Sat05182013

Last update08:07:22 PM

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

சிங்கள இராணுவம் பெண்களை நிர்வாணப்படுத்தி குதறுவதை, மூடிமறைக்கும் புலித் தேசியம்

  • PDF

90 செக்கனே கொண்ட இந்த ஒளிநாடாவை, புலித்தேசியம் ஏன் மூடிமறைக்கின்றது? மகிந்த சிந்தனையும் புலியிசமும் ஏன் இதில் ஒன்றாக கூடி நிற்கின்றது. இதை அவர்கள் மூடிமறைக்க, ஒரேயொரு காரணம் தான் உண்டு. இதை நாமே முதலில் வெளியிட்டோம் என்பதும், மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு இணையத்தில் இது வெளியாகியதுதான் காரணம்.

இந்த இணையம் மக்களுக்கு தெரியக்கூடாது என்ற அக்கறையும் கரிசனையும், இதை மூடிமறைக்கவும் மகிந்தவுடன் இதில் கூடி நிற்கவும் தயாராக உள்ளதையே இது அம்பலமாக்கியுள்ளது. தமிழ் மக்களுக்கு ஒரு ஆதாரபூர்வமான விடையத்தை மறைக்கவும், அந்தக் குற்றத்தை மூடிமறைக்கவும் புலியிசம் பின் நிற்கவில்லை.

 

 

இந்தக் காட்சி வெளிப்படுத்துவது, சர்வதேச குற்றங்களுக்கு நிகரான போர் குற்றத்தை, இறந்த பெண்களை மேலும் பாலியல் ரீதியாக குதறும் காட்டுமிராண்டித்தனத்தை. ஆனால் இதை மூடிமறைக்க முனைவதன் பின்னுள்ள அரசியல்தான், தமிழ் இனத்தின் தோல்விக்கான சமூக அடிப்படையாகும். 

 

மகிந்த சிந்தனை தமிழ் இனத்தை எப்படி வேட்டையாடினாலும், புலியிசம் அது தமக்கு சார்பாக இருந்தால் மட்டும் தான் விளம்பரம் செய்து, அதற்காக கூலிக்கு மாரடிக்கும். அவை மக்களுக்கு சார்பாக இருந்தால், எதை மகிந்த சிந்தனை செய்கின்றதோ அந்த எல்லைக்குள் அதை மூடிமறைக்கும்.

 

விடுதலைப் புலிகளைச் சேர்ந்ததாக நம்பப்படும், இறந்த இரு பெண்களின் உடல்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, அதை ரசித்து கொண்டாடும் மகிந்த சிதனையிலான ஒளிக் காட்சியை நாம் வெளியிட்டது குற்றமா!? இதை தமிழ் மக்கள் முன் வைத்தது தவறா!? நடந்த விடையத்தை தெரிந்தும் அதை இருட்டடிப்பு செய்வது தான், முதல் குற்றம்.

 

பேரினவாதத்;தின் வெற்றிகளாக கொக்கரித்து கொண்டாடும் கொண்டாட்டங்களில், இறந்த பெண்களை நிர்வாணப்படுத்தி உடலை ரசித்து கொக்கரிப்பதும் அடங்கும். இதுவின்றி பேரினவாதத்தின் வெற்றி தனித்துவமாக அடையப் பெறுவதில்லை. பெண்களின் உடல் மேல் கூட, அரசியலும், இராணுவ வெற்றிகளும் பெறப்படுகின்றது. இதன் மூலம் யுத்தம் செய்யும் மனநிலை உயர்த்தப்படுகின்றது. இதையெல்லாம் தான், தம் சுயநலத்தடன் இன்று புலித்தேசியம் மூடிமறைத்துள்ளது. 

