ஜனநாயகத்துக்கும் பேச்சாளர்கள். கேடுகெட்ட ஒரு அரசியல் விபச்சாரம். புலிக்கு மட்டுமா பேச்சாளர்கள், இல்லை, கருணா தரப்புக்கும் தான் பேச்சாளர்கள். ஒரே பாணி அதே குட்டை. இதைச் சுற்றி இரண்டுக்கும் ஒரேவிதமான கோமாளித் தொண்டர்கள். எதையும் எப்படியும் நியாயப்படுத்தும் அரசியல் எடுபிடித்தனம். இவர்களின் திடீர் ஜனநாயகமோ எதையும் எப்படியும் கொத்திக் கிளறும், அமெரிக்க வகைப்பட்ட ஜனநாயகம்.


ரீ.பீ.சீ நடத்தும் அரசியல் ஆய்வரங்கில் தான், மீண்டும் இந்த காட்சி படிமானங்களுடன் அரங்கேறியது. தமது ஜனநாயக முகம் எவ்வளவு வக்கிரம் கொண்டது என்பதை, அவர்களே தம் முகத்தைக் கீறிக் காட்டினார்கள். கருணா குழுவின் மக்கள் விரோத செயல்களை (அது மட்டும் தான் அவர்களின் அரசியல்) நியாயயப்படுத்தும் வகையில், பலவிதமான திடீர் ஜனநாயக கூக்குரல்களை ரீ.பீ.சீ யில் அரங்கேற்றினர்.


இந்தளவுக்கும் இவர்கள் வாலையாட்டி வள்ளென்று எகிறிக் குலைக்கும் கருணா குழு, மக்களைச் சார்ந்து நிற்காத ஒரு கூலிக் கும்பல். பேரினவாத சிங்கள இராணுவ நோக்கத்துக்கும், அரசியல் நோக்கத்துக்கும் துணைநிற்கும் கைக்கூலிகள். புலிகளைப் போல் அல்லாது, ஆயிரமாயிரம் மக்களை கொன்ற, கொன்று கொண்டிருக்கின்ற இராணுவத்தின் மலத்தை துடைத்தபடி, அதை நக்கும் ஒரு கூலிக் கும்பல் தான் கருணா குழு. இந்த சிங்கள பேரினவாத இராணுவம் 1971 இல் 30 ஆயிரம் சிங்கள இளைஞர்களை கொன்று குவித்தது. 1979-1980 இல் 60 ஆயிரம் சிங்கள இளைஞர்களை கொன்றொழித்த, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களைக் கொன்ற ஒரு இராணுவத்தின் எடுபிடிகளாக, கைக் கூலி குண்டர் படையாக செயல்படுவவர்கள் தான் இந்த கருணா கும்பல்.


இப்படி கொலையும், கொள்ளையுமாக திரியும் ஒரு குழுவுக்கு, ரீ.பீ.சீ என்ற புலியெதிர்ப்புக் கும்பல் ஒளிவட்டம் காட்டுகின்றது. இதற்குள் ஜனநாயக வழி பற்றிய விவாதம். மக்களுக்கு எதிராக செயல்படுவதில் மானம் கெட்டு, அரசியல் ரீதியாக மன்னிக்க முடியாதபடி இழிந்து குலைக்கின்றனர். இதையே புலிக்கு மாற்றாக, இந்த ரீ.பீ.சீ யைச் சுற்றியுள்ள புலியெதிர்ப்புக் கும்பல் முன்வைப்பது, மன்னிக்க முடியாத வரலாற்றுக் குற்றம். இந்த கும்பல்கள் தமிழ் பகுதிகளை இராணுவம் ஆக்கிரமிக்கும் போது, ஏதோ தமது வெற்றியாக இணையங்களில் கொண்டாடுவதும் வெட்கக்கேடு. இந்தக் கொண்டாட்டத்தினுடாகவே, மோதலில் அகதியாக வரும் அகதிகளுக்கு நீலக்கண்ணீர் வடித்து நிதி சேகரிக்கின்றனர். மக்களுக்கு சேவை செய்வதாக காட்டி விளம்பரம் செய்ய, அங்குள்ள இராணுவ எடுபிடிகள் அதை படம் எடுத்து இணையங்களில் போடுகின்றனர்.


