எகிறிமிதித்து ஆணவத்தில் இலக்கற்று வீழ்ந்துபோய்
சந்ததியே சதிவலைக்குள்
சிறகடிக்கும் சிட்டுக்களின் இறகுகள் ஒடிக்கப்பட்டு
எதிரியின் கூண்டுக்குள்
புத்தகம்காவி புள்ளிமானாய் துள்ளித்திரிந்தவர்கள்
கத்திக்குளற இழுத்தெடுத்து
பெற்றவர் உறவுஅற்று எம்இனத்தை கொத்திய கரங்களிலே
கொண்டுபோய் வீழ்த்தியது

 

 

 

நெஞ்சுவெடிக்கிறது
என்இனத்து எதிர்கால கீற்றுக்கள்
இருளில் புதையுண்டு பதைத்துப்போய்
போரின் வடுக்கள்
பாரென் தேசத்து வித்துக்கள்
முளைவிடும் தவிப்பு தகர்ந்து
பாசிசப்பாறைகளில் கருகிப்போய் ………

ஓ மானுடமே
கருவறையில் மனிதம் எஞ்சியிருந்தால்
புரட்சியை பிரசவிக்கும் இணைதலில் கூடு
சிறுபொறியைமூட்டு பற்றிப்பரவட்டும்
பொய்மையில் மூழ்கிய மானுடம் பொசுங்கி
உணர்வுகள் விழிக்கட்டும்