1 

 

ஆனந்தம்

கதவைத்திற
காற்று வரட்டும்
கதவைத்திற
காற்று வரட்டும்

ம்ம்ம்ம்ம்………
கதவைத்திற
……………….வரட்டும்

நித்தியங்கள்
தினமும் ஆனந்தங்களைத்
தேடுகின்றன

நிம்மதியின் சூட்சுமங்கள் படிக்க
முதலில் ஸ்ரீமத் பாகவதத்தைப்
படி

“எல்லாம் மாயை
ஆம் எல்லாமுமே மாயை
ஆண்டவனின் நாடகத்தில்
நாமெல்லாம் நடிகர்கள்”

ரஞ்சிதா மாயை
சொர்ணமால்யா மாயை
சங்கரராமன் மாயை
ஜட்டியோடு படுத்திருந்த நித்தியும் மாயை
ஆண்குறியும் பெண்குறியும் மாயை

ஆனந்தத்தை தேடி
அனுதினமும் அலைவோரே
ஆனந்தம்
உள்ளாடைக்குள்
பத்திரமாய் இருக்கிறதாம்

—————————————————————-

ஆன்மீகத் தேடல்கள் -2

 

போதும்,
இனி கதவைத்திறக்காதே

ஒஷோ செயேந்திரன்
நித்யா ஜக்கி கொக்கி
பக்கி சொக்கி

“அத்தனைக்கும் ஆசைப்படு”
“கதவைத்திற காற்று வரட்டும்”

கவலைப்பட ஒன்றுமில்லை
சுவாமிகாள்
கிருஷ்ணன் கேட்காததை
சிவன் செய்யாததையா
செய்துவிட்டீர்கள்

அவா அவா சொன்னாள்
இவா இவா நன்னா செய்தாள்
நீங்களெல்லாம்
நான்கு வேதங்களையும்
படித்தேள் அப்படியே
செய்தேள்

நாங்கோ படிக்கலீயே
சுவாமீ
அதாலே தான்
இன்னமும்
மரமண்டைகளாகவே இருக்கோம்

“ரெண்டு பேரும் விருப்பப்பட்டு தான
இருந்தார்கள்”
“மனுதர்கள் தவறுசெய்வார்கள்”
“இந்து மதத்திற்கும் இதற்கும்
சம்பந்தம் இல்லை”
வக்காலத்துக்கள்
நாக்கை சுழற்றுகின்றன

சிரிக்கிறார்கள்
தில்லை தீட்சிதன்கள்
சங்கரன்கள்
பிரேமானந்தங்கள்

கடவுள் பரிசோதிக்கிறார்
சனிகிட்ட ஆனாளப்பட்ட சிவனே
மாட்டிண்டு முழிக்கும் போது
நம்மவா எல்லாம் எம்மாத்திரம்

“அத்தனைக்கும் ஆசைப்படு”
“கதவைத்திற காற்று வரட்டும்”

போதும் இனி
கதவைத்திறக்காதே

—————————————————————-
ஆன்மீகத்
தேடல்கள் – 3

உங்களை
ஜெயிக்க முடியாது

எங்க சுவாமி அப்படி
அப்படி பண்ணியிருக்க மாட்டார்
எல்லாம் கிராபிக்ஸ்
சித்து வேலை

கங்கையை
காசியை
கேவலப்படுத்தினீர்கள்
இப்போது சுவாமிகளை
ஆனால்
இந்து மதத்தினை உங்களால்
கேவலப்படுத்தி
ஜெயிக்க முடியாது

உண்மைதான்
கேவலங்களை யாராலும்
கேவலப்படுத்திவிட முடியாது
சொல்லத்தான் முடியும்

வீடியோக்கள்
புகைப்படங்கள்
வாக்குமூலங்கள்
வழக்குகள் மட்டும்
உங்கள் பிம்பங்களை உடைத்திடப் போவதில்லை

பக்தர்கள்
பதர்களாய் நீடிக்கும் வரை
முக்தி பெற மூடர்கள்
முண்டியடிக்கும் வரை
யாராலும் உங்களை ஜெயிக்க முடியாது

—————————————————————-


ஆன்மீகத்தேடல்கள் – 4

மயான அமைதி

கதவினை மூடு
கும்மிருட்டில்
கால்களை மடக்கி ஆசனமிடு
கைகளை
முத்திரையில் வை
தன்மானத்தை தூக்கிப்போடு
மனிதத்தை மூலையில் போடு

மக்களை மற
துன்பங்களைத் துற
குறைகளை சொல்லாதே
தனித்து இருப்பதில் சுகம் காண்
மக்கட் பிணங்களின் மீதேறி
அமைதியைத்தேடு

அமைதிதான் வேண்டுமா
உனக்கு
உலகம் பற்றி
எரிகையில்
உனக்கு மட்டும் ஸ்பெஷலாய்
அமைதி கிடைக்க
இதென்ன நித்தியாவின் வயாகராவா?

துப்பாக்கியின் சத்தங்களும்
வன்புணர்வின் கதறல்களும்
உன் காதுகளில் விழவில்லையா?

மக்களைத்தவிர்த்த அமைதி
தான் வேண்டுமாயின்
அது மயானத்திலும் கிடைக்கும்

அமைதியை உடை
வர்க்கமென்ற உளியினைக்
கொண்டு உன்னை நீயே செதுக்கு
அமைதிக்கும் அமைதியின்
புரோக்கர்களுக்கும் நிரந்தரமாய் அமைதியைக்கொடு.

—————————————————————-

ஆன்மீகத்
தேடல்கள் – 5

இயற்பகை நாயனார்

நித்தியும் சங்கரனும்
பிரேமானந்தாவும் ஓஷோவும்
மாறவும் இல்லை
மாறப்போவதும் இல்லை
மேக்கப்கள் கலைவதுமில்லை
கலைக்கப்படுவதுமில்லை

நீ மாறிக்கொண்டே இருக்கிறாய்
பக்தனாக
அறிவை இழந்த சிஷ்யனாக
அதிபத்தனாக
அப்பூதியடியாக
கண்ணப்பனாக

இறுதியாய் காத்திருக்கிறது

இயற்பகை நாயனார் வேடம்

வேடமேற்க தயாரா?


http://kalagam.wordpress.com/2010/03/04/ஆன்மீகத்-தேடல்கள்/