 

இந்த ஒளிக் காட்சி மேலான மகிந்த சிந்தனையின் போர்வெறியும், அதன் சொந்த முகமும் இதில் காட்சிப் படமாகின்றது. ஒருபுறம் குண்டை சுட்டுக் கொண்டே, புலியை கொல் என்ற கூச்சலுடன் பெண்ணின் உடல் நிர்வாணப்படுத்தப்பட்டு, வக்கிரமாகவே ரசிக்கப்படுகின்றது. இந்த 90 செக்கன் காட்சியின் ஊடாக, அதன் வக்கிரத்தை இனம் காணமுடியும்;. இதன் பின்னால் அந்த பெண் பிணத்தைக் கூட புணர்ந்து இருக்கமாட்டார்கள் என்று சொல்ல, எந்த தார்மீக அடிப்படையும் இதன் கிடையாது. யுத்தம் இப்படித்தான், இதற்கூடாகத்தான் செய்யப்படுகின்றது.

 

ஆணாதிக்க இராணுவத்தின் வக்கிரம், தமிழ் பெண் என்றால் எப்படியும் உடலை அணுக முடியும் என்ற சிங்கள மேலாண்மை, பெண்கள் என்றால் உடல் ஊடாகவும் யுத்தம் செய்ய முடியும் என்;பதை, இந்த 90 செக்கன் ஒளி நாடா காட்சிப்படுத்தி இருக்கின்றது.

 

இறந்த பெண்களின் உடலைக் கூட பாலியல் ரசனையுடன் மேயும் பேரினவாத இராணுவம், உயிருடன் கைது செய்யும் பெண்களை என்ன செய்வார்கள் என்பதை, இந்தக் காட்சி மனித விரோத நடத்தைகளுடனேயே எடுத்துக் காட்டுகின்றது.

 

இது மிக முக்கியமான ஆவணம். யுத்தத்தின் பின்னணியில் எத்தனையோ பெண்களின் நிர்வாண புகைப்படங்கள், அனாமதேயமாக உலாவுவது பலர் கூற அறிந்துள்ளோம். ஆனால் அதை நாம் ஆதாரமாக பெற முடியவில்லை. அப்படி அதைப் பெற்றாலும், அவை யுத்த சூழல் சார்ந்தாக நிறுவப்படுவது கடினமானது. இந்திய ஆக்கிரப்புக் காலத்தில் எனது நெருங்கிய உறவுகாரப் பெண் முதல் எனது நண்பனின் மனைவி வரை கற்பழிக்கப்பட்டவர்கள்.  அவர்கள் இந்த அநீதிக்கு எதிராக, நீதி கோரி செல்லவில்லை. ஏனென்றால் அநீதி தான் அங்கு நீதியாக இருந்தது. பொதுவாக தமிழ் பெண்கள் சந்திக்கும் நெருக்கடிகள்

 

1.நீதி கோரக் கூடிய சூழல் மறுக்கப்பட்டு இருந்தது.


2.நீதி கோரினால், அதை நிறுவ ஆதாரம் கேட்கும் வக்கிரம்


3.நீதி கோரி அதை நிறுவினாலும், வாழ்க்கை பூராவும் பெண் என்பதால் தமிழ் சமூகத்தால் நீதி மறுக்கப்பட்டு வாழவேண்டிய அவலம்.

 

இப்படித்தான் பாதிக்கப்பட்ட எம் பெண்களின் எதார்த்தம் உள்ளது. இந்த நிலையில் இந்த ஆவணம் வெளிவந்த பின், சில அதி புத்திசாலிகள் இது எப்படி கிடைத்தது என்பதை ஆராய்வதில் தான் அக்கறை காட்டினர். எந்தச் சூழலில், எங்கே, எப்படி கிடைத்தது என்று எம்மிடம் துருவி அணுகியவர்கள் யாரும், இதை அம்பலப்படுத்த தயாராக இருக்கவில்லை.

 

இதை அம்பலப்படுத்தும் வகையில், நாமே இதை முதல் வெளியிட்டதுடன், அதுவும் ஒரு மக்கள் அரசியலைக் கோரும் இணையத்தில் இது வெளியாகியது தான், புலி ஊடகவியலுக்கு மாபெரும் அதிர்ச்சியாக இருந்தது. மறுபக்கத்தில் புலியெதிர்ப்பு அரசு சார்பு ஊடகங்கள், இதை மூடிமறைப்பது இயல்பானதாக இருந்தது.