இப்படி மக்களை ஏமாற்ற ஒரு எடுபிடி அரசியல் அரங்கேறுகின்றது. 18.01.2007 அன்று ரீ.பீ.சீ யில் கருத்துரைத்த நியூட்டன் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். ரீ.பீ.சீ புலி ஜனநாயக மீறலை மட்டும் அம்பலப்படுத்துவதாகவும், கருணா தரப்பு மீறல்களைப் பற்றி பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு நடந்த சில சம்பவங்களை உதாரணத்துக்கு குறிப்பிட்டார். இங்கு நியூட்டன் இக் குற்றச்சாட்டை முன்வைத்த போது, ரீ.பீ.சீயின் ஜனநாயகத்துக்கான அரசியல் என்ன என்ற கேள்வியை எழுப்பி, அந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. அந்தளவில் அவரின் சமூக அக்கறை கேள்விக்குரியதாகி நின்றது. ஆனால் அவரின் குற்றச்சாட்டின் சாரம் நியாயமானது, உண்மையானது.


இந்த நியாயமான உண்மையை கண்டு வெகுண்டு போன புலியெதிர்ப்பு கருணா கும்பலின் எடுபிடிகள், அவருக்கு எதிராக காறித் துப்பினர். விடயத்தை பலவிதமாக, பல கோணத்தில் திரித்தனர். குறித்த புளொட் நபரின் கொலை தொடர்பாக நியூட்டன் கருணா மீது குற்றம் சாட்டியதைக் குத்திக்காட்டி, அதை புளொட்டே தனது வரலாற்று ரீதியான ஒரு தொடர்சியான கொலை என்றனர். புளொட்டின் எடுபிடியாக இயங்கும் ரீ.பீ.சீ யின் மற்றொரு ஆய்வாளர் ஜெகநாதன், இதை புலிகள் இராணுவ உளவு பிரிவுக்கு பணம் கொடுத்து செய்ததாக நம்பப்படுகின்றது என்றார். இப்படி அந்தக்கொலையை ஒட்டி ஆளுக்காள், தம் நிறத்துக்கும் தோலுக்கும் ஏற்ப விளக்கம் அளித்தபடி, நியூட்டன் மீது காறித்துப்பினர்.


நன்கு அறியப்பட்ட இந்த புனைப்பெயர் பேர்வழிகள் முதல் அனைவரும், இதை அரசியல் ரீதியாக விவாதிக்க தயாரற்று, இதை புரட்டிப் போட்டபடி அவரவர் பணிக்கு இதை விபச்சாரம் செய்தனர். நியூட்டனின் விமர்சனத்தை தொடர்ந்து கருணாவை சந்தித்ததாக பீற்றிக்கொண்ட அந்த ஆய்வு அலுக்கோசு, தனது கோயில் தர்மகர்த்தா வழியில் பதிலளித்தது. இப்படி ஜனநாயகத்தை இழிவுபடுத்துவதில் பற்பல வக்கிரங்கள், அதிலும் பல ரகங்கள். ஆனால் லண்டனில் இருந்து முதன்முதலாக ரீ.பீ.சீக்கு வந்த ஒருவர், நியாயமாக இதையொட்டி சில கேள்விகளை எழுப்பினார்.


ள புலிகளுடன் கருணா இருந்த கடந்தகாலத்தில் நடந்த கொலைகளுக்கும், கருணாவுக்கும் எந்த வகையில் தொடர்பு உண்டு?, புலிகளில் நடந்த சம்பவங்கள் பற்றி கருணாவின் நிலைப்பாடுகள் என்ன?இதை அவர் ஏன் ஒரு சுயவிமர்சனமாக செய்யவில்லை என்றார். மிகவும் தெளிவான துல்லியமான கேள்வி. ரீ.பீ.சீயில் சொறி நாயாக குலைக்கும் எந்த தெருநாய்களுக்கும் மண்டையில் உறைக்கும்படியான கேள்வி.


