மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 02

சென்ற தொடரில் ஆழ்மனதால் ஏற்படும் சில பிரச்சனைகளை பார்த்தோம், அவற்றை எப்படித்தீர்க்கலாம் என்று இத்தொடரில் பார்க்கலாம் .ஆழ்மனதுடன் தொடர்பு கொள்வதற்கு ஒருவர் ஹிப்னாடிசத் தூக்கத்திற்கு சென்றால் அவரது ஆழ்மனதுடன் தொடர்பு கொள்ள்லாம் . அதற்கு முன் ஒரு பெண்ணின் பிரச்சனையை பார்த்துவிட்டு மேலே செல்வோம்

தாயுமானார்

ஒரு இளம் பெண்ணின் தாய் , தனது பெண்ணிற்கு இடுப்பிற்கு மேற்பகுதியிலும் கழுத்துப்பகுதியிலும்( hofte og nakken ,hip and neck) பக்கத்திலும் நோ இருக்கிறது என்றும், அவரது திறமைகளையும் சாதனைகளையும் விளக்கிக் கூறினார் . அவர் இப்பொழுது முழுநேர வேலை செய்ய முடியாமல் இருப்பதாகக் கூறினார்.அவ ர் ஒரு முறை வன்புணர்ச்சிக்கு உட்படதாகவும் கூறினார். அப்பெண்ணை பல மருத்துவர்கள் , மனோதத்துவ நிபுணர்களும் அக்குப்பஞ்சர் போன்ற மருத்துவ முறைகளும் பல மருத்துவங்கள் செய்தும் அவர்களால் குணப்படுத்த முடியவில்லை. ஆதலால் அந்தத் தாய் ஹிப்னாடிசம் முறை மூலம் நோய் தீர்க்க விரும்பினார்.அடுத்த நாள் அப்பெண் விளக்கமாக தனது பிரச்சனையை கூறினார். அவருக்கு நோக்கள் மாத்திரம் அல்ல , ஒரு மருத்துவர் அவர் ஓய்வாக இருக்கவிட்டால் அவருக்கு பிள்ளை பெறும் தன்மை இல்லாது விடும் என்றும் கூறியிருந்தார். அதை விட அந்தப் பெண் உடலுறவின் பொழுது திருப்தி – உச்சநிலை அடைவ்தில்லை. உடலுறவு இல்லாது வேறு முறைகளில் அடைவார். அவர் தான் அந்த வன்புணர்ச்சி சம்பவத்தை மறந்து விட்டதாக கூறினார் . அவரால் நினைவு படுத்த முடியவில்லை. அவரிற்கு உயர் தர ஹிப்னாடிச சிகிச்சை முறை பாவிக்கப்பட்டது , சம்பவங்கள் யாவும் நினைவுக்கு வந்தன , நோக்கள் யாவும் மறைந்து விட்டன. சில மாதஙளின் பின் வயித்தில் பிள்ளையுடனும் புன்னகையுடனும் முழுநேர வேலை செய்தார் . தாய் கூறினார் அவரிற்கு பாலியல் பிரச்சனை எல்லாம் தீர்ந்து விட்டதாகவும் நல்ல மகிழ்சியாக வாழ்கிறார் என்றும்.பலரால் தீர்க்க முடியாத பிரச்சனையை ஹிப்னாடிசம் தீர்த்தது.


ஹிப்னாடிசம்

 

இது ஒரு உடல் தளர்வுற்ற ஒரு தூக்கம் போன்ற நிலையாகும் ( deepere avslapning -deep relaxation), . நித்திரை அல்ல. இதை பத்திரகிரியார் தூங்காமல் தூங்கும் சுகம் என்று கூறியதாக எங்கோ வாசித்த ஞாபகம் . இது ஒரு இயற்கையான நிலையாகும் . ஒவ்வொரு நாளும் நாங்கள் பல தடவை இந்த நிலையை அடைகின்றோம் . ஒருவர் படம் பார்க்கும் பொழுது தன்னை அறியாமல் அழுவது , கதை வாசிக்கும் பொழுது உடல் முழுவதும் பய உணர்ச்சி பரவுவது , ஒரு பந்தடி போட்டியின் பொழுது ஆரம்பத்தில் அவருக்கு நோ ஏற்பட்டலும் 90 நிமிடங்களும் ஒரு பிரச்சனை இல்லாது விளையாடுவார் , ஆனால் 90 வது நிமிடம் முடிந்ததும் அவருக்கு நடப்பதற்கு உதவி தேவைப்படும் . இது கூட ஒரு .ஹிப்னாடிச நிலையாகும் .அது போல் ஒருவர் நித்திரை கொள்ளத்தொடங்கும் பொழுதும் , விழிக்கும் பொழுதும் இப்படியான் ஒரு நிலைக்கு செல்கிறார்.


