ஐ.நா. அபிவிருத்தித்திட்ட (ருNனுP) தலைவர் கேமல் டேர்விஸ் (னுநசஎளை) இன்றைய முதலாளித்துவ நிதி நெருக்கடி சுமார் 18 மாதங்களாவது நீடிக்குமெனக் கூறியுள்ளார். துருக்கியின் முன்னாள் பொருளாதார அமைச்சரான டேர்விஸ்

 துருக்கியின் என்.ரீ.வி. தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.


ஐ.எம்.எவ். எனப்படும் சர்வதேச நாணய நிதியம் தற்போது உலகின் வளர்ச்சியடையும் நாடுகளின் பொருளாதார நிலை தொடர்பாக புத்திமதி சொல்லி எச்சரிப்பதில் மட்டுமே ஈடுபடுகின்றது. அதே போல் செல்வந்த நாடுகளின் பொருளாதார நிலை தொடர்பாகவும் ஆராய்ந்து அறிவுரை வழங்குவதற்கு ஏதுவாக சர்வதேச நாணய நிதியம் சீர்திருத்தத்திற்கு உள்ளாக்கப்படவேண்டும் எனவும் டேர்விஸ் தெரிவித்தார்.


'அமெரிக்க நிதிக்கொள்கை அமெரிக்க நிதிக்கட்டுப்பாட்டுக் கொள்கைகள் அல்லது ஐரோப்பிய, யப்பானிய கட்டுப்பாட்டுக் கொள்கை தொடர்பாக ஐ.எம்.எவ். செயற்பட வேண்டியது அத்தியாவசிய தேவையாகும். ஆகக் குறைந்தது தான் காணும் பிரச்சினைகளை வெளிக்கொணரல் வேண்டும்" என டேர்விஸ் மேலும் தெரிவித்தார்.
செல்வந்த நாடுகளின் அரசாங்கங்கள் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிறுவனங்களுக்கு தத்தம் நாடுகளில் மக்களிடமிருந்து பெற்ற வரியிலிருந்து கொடுத்துவ முன் வந்துள்ள பணப் பொதிகள் பற்றிய விபரங்கள் கீழே தரப்படுகின்றன.
.
1. ஐக்கிய இராச்சியம்: மூவாயிரத்து எழுநூறு கோடி (3700,00,00,000) பவுண்டுகளை மூன்று வங்கிகளுக்கு கொடுத்துள்ளது. இது மட்டுமல்ல நாற்பதாயிரம் கோடி (40000,00,00,000)பவுண்டுகளை சந்தைக்கு விடவும் திட்டமிட்டுள்ளது.
.
2. ஐஸ்லாந்து: மூன்று பெரிய வங்கிகளை அந்நாட்டு அரசாங்கம் அரசுடமை ஆக்கியுள்ளது. இந்த நாட்டிற்கு ஐந்நூறு கோடி (500,00,00,000) டொலர்களை ர~;யா அவசரக் கடனாகக் கொடுக்க முன்வந்துள்ளது.
.
3. அயர்லாந்து: சகல வங்கிகளிலுமுள்ள வைப்புக்களுக்கும் கடன்களுக்கும் நாற்பதியாயிரம் கோடி (40000,00,00,000) யூரோவை உத்தாரவாதத் தொகையாக ஒதுக்கியுள்ளது.
.
4. நெதர்லாந்து: வங்கிகள் தமக்கிடையே பெற்றுக் கொள்ளும் கடன்களுக்கு உத்தரவாதம் செய்வதற்காக இருபதாயிரம் கோடி (20000,00,00,000) யூரோவை ஒதுக்கியுள்ளது.
.
5. ஜேர்மனி: வங்கிக் கடன்களை உத்தரவாதம் செய்வதற்காகவும் சந்தைகளைச் ஸ்திரப் படுத்துவதற்காகவும் ஐம்பதினாயிரம் கோடி (50000,00,00,000) யூரோ ஒதுக்கப் பட்டுள்ளது.
.
6. பிரான்சு: புதிய வங்கிக் கடன்களுக்கு உத்தரவாதம் செய்வதற்காக முப்பதிரண்டாயிரம் கோடி (32000,00,00,000) யூரோவையும் பிரான்சின் வங்கிகளைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர நாற்பதினாயிரம் கோடி (40000,00,00,000) யூரோவும் ஒதுக்கியுள்ளது.
.
7. ஹங்கேரி: சேமிப்புக்கணக்குகளில் உள்ள தொகைகளில் அறுபத்தியேழாயிரம் (67000) டொலர் வரையான தொகைக்கு உத்தரவாதம் செய்ய முன்வந்துள்ளது.