கருணா பிரிந்து வந்தவுடன் செய்ய வேண்டிய முதல் அரசியல் பணி, கடந்த காலத்தை சுய விமர்சனமாக பார்த்தால் தான். இது தான் அவரின் அணியை, சரியான மக்கள் வழிக்கு இட்டுச் செல்லும். புலிகளில் இருந்தபோது எது எமது தவறு என்பதை தெளிவுபடுத்தி, எது சரியானது என்பதை சுட்டிக்காட்டி, எதை மக்களுக்காக செய்ய வேண்டும் என்பதை முன்வைப்பதன் மூலம், தனது அணியை அரசியல் ரீதியாக வழிநடத்தியிருக்க வேண்டும். இதைச் செய்தால் தான், பாசிச அமைப்பில் இருந்து வந்தவர்களின் குறைந்தபட்சம் முதலாவது அரசியல் முன்முயற்சியாகும். இதை செய்ய முடியாதவர்கள், செய்ய மறுப்பவர்கள், எதைக் கொண்டு தான் கடந்தகாலத்தை விமர்சிக்க முடியும். எதைத் தான் தனது அணிக்கு மாற்றாக வைக்கமுடியும். நிச்சயமாக எதுவுமில்லை. பழைய புலிப்பாணி அரசியல் தான், அவர்களின் மாற்று வழி. இவர்களால் ஒருநாளும், ஒருகணமும் ஒரு மக்கள் அரசியலைச் செய்யமுடியாது. தனிப்பட்ட அதிகார முரண்பாட்டில் பிரிந்த கருணாவுக்கு, மாற்று அரசியல் பார்வை இருந்தது கிடையாது. மாறாக எதையும் முன்வைக்க முடியாது. அந்தநிலை தான் இன்று வரை உள்ளது. இதற்கு சிலர் ஒளிவட்டம் கட்ட பார்க்கின்றனர்.


உண்மையில் மறுபடியும் புலி அரசியலையே கருணா குழு செய்கின்றது. புலிகளோ தமிழ் தேசியத்தை ஆயுத மூலம் அடைதல் என்கின்றனர். கருணா குழுவோ கிழக்கு மையவாதத்துடன், அரசின் கால்களை நக்கித் தீர்வு காண்பது என்கின்றனர். புலியை அழிக்கவே தமது தற்பாதுகாப்பு ஆயுதமும் என்று பசப்புகின்றனர். ஆனால் மக்கள் பற்றி, எந்தவித முன்முயற்சியும் கிடையாது. ஏன் கடந்த காலத்துக்கும், நிகழ்காலத்துக்கும் கூட எந்த சுயவிமர்சனமும் கிடையாது. நுணுகிப் பார்த்தால், அதே புலிப்பாணி உத்திகள்.


இலங்கை இராணுவத்தின் கூலிக் குண்டர் குழுவாகிவிட்ட கருணா கும்பலால் விமர்சனம், சுயவிமர்சனம் செய்யமுடியாது. மக்களை நேசிக்கவும், மக்களில் தங்கி நிற்கவும் முன்முயற்சி எடுக்காத யாரிடமும் இதற்கான பதிலைப் பெறமுடியாது. புலிகளில் இருந்து கருணா கும்பல், எதைத் தான் செய்யவில்லை. உங்களால் பட்டியலிட முடியுமா? குழந்தைகளை படையில் சேர்த்தல் என்ற கருணா குழுவின் வாய்வழி நிலைப்பாடு ஏகாதிபத்திய உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டது. நடைமுறை செயல்பாடு சொந்தப் புலிக் குணத்தை அடிப்படையாக கொண்டது. இதைத் தான் புலிகளும் செய்கின்றனர்.


புலிகளுக்கு இளந்திரையன் போல், கருணா குழுவிற்கு பல இளந்திரையன்கள். ரீ.பீ.சீ க்கு கருணா குழு இளந்திரையன்கள் வந்து உறுமிய போது, இவதர்களின் ஜனநாயகத்தின் முகமூடி கிழிந்து அம்பலமானது. நியூட்டனின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க முடியாது, அவரை புலிகள் பாணியிலேயே தூற்றினர்.


* கருணாவை விமர்சித்ததால் அவரை யாழ் மேலாதிக்கவாதி என்றனர். 
* கருணாவை விமர்சித்ததால் கிழக்கின் எதிரி என்றனர்.
* கருணாவை விமர்சித்ததால் இதை திட்டமிட்ட சதி என்றனர்.
* கருணாவை விமர்சித்ததால் 2003 பின் ஜனநாயகத்தை பேச வந்தவர் என்றனர்
* கருணாவை விமர்சித்ததால் அதற்கு ஆதாரங்கள் எங்கே என்றனர்.
* கருணாவை விமர்சித்ததால் நியூட்டன் கிழக்கு மக்களுக்காக எங்கே குரல் கொடுத்தவர் என்றனர்.


