முன்பக்கம்

உலாவுவோர்

We have 151 guests online

உலாவியோர்

Content View Hits : 4893045
Visits [+/-]
Today:
Yesterday:
Day before yesterday:
311
2474
2577

-103
This week:
Last week:
Week before last week:
16791
11797
11230

+567
ஞாயிறு, 01 ஆவணி 2010
 


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு, நாம் விடுக்கும் பகிரங்க வேண்டுகோள்

E-mail Print PDF
எழுத்து (பெருப்பிக்க - சிறுப்பிக்க)

பெருப்பிக்கசிறுப்பிக்க

மூன்று சகாப்த காலமாக நிலவிய உங்கள் அரசியல் முடிவுக்கு வரும் இந்த தருணத்தில், மக்களுக்காக ஒரு கணம் சிந்தியுங்கள். உங்கள் தவறுகளை நிவர்த்தி செய்யுங்கள். இதன் மூலம் எதிர்கால தலைமுறை தனக்காக போராடவும், இந்த தலைமுறை தான் இழைத்த வரலாற்றுத் தவறுகளை உணர்ந்து கொள்ளவும் உதவுங்கள். 

இன்று பலரும் மேக்கப் செய்து உங்களை பாதுகாத்து விடலாம் என்று நினைக்கின்றனர். ஏன் அப்படி முனைகின்றனரும் கூட. அது இனி சாத்திமில்லை என்பது, உங்களுக்கு நன்கு தெரியும். ஏன் இந்த நிலைமை? எதனால் இது நடந்தது? தற்போதாவது உங்கள் மீதான அழித்தொழிப்பு நிகழும் கணத்தில் கூட, உங்களால் வரலாற்றுக்கு சொல்ல கூடிய, தவறுகளை திருத்தக் கூடிய இறுதிச் சந்தர்ப்பங்கள் இன்னமும் உண்டு.   

 

நாம் கடந்த மூன்று சகாப்தமும் உங்களுடன் ஒரு எதிர் போராட்டத்தை நடத்தியவர்கள். நாம் கோரியது எல்லாம், போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றும்படிதான். இன்றும் அதைத்தான், இந்த கணத்திலும் நாம் கோருகின்றோம்.

 

வரலாறு உங்களை தூற்றக் கூடாது. இன்று உங்களைப் போற்றுபவர்கள் தான், நாளை உங்களை முதன்மையாக தூற்றுவார்கள். அப்போது உங்களின் சரியான பக்கத்தை, நாம் மட்டும் தான் காப்பாற்றுவோம். 

 

உங்கள் நாட்கள் எண்ணப்படும் இன்றைய நிலையில், இன்றும் நீங்கள் மக்களுக்கு செய்யக் கூடியதுண்டு.     

   

1. நீங்கள் கடந்தகாலத்தில் மக்களுக்கு இழைத்த அனைத்து தவறுகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் அதை உணரும் வண்ணம், அதை பகிரங்கமாக சுயவிமர்சனம் செய்யுங்கள். நாளை அவர்கள் உங்களை மதிக்கும் வண்ணம், தவறை உணர்ந்ததற்காக நன்றி கூறும் வண்ணம், உங்கள் வரலாற்றை அவர்களுக்கு விட்டுச்செல்லுங்கள்.

 

2. நீங்கள் மக்களை விடுவிக்காவிட்டால், அவர்களின் அழிவுக்கு அவர்களே பொறுப்பு என்று பேரினவாதம் கொக்கரித்துள்ளது. பேரினவாதம் உங்கள் இரத்த உறவுகளையும் உங்களுடன்  சேர்த்து கொல்வதை, நீங்கள் அனுமதிக்க போகின்றீர்களா!? தயவு செய்து அவர்களை விடுவித்து, மக்கள் நலன் சார்ந்த உணர்வுடன் வரலாற்றை முடியுங்கள். தவறுகள் தவறாக இதனுடனாவது நிறுத்திவிடுங்கள்.  

 

3. உங்களுடன் சண்டையில் நிற்கின்றவர்களில், சண்டை செய்ய விரும்பாதவர்களை விடுவியுங்கள். அவர்களால் சண்டை செய்ய முடியாது. இந்த தவறையும் திருத்திக் கொண்டு, மொத்த தவறுகளையும் ஓத்துக் கொண்டு, அதற்காக போராடுங்கள். அதன் பின் ஒருநாளும் சரண் அடைந்து விடாதீர்கள். மக்களுக்காக போராடி மரணியுங்கள். வரலாறு அதைத்தான்  உங்களிடம் எதிர்பார்க்கின்றது.     

 

4. நாம் ஏன் தோற்றுப்போனோம்? அதை வழமையான உங்கள் பதிலுக்கு பதில், மனித வரலாற்றில் தேடுங்கள். அதிகாரம் முதல் நவீன ஆயுதங்கள் எல்லாம் இருந்தும், பெரும் படையிருந்தும் ஏன் தோற்றோம்? வரலாற்றை தீர்மானிப்பவர்கள் மக்கள். இதை கடந்தகால மனித வரலாறு காட்டுகின்றது. ஏன் உங்கள் வரலாறு இன்று காட்டுகின்றது. இதை இன்றாவது உணர்ந்து, அதை ஓத்துக்கொண்டு, உங்கள் காலத்தில் அதை திருத்திக் கொள்வதன் ஊடாக, மனித வரலாறு உங்களை போற்றவையுங்கள். தியாகங்களை வரலாறு கொச்சைப்படுத்த விட்டுவிடாதீர்கள்.

