//யுத்தத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குக் கொண்டுவரப்பட்டுப் புனர்வாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள், பிரபாகரன் மரணமடைந்துவிட்டதாக வெளியான செய்தியால் மகிழ்ச்சியுற்றதாகத் தெரிகிறது. அந்தளவுக்குப் புலிகள் மக்களை மிக மோசமாக நடத்தியுள்ளனர்.

 இளம்பிள்ளைகளைப் பலவந்தமாகப் பிடித்துச்சென்று கட்டாய ஆயுதப் பயிற்சி வழங்கி யுத்தத்திற்குப் பலியாக்கியுள்ளனர். இந்நிலைப்பாடானது மக்களிடம் புலிகளின் மீதான வலுவான எதிர்ப்புணர்வு தோன்றக் காரணமாகியுள்ளது. நான் எதிர்பாராதவிதமாக ஒரு குறுகிய நேரத்தில் புலிகளின் அரசியலாய்வாளரும் முக்கியக் கவிஞருமாக இருந்து இப்போது புனர்வாழ்வு முகாமில் தங்கியுள்ள ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர், ‘அங்கே எல்லாமே முடிந்துபோய் விட்டது. தலைகீழாக மாறிவிட்டது. தமிழீழத் தேசியத் தலைவர் இப்போது முள்ளிவாய்க்கால் என்ற மிகக் குறுகிய நிலப்பரப்பிற்கு ஒரு விதானையாராக இருக்கிறார். நினைத்துப் பார்க்க முடியாத ஒரு சர்வாதிகாரியிடமிருந்து தப்பி வந்துள்ளேன்’ எனக் குறிப்பிட்டார். //

http://www.kalachuvadu.com/issue-115/page17.asp

புதுவை இரத்தினைதுரை பிரபாகரனைச்"சர்வதிகாரி"எனச் சொன்னாலென்ன அல்லது பிரபாகரனுக்கு வால்பிடித்துத் தமிழர்களைக் கொலைக் களத்துக்கு அனுப்பிய எந்த நாய் சொன்னாலென்ன-உங்கள் அமைப்பினதும்,புலம்பெயர் பணச் சேகரிப்பு துரோகிகளின் கடைந்தெடுத்த காரியவாதத்தில் "பிரபாகரனுக்கு எதுவுமே ஆகவில்லை அவர் உயிருடன் பாதுகாப்பாக இருக்கிறார்"என்று வாழ்வதாகப் பொய்யுரைத்துத் தமிழ்ர்களை ஏமாற்றிப் பிழைத்தாலென்ன-அனைத்தும் பெருமைப்படத்தக்க விஷயமே!ஏனெனில், இவ்வளவு துரோகத்தையுமே மக்கள் சீக்கரம் புரிவதற்குப் புலிக்குப் பின்னாலிருந்து இயக்கிய தமிழ் மேட்டுக்குடியினது அரசியல் அம்பலப்பட்டு,மக்கள் தமது தலைவிதியைத்தாமே தீர்மானிக்க காலம் வழிவகுக்கிறது.
 