இந்தளவு காலமும் புலியெதிர்ப்பு அணிக்கு பக்கபலமாக நின்ற நியூட்டனின் அரசியலை ஆதரித்தவர்கள், கருணாவை விமர்சித்தவுடன் எல்லாம் தலைகீழாக மாறியது வேடிக்கைதான். வாயில் வந்தபடி அள்ளித்தூற்றினர். ஆளுக்காள் ஜனநாயகத்துக்கு புது விளக்கம் வழங்கினர். பாசிச அமைப்பில் இருந்து வந்தவர்கள், ஜனநாயக வழிக்கு திரும்ப கால அவகாசம் வேண்டும் என்றனர். சரி அவர்கள் எப்படி மாறுவார்கள் என்று நீங்கள் அவதானித்த, அந்த அரசியல் அடிப்படை தான் என்ன? யாரை ஏமாற்றி, ஜனநாயகத்தை விபச்சாரம் செய்ய முனைகின்றீர்கள். ஒரு பாசிச வழியில் இருந்து பிரிந்தவர்கள், அந்த வழியை விமர்சனம், சுயவிமர்சனம் செய்ய முடியாதவர்கள் ஜனநாயகத்தை பற்றி சிந்திக்க முடியாது. அதனால் தான் அவர்கள் பேரினவாதத்தின் கூலிக் குண்டர் படையானார்கள்.


இந்த பேரினவாத எடுபிடி கருணா மீதான விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாத கருணா எடுபிடிகள், தனிநபர் மீதான எதிர் தாக்குதலை புலிகள் பாணியில் நடத்தினர். ஜனநாயகம் பேசும் புலியெதிர்ப்புக் கும்பல், நியூட்டனை எதிர்கொண்ட விதமே ஜனநாயக விரோதமானது. இது எந்த விதத்திலும் ரீ.பீ.சீ க்கு வந்து புலம்பும் புலிக்கு குறைந்ததல்ல. அதே புலிப்பாணி. ரீ.பீ.சீ யை கருணா பிரச்சார வானொலியாக மாற்றுவது தான், அர்களின் எதிர்பார்ப்பாகும். இந்த கருணாவின் எடுபிடிகள் இந்தத் துள்ளு துள்ளும் போது, கருணா எந்த துள்ளுத் துள்ளுவார்! முதலில் நியூட்டன் பற்றிய குற்றச்சாட்டை அள்ளி தெளித்தவர்கள், கிழக்கு மக்கள் பற்றி புலம்புமுன்பே நியூட்டன் அது பற்றி தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருந்தவர். இன்று கிழக்கு பற்றிப் புலம்புபவர்கள், அரசியல் அற்ற இலக்கியம், தலித்தியம், பின்நவீனத்துவம், ஐக்கிய இலங்கை என்று அலம்பியவர்கள், காலத்துக்கும் நேரத்துக்கும் ஏற்ப சந்தர்ப்பவாதமாக புலம்பியவர்கள், இன்று கிழக்கு மையவாதமாகி (உள்ளடக்கத்தில் இது யாழ் மேலாதிக்கம் தான்) இறுதியாக கருணாவின் எடுபிடியாகி நிற்கின்றனர். நியூட்டன் உங்களைப் போல் ஜனநாயகத்தின் விரோதியாக இருக்கவில்லை.


