விடைக்காய் காத்திருக்கிறோம்
எங்கள் எண்ணங்களும்
வாஞ்சைகளும் மொத்தமாய்
வாடி வதங்கிப்போய் கருகக் காத்துக் கொண்டு இருக்கின்றன

உணவுக்கும் தண்ணீருக்குமே நாங்கள்
வரிசையில் காத்துக்காத்து நின்றதனால்
கால்களிரண்டும் வட்டி சேர்த்துத் தருமாறு வலிகளுடன் கேட்கின்றன
வாடிய பூக்களைப்போன்று வலுவிழந்து போய் இருந்த அந் நாட்கள் 
இங்கே நெருஞ்சி முட்புதர்களாக
நெஞ்சைக்கிழித்து தம் வாஞ்சையை தீர்த்துக் கொள்கின்றன
நம் வாழ்க்கை கட்டுண்டு இருண்டு போகுமா
அன்றில் கடுகதியாய் மீள் சென்று புலர்ந்து போக முடியுமா
விடைதேடிக் காத்திருக்கும் எம்மவர்க்கு
பதில் வருமா
இல்லையெனில் வினாக் குறிதானா!
 
 
கண்மணி
வன்னி அகதி முகாமில் இருந்து
10.01.2010

http://www.psminaiyam.com/?p=847