ஃது,தேசம் நெட்டில் போடப்பட்ட பின்னூட்டம்.சேது கேட்கின்ற நியாயம் குறித்தான தேடலில், புலிகளால் அவப்பெயர் ஏற்படுத்தப்பட்டு,இன்றும்“துரோகியாக“பல புலிவிசுவாசிகளால் உளவியற்றாக்குதலுக்குட்படும் நான், அதே நியாயத்தைக் கேட்பதற்காக இதை பதிவிடுகிறேன்!

புலிகளும்,அவர்களது விசுவாசிகளும் இப்போது „வெள்ளைவேட்டிக் கத்தசாமிகளாக“த் தம்மை இனங்காட்டுகின்றனர்.பாசிசச் சேட்டையால் மற்றவர்களைக் கொன்று தள்ளியவொரு கூட்டம்,தம்மை மனிதாபிமானிகளாகவும்;ஜனநாயகவாதிகளாக்காட்டவும் இந்தத் தருணத்தில் வெளிப்படையாகப் பேசுவதென்று முலாம் பூசும்போது,இவர்களால் பாதிப்புக்குள்ளாகியவர்களும் அவர்களது நியாயத்தில் தமக்கும் அதே அளவுகோல் இருப்பதாகச் சொல்கின்ற உரிமைக்காக நானும் பேசுகிறேன்!
 
எனக்கு,இவர்களது ஒற்றைத் தன்மையிலான நியாயமும்,இரட்டை வேடமும் எப்போதோ புரிந்தவொன்றுதாம்.எனினும்,புலிகளது மக்கள் விரோதம் எத்தகையது என்பதைப் புரிய இப்பதிவு வழி வகுக்கும்.
 
நாம்,சமூக விரோதிகளைப் பல தளங்களில் இப்போது இனங்காணமுடியும்.அவர்கள் தம்மால் தாமே அம்பலமாகி வருகின்றனர்.
 
 

 
>>எனது இப் படத்தை பிலிக்கரிலிருந்து வெட்டியெடுத்துச் சாத்திரி என்ற புலிவிசுவாசி,எனக்கெதிராக-நான் மகிந்தாவை அடிபணிந்து மகிந்தாவிடம் ஆயுதம் வேண்டுவதாகப் பொருத்திப் புலிக்காகக் குரல் கொடுத்தார்.இப்படத்தை இங்கே போடுவதற்கான காரணம்:புலிகளது விசுவாசிகளும் புலிகளும் ஒரே பாதையில் நடந்தார்கள் என்பதற்கே!எட்டப்பர் டொட்.கொம்இப்போது,என்னைப்பற்றி எழுதிய பழைய லிங்கில் சண்டே லீடர் பற்றி எழுதிவிட்டுப் புதிய லிங்கில் எனது படத்தை எடுத்துவிட்டு,அவதூறைமட்டும் விட்டுள்ளார்கள்.படம் கழற்றியதற்கான காரணம்:அப்படம் ரீ.ரீ.என் தொலைக்காட்சியால் பிடிக்கப்பட்டதென்பதும்,அத்தொலைக்காட்சி புலியுடையதென்பதும்,எனவே,எட்டப்பர்.கொம் புலிகுரியதென்றதையும் இல்லாதாக்குவதற்கே.புலிகள் இப்படி எத்தனை சுத்துமாத்துச் செய்வினம் என்பது உலகறிந்தது.<<
எட்டபர்.கொம் பழையசுட்டி:
எட்டப்பர்.கொம் புதிய சுட்டி:
————
 
 
P.V.Sri Rangan on December 29, 2009 8:46 am Your comment is awaiting moderation.
 
சேது இரூபன் தன் வாக்குமூலத்துடன் ,தனக்கு இலங்கை அரசு-தூதுவராலயம் உட்பட ;அமைச்சகர்களுடன் தொடர்பிருந்ததாகச் சொல்கிறார்.இது பல வருடங்களாக.அத்துடன் ,புலிக்கு விசுவாசமாகவும் கருத்துக்கள் உரைத்துத்“தமிழீழ“போராட்டம்பற்றி- நியாயப்படுத்திப் புலிக்கு-புலியாகச் செயற்பட்டவர்.இது வரலாறு-புலம் பெயர் ஊடகங்களைக் கேட்டவர்கள்-பார்த்தவர்களுக்குத் தெரிந்தது.
 
 
இங்கு என்ன கேள்வியென்றால்,புலிகள் தம்மை எதிர்ப்பவர்கள் மாற்றுக் கருத்து வைப்பவர்கள்மீது „கருத்து“க்கட்டித் துரோகிகளாகப் பொதுத்தளத்தில் ஒருவரை“இனங்“காட்டும்போது-அவர்களுக்கு இலங்கை அரசோடும்-தூதுவராலயத்துடன் தொடர்பிருப்பதாகச் சொல்கிறது.இப்போது, சேது இரூபன் சொல்கிறார் ,தனக்கு, புலிகள் மற்றவர்கள் மீது போர்த்திய „அனைவருடனும்“ தொடர்பிருந்ததாக.
இங்கே, புலிகளது தர்மப்படி சேது ரூபன் ஏன் துரோகியாக முடியவில்லை?
 
