இன்னமுமேன் தெருவிறங்கு.........

குமுறும் அலைதிரண்டு
தூக்கி கரைபோவென எறிகிறது
எகிறியே அசையாகொலை வெறியொடு
கோலெடுத்தோங்கி அறையும் அரக்கத்தனம்
பாசிசம் வளர்த்தெடுத்த காவற்படை
மனிதமிழந்து மிருகமாய்...

 


ஆற்றில் தத்தளித்த உயிரை
காத்தசிறுவனை பெற்ற நாடு
கையேந்தி நின்ற பேதலித்த இளைஞனை
கடித்துக் குதறியதை கைகட்டிப்பார்க்கிறது.....
காலற்றவரைக் கண்டு ஞானம்பிறந்த
புத்தரைக் கும்பிட்டென்ன பயன்..நாளை
அத்தனை வீட்டுமுற்றத்திலும் நடக்குமென
கட்டியம் சொல்கிறது அரசபயங்கரவாதம்

 

சிங்களத்து சோதரரே....
முப்பது ஆண்டுகளாய் அனுபவித்த கொடுமைதான்
உன்கண்முன்னே வன்னிமுகாமாய்...
ஊனமாய் இழப்புகளாய் உனக்கும் எனக்குமாய்....
கண்முன்னே காணொளியாய்;; வளர்ந்து நிற்கிறது
இன்னமுமேன் தெருவிறங்கு
எல்லோரும் கைகோர்ப்போம்..........