ஆதலால் தான் நம் முன்னோர்கள் காலையில் இளவுச் செய்தி சொல்ல வந்தாலும் உடனடியாக சொல்லாது எல்லொரையும் எழுப்பி , பல கதைகள் கதைத்து விட்டு படிப்படியாக் சொல்லுவார்கள் . ஏனெனில் ஆள்மனதில் நேரடியாகச் சென்று அதிர்ச்சி ஏர்படாது இருப்பதற்காக அவர்கள் உடனே சொல்வதில்லை. பகற்கனவு காண்பதும் ஒரு ஹிப்னாடிச நிலையே.ஹிப்னாடிச நிலையை 99.9% மக்கள் அனைவரும் அடையலாம். ஒருவரது விருப்பம் இல்லாமல் அவரை ஹிப்னாடிசம் செய்ய முடியாது . ஹிப்னாடிசத்தின் மூலம் மந்திரம் மாயம் ஒன்றும் செய்ய முடியாது . இது முற்றிலும் விஞ்ஞான பூர்வமானது . இது இப்பொழுது தான் நோர்வேயில் ஓரளவு பிரபலமாக இருந்தாலும் – இது 1970 ம் ஆண்டுகளில் இலங்கையில் டாக்டர் கோவூர் அறிமுகம் செய்திருந்தார் , பல சாதனைகள் புரிந்தார் . அந்த ஆசானைப்பற்றி வேறு ஒரு இடத்தில் விரிவாக்ப் பார்போம் . மேடையிலே செய்யப்படும் ஹிப்னாடிசத்துக்கும் , மருத்துவக் ஹிப்னாடிசத்துக்கும் நேரடியாக் எந்தத் தொடர்பும் இல்லை . மேடை ஹிப்னாடிசத்தை எல்லொருக்கும் பாவிக்க முடியாது ஆனால் மருத்துவக் ஹிப்னாடிசமானது எல்லொருக்குமே பாவிக்கலாம் -அவர்களது விருப்பத்துடன். ஒரு படத்தில் வரும் கதாநாயகன் 20 பேரைத் தனியே அடிப்பான் நியத்தில் சாத்தியமில்லை . அதேபோல் படங்களில் வரும் பல ஹிப்னாடிசக் கதைகளும் நியத்தில் சாத்தியமில்லை.


ஹிப்னாடிசம் பாவிக்கும் முக்கிய இடங்கள் .

சுயமுன்னேற்றம் .(Self Improvement )

விளையாட்டுத்திறன் (Increase athletic ability), ஞாபகசக்தி (memory), மேடைப்பேச்சு (public speaking), படிக்கும்திறன் ( study skills), ஊக்கம் (motivation), சுய விழிப்புணர்வு ( self awareness )இன்னும் பல


பழக்கங்களுக்கு அடிமைத்த்தனம்(Addictions:) -


போதை (drugs), மது (alcohol), புகைத்தல் (smoking), சாப்பாடு(food), தொடர்வேலை (workaholic -arbeidsnarkoman), தீயசிந்தனைகள் (negative thinking), கட்டுப்படுத்தமுடியாத உணர்வுகள்(control tendencies), பாலியல்(sex)
பயங்கள்( Fears/Phobias)- (தென்னாலி படம் ஞாபகம் வருகிறதா?)

மூடிய அறை(closed-in places), சனக்கூட்டம் (public places),விமானம்( flying), தண்ணீர் (water), பாம்பு (snakes), நாய் (dogs), பூனை ,உயரம் (heights)


இதை விட மனக்கவக்லை மனவிரக்தி மனப்பத்ட்டம(anxiety, depression, panic attacks) ஒற்றைத்தலைவலி (migraine) நோகாமல் பிள்லைப்பெறுதல் , ஐம்புலன்களின் உணர்ச்சிகளை அதிகரிக்கச் செய்தல் . காதில் இரைதல்(tinutus) ,நிகம்கடித்தல்,கைசூப்புதல் , படுக்கையில் சிறுநீர்களித்தல் (Sengevæting,bedwetting) ஆகியவற்றையும் பூரண சுகப்படுத்தலாம் . அடுத்த தொடரில் அந்த அழகிய பெண் ஏன் பயந்து நடுங்கினாள், அப் பெண்ணின் முகத்தில் இருந்த கறுப்புக் கோடுகள் மறைந்தது எப்படி என்பதைப் பார்ப்போம்


1.மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 01