இங்கே,எனது வேலை கடைந்தெடுத்த புலிப் பினாமிகளையும் அவர்களது கொலைக்கார நடாத்தையையும்,இன்று, "பிரபாகரனுக்குள்" தவறுகள் அனைத்தையும் புதைப்பதற்கு அவரைச் "சர்வதிகாரியாக்கும்" அரசியலைக் கேள்விக்குட்படுத்துவதே.இதன், அடிப்படையில் புலியினது "முக்கிய"கவிஞர்-அரசியல் "ஆய்வாளராக" இருந்ததும் புதுவை இரத்தினதுரையே! நானறிய வன்னியில்-புலிகளுக்குள் இத்தகைய பாத்திரத்தை வகித்தவர் அவர்தாம்.ஏனெனில், அவரே"முக்கியமான"என்றதுக்குள் அதிகமாகப் பேசப்பட்டவர்.இலக்கியத்துள்,அதாவது போராட்ட இலக்கியத்துள், அவர்தாம் ஒரு பிரபாகரன் அங்கே.இதை அவரே பலதடவைகள் தனது விமர்சன நடாத்தையூடாகச் சொன்னவர்.ஆதலால், இங்கே முக்கிய"கவிஞர்"அவரெனக் கொண்டேன்.இது கடந்து அவர் எமக்கு அவசியமில்லை.அங்கே மையங்கொள்ளுஞ் சதி அரசியலே முக்கியமானது.இதை மறுதலிக்க கொழுவிகளுக்கு அவசியம் எங்கிருந்து வருகிறது?புதுவையின் தலைமை விசுவாசத்திலிருந்தா அன்றி பரந்துபட்ட ஒடுக்கப்படும் மக்கள்சார்ந்தா என்பதும் புரியப்பட வேண்டியது.வரலாற்றில் புலிகளது பாத்திரம் ஒடுக்கப்படும் தமிழ்மக்களுகஇகு விரோதமானது-காட்டிக்கொடுப்புத் துரோகம் என்பது விஞ்ஞானபூர்வமான உண்மை.இங்கே புதுவையின் பாத்திரம் எந்தவகையிலும் வரலாற்றில் துரொகந்தாம்.அதை எவரும் புதிதாகச் செய்யவேண்டியது அவசியமில்லை.அவரே தனது வர்க்கச் சார்பில் நிரூபித்துவிட்டார்.
 
"நினைத்துப்பார்க்க முடியாத சர்வதிகாரியிடமிருந்து தப்பி வந்துள்ளேன்"என புனர்வாழ்வு முகாமிலிருக்கும் ஒரு முக்கிய புலிக் கவிஞர் உரைக்கிறாரென்றால் அவரது கடந்தகால முக்கியம் எந்தவகையில் அமைந்தது என்பதே எமது அரசியல் கேள்வி.இது மக்களை முட்டாளாக்கும் அவரது குரல்.எல்லாம் நடந்து முடிந்தபின்-பிரபாகரனது பாத்திரம் மக்கள் விரோதமெனச் சொல்பவன்-சொல்பவள்,கடந்தகாலத்தில் ஒரு கொடிய ஒடுக்குமுறையாளனை மக்கள் தலைவனாக்கி மக்களை ஒடுக்குவதற்கு உடந்தையாகியுள்ளது மன்னிக்கத்தக்கதா?இதுவரை இலங்கை இராணுவத்தை எதிர்த்துப்போராட மக்களது குழந்தைகளைக் கட்டாயமாகப் பிடித்துக் கொலைக்கு அனுப்பியவர்கள்-அதே இலங்கை இராணவத்தின் ஆதிக்கத்துள் வந்துசேர்ந்தபோது "சர்வதிகாரியிடமிருந்து தப்பிய சுதந்திரத்தைப் பெறுவதாக" உணர்ந்தால்,இதுவரை இலங்கை அரசு-இராணுவம் குறித்துப் புலிப் போராளிகளுக்குச் சொன்னவை பொய்யாக மாறுகிறது-உலகத்துக்கும் அங்ஙனமே இது உரைக்கப்படுகிறது.இங்கே,எமது நிலை,ஒரு பெரும் இனவழிப்பையே செய்த மகிந்தா அரசையும் அதன் நிகழ்கால இனவழிப்பு அரசியலையும் இந்தக் கவிஞன் பிரபாகரனது "சர்வதிகாரத்துக்கு"முன் நியாயப்படுத்துகிறான் என்பதே!
 
இந்தத் துரோகத்தை, அவர்(புதுவை)செய்யாது போனால், இதைச் செய்த அந்தக்"கவிஞர்-அரசியல் ஆய்வாளர்"மக்களையும் போராளிகளையும் முட்டாளாக்கிக் கொலைக்களத்துக்கு அனுப்பியது மட்டும் துரோகமில்லை.கூடவே,பிழையான பாதையைச் சரியானதாகவும்,பிழையான தலைவரைத் "மேதகு தேசியத் தலைவர்"என்றும் புலிகள் இயக்கம் மக்களது உரிமைக்காகவே தியாகஞ் செய்வதுமாகச் சொல்லி ஒரு தலைமுறையையே அழித்த அரசியல்-போராட்டம் சமூக விரோதமானது.இதிலிருந்து தப்புவதற்கான அனைத்து நடவடிக்கையும் பிரபாகனைச் சொல்லி,வரலாற்றில் துரோகியாக்கி-சர்வதிகாரியாக்கித் தம்மைப் புனிதர்களாக்குவதுதாம் இங்கே பிரச்சனை!இதை புதுவைக்கு வக்காலத்து வேண்டுபவர்கள் உணரக்கடவர்.
 
