Sat05252013

Last update01:16:00 PM

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

புலியின் உளவு அமைப்பான தமிழீழக் கட்சி தான் இன்று "மே 18" இயக்கமாகும்

  • PDF

தீப்பொறியின் அரசியலுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. 1990 களில் அந்த அரசியல், புலியிடம் காட்டிக்கொடுக்கப்பட்டது. தீப்பொறியை தமிழீழக்கட்சியாக்கி, புலியின் ஆள்காட்டியாக மாற்றியதுடன், புலிகள் போட்டுத்தள்ளவும் உதவியது. இப்படி புலியின் உளவு அமைப்பாகி இயங்கியவர்கள தான்; மீண்டும் இன்று "மே 18" இயக்கமாக வெளிவருகின்றனர். தீப்பொறி அரசியலை அழித்து, புலி உளவு அமைப்பாக மாற்றிய அதே அரசியல், அதே தர்க்கம்.  

புலியின் அழிவின் பின், எதிர்ப்புரட்சி அரசியலே மீளவும் தன்னை மூடிமறைத்துக் கொண்டு மக்களின் முதுகில் குத்த களமிறங்கியுள்ளது. உலகின் உளவு அமைப்புகள் முதல் இலங்கை இந்திய அரசியல் புலனாய்வுப் பிரிவும் கூட இதற்குள் தான் இயங்குகின்றது. கடந்தகால வரலாற்றை மூடிமறைத்தும் திரித்தும், வரலாறு தெரியாத அப்பாவிகளுக்கு வலை வீசுகின்றது. 

 

கடந்த காலத்தில் யாரெல்லாம் மக்களுடன் நிற்கவில்லையோ, அவர்கள் தொடர்ந்தும் மக்களுக்கு எதிராகவே நிற்கின்றனர். கடந்த மக்கள் விரோத வரலாற்றை வரலாற்றில் இருந்து அகற்றி, திரிக்கப்பட்ட ஒரு வரலாற்றை கூற முனைகின்றனர். மக்கள் விரோதத்தையும் அதன் சமூக விளைவுகளையும் மூடிமறைக்க, அவர்கள் கொண்டிருந்த தத்துவத்தின் குறைபாடே இவை என்கின்றனர். சமூகத்தின் விளைபொருள்தான் இது, அன்றி இதை முன்னெடுத்தவர்களின் பொறுப்பல்ல என்கின்றனர். இப்படிக் கூறி, இதற்கு எதிராக போராடியவர்களையும், அவர்கள் தியாகங்களை எல்லாம் காயடிக்கின்றனர். கடந்துபோன மனிதவிரோத அரசியலை நியாயப்படுத்த, அவற்றை சின்னச் சின்ன விடையங்களாக "தன்னியல்பான" அரசியலாக காட்ட முனைகின்றனர். "மே 18" பெயரில் உருவாகும் கும்பல் கூட, தன் வரலாற்றைப் புரட்டி எதிர்ப்புரட்சியை மீளத் தொடங்கியுள்ளது. எல்லா மனித விரோதிகளும் கூட்டாகக் கூடி, கும்மியடிக்கத் தொடங்கியுள்ளனர்.  

 

"மே 18" காரர்கள் யார்? இவர்கள் வேறு யாருமல்ல. தீப்பொறி அரசியலைக் காட்டிக்கொடுத்து, கடந்தகாலத்தில் புலியின் உளவு அமைப்பாக இருந்த தமிழீழக் கட்சிக்காரர்கள் தான் இவர்கள். புலம்பெயர் நாடுகளில் மக்கள் விடுதலையை முன்னிறுத்திய ஒரு அரசியல் வந்து விடுவதை தடுக்க, புலிகள் தீப்பொறியில் இருந்து உருவாக்கிய அமைப்புத்தான் இந்த தமிழீழக்கட்சி. அது புலியின் உளவுப் பிரிவான தமிழீழக்கட்சியாக மாற, மார்க்சியம் பேசியது. மார்க்சியத்தில் தேசியம் பற்றிய குறைபாடு உள்ளதாக கூறியது. இப்படி பலவற்றைக் கூறித்தான், புலியின் ஒரு உளவு அமைப்பாக, ஆள்காட்டி அமைப்பாக, ஆட்களை போட்டுத்தள்ள உதவும் அமைப்பாக மாறியது.

