புலிகளின் நிதர்சனம் டொட் கொம்மின் அசிங்கம்

எனது கட்டுரை ஒன்றுக்கு நடந்த கதை, நான் எழுதிய மற்றொரு கட்டுரையின் உதாரணமாகிவிடுகின்றது. 28.09.2007 அன்று நிதர்சனம் டொட் கொம் எனது கட்டுரை ஒன்றை எடுத்து பிரசுரித்துள்ளது. அதன் பின்னணியைப் பார்ப்போம்.

 

 

1. கட்டுரையில் புலிக்கு எதிரான பகுதி நீக்கப்பட்டு, அதை தமக்கு மட்டும் சார்பாக மாற்றி பிரசுரமாகியுள்ளது. பார்க்க : http://www.nitharsanam.com/?art=24465

 

2. எங்கே இந்தக் கட்டுரையை எடுத்தோம் என்ற மூலம் இன்றி அது நிதர்சனத்துக்காக எழுதப்பட்ட கட்டுரை என்பதான வகையில் பிரசுரமாகியுள்ளது. ஏதோ தமக்கு நான் எழுதியதாக காட்டுகின்ற மாயையை அவர்கள் உருவாக்கியுள்ளனர். பார்க்க எனது கட்டுரையை : http://www.tamilcircle.net/unicode/general_unicode/214_300/244_general_unicode.html

 

இப்படித் தான் புலிகளின் ஊடகவியல் இயங்குகின்றது. புலிக்கு எதிரான பகுதியை நீக்க வேண்டும் என்று நீங்கள் கருதினால், அவர்கள் இரண்டு விடையத்தை நேர்மையாகச் செய்திருக்க முடியும்.

 

1. புலிகள் சுயவிமர்சனம் செய்து, நடைமுறை ரீதியாக தம்மை மாற்றிக்கொண்டு இதை இல்லாததாக்குவது.

 

2. இல்லையேல் புலி பற்றிய எமது விமர்சனம் தவறு என்றால், அதை விமர்சிப்பது. அந்த சுதந்திரம் உங்களிடம் உண்டு.

 

வெட்டியும் ஒட்டியும் அதை தமக்கு சார்பாக திரிப்பது, புலிகள் பற்றிய எமது விமர்சனத்தை தொடர்ச்சியாக உறுதி செய்து நிற்கின்றது.

 

எனது பெயரில் வெளி வந்த, எமது இணையத்தில் வந்த கட்டுரையில், சில பகுதிகளை நீக்கி சேர்த்து தமக்கு சார்பாக மாற்றுவது தான் புலி ஊடகவியலாகின்றது. இது போல் புலியெதிர்ப்பு தேனீயும் செய்துள்ளது. நான் எழுதிய முஸ்லீம் மக்கள் பற்றிய எனது கட்டுரையை அவர்கள் பிரசுரித்த போது, வேறு ஒருவரின் பெயரில் அதை வெளியிட்டது.

 

இப்படி தமிழ் மக்களுக்கு உண்மைகளைச் சொல்லும் எம்மை மறைத்தும் திரித்தும் தான், தமது மக்கள் விரோதத் தன்மையைப் பலப்படுத்திக் கொள்கின்றனர். இப்படி போக்கிரி ஊடகவியல் மூலம், மக்களுக்கு உண்மைக்கு பதில் பொய்யைப் புனைந்து விடுகின்றனர்.

 

பி.இரயாகரன்
30.09.2007