 

பேரினவாதத்துக்கு எதிராக போராடுவதாக கூறிய புலி ஊடகவியல், தம் சொந்த உறுப்பினருக்கே இந்தக் கதி நிகழ்ந்த போதும், இதை மௌனமாக மூடிமறைக்கவே செய்தனர், செய்கின்றனர். இதனால் இந்த விடையத்தை மறுபிரசுரம் செய்யவும், அம்பலப்படுத்தவும் தவறியதுடன், இறுக்கமான மக்கள் விரோத நிலையை இதில் எடுத்தனர்.

 

எங்கே, எப்படி என்று ஆராய்வதும், எப்படி உங்களுக்கு கிடைத்தது என்று நோண்டுவதும் தான், இதன் மீதான புலியின் கரிசனையாகியது. மிக வெட்கக் கேடான புலித்தேசிய அரசியல்.

 

எந்தச் சூழல் என்பது, சம்பந்தப்பட்ட பெண்களின் முகத்தைக் கொண்டு தெளிவாக அடையாளம் காணக் கூடியவை தான். இவை அநேகமாக செஞ்சிலுவைச் சங்கம் கைமாற்றிய உடல்களுக்குள் வைத்து, அவர்களை அடையாளம் காணக் கூடியதாக இருக்கலாம்!  யார் அந்த பெண்கள் என்பதையும், எத்தத் திகதியில், எந்த சூழலில் இறந்தனர் என்பதையும், இலகுவாக புலிகள் இனம் காண முடியும்;. இதை அம்பலப்படுத்தி போராட விரும்பினால், இதற்கான ஆதாரமும் அடிப்படையும் வெளிப்படையானது.

 

ஆனால் இதை அம்பலப்படுத்த தயாரற்ற புலித் தேசியமும், அவர்களின் ஊடகவியலும் இது எபப்டி கிடைத்தது என்பதில் தான் அக்கறை காட்டினர்.  

 

எத்தனையோ செய்திகளை ஆதாரமற்றும், கற்பனையாகவும் புனைந்து செய்தி வெளியிடுபவர்கள், இந்த விடையத்தை மூடிமறைப்பதில் மகிந்தவின் சிந்தனைக்கு  நிகராக இருந்தது இன்று வெட்கப்படும் வகையில் வெளிபட்டுள்ளது.

 

தமிழ் மக்களில் அக்கறையுள்ளதாக நடிக்கும் இவர்கள், இதை ஒரு செய்தியாக கூட கொண்டு வரவில்லை. எம் இணையம் மக்களைப்பற்றி பேசுவதால், அதை மக்களுக்கு தெரியப்படுத்தக் கூடாது என்ற மனித விரோத அக்கறை, இந்த காட்டுமிராண்டிச் செயலை மூடிமறைக்க உதவியுள்ளது. தமிழ் இனத்தின் வெட்கக்கேடான, ஆனால் அதை தின்று செரிக்கும் கூட்டத்தின் தயவில், இப்படியும் தமிழினம் அவமானப்பட்டு கிடப்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.

 

இன்று தமிழினம் ஏன் என்று கேட்பாரின்றி அழிக்கப்படுகின்றது என்றால், இந்த விடையத்தை புலித்தேசியம் அணுகிவரும் வடிவங்களின் ஊடாகவும் நாம் மறுபடியும் காணமுடியும்.

 

பி.இரயாகரன்
28.12.2008  

Last Updated on Saturday, 13 June 2009 07:07

Comments  

 
#2 ravana 2009-06-13 16:19
you are very talanted,you write so much article some of them I disagree but I don`t wanna commonce about that because I like to read diffrent point of view.
for me I don`t like to put my sister`s naked picture in public.but if you are sending to official places(UN,AMNES TY,........)it`s ok.Hope you are understand.I WISH YOU ALL THE BEST.Hope your writing help our community.I don`t know that much about our internal problem.but I beleve our people should have freedom.I respect whoever fall for others (maveerer).I don`t care wich organization or liberation.If they stand for our people I salute them.Save the THAMIL.Good luck.If you think I`m wrong sorry.
Quote
 
 
#1 abc 2009-06-13 14:32
you are the culprit who seeks public attention. you are on idiot
Quote
 

Add comment


Security code
Refresh