.
8. ஸ்பெயின்: புதிய வங்கி கடன்களுக்கு பத்தாயிரம் கோடி (10000,00,00,000) யூரோ வசதி செய்யப் பட்டுள்ளது. சேமிப்பு கணக்குகளுக்கு ஒரு இலட்சம் யூரோ வரை உத்தரவாதம் செய்யப் பட்டுள்ளது.
.
9. போத்துக்கல்: வங்கிகளின் திரவத்தன்மையை உத்தரவாதம் செய்வதற்காக இரண்டாயிரம் (2000) கோடி யூரோ ஒதுக்கப்பட்டுள்ளது. சகல சேமிப்புக் கணக்குகளும் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது.
.
10. சுவிற்சலாந்து: வங்கிகளின் ஒன்றியம் எந்த ஒரு வங்கியும் வங்குறோத்து நிலை அடைவதைத் தடுக்கப் போவதாக உறுதி கூறியுள்ளது.
.
11. இத்தாலி: வீழ்ச்சியுறும் வங்களுக்கு நிதி வழங்குவதற்காக நாலாயிரம் கோடி (4000,00,00,000) யூரோவை திறைசேரி உண்டியல் மூலம் ஏற்பாடு செய்துள்ளது. ஒரு லட்சத்து மூவாயிரம் (103000) யூரோ வரை சேமிப்பு கணக்குகளுக்கு உத்தரவாதம் செய்துள்ளது.
.
12. சவுதி அரேபியா: மூவாயிரத்து தொளாயிரத்து எழுபது கோடி (3970,00,00,000) டொலர்கள் வங்கிகளுக்கு உதவுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடத்தின் பின் வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது.
.
13. கனடா: வங்கிகளிடமிருந்து காப்புறுதிசெய்யப்பட்ட ஈடுகள் இரண்டாயிரத்து ஐந்நூறு கோடி (2500,00,00,000) கனேடிய டொலர்களுக்கு கொள்வனவு செய்யத் திட்டமிடப்படுள்ளது.
.
14. இந்தியா: இந்திய ரூபாய் என்றுமில்லாதவாறு சந்தையில் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ஆயிரத்து இருநூற்றி இருபது கோடி (1220,00,00,000) டொலர்கள் சந்தைக்குள் விடப்பட்டுள்ளது.
.
15. அவுஸ்திரேலியா: நுகர்வோர் நம்பிக்கையைத் தூண்டும் நோக்கில் அவசர நிதியாக ஆயிரத்து நாற்பது (1040,00,00,000) கோடி அவுஸ்திரேலிய டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. வங்கிகள் அனைத்திலுமுள்ள வைப்புத் தொகையை அடுத்த மூன்று வருடங்களுக்கு உத்தரவாதம் செய்துள்ளது. இது அறுபதாயிரம் கோடி (60,000,00,00,000) இலிருந்து எழுபதினாயிரம் கோடி (70,000,00,00,000) அவுஸ்ரேலிய டொலர்களாக இருக்குமெனக் கணிப்பிடப் பட்டுள்ளது.
.
16 நோர்வே: ஈட்டுக்கடன் மீட்புக்கென நாலாயிரத்து நூறு கோடி (4100,00,00,000) யூரோ ஒதுக்கப் பட்டுள்ளது.
.
17. ஒஸ்ற்ரியா: கடன்களுக்கு உத்தரவாதமாக பத்தாயிரம் கோடி (1000,00,00,000) யூரோ ஒதுக்கப் பட்டுள்ளது.


இவ்வாறு வங்கி மூலதனங்களைக் காப்பாற்ற அரசாங்கங்கள் வழங்கியுள்ள பெரும் தொகைப் பணம் மக்களுடைய வரிப் பணமேயாகும். மேலும் இத் தொகை வழங்கல்கள் முதலாளிகளைக் காப்பாற்றுவதற்கே ஆகும். இதனால் பாதிக்கப் படுபவர்கள் உழைப்பாளர்களும் நடுத்தர வர்க்க மக்களுமாகவே இருப்பர். சிறிய மீன்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை பெரும் திமிங்கிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் பொருளாதாரக் கொள்கையாகும்.