வழக்கம் போல  அலுவலகத்துக்கு ரயிலில் பயணித்துக்கொண்டு இருந்தேன்.என்னருகில் ஒரு நபர் வந்து அமர்ந்தார்.”நீங்க எங்க வேலை செய்யறிங்க”.நான் விளக்கினேன்.அவர்” இப்படி தினமும் இத்தன பேர வேலயவிட்டு தூக்கறாஙளே என ஆரம்பித்தவர்.அமெரிக்க சந்தை சரிவு ,ஒரு சங்கம் அமைத்தால்…..

 என இழுத்துக்கொண்டே போக நானிறங வேண்டிய இடம் வந்தது.அலுவகத்துக்கு நடக்க ஆரம்பித்தேன்.மனதில் பல யோசனைகள்.போன மாத்தம் தான் நோட்டிஸ் போர்டில் ஒட்டினார்கள்.இனி யாருக்கும் வாகன வசதி கிடையாது(கேப்) .நை ஷிப்ட் உட்பட பணிபுரியும்  யாரும் தங்கள் சொந்த பாதுகாப்பிலேயே வரவேண்டும்.

 

B.P.0 மற்றும் இ.டிக்கு நிறைய வித்யாசமிருக்கின்றது.இங்கு ஒரு நாளில் ஏத்தனை ஜாப் செய்கின்றோம் என்பதுதான் கணக்கு..என் மானேஜர் சொன்னர்” நீங்க 20 மணி நேரம் கூட வேல செய்யுங்க அதப்பத்தி யாரும் கவலைப்படமாட்டங்க.குறைந்த நேரத்தில் அதிக ஜாப் செய்ய பழகிகோங்க.”

 

நிறைய ஜாப் வந்துவிட்டதெனில் எல்லவற்றையும் முத்துவிட்டு தான் செல்ல வேன்டும்.6 மணிக்கு வேல முடியும் நேரதில் 3 மணிநேரத்துக்கு ஜாப் போட்டுவிட்டு டீம் லீடர்கள் எஸ்கேப் ஆகிவிடுவார்கள். மாதாம் ஒரு முறை மீட்டிங் ,கடந்த மாத மேடிங்-ல் மானேஜெர்கள் சொன்னர்கள் ” அப்புடித்தான் தினமும் 2 (அ) 3 மணிநேரம் அதிக நேரம் வேலை செஞுதான் ஆகணு. தேவையின்னா இங்க இரு இல்லேன்னா போஇக்கிட்டே இரு .உனக்கு  டர்ற 10000 சம்பலத்துக்கு 5000 க்கு ரெண்டுபேர் தயாரா இருபாங்க.இன்னொரு ஊழியர் சொன்னர்” சார் தினமும் இங்கயிருந்து கிளம்பவே 9 மணி ஆகுது  வாரத்துக்கு ஒரு மறைதான் குழந்தைகளை பார்க்கமுடியுது.எம் பையன் என்கிட்ட சரியாக்கூட பேச மாட்டென்கிறான்.” அதுக்கு என்ன பண்ரது சேகர் வேலைன்னா அப்படித்தான் இருக்கும்.” சொல்லிவிட்டு போனார்கள்.

 

அலுவலகத்துக்குள் சென்றேன்.எல்லோரும் எதோ ஒரு விசயத்தை பேசிக்கொண்டிருப்பதுபோல தோன்றியது.கம்பூட்டரை போட்டு விட்டு என்னவென்று விசாரித்தேன்.நேற்று நைட் ஷிப்ட் வந்தவ்ர்களிடம் ஓவர் டைம் பார்க்கச்சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கின்றார்கள்.காலையில் 6 மணிக்கு எல்லோரும் சிஸ்டத்தை ஆப் செய்து விட்டு கிளம்பிவிட்டார்கள்.எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது.எங்கள் கம்பனி வரலாறிலேயே முதல ஸ்ட்ரைக்

 

மதிய உணவு இடைவேலைக்கு முன் அறிவிக்கப்பட்டது.இன்று மாலை அவசர மீட்டிங் என்று.இடைவேளை போது பலரும் பேசினார்கள்”என்ன கேக்கட்டும்.நான் பேசுர பேச்சுல  நீ யாருன்னு என்னை தெரிஞ்சுக்குவீங்க” மீட்டிங் அறையில் வழக்கம் போல சவால் விட்டவர்கள் பேசவில்லை.மீண்டு தலைமையிடமிருந்து மிரட்டல்.காலையில் தூக்கியிருந்த காலர் அதற்குள் தொங்கிவிட்டது.

 

அந்த வாரம் முடிந்து அடுத வாரம்னைட் ஷிப்ட்-ல் நான்.ஒருவர் சொன்னார் இன்னைக்கு கண்டிப்பா ஓ.ட்.பார்க்க சொன்னா கிளம்பிவிடலாம்.எனக்கு மணி 5 ஆகும் போதே சந்தோசம்.மணிமுள் மீது திட்டு விழுந்து கொண்டிருந்தது. மணி 6 ஆனது வேலையோ இன்னும் 2 மணி நேரத்துக்கு அதிகரிக்கப்பட்டது.யாரும் கிளம்பவேயில்லை,கரெக்ட்டா 6 மணிக்கு கிளம்பிடுவாங்களா என்ன ,மணியோ ஆறரை தாண்டியது.

 

சொன்னவரிடம் கேட்டேன் ” என்ன கிளம்பலீயா”எவனும் வரமாட்டான்”.என்றார்.


அவ்வரம் முழுக்க இடைவேளையில் நாயகனானவர்கள்.ஓ.டி போது மவுனமானார்கள்.

 

அடுத்த வாரமும் வந்தது .எச்.ஆர்.வந்ததார் ” உங்களுக்கு நொர்க் லொஅட் கொஞ்சம் அதிகம் தான் அதனால தான்……” புதுசா ஆள் எடுக்கப்போறாங்களா இது நான்”. அவர் தொடர்ந்தார்.அதனால  எல்லாரும் இந்த வாரம்  எக்ஸ்கர்சன் போகப்போறோம்.வெஜ் ஆர் நான் வெஜ் உங்க டி.எல்.கிட்ட சொல்லுங்க

 

ந்னன் எனது டீம்-ல் உள்ளவர்களிடமும் ,பக்கத்து டீம்- உள்ளவ்ர்களிடமு இப்படி சொன்னேன்.” எதுக்கு டூர்.ஓ.டிக்கு பணம் இல்லையே அதுக்கா,கேப் கட்பணிணானெ  அதுக்கா,மனுசன்னா சொரணை வேன்டும் நாய்க்கு பொறை நமக்கு டூரா?.தனிதனியாய் பேசினேன்.சுமார் 20 பேர் போகமாட்டேன் என்றார்கள் .அடுத்த நாள்  லீடர் கேட்டார் என்னப்பா பேர் சொல்லவேயில்லை” நான் வரலை சார். பரிட்சை இருக்கு” பொய் சொன்னேன். அருகிலிருந்த்வன் கேட்டான் சார் தண்ணீ இருக்கா? நாட் அலவுட் என்ற படியே கண்ணடித்தார்.

 

இல்லை நான் போக மாட்டேன் என்றார்கள் பேரை கொடுத்துவிட்டு.சண்டே வந்து விட்டு போனது.எல்லோருக்கும் மெயில் வந்தது.னேத்து நடந்த டூர் போட்டோ,வீடியோ மெயின் சர்வரில் உள்ளது என்றார்கள்.கண்டிப்பாய் 10 பேராவது போயிருக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அந்த வீடியோவை பார்த்தேன்.அதில் ஆண்,பெண் பேதமில்லாமில் ஆடிக்கொண்டிருந்தார்கள்.ரொம்ப சாதுவாய் ஒரு பெண் இருக்கும்.அதுகூட குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தது.மப்பில் பலர் ஆடிக்கொண்டிருந்தார்கள்.ஸ்டிரைக்-இ நடத்தினேன் என்றாரே அவர் உட்பட..எனக்கு உடம்பெல்லாம் வெப்பாம் ஏறியது.அந்த சாதுப்பெண் என்னிடம் கேட்டார்”நீங்க வரலை?” நான் பதிலேதும் கூறாமல் அமைதியாயிருந்தேன்.

 

எனக்கு மாபெரும் உண்மை விளங்கியது.இங்கு பலரும் தன்னை நுகர் பொருளாக்கிகொள்ளவே விரும்புகிறார்கள்.இடுப்புக்கு கீழே பேண்ட்,தலையை சிரைத்துகொள்வது என தன்னால் முயன்றதனைத்தையும் செய்கிறார்கள்..அதன் மூலமே தன் இருப்பை உயர்த்திகொள்கிறார்கள்.

 

ஒவ்வொரு நாளும் செய்தி வருகிறதே.2000,1000 என பி.பீ.ஓ-ல் வேலையை விட்டு தூக்கப்படுவதாக.ஏன் அவர்கள் இணைவதில்லை.இணையவேண்டுமெனில் ஐக்கியம் தேவை ,ஒற்றுமைஇப்படி எச்சில் இலைக்கு அலைந்து கோண்டிருந்தால் கிடைக்காது.உரிமைகலை மீட்டெடுக்க


சங்கம் தேவை.அது கண்டிப்பாய் நாக்கை தொங்கப்போட்டு கொண்டிருப்பவனால் முடியாது.


நாங்கள் நுகர் பொருளாய் இருக்கும் வரை எங்கள் வாழ்வு சவக்குழிக்கானதாகவேயிருக்கும்.

http://kalagam.wordpress.com/2008/11/23/bp0அடிமைc0m-பகுதி2அடிமைத்தனம/