 

கடந்த வரலாற்றில் அதன் தவறுகளையும் உணர்வதன் மூலம், இன்றே வரலாற்றை மாற்றமுடியும். நாளைய தலைமுறை அதை உணரும்; வண்ணம், மக்களை இன்றே நேசிக்க முனையுங்கள். இந்தக் கணமே, அதை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.

 

மூன்று சகாப்தமாக மனிதத்தை சிதைந்து சின்னாபின்னமாக்கிய உங்களின் அரசியல் வரலாற்றில் இருந்து, உங்கள் இறுதி மூச்சை மனிதத் தன்மையாக்குங்கள். அதை வரலாற்றில் புதைத்து விடாதீர்கள். மொத்த தவறையும் உணர்ந்து, வரலாற்றை சரி செய்யுங்கள்.

பி.இரயாகரன்
03.02.2009

Trackback(0)
கருத்துக்கள் (5)Add Comment
...
பதிந்தவர் Kajan, February 12, 2009
நானும் மாதவனுடன் சேர்ந்து இந்த கருத்தை 100% ஏற்றுக்கொள்கிறேன்.

இருந்தும் எம்மில் எத்தனை பேர் இந்த கருத்துடன் இருக்கிறோம்?

இக்கருத்துடன் இருந்தும் எத்தனை வீதம் பேர் இதை வெளிப்படுத்துகிறோம , வெளிப்படுத்த தயாராக இருக்கிறோம், நமக்கு ஏன் இந்த வீண் வம்பு என்று வாளாவிருக்கிறோம் ?

நாம் இக்கருத்தை எம் மக்களிடம் எடுத்துச் சென்று இதன் உண்மைத் தன்மையை புரியவைக்க வேண்டும்.
இது நடப்பதற்கு எவ்வளவு காலம் செல்லும் ? அதற்குள் எல்லாமே கையை மீறி போய்விடுமே.

நாம் இப்பவும் புலிக்கொடிகளுடன் தானே எமது போராட்டங்களை புலிகளை பயங்கரவாதிகள் என்று அவர்கள் தடை செய்த அவர்களது நாடுகளில் நடாதிக்கொண்டிருக்க றோம். பிறகு அவர்கள் எப்படி எமது போராட்டத்தை செவிமடுபார்கள்? இது சிங்களவனுக்கும் எமது போராட்டங்களை பயங்கரவாதப்படுத்த இலகுவாகிறதே.

புலம்பெயர்ந்த மக்களே உங்கள் கைகளில் தான் புலிகளின் மனங்களை மாற்றும் சக்தியும், எமது போராடத்தை உலகம் அங்கீகரிக்கும் வழியும் இருக்கிறது.

மக்களே சற்று சிந்தியுங்கள் , நாம் எமது எண்ணத்தை மாற்றுவோம் , புலிகளின் தலைமை தானாக மாறும்.
...
பதிந்தவர் aasuran, February 12, 2009
//மூன்று சகாப்தமாக மனிதத்தை சிதைந்து சின்னாபின்னமாக்கிய உங்களின் அரசியல் வரலாற்றில் இருந்து, உங்கள் இறுதி மூச்சை மனிதத் தன்மையாக்குங்கள். அதை வரலாற்றில் புதைத்து விடாதீர்கள். மொத்த தவறையும் உணர்ந்து, வரலாற்றை சரி செய்யுங்கள்.//

மிகச் சிறப்பான பதிவு
மக்கள் போராட்டத்தை பற்றிய புரிதல்
பதிந்தவர் voice of a tamil refugee from India, February 03, 2009
சிறந்த பதிவு. மக்கள் போராட்டத்தை பற்றிய புரிதல் இயக்கத்தில் இருக்கும் தலைமைகளை விட ஒவொரு போராளிகளும் தங்கள் ஏன் போராடுகிறோம் என்ற புரிதல்கள் நிறைந்திருக்கும்.
...
பதிந்தவர் Beemboy, February 03, 2009
சரியான நேரத்தில் எழுதபட்டிருக்கும் பதிவு.

//மூன்று சகாப்தமாக மனிதத்தை சிதைந்து சின்னாபின்னமாக்கிய உங்களின் அரசியல் வரலாற்றில் இருந்து, உங்கள் இறுதி மூச்சை மனிதத் தன்மையாக்குங்கள். அதை வரலாற்றில் புதைத்து விடாதீர்கள். மொத்த தவறையும் உணர்ந்து, வரலாற்றை சரி செய்யுங்கள்.//

உன்மையான வரிகள்....உனர்வார்களா?


...
பதிந்தவர் Mathavan, February 03, 2009
I agree with this article 100%. Is LTTE willing to do this?

கருத்துக்களைப் பதிவிடுக
quote
bold
italicize
underline
strike
url
image
quote
quote
சுருக்குக | விசாலமாக்குக

busy
Last Updated ( Tuesday, 03 February 2009 19:33 )  
Copyright © 2010 தமிழரங்கம். All Rights Reserved.
Joomla! is Free Software released under the GNU/GPL License.
Banner