அவரின் செயல்பாட்டை நன்கு அறிந்தவன் என்ற வகையிலும், முன்பு நான் அவருடன் நெருங்கிய செயற்பாடுகளைக் கொண்டு இருந்தவன் என்ற வகையிலும், அவர் உங்களை விட மக்களை நேசிப்பதில் மலைதான். யாழ் மேலாதிக்கம் பற்றிய அவரின் நிலைப்பாடும், கிழக்கு மக்கள் பற்றிய அவரின் நிலைப்பாடும், முஸ்லீம் மக்கள் பற்றிய அவரின் நிலைப்பாடும், முரணற்ற ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்டது. 10 வருடங்களுக்கு முன் அவர் உடன்பட்டு செயல்பட்ட ஒரு அமைப்பு ஆவணங்கள் இதை தெளிவாக நிறுவுகின்றது. சுமைகள் பத்திரிகை ஆசிரியர்களில் ஒருவர். அவரின் அரசியலை வெளிப்படுத்தக் கூடிய விவாதங்களை உள்ளடக்கிய ஆவணங்கள் என்னிடம் உள்ளது. அவருக்கும், அவர் சார்ந்த குழுவுக்கும் எனக்கும் இடையில் நடைபெற்ற, 50க்கு மேற்பட்ட விவாதங்களை உள்ளடக்கிய கடிதத் தொகுப்பே என்னிடம் உண்டு. எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய அவர், உங்கள் எல்லோரையும் விட, மக்களை நேசிப்பதில் மேலே இருந்தவர். சமகாலத்தில் எம்முடன் எந்தத் தொடர்பும் இல்லாத போதும், ரீ.பீ.சீ ஊடாக ஜனநாயகத்தை பரப்பமுடியும் என்ற அவரின் செயல்பாட்டுடன் நாம் என்றும் உடன்பட முடியாது. ஆனால் அவரின் நியாயமான விமர்சனத்தை எதிர்கொண்டு எதிர்த்தவிதம், அவர் நம்பிய ஜனநாயகவாதிகள் முகத்தை அவருக்கு தோலுரித்துக் காட்டி இருக்கும். அவர் நம்பிய ஜனநாயகவாதிகளே அவரைத் தூற்றிய விதம், அதை திரித்துப் புரட்டிய விதம், அவருக்கு உறைக்கவே விளங்கியிருக்கும் என்று நம்புகின்றோம்.


இதைக் கடந்தும் ஜனநாயகம் பற்றி நியூட்டனுக்கு ஒரு துல்லியமான பார்வை இருந்தது. இது தான் அன்று ரீ.பீ.சீ யில் பிரதிபலித்தது. கடந்தகால நடைமுறை பற்றிய செயல்பாட்டில் நம்பிக்கை இழந்ததால், உணர்ச்சிவசப்பட்டு சோர்ந்த நிலையிலும் அவர் செயல்பட்டார். நோர்வே இடதுசாரி அரசியலில் ஈடுபட்டதுடன், அதன் மூலம் நோர்வே மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரானதும் நாம் அறிவோம். இப்படிப்பட்டவரை தனிப்பட்ட ரீதியில் ஆதாரமற்ற வகையில் இழிவுபடுத்தலாமே ஒழிய, ரீ.பீ.சீ போன்ற புலியெதிர்ப்புக் கும்பல் அவரின் குற்றச்சாட்டுக்கு என்றும் பதிலளிக்க முடியாது.


இந்த நிலையில் இந்த புலியெதிர்ப்பு கும்பலை ஒரு குடையில் பாதுகாக்க, சிவலிங்கம் என்னதான் நியூட்டனின் கேள்விகளில் நியாயமுண்டு என்று கூறினாலும், பலரும் பலவிதமாக கருத்துரைத்தாலும், மக்களைச் சார்ந்து நிற்காத எந்த ஒரு அரசியலும், அரசியலற்ற புலியெதிர்ப்பு செக்குமாட்டு புலம்பல் வண்டியை இழுக்கமுடியாது. அது இழிந்து சிதைந்து நாலாபக்கமும் பிய்ந்தேயாகும். அது தான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. புலிகளில் இருந்து தனது தனிப்பட்ட பிரச்சினை காரணமாக (உள்ளடகத்தில் இது ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்டது. கருணா இதை ஜனநாயகமாக கருதி வெளியேறியது கிடையாது. அவருக்கு அது அதிகார மோதல்) பிரிந்த கருணா பற்றிய பிரமையை விதைக்க முனையும் திடீர் ஜனநாயகவாதிகளுக்கு, ஜனநாயகத்தின் அரிச்சுவடியே தெரிந்திருப்பதில்லை. மாறாக நிலைமைக்கு ஏற்ப ஜனநாயகம் பேசுவதன் மூலம், இவர்களே ஜனநாயகத்தின் பிரதான எதிரியாக உள்ளனர். உங்கள் ஜனநாயகத்தின் அரசியல் தான் என்ன?