மற்றவர்கள் ,புலிகளது பாசிசத்தை அம்பலப்படுத்தியபோது: டுசில்டோர்ப் மே தினத்தில் ரீ.ரீ.என் தொலைக்காட்சியின் கமராவில் பிடிக்கப்பட்ட எனது படத்துடன் -என்னை எட்டப்பனாகக் காட்டிப் புலிகள் „கருத்து“க்கட்டிப் போட்டது பலருக்கு ஞாபகம் இருக்கலாம்-இங்கே, புலிகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த இந்தவிசயம் சொல்லப்படுகிறது.
 
சேது ரூபனது வாக்குமூலம் மிக முக்கியமானது.புலிகளதும்-அவர்கள் விசுவாசிகளதும் இரட்டை முகத்தைப் புரிந்துகொள்ள.
 
 


 
 
புலிகளால் மிரட்டப்பட்டுத் தொடர்ந்து உளவியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நான், இப்போது எங்கே நியாயம் கேட்கலாம்?;என்னைப் போல் எத்தனை தனிமனிதர்கள் இவர்களது பாசிசச் சேட்டையால் பாதிக்கப்பட்டோம்?
 
இப்போது ,சேது ரூபன் தனது உறவுகளை வெளிப்படையாகப் பேசுகிறார்.இதுவே-புலிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பொருந்தும்.புலிகளுக்கு வக்கலாத்து வேண்டியவர்கள் முதல், அவர்களது உறுப்பினர்கள்வரை அனைவரும் புலிகளது பாசிசத்துக்குப் பொறுப்பானவர்கள்.எனவே,இவர்களுக்கும் அதே சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
 
எட்டப்பர்.கொம்-நிதர்சனம் என எத்தனை நூறு புலி ஊடகங்கள் மக்களை வெருட்டிப் பணிய வைத்தனர்?
இன்று இவர்கள் சுயமாகப் பாதிக்கப்படும்போது நியாயம்-சட்டம் எனப் பூச்சாண்டி காட்டுகின்றனர்.
 
எனக்கு, இலங்கைத் தூதுவர் காரியாலய அதிகாரிகளோடு உறவென்றும்;சேர்ந்து குடித்ததென்றும்,புலிகளைக்காட்டிக் கொடுப்பதாகவும் உரைத்தவர்களே இப்போது தமக்கும் நியாயம் கேட்கின்றனர்.இதுள், சேது ரூபன் எங்கே நிற்கிறார்?
 
எம்மைப்போன்ற நிலையுள்ளா;
அன்றிப் புலிப் பினாமிகளது நிலையிலா?
 
 
சேது ரூபன் உமக்கு இருக்கும் சட்டவுரிமை எமக்கும் உண்டுதானே?
 
 
புலிகளால் தொடர்ந்து வெருட்டப்பட்ட-உளவியற் தாக்குதலுக்குள்ளான-படங்கள்போட்டு எட்டப்பனாக இனம் காட்டபட்டவர்களுள் ஒருவனாக… இப்போது, நியாயம் எவரிடம் கேட்பதென்று யோசித்தபடி ,உமது(சேது ரூபன்)நிலையையும்-வாக்கு மூலத்தையும்கண்டு இதை எழுத முனைந்தேன்-அவ்வளவுதாம்!
 
„முற்பல் செய்தால் பிற்கல் விடியம்“என்று தமிழிலும் பல அநுபவ மொழி உண்டு.
 
 
அது, இப்போது நிஷமாகி வருகிறது.
 
…ம்… புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தக் கோட்டில் நியாயம் கேட்கிறது?
 
புலிகள் நிசத்தில் தற்போது அடையாளம் காட்டுவார்களா?
 
சேது ரூபனுக்கு இது தெரியாதா என்ன?
 
கேளுங்கள் சேது நியாயத்தை-அது உங்களுக்கு மட்டும் உரித்தானது இல்லை.மற்றவர்களுக்கும் எனப் புரிந்து அவர்களுக்கும் உள்ளதை அங்கீகரித்து.
 
இப்படி அங்கீகரிக்கும்போது, நீங்கள் „ஈ.ரி.பி.சி.“வானொலியில் வைத்த அனைத்துப் பழி சுமத்தலுக்கும் பொறுப்பேற்று.உங்கள் குரலில் நீங்கள் புலிக்காக மற்றவர்கள்மீது பழி சுமத்தியதன் ஒலியிழை பலரிடம் ஆதாரமாக இருக்கு.
 
அதை வைத்து, அவர்களும் சட்ட நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
29.12.09
காலைப்பொழுது மணி:9.45
http://srirangan62.wordpress.com/