மாநில அரசு எதை விரும்பியதோ அதை போலீஸ் செய்தது

ஹரீந்தர் பவேஜாவிடம் முன்னாள் கூடுதல் DGP (நுண்ணறிவு)RB ஸ்ரீகுமார் பேசி கொண்டிருக்கும் போது, "கலவரகாரர்களுடைய பார்வையில் அரசாங்கம், அவர்கள் பக்கமே இருப்பதாகக் கருதினார்கள்" என ஒப்புதல் அளித்திருந்தார்.

நீங்கள் கூடுதல் DGP (நுண்ணறிவு)ஆக இருந்த போது, சபர்கந்தாவிலிருந்து ஆயுதங்கள் கடத்தப்பட்டன என்றப் புகாரை பதிவு செய்தீர்களா?

2002ல், முஸ்லிம்கள் வாழும் சில பகுதிகளிலிருந்து ஆயுதங்கள் எடுக்கப்பட்டன. எங்களுடைய தகவல் என்னவென்றால், விஹெச்பியை சேர்ந்த நபர் ஒருவருக்கு சொந்தமான, வட்காமிலுள்ள இரும்பு பட்டறையில் தான் இந்த ஆயுதங்கள் தாயாரிக்கப்பட்டன. நான் எழுத்து மூலமாகவே அறிக்கை அனுப்பினேன். மேலும் அப்போதைய அஹ்மதாபாத் போலீஸ் தலைவரான KR கவ்சிக்கிடமும் இது குறித்துத் தகவல் சொன்னேன். அவர்கள் சோதனை நடத்திய போது ஆயுதங்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. காரணம், சோதனை நடத்தச் சென்றவர்களே, சோதனை நடத்த வரும் செய்தியைக் கசிய விட்டதால், அங்கே சோதனையின் போது ஒன்றும் கைபற்றப்பட வில்லை என்பதனை பின்னர் நான் தெரிந்து கொண்டேன். இத் தகவல்களை பத்திரிக்கைகள் அறிந்து கொண்டன. ஹிந்துஸ்தான் டைம்ஸ் முதல் பக்க செய்தியாகவே வெளியிட்டது. அவர்கள் தொடர்ந்து எனக்குத் தொந்தரவு கொடுத்தனர். அதனால் ஒரு பலனும் கிடைக்கவில்லை. அங்கு நாட்டு துப்பாக்கிகள் தாயாரிக்கப்படுவதாக வலுவாக சந்தேகிக்கப்பட்டது.

கலவரத்தின் போது இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டனவா?

இந்தத் தகவல் பின்னரே கிடைத்தது. எனக்கு எதிராக ஒரு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது, ஏனென்றால் தகவல்களைப் பரிமாறுவது நுண்ணறிவு பிரிவுக்கு வழக்கமான ஒன்றே என DGP கூறிவிட்டார்.

சோதனையிட்டவர்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டா?

(சிரிக்கிறார்) சோதனையிட்டவர்களின் செயல்பாடுகள், ஆளும்கட்சியின் அரசியல் ஆதாயத்திற்கு இசைவானதாகவே இருந்தது. காவல்துறை சிறப்பாக செயல்பட்டு சட்ட ஒழுங்கு அதன் கட்டுபாட்டுக்குள் இருப்பதாக உணர்த்தும் வகையில், ஆயுதங்கள் முஸ்லிம்களிடம் இருந்து கைப்பற்றபட்டதாக காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 15 தேதியன்று DG வன்ஜராவுக்கும், மற்றவர்களுக்கும் இந்த ஆயுதப் பறிமுதலுக்காக வெகுமதிகள் வழங்கப்பட்டது.

கலவரங்களின் போது ஆயுதங்களும், வெடிகுண்டுகளும் தங்கு தடையின்றி விநியோகிக்கப்பட்டது என்று ஏதேனும் புகாரை பதிவு செய்தீர்களா?

நானாவதி-ஷா ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட என்னுடைய முதல் பிரமாண பத்திரத்திலேயே எனது அறிக்கைகளின் பிரதிகள் இணைக்கப்பட்டுள்ளது. சூலாயுதங்கள் விநியோகம் செய்யப்பட்டதாக ஒரு தகவல் அந்த அறிக்கையிலே உள்ளது. ஏப்ரல் 2002 -ல் பதவியை ஏற்றுக் கொண்டேன். அதன் பிறகு வன்முறை வெறி கீழே இறங்கி விட்டது. FIRகள் முறையாக பதிவு செய்யபடவில்லை என்றும், அதிகமான குற்றச்சாட்டுகள் ஒன்றாக இணைக்கபட்டுள்ளது என்றும், வன்முறை கும்பலுக்குத் தலைமை தாங்கி நடத்திய விஹெச்பி தலைவர்களின் பெயர்கள் FIRகளில் விடுவிக்கப்பட்டுள்ளது போன்ற புகார்களை குறிப்பிட்டு அறிக்கை அனுப்பினேன். இது ஒரு சர்ச்சையாகிற்று. இவ்வாறு கொடுக்கப்பட்ட புகார் அறிக்கைகள் எவற்றின் மீதும், அரசாங்கம் எந்தவொரு அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அல்லது இவற்றை பற்றி எந்த மேலதிக விளக்கங்களையும் கேட்கவிலலை. அது மிகவும் தெளிவு.

நன்றி பதிவர்: இறை நேசன் http://copymannan.blogspot.com/