நியூட்டனிடம் குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்பதும், புலிகள் உங்களிடம் கேட்பதற்கும் என்ன வேறுபாடு? புலிகள் இது போன்றவற்றுக்கு பதிலளிக்கும் வடிவத்துக்கும், உங்கள் பதிலுக்கும் என்ன வேறுபாடு? உங்கள் ஜனநாயக தராசில், புலிக்கு ஒரு நியாயம், உங்களுக்கு ஒரு நியாயமோ? புலியின் எதிரி எமது நண்பன் என்ற புலியெதிர்ப்பு அரசியல் போக்கில் ஏற்படும் சலசலப்பைக் கூட, சகித்துக்கொள்ள முடியாது தூற்றுவதுதான் உங்கள் உயர்ந்தபட்ட அரசியலாகும். நியூட்டனின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்பதும், எதிர்க்குற்றச்சாட்டை முன்வைப்பதற்கும் அப்பால், நீங்கள் கருணா தரப்பு பேச்சாளராக இருக்கவிரும்பினால், அல்லது கருணா தரப்பை ஜனநாயக அமைப்பாக நியாயப்படுத்த விரும்பினால், என்ன செய்திருக்கவேண்டும். உங்கள் அரசியல் நேர்மையை நீங்களே விமர்சனத்துக்குள்ளாக்கி இருக்கவேண்டும்.


ள இது போன்ற மனித விரோத செயல்களை கருணா தரப்பு செய்வதில்லை என்று, அரசியல் ரீதியாக உறுதிப்படுத்தி கூறியிருக்க வேண்டும். அது உங்களாலும், ஏன் கருணா கும்பலாலும் கூட முடியாது. இனம் காணப்பட்ட சில சம்பவங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கப்பட்ட போதெல்லாம், அதை அவர்கள் சுயவிமர்சனம் செய்தது கிடையாது. மாறாக புலிகள் பாணியில் அதை மூடிமறைக்கவும், உடனடியாக அதைச் சமாளிக்கவும் தான் முனைந்தவர்கள். கருணா தரப்பு அரசியல் கொலைகளை செய்வதில்லை என்று சொல்ல, உங்களுக்கு எந்தத் துப்பும் கிடையாது. ஒரு புறத்தில் புலிகள், மறுதளத்தில் கருணா தரப்பு பாரியளவில் கொலைகள் செய்கின்றனர். இந்த கொலைகள் ஆயுதம் ஏந்திய புலிகள் மீது நடத்தப்படவில்லை. ஆயுதம் எந்தாத நபர்கள் மீது, கிழக்கு முதல் வடக்கு வரை இந்த கொலைகள் நாள் தோறும் நடக்கின்றது.


இன்று வரைமுறையின்றி நடக்கும் கொலைகள், ஆட்கடத்தல்கள் 90 சதவீதமானவை கருணா கும்பலாலும், பேரினவாத இராணுவ கும்பலாலும் செய்யப்படுகின்றது. இதை புலியெதிர்ப்புக் கும்பல் ஆதரிப்பதும், அதை கண்டும் காணாமல் உதவுவதும் நன்கு தெரிந்ததே. புலிகள் கொலை செய்த போது அதற்கு கொடுக்கும் முக்கியத்துவமும், எதிர் பிரச்சாரமும் மறுதளத்தில் செய்யப்படுவதில்லை. இப்படி கருணா என்ற கூலிக் குழுவின் கொலைக்கு, ஆட் கடத்தலுக்கு ஆதரவு தெரிவிக்கின்ற இவர்கள், தம்மைத் தாம் ஜனநாயகவாதி என்கின்றனர்.


ள கருணா தரப்பு படைக்கு ஆட்கடத்தல், பணத்துக்காக ஆள் கடத்தல், வரி அறிவிடல், சிறுவர்களை பலாத்காரமாக கடத்தல் என்று, அனைத்து புலி நடவடிக்கையிலும் ஈடுபடுகின்றனர். புலிப் பாசிசத்துக்கு அடங்கியொடுங்கி இருந்த மக்கள், கருணாவின் கூலி இராணுவத்துக்கு அடங்கி ஒடுங்குகின்றனர்.


ள சாதாரண மக்கள் மீது அடாவடித்தனமான அட்டகாசம் செய்யும் புலி போன்ற, ஒரு மக்கள் விரோத குண்டர் படைதