

அண்மையில் கவிதா என்ற பெண் இனியொருவில் எழுதிய தன் பின்னோட்டத்தில், தன் தந்தைக்கு உங்கள் புளாட்டில் என்ன நடந்தது என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். இந்த கொலைகளுக்கு எல்லாம் தலைமை தாங்கிய ஒருவராக இருந்த அசோக் (மத்திய குழு உறுப்பினர்), இதற்கு பதிலளித்தது கிடையாது. எந்தளவுக்கு "பாதிக்கும் என்பதை நாம் உணர"ரும் என்றியம்பும் இவரின் அக்கறை. ஆனால் என்ன நடந்தது என்பதை, எப்படி எங்கு யார் அவரைக் கொன்றனர் என்ற விபரத்தை விரைவில் நாம் வெளியிட உள்ளோம்.

 

அத்துடன் அதற்குள் பல விடையங்கள். இதில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற பெண் எப்படி பலர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினர் என்பது முதல் கொலைகாரர் தம்முடன் இருந்த ஒருவனின் மனைவியை எப்படி புணர்ந்தனர் என்ற விபரத்தையும், இந்த மூல ஆவணம் அம்பலமாக்கும். இப்படி எத்தனை விடையங்களை அசோக் மூடிமறைத்தபடி தான், அவர்களுடன் அரசியலை சல்லாபிப்பதையே புரட்சி என்று காட்ட முடிகின்றது.

 

நாங்கள் என்றும் அனைத்து பெண்களையும் இது தொடர்பாக குற்றம்சாட்டியது கிடையாது. இதற்கு எதிராக, அந்த அமைப்பு பெண்களே போராடியுள்ளனர். ஆனால் அதை மூடிமறைத்து போராடிய வடிவம் தொடர்பாக, எமக்குள் முரண்பாடு இருக்கின்றது. வெளிப்படையாக அந்த போராட்டத்தை நடத்தினால், பெண் பாதிக்கப்படுவாள் என்ற அதே ஆணாதிக்க உள்ளடக்கத்துடன் அதை மூடிமறைத்து ஆணாதிக்கத்துக்கு உதவியதை காண்கின்றோம். இது புலம்பெயர் இலக்கியச் சந்திப்புவரை, இது தான் பெண்ணியத்தின் ஆணாதிக்கத்தின் கதையாகின்றது. உள்ளடக்க ரீதியாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகும் பெண், இந்த ஆணாதிக்க அமைப்புக்கு ஏற்ப அதை மூடிமறைக்கின்றாள். இதை எதிர்த்துப் போராடிய பெண்கள் உள்ளனர். இதற்கு மாறாக இதை பெண்கள் விடையமாக கூறியும், "அப் பெண்களின் வாழ்க்கையை எந்தளவுக்கு பாதிக்கும்"  என்றும் கூறியும், மூடிமறைப்பதையே பெண்ணியம் என்கின்றனர். இதையே பெண்ணியம் பேசுகின்ற பெண்கள் முதல் ஆண்கள் வரை, அச்சொட்டாக அதே ஆணாதிக்கத்தைக் கொண்டு இதை மிக இலகுவாக மூடிமறைக்கின்றனர். இந்த அரசியல் எங்கும் நிலவுகின்றது. தீப்பொறியைச் சேர்ந்தவர்கள் தங்கள் கருத்தை மூடிமறைத்தபடி அராஜகத்துக்கு உதவியவர்கள், இறுதியில் தாங்கள் மட்டும் தங்கள் கருத்துடன் தனித்து தப்பியோடியது போன்றவை தான் இவையும். இதை அம்பலப்டுத்தி போராடுவது அவசியம். அந்த வகையில் கடந்த காலத்தில் அம்பலப்படுத்திய நாம்
 
1. இணங்க வைக்கும் பாலியல் வன்முறையும் இணங்கிப் போன இலக்கியவாதிகளின் எதிர்வினையும்

2. சின்ன ஒரு விடையத்துக்கே சுயவிமர்சம் செய்ய மறுத்து நியாயம் சொல்லி திரிப்பவர்கள் கடந்த காலத்தை எப்படி சுயவிமர்சனம் செய்திருப்பார்? 

 

ஆணாதிக்கத்தை அரசியல் ரீதியாக இதை மூடிமறைத்தபடி, சந்தர்ப்பவாதமாக அணுகுவதே இவர்களின் இன்றைய நடைமுறையாகும். இங்கு குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்ணை நாம் குற்றம்சாட்டுவது கிடையாது. யாரை குற்றம்சாட்டுகின்றோம். இதை செய்த ஆண்களையும், இதை மூடிமறைத்த பெண் அரசியல் நாடகமாடும் அசோக் போன்றவர்களையும் தான் குற்றம்சாட்டுகின்றோம். புளாட்டில் இது நடக்கவில்லையா?

 

1. நாம் மிகவிரைவில் வெளியிடவுள்ள ஆவணம் ஒன்றில், இவை பற்றி உள்ளது. 

 

2. அசோக் தலைமை தாங்கிய தளத்தில், நடத்திய பாசறை வகுப்புகளில் இவை நடந்துள்ளது. இந்த பாசறை வகுப்பை நடத்தியவர்களில் சிவராம், ஜெயபாலன் முக்கியமானவர்கள். இதில் ஜெயபாலனின் பாலியல் நடத்தைகள் உலகமறிந்தது. இவர்கள் ஆண் பெண் உறவு கம்யூனிசத்தில் மிக சுதந்திரமானதாக கூறி, இன்றே நாம் அதன்படி வாழ வேண்டும் என்று கற்பித்தனர். தீவுப்பகுதி பாசறையில் ஆண் பெண் இருபாலும் தனித்தனியாக தங்கிய போதும், சிவராம், ஜெயபாலன் பெண்களுடன் தான் தங்கினர். இதற்கு முந்தைய கொக்குவில் பாசறையின் போது, ஆணையும் பெண்ணையும் ஒன்றாக ஓரே இடத்தில் படுக்க கோரியவர்கள். இப்படி தவறாக வழிநடத்தப்பட்டதால் பல அத்து மீறல்கள் நடந்;தது. எமக்கு தெரிந்த ஆண்கள், தாம் இதனால் தவறாக வழிநடத்தப்பட்டு இருந்ததை உறுதிசெய்தனர். புளாட்டின் உள் அராஜகத்துக்கு எதிராக போராடிய பெண்கள் இதை எதிர்த்ததுடன், சில நடைமுறைகளை நிறுத்தினர். ஆனால் இந்த ஆணாதிக்க சுய பாலியல் வக்கிரம் கொண்டு வழிகாட்டிய நபர்களை, பகிரங்கமாக அம்பலப்படுத்தத் தவறினர். அவர்கள் புளாட்டின் அதிகார ஆயுள் வரை தலைமை தாங்கி வழிகாட்டினர். அப்படி ஆட்டம் போட்டவர்களுக்கு, தலைமைதாங்கி பாதுகாத்தவர் இந்த அசோக். இதற்கு உடந்தையாக, எல்லாம் தெரிந்து இன்று வரை மூடிமறைக்கும் ஆணாதிக்க வண்டவாளத்தையே அசோக் செய்கின்றார். அனைத்து பெண்களையும் சொல்லி, அதை கவர் பண்ணுகின்றார். "பெண்களின் வாழ்க்கையை எந்தளவுக்கு பாதிக்கும் என்பதை நாம் உணரவேண்டும்." என்று கூறி  இந்த ஆணாதிக்க தத்துவவாதிகளுடன் அரசியலை விவாதிக்கின்றார் என்று தன் ஆணாதிக்க சோரத்துக்கு விளக்கம் தருகின்றார்.

 

தொடரும்

 

18. வங்கியின் வீட்டை என் சொந்த வீடாக திரித்துக் கூறும் "அசை"யின் அவதூறு அரசியல் (எதிர்புரட்சி அரசியல் பாகம் 18)

 

17.எனது வீடு எரிக்கப்பட்டதையே திரித்து, அதைக்கொண்டு அவதூறு செய்த இனியொரு அசோக் (எதிர்புரட்சி அரசியல் பாகம் 17)

 

16.நாங்கள் அவதூறு செய்தோம் என்கின்றார் அசோக், சரி எந்த அரசியலை - (எதிர்புரட்சி அரசியல் பாகம் 16)

 

15. அசோக் இனியொருவில் புனைந்த அவதூறுகள்; - (எதிர்புரட்சி அரசியல் பாகம் 15

 

14.பல்கலைக்கழகப் போராட்டம் தொடர்பாக அசோக், நாவலன் என் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் - (எதிர்புரட்சி

 

13.இனியொரு என் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் - (எதிர்ப்புரட்சி அரசியல் பாகம் 13)

  

12.புனிதத்தை கட்டமைக்க, இனியொரு தன்னை மூடிமறைக்கின்றது. (எதிர்புரட்சி அரசியல் பாகம் 12)


11.றோ உருவாக்கிய ஈ.என்.டி.எல்.எவ் வும், அசோக் முன்னின்று வழிநடத்திய ஈ.என்.டி.எல்.எவ் வும் -அரசியல் பகுதி 11)


10.நாவலனின் புரட்சிகர அரசியலும், வியாபார அரசியலும் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 10)


9.சிவப்புக் குல்லா அணிந்தபடி, தமக்கு ஓளிவட்டம் கட்டும் இனியொரு (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 9)


8.கடந்த வரலாற்றை சொல்வது "இடதுசாரி" அரசியலுக்கு எதிரானதா!? (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 8)

  

7.சீ, நீங்கள் எல்லாம் மத்திய குழு உறுப்பினர் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 7)


6.பிரபாகரனின் மரணம் மாற்றுக்கருத்து தளத்தை நேர்மையாக்கி விடுமா!? மக்கள் நலன் கொண்டதாகி விடுமா!? (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 6)


5.நடந்த போராட்டத்தை திரித்து மறுக்கும் இனியொருவின் அரசியல் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 5)


4.வரலாற்றை இருட்டடிப்பு செய்து, அதை தமக்கு ஏற்ப வளைத்து திரிப்பதும், புலிக்கு பிந்தைய அரசியலாகின்றது (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 4)


3தங்கள் தலைமையில் நடந்த கொலைகள் பற்றிப் பேசாத அரசியல் "நேர்மை" (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 3)

  

2.அரசியல் நேர்மை என்பது உண்மைகளைச் சார்ந்தது (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 2)


1.எதிர்புரட்சி அரசியலோ தனக்கு தானே லாடம் அடித்து தன்னைத் தான் ஓட்ட முனைகின்றது. (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 1)

 

பி.இரயாகரன்
11.04.2010