இங்கே புதுவை அதைச் செய்திருக்க முடியாதென்பதற்கான துணிபு எவ்வளவோ-அதே அளவுக்கு அந்தக் கோஷ்டி(புலிகளும் அவர்களது தலைவர்களும்)இதை(துரோகத்தை-மக்களை ஏமாற்றிக் கொன்றதை) வரலாற்றில் செய்தே வந்திருக்கிறார்கள்-வருகிறார்கள்.இல்லையென்றால், தனதும்-தமதுமான தலைவனின் இறுதி வாழ்வுக்கட்டம் என்ன ஆனது-அவரைக் காட்டிக்கொடுத்துக் கொன்ற சரணடைவு பகிரங்கமாக மக்களுக்குள் பேசப்பட்டு,இதுவரை போராடியவர்களுக்கும் அதன் தலைவருக்கும் நியாயமாகச் செய்வேண்டிய அஞ்சலியைக்கூட செய்யமுடியாத கபோதிகள்-உங்களுக்கு கடைந்தெடுத்த "அயோக்கியம்"குறித்துப் பேச என்ன அருகதையுண்டு?
 
அனைத்தையுமே தமிழின்பெயராலும்-தமிழீழத்தின் பெயராலும் புதைத்துவிட்டுப் "புதுவை சொன்னாரா-இல்லைப் புண்ணாக்குச் சொன்னாரென்று" என்ன பட்டி மன்றமா இங்கே நடாத்துகிறீர்கள்?
 
செய்தாலுஞ் செய்வீர்கள்!
 
ஏனெனில், "தலைவர் சரணடைந்து பலியானாரா இல்லை வீரமரணமடைந்தாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா"என்ற பட்டிமன்றமே உங்களுக்குள்(புலிகளுக்குள்)முடிந்தபாடில்லை.இந்நிலையில், சரணடைந்தவர்களின் மனிதவுரிமை குறித்து "மக்களாகிய மந்தைகள்" பேசுவதற்கு நீங்கள் அனுமதிப்பீர்களா?இந்த அரசியலை எமது கட்டுரையோடு உரைக்கும் சூழலில் கொழுவிகளது பாத்திரம் அவர்களுக்குள் உணரப்படமலேயே முன் தள்ளப்படுகிறது.நாம் இதையும் கவனத்தில்கொள்வது அவசியம்.
 
நாங்கள் உண்மையிலிருந்துதாம் நமது அம்பலப்படுத்தல்களைச் செய்கிறோம்.அதையும் மக்களது விடிவுக்கான நிதானமான அரசியல்பாதையில் நின்றே.மற்றும்படி பொய்யுரைத்தலும்,பித்தாலாட்டஞ் செய்வதும்,சதி அரசியல் செய்வதும்,திரைமறைவுப் பேரங்களுடாகத் தலைமையை அழிப்பதும், அதற்காக கூலி பெறுவதும் புலித்தனமான புலிப் பினாமிகளுக்கும் அவர்களது வால்களுக்குமே கைவந்த கலை.அதை, நாம் கடந்த மே ஆரம்பத்திலிருந்து இன்றுவரை நேரில் கண்டும், கேட்டும் அநுபவிக்கிறோம்.இதையெல்லாம் தட்டிக் கேட்க வக்கற்ற கொழுவிக்கு,இங்கே புதுவைக்கு பல்லக்கு தூக்குவது அவசியமாகிறது.
 
