Tue03192019

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் NIA பயங்கரவாதிகளை கட்டுப்படுத்துமா?!!!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் NIA பயங்கரவாதிகளை கட்டுப்படுத்துமா?!!!

  • PDF

ன்னாடா அதிசயம், இடதுசாரி அரசியல் பேசுபவன் NIA வீரியம் கம்மி என்று RSS குரலில் கூவுகிறானே என்று யோசிப்பவர்கள் மேலும் படிக்குமாறு வேண்டுகிறேன்.

 

இந்த சட்டத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்று அதி இடது சக்திகளை முடக்குவது என்பதும் ஆகும் என்பது இங்கு கவனத்தில் கொள்ளத் தக்கது. இந்த சட்டம் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு என்று பெரும்பான்மை மக்கள் நம்ப வைக்கப்  படுகிறார்கள். இவர்கள் குறிப்பிடும் பயங்கரவாதிகள் உயிருக்கே அஞ்சாத போது இந்த சட்டத்திற்க்கு அஞ்சியா பின் வாங்க போகிறார்கள். உண்மையில் இந்தியாவில் இருக்கும் கொஞ்ச நஞ்ச ஜனநாயக உரிமைகளை பறிப்பதுதான் இந்த சட்டத்தின் நோக்கம் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இவர்கள் சொல்லுவது போலவே இந்த சட்டத்தின் நோக்கம் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதுதான் எனில் உண்மையான பல பயங்கரவாத சக்திகளை இந்த சட்டம் மோந்து கூட பார்க்காது.
1984லில் போபாலில் இருந்த யூனியன் கார்பைடு என்ற அமெரிக்க உளவு கம்பேனி இங்கு நடத்திய ரசாயன ஆயுத பரிசோதனையின் அங்கமாக கசிய விடப்பட்ட விசவாயு தாக்கி பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். இந்த பயங்கரவாதத்தை நிகழ்த்திய கம்பேனி நிர்வாகிகள் அனைவரையும் பத்திரமாக அமெரிககாவிற்கு அனுப்பி வைத்தது இந்திய அரசு. இப்படிப்பட்ட பயங்கரவாதிகளை தண்டிக்க கோரும் வழக்கு சம்பிரதாயப் பூர்வமாக நீதிமன்றத்தில் தூங்குகிறது. சேது பால பிரச்சினை அதனையொட்டி கருணாநிதியின் வேலை நிறுத்த போராட்ட குறித்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு பார்ப்பன-ஏகாதிபத்திய பிரச்சினைகளுக்கும், மக்களின் போராட்ட உரிமைகளை பறிக்கும் பிரச்சினைகளுக்கும் ஞாயிற்று கிழமை கூட கடையை திறந்து வைத்து வழக்கு நடத்தி வேக வேகமாக முடிக்கும் இந்திய நீதிமன்றம் பாபர் மசுதி இடிப்பு வழக்கு, காவெரி பிரச்சினையில் கர்நாடகாவின் திமிர்த்தனம், போபால் விசவாயு வழக்கு உள்ளிட்ட மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சினைகளில் அதிக பட்ச மௌனத்தையே வெளிப்படுத்துகிறார்கள்.
இன்று வரை போபால் மக்களுக்கு நிவாரணமோ அல்லது அந்த தொழில்சாலை இருந்த பகுதியின் நிலம், நீர், காற்றை மிக மோசமாக பாதித்து வரும் ரசாயன கழிவுகளை அகற்றவோ அந்த கம்பேனியினரை நிர்பந்தித்து இந்திய அரசு ஒரு மசிரைக் கூட பிடுங்கி போட்டதில்லை என்பது ஒரு பக்கம் இருக்க, இதே போபால் யூனியன் கார்பைடு கம்பேனி டௌ(Dow) கெமிக்கல்ஸ் என்ற பெயரில் இந்தியாவுக்குள் மீண்டும் வருவதற்கு இந்திய ஆளும் கும்பல் எல்லாரும் வரிந்து கட்டி கொண்டு சேவகம் செய்கிறார்கள்.
மன்மோகன் சிங் ஒன்னத்துக்கும் உதவாத அடையாளப் பூர்வமான போபால் விசவாயு வழக்கைக் கூட வாபாஸ் வாங்க நடவடிக்கை எடுக்கிறார், பாஜக கட்சியோ தனது கட்சி நிதியை அதிகப்படியாக முன்னாள் யூனியன் கார்பைடு, இன்னாள் டௌ கெமிக்கல்ஸிடம் வாங்கி, வாங்கிய கூலிக்கு ஒரு படி மேலே சேவகம் செய்கிறது. எல்லை தாண்டி பயங்கரவாதம் செய்த டௌ கெமிக்கல்ஸ் கும்பலை ஒப்படைக்கக் கோரி அமெரிக்கா மீது போர் தொடுக்க கோரிக்கை விடவில்லை பாஜக, மாறாக டௌ கெமிக்கல்ஸின் இரண்டு செருப்புகளில் ஒன்றாக சேவகம் செய்கிறது. யூனியன் கார்பைடு விட்டுச் சென்ற கழிவுகளை தூக்கி சுமந்து சுத்தம் செய்ய டாடா கம்பேனி முன் வருகிறது. உழைக்கும் மக்களின் பணத்தில் வயிறு வளர்த்த CPMவோ டௌ கெமிக்கல்ஸிடம் கூலி வாங்கமாலேயே அவனுக்கு தேவையான நிலங்களை விவசாயிகளிடமிருந்து துப்பாக்கி முனையில்மிரட்டி பறித்துத் தருகிறது.
தாஜ் ஹோட்டலில் குண்டு வெடித்தவுடன் ஏதோ ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் ஆபத்து என்று கத்தி கதறி, இந்திய ஆளும் கும்பலும், ஊடகங்களும் தமது மக்கள் விரோத தன்மையை வெட்கமின்றி விளம்பரம் செய்தனர் என்றால், போபால் பிரச்சினையில் கள்ள மௌனம் சாதிப்பதன் மூலமும், போபால் பயங்கரவாதிகளுடன் கூட்டு களவானித்தனம் செய்வதன் மூலமாகவும் இந்த அரசு யாருக்கானது, இந்த அரசாங்கம் யாருக்கானது என்பதை நமக்கு உணர்த்துகிறார்கள். மார்க்ஸ் சரியாகத்தான் சொன்னார் 'முதலாளித்துவ அரசு என்பது முதலாளிகளின் பொது விவகாரங்களை கையாள்வதற்கான ஒரு அமைப்புதானேயன்றி அது மக்களுக்கானது அல்ல' என்று.
இந்த டௌ கெமிக்கல்ஸ் இந்தியாவில் தற்போது மாகாராஸ்டிராவில் பூச்சி கொல்லி மருந்து தாயாரிக்கிறது. மக்களை கொன்ற அனுபவத்தில் பூச்சிகளை கொல்லும் வியாபாரத்தில் இறங்கியுள்ளது போலும். மேலும் ஊனமுற்றவர்களுக்கு செயற்கை கால் வாங்குவதற்கு சில அமைப்புகளுக்கு சமீபத்தில் ஒரு கோடி வரை நிதி கொடுத்துள்ளது. என்னடா அதிசயம் என்று யோசிப்பவர்களுக்கு இது மைக்ரோசாப்ட் கம்பேனி செய்யும் நிதி உதவி எனும் தந்திரம் போன்றதுதான். அதாவது இந்த நிதியின் மூலம் டௌ கெமிக்கல்ஸ் தயாரிக்கும் செயற்கை கால்களைத்தான் அவர்கள் வாங்க வேண்டுமாம். எப்படி நடுத்தர வர்க்கத்துக்கு அதிக சம்பளம்கொடுத்து அவர்களை தனது சந்தையாகவும், சமூக அடிப்படையாகவும் முதலாளித்துவம் உபயோகப்படுத்திக் கொள்கிறது அப்படிப்பட்டதொரு தந்திரம் இது. இந்த செயற்கை கால்கள் எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்டதுடன், அது எரிந்தால் விசவாயு வெளிவரும் என்றும் சொல்லப்படுகிறது. செத்தும் கெடுத்தான் என்று இதைத்தான் சொல்வார்கள் போலும். (ஆதாரம்: தினத் தந்தி 18-டிசம்பர்-2008, பக்கம் 8, சென்னை பதிப்பு)
போபால் விசவாயு பயங்கரவாதிகளின் தாக்குதல் அதனால் கொல்லப்பட்டவர்களுடன் நின்றுவிடவில்லை, பரம்பரை பரம்பரையாக 24 ஆண்டுகள் கழித்தும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இரண்டாம் தலைமுறை குழந்தைகள் கூட பல்வேறு உடல், மனக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்கு பிறகும் 75 ஆயிரம் குழந்தைகள் இந்த விசவாயுவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இப்படிப்பட்ட பயங்கரவாதிகளை NIA போன்ற ஆளும் வர்க்கத்தை பாதுகாக்கும் சட்டங்கள் தண்டிக்காது, கண்டுகொள்ளாது. இப்படிப்பட்ட பயங்கரவாதிகளை எதிர்த்து மக்கள் போராடுவதை தடுப்பதே இந்த NIA போன்ற சட்டங்களின் பிரதான நோக்கமாகும். என்றைக்கு இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் NIAன் இலக்காக மாறுகிறார்களோ அன்றுதான் உண்மையான பயங்கரவாதிகள் தண்டிக்கப்படுவார்கள், அப்படிப்பட்டதொரு தண்டனைகளுக்கு சட்டங்களின் சாத்வீக முகமூடிகளின் தேவையிருக்காது.
அசுரன்

 


Last Updated on Friday, 19 December 2008 20:30