 

கேசவன் காட்டிக்கொடுக்கப்;பட்டு புலிகளால் அழிக்கப்பட்ட பின், கேசவன் முன்வைத்த அரசியலை அந்த அமைப்பு மறுதலித்தது. இந்த வகையில் தீப்பொறி முன்வைத்த அரசியலை மறுதலித்து வழிகாட்டிய ஜான், தேசபக்தன் என்ற புதுப்பெயரில் இன்று கட்டுரை வரைகின்றார். தேசபக்தன் என்ற பெயரில் இயங்கிய அமைப்பும், அதன் பத்திரிகையும் இவர்களால் காட்டிக்கொடுக்கப்பட்ட நிலையில் தான், அது முற்றாக அழிக்கப்பட்டது. இப்படி அவர்களை இல்லாது அழித்தவர்களுக்கு வழிகாட்டிய ஜான் தான், இன்று அந்தப் பெயரைப் பயன்படுத்தி கட்டுரைகள் எழுதுகின்றார். இப்படிப் புலிகள் கடந்தகாலத்தில், பல பெயர்களை அபகரித்து பயன்படுத்தியவர்கள். "மே 18" வியூகம் இதழில், இந்த தேசபக்தன் பெயரில், ஜான் பழையபடி உலாவுகின்றார். தீப்பொறியின் அரசியலுக்கு மாறாக, தேசபக்தனின் அரசியலுக்கு மாறாக, பழையபடி அதே தத்துவம் பேசுகின்றார். தமிழீழக்கட்சி உருவாக உயிர்ப்பில் எப்படி தத்துவம் பேசி மார்க்சிய அரசியலை நீக்கம் செய்தனரோ, அதே தர்க்கம் அதே வாதம், மீண்டும் ஒரு எதிர்ப்புரட்சி. அன்று நாம் மட்டும் இந்த புலிப் பாசிசக் கூட்டத்தை தனித்து எதிர்த்து அம்பலப்படுத்தினோம் என்பதே, புரட்சிகர வரலாறு. இதை இன்றும் நாம் மட்டும் தனித்து செய்யும் வரலாற்றுக்குள் தொடர்ந்து நிற்கின்றோம்.   

       

இவர்கள் கடந்த எதிர்ப்புரட்சி வரலாற்றை இனம் காணாத வண்ணம், புரட்சிகர அரசியலை  அரசியல் நீக்கம் செய்வது தான் இவர்களின் முதன்மையான இன்றைய அரசியலாகி விடுகின்றது. அன்று தீப்பொறிக்கு இதையே செய்தவர்கள். இன்று இதையே "வியூகம்" போடுகின்றனர்.  

 

நாடு கடந்த தமிழீழக்காரர்கள், வட்டுக்கோட்டை தீர்மானக்காரர்கள், மே 18 காரர்கள் முதல் தேசம்நெற் வரை, கடந்தகாலத்தில் தங்கள் பின் இருந்த எதிர்ப்புரட்சி அரசியலை மூடிமறைப்பதன் மூலம் தான், மீண்டும் மக்களுக்கு எதிரான அரசியலை செய்யமுனைகின்றனர். தங்கள் எதிர்புரட்சிக்கான அரசியலை மூடிமறைக்க, அதை "தன்னியல்பு" அரசியலாக, "சமூகத்தின் விளைபொருளாhக" இட்டுக்கட்டுகின்றனர்.

 

மார்க்சியத்தை மறுத்தும், திரித்தும், மார்க்சியத்தில் பற்றாக் குறை உள்ளதாக கூறி திருத்தி முன்தள்ளிய கடந்தகால எதிர்ப்புரட்சி அரசியலை "தன்னியல்பு" வாதம் என்ற கோட்பாட்டுக்குள் மூடிகட்ட முனைகின்றனர். 1992 களில் வெளிவந்த உயிர்ப்பில் ஜான் இதே "தன்னியல்புவாதம்" பற்றிப் பேசியபடி தான், மார்க்சியத்தை மறுக்கின்றார். இப்படி கூறி புலி உளவு அமைப்பாக இருந்த தமிழீழக்கட்சி, எந்த தத்துவத்தைக் கொண்டு எந்த வார்த்தைகளைக் கொண்டு உருவானதோ, அதன் வழியில் வந்த "மே 18" காரரின் வியூகம் இதழிலும் மீளக் காணமுடியும்.

 

புலிக்கு அன்று உளவு பார்க்கவும் காட்டிக்கொடுக்கவும் ஜானின் மார்க்சிய விரோத புலித் தத்துவம் தான் உதவியது. இன்று யாருக்கு உதவுவதற்காக அதை மீள முன்தள்ளுகின்றனர் என்பதுதான், இன்று நாம் இனம் கண்டு போராட வேண்டிய கேள்வியாகியுள்ளது.

 

பி.இரயாகரன்
20.12.2009

 

       

Last Updated on Sunday, 20 December 2009 16:11

Comments  

 
#4 elayaraja 2009-12-27 07:59
hello sir,
r u take any action for save our tamil people. daily u commanding others what is u r action tell us.
Quote
 
 
#3 kunalan 2009-12-21 15:55
முதலில் புளட் இயக்கத்தில் இருந்தார். பின் தீப்பொறி கண்டார். அதன் பின் தமிழீழக்கட்சி என்றார். அதற்கு பிறகு ஆளின் சத்தத்தை பல காலமாக காணவில்லை. இறுதியாக புலிகளின் தலைமை அழிந்தவுடன் நித்திரையால் எழும்பி வந்தது போல் கே.பி தலைமையில் தழிழீழம் காண்போம் என்றார். கே.பி பிடிபட்டவுடன் கொஞ்ச நாள் பேசாமால் இருந்தவர் இப்போது மே18 இயக்கம் என்று வியூகம் அமைக்கிறார். இனி இதில் எத்தனை நாள் இருப்பார் என்பதும் நாளை என்ன வடிவம் எடுப்பார் என்பதும் அவருக்கே வெளிச்சம். இந்த சாதனைக்காரர் வேறு யாருமல்ல .இன்று எங்கட தேசம் ஜெயபாலனால் தூக்கி கொண்டாடப்படும் ஜான் மாஸ்டர் அவர்களே. ஜான் மாஸ்டருக்கும் ஜெயபாலனுக்கும் உள்ள உறவின் பின்னனி என்ன என்பது தெரியவில்லையாயி னும் ஜெயபாலனுடன் உறவு வைத்திருப்பதன் மூலம் ஜான் மாஸ்டர் தன்னை நன்கு இனம் காட்டியுள்ளார். மாக்சியத்தின் பேரால் மே18 இயக்கம் கண்டிருப்பதாக கூறும் ஜான் மாஸ்டர் அவர்கள் தினமும் மாக்சியத்தையும் மாக்சியவாதிகளைய ும் கிண்டலும் நையாண்டியும் செய்யும் ஜெயபாலனுடன் வைத்திருக்கும் உறவுகூட எமக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை.ஆனால் வெளிப்படையாகவே இந்திய நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு காட்டிக்கொடுக்க ும் பணியை செய்து வரும் இந்த நபருடன் எப்படி ஜான் மாஸ்டர் உறவு வைத்திருக்கிறார ் என்பதே எமக்கு பெரிதும் ஆச்சரியத்தை கொடுக்கின்றது.

நாள் ஒரு இயக்கம் காண்பதற்கும் பொழுதொரு கொள்கை பேசுவதற்கும் ஜான் மாஸ்டர் அவர்களுக்கு முழு உரிமை உண்டு. அதேபோல் மக்கள் தன்னை மாபெரும் தலைவனாக ஏற்றுக்கொள்வதாக கனவு காண்பதற்கும் அவருக்கு முழு உரிமை உண்டு. ஆனால் அவர் இதை மாக்சியத்தின் பேரால் செய்யும் கொடுமையையே எம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தமிழீழம் காண்பதற்கு எந்த மாக்சியத்தை துணைக்கழைத்தாரோ அதே மாக்சியத்தின் பேராலேயே கே.பி தலைமையையும் நியாயப்படுத்தின ார். இன்றும் அதே மாக்சியத்தின் பேராலேயே மே18 இயக்கம் காண்கிறார். நாளை இதே மாக்சியத்தின் பேரால் தனது மாபெரும் தோழன் ஜெயபாலனையும் நியாயப்படுத்தின ாலும் ஆச்சரியமடையத் தேவையில்லை!!
இலங்கை அரசு ஒரு சிங்கள இனவெறி அரசு. அது தழிர்களை கொல்கிறது. தமிழ் பெண்களை கற்பழிக்கிறது. எனவே தமிழீழமே தீர்வாகும். இது தான் புலிகளின் கொள்கை. ஜான் மாஸ்டர் அவர்களும் சாரம்சத்தில் இதையே கூறுகிறார்.ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக மாக்சிய சொற்களை கலந்து கூறுகிறார்.இங்கு அவர் தமிழீழம் சிறந்த தீர்வு என்பதால் அதை முன்வைக்கவில்லை .மாறாக ஜக்கிய இலங்கை சாத்தியமில்லை என்றும் அதனாலேயே தமிழீழம் என்கிறார். சரி அப்படி என்றால் தமிழீழம் சாத்தியமா என்று கேட்டால் அதற்கு ஒழுங்கான பதில் இல்லை. கடந்த 25 வருடங்களுக்கு மேலாக தமிழீழத்தை முன்வைத்து அதனை அடையமுடியாதது மட்டுமல்ல அதற்காக மாபெரும் இழப்புகளை சந்தித்த பின்னரும் கூட அது குறித்து கொஞ்சம் கூட கவனத்தில் கொள்ளாமல் மீண்டும் புலிகளின் பாணியில் மாக்சியத்தின் பெரால் தமிழீழத்தை முன்வைத்தால் என்ன அர்த்தம்? எதை முன்வைத்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார் கள் என்று நம்புகிறார்களா? அல்லது தங்கள் பிழைப்புவாதத்தி ற்கு மக்களை முட்டாள்கள் ஆக்கப்பார்க்கிற ார்களா? வரலாறு பதில் சொல்லும்.
Quote
 