இன்று, புலிகளுக்குள் இருந்துகொண்டு மக்களை உயிராகவும்-உடமையாகவும் வேட்டையாடிய இத்தகைய நயவஞ்சகர்கள், புதுவை வடிவில் மட்டுமல்ல தளபதிகள் வடிவிலும்,இன்னபிற எல்லாவடிவினுள்ளும் நாம் இனங்காண்கின்றோம்.அவர்களே தலைவர் பாதுகாப்பாக இருப்பதாகவும்,இல்லை வீரமரணமடைந்து விட்டதாகவுஞ் சொல்லிப் பெரும் செல்வங்களைச் சுருட்டும் கடைந்தெடுத்த அயோக்கியத் தனத்தோடு, அரசியல்-பரப்புரை யெ;யும்போது அங்கே புதுவைக்கும் பங்கு இருக்கிறது.இதுவரை, அவரதும் அவர் கூட்டத்தினதும் அரசியல் நடாத்தைகளே இன்றைய உண்மைகளாக விரிகிறது.
 
ஏனெனில்,வன்னிக்குள் வளர்க்கப்பட்ட கவிஞர்களைத் தானே வளர்த்ததாகப் புதுவை இரத்தினதுரை அதிகம் பேசித்திரிந்தவர்.அவரது வளர்ப்பிலுள்ள ஒரு கவிஞர் இங்ஙனம்"நினைத்துப் பார்க்க முடியாவொரு சர்வதிகாரியிடமிருந்து"தப்பி இலங்கை இராணுவத்திடம் வந்ததைக் குறித்துரைக்கிறாரென்றால் இந்த வளர்ப்புக்குள் ஒரு துரோகம் தலைமைக்குப் போலியாக நடித்தது அம்பலத்துக்கு வருகிறது.சிஷ்சியனது நிலை இங்ஙனமென்றால், குருவினது நிலை பிரபாவுக்கு-இதுவரையான அவரது தலைமைக்குப் போராட்டத்துக்கு அதிவிசுவாகமென இருந்தால்-இங்கே எது உண்மையானது?
 
இங்கே எவர் கடைந்தெடுத்த துரோகஞ் செய்கிறார்?
 
மீளவுஞ் சொல்கிறேன்.இங்கே, புதுவை இரத்தினதுரை,பிரபாகரன் என்ற பெயர்களுக்குள் எதுவுமே இல்லை என்ற கோணத்தில் அரசியலைப் புரிய முற்படுவதே அவசியமானது.இவர்களுக்குள் நிலவிய குறியீட்டு அரசியலையே நாம் உடைத்துப் பார்க்கிறோம்.இஃது, இத்தகைய மனிதர்களுக்குப் பின்னாலிருந்து இயக்கப்பட்ட சக்திகள் குறித்த புரிதற்கானதும் அவர்களது துரோகத்தை மக்களுக்குள் அம்பலப்படுத்திச் சரியானவொரு பாதையைத் புலிகளது தவறுகள்-துரோகங்களிலிருந்து கற்றுக்கொண்டு, ஒடுக்கப்படும் வர்க்கஞ் சார்ந்து சிந்திப்பதே முக்கியமானது.அதற்கான அரசியல் பிரபாகரனது பெயரால் தப்ப முனைவர்களை முதலில் அம்பலப்படுத்தி அவர்களிடமிருக்கும் சதியை முறியடிப்பதே.இதற்கு கொழுவியென்ற முகமூடியிடம் என்ன மொழி-பெயர் இருப்பினும் அது எமக்கு அவசியமில்லை.
 
கொழுவி வகைப்பட்ட "புதுவையாருக்காக வக்கலாத்துவேண்டும்" மனதுக்கு, தலைவரின் காலத்தில் வாழ்ந்ததாகப் பெருமைப்படும் தருணத்தில் தம்மால்-தமது அமைப்புக்கும் அதன் தலைவருக்குமான அழிவில் எதைக்குறித்து மக்களுக்குச் சொன்னார்கள்?அல்லது, கடைந்தெடுத்த அயோத்தனத்தை தமது அமைப்பும்,அதன் தலைவர்களுஞ் செய்தபோது ஏன் அவர்களது "புத்திசாலி"த்தனத்தில் இவை உறைக்கவில்லை?
 
இங்கே,பிரபாகரனுக்குள் அனைத்தையும் புதைத்துவிட்டு,அவரைக் கடைந்தெடுத்த துரோகியாக்கி-சர்வதிகாரியாக்கிவிட்டும்,புலிகளது அனைத்துத் தோல்விக்கும்,துரோகத்துக்கும்-தவறுகளுக்கும் பிரபாகரனே பொறுப்பெனும் அரசியலுக்குள், தாம் தப்புவதும்-புலிப் பணக்காரத்தலைவர்களையும் அவர்களது கடந்தகால-நிகழ்காலத் துரோகத்தையும் தமிழீழத்தின் பெயரால்,தேசியத்தின் பெயரால் காப்பதற்கெடுக்கும் முயற்சியில் இத்தகைய கொழுவிவகை மனதுக்குப் பாரிய பங்கு உண்டு. "புலிகளை அம்பலப்படுத்துபவர்கள் என்ன செய்கிறார்கள்?"எனப் பாக்கும்-கருத்தாடும் இந்தக் கூட்டம் தமது தலைமையினது முடிவு குறித்தும்,சரணடைவு-இலங்கை அரசினது சர்வதேசச் சட்ட மீறல் குறித்து எதுவும் நடக்காதமாதிரி முகமூடிபோட்டுத் திரிகிறது.இதுதாம் இன்றைய கடைந்தெடுத்த அயோக்கியத் தனமென்பதை இத்தகைய கொழுவிகள் மறந்துபோய்விடுகிறார்கள்.
 
இதுவரை தங்களது அமைப்பு சார்பான அரசியல் நடாத்தையில் தங்கள் பாத்திரம் எதுவென்பது எமக்குப் புரிந்துகொள்ளத் தக்க அரசியலாக இருப்பதால், கொழுவிகளது எந்தக் கருத்திலும் எனக்கு-எமக்கு முரண்பாடுகிடையாது.ஏனெனில், அவை மக்கள்-உழைக்கும் வர்க்கத்துக்கு எதிரானதே என்பது எமது நிலைப்பாடு.இங்கே,புதுவை மட்டுமல்ல நீங்களுமே மக்கள் நலத்தில் சார்ந்து சிந்திக்காது, தலைமை-இயக்க விசுவாசத்திலிருந்து சிந்திக்கும்வரை நீங்கள் அனைவரும் மக்களுக்குக் கடைந்தெடுத்த அயோக்கியர்களே!
 
புதுவை மட்டுமல்ல எந்தப் புலியும் இன்றைய தமது துரோகத்தைப் பிரபாகரனுக்குள் திணித்துவிட்டுத் தம்மைக் காக்கவே முனைகிறார்கள்.ஏனெனில்,பிரபாகரனது பெயர் இனி அவசியமில்லை.அதைக்கடந்து புதிய கூட்டுக்கள் புதிய துரோகத்தோடு அரங்கேறுவதற்குப் பிரபாகரன் எனும் பெயர் வரலாற்றில் "சர்வதிகாரி-துரோகி-தவறான வழிகாட்டி"என்பதிலிருந்தே ஆரம்பமாகிறது.இதற்காகவே அவர் புலிப்பினாமிகளால் காட்டிக்கொடுத்துக் கொலை செய்விக்கப்பட்டார்.இதுதாம் அயோக்கியத்தின் அயோக்கியத்தனம் என்பதை உணர்க.இன்று, தம்மைக் காப்பதற்குப் பிரபாகரனது உண்மை நியைச் சொன்ன இந்தத் தமிழினத் துரோகிகள் அன்று மக்களது விடிவுக்காக நாம் பிரபாகரன் குறித்து இந்த மேற் சொன்ன பாத்திரத்தைச் சொன்னதற்காக "துரோகி"களாக்கப்பட்ட வரலாற்றில் இவர்களது அயோக்கியத்தனம் இன்று அம்பலப்படுவதை எதிர்கொள்கிறோம்.இதுதாம் பாசிசத்தின் தெரிவு.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
15.07.09