 
#2 raju 2009-12-21 13:47
நேற்று லண்டனில் மே-18 இயக்கத்தின் வியூகம் சஞ்சிகை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதனை எமது புதிய மாக்சிய மேதை நாவலன் அவர்களின் புதிய திசைகள் பிரிவினரும் தேசம் ஜெயபாலன் கும்பலும் இணைந்து நடத்தியுள்ளனர். அதனை அறிந்து நான் ஆச்சரியப்பட்டேன ். இன்னும் சொன்னால் நாவலன் மொழியில் சொல்வதானால் அதனை அறிந்து நான் அதிர்ர்ர்ர்ர்ர் ந்து விட்டேன். ஏனென்றால் இந்த ஜெயபாலன் இதுவரை பலதடவை நாவலனை கீபோட் மாக்சியவாதி என்றும் சொகுசு மாக்சியவாதி என்றும் கிண்டல் அடித்துள்ளார். அதுவும் நேற்று காலைதான் புலி சேதுவின் எழுத்துக்களைவிட இந்த மாக்சிய வாதிகளின் எழுத்துக்கள் ஆபாசமானவை.மோசமானவை.சமூகத்திற்கு தீங்கானவை என்று தனது வெப்சைட்டில் எழுதியுள்ளார். அந்த மை காயுமுன்னரே அதே நாவலனுடன் சேர்ந்து ஜான் மாஸ்டருக்கு விழா எடுத்தால் ஆச்சரியப்படாமல் இருக்கமுடியுமா? அல்லது நாவலன் மொழியில் சொன்னால் அதிர்ச்சியடையாம ல் இருக்க முடியுமா? சரி ஜெயபாலன்தான் இப்படி என்றால் எங்கள் புதிய மார்க்சிய மேதை நாவலன் எப்படி இவருடன் சேர்ந்து விழா எடுக்கிறார். மூச்சுக்கு முன்னூறு தடவை மாவோ வாதிகள் மீது பிழை பிடிக்கும் இந்த மாக்சிய ஜம்பவான் எப்படி இப்படி நடந்துகொண்டார்? ஜெயபாலனின் “லிட்டில் எயிட”; இலங்கை அரசின் பணத்தில் இயங்கும் நிறுவனம் என்று குற்றம் சாட்டிவிட்டு இன்று அதே ஜெயபாலனுடன் சேர்ந்து விழா எடுத்தால் அதற்கு என்ன அர்த்தம் தோழர்களே? கலையரசன் கூட்டத்தில் பங்கு பற்றினால் தவறு .ஆனால் அதையே நாவலன் செய்தால் தவறு இல்லையா? இனியொரு ஆசிரியர் அசோக்கிற்கு இதனை சமர்ப்பிக்கின்ற ேன். இதேபோலத்தான் முன்பு எஸ்.எல்.எவ்.டி பணம் வாங்குவதாக நாவலன் குற்றம் சாட்டினார். பின்பு அதே அமைப்பைச் சேர்ந்த ரங்கன் என்பவரின் தலைமையிலே தனது புத்தக வெளியீட்டை நடத்தினார். இதை அறிபவர்கள் நிச்சயம் அதிர்ந்துவிடுவா ர்கள் என்று தெரியும்.ஆனால் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி ஏமாற்ற இவர்களை நாம் அனுமதிக்கப்போகி றோம்?
Quote
 
 
#1 Ratnam 2009-12-21 12:49
Eliya naye.Un karuthu yarukku thevaiada.
Quote
 

Add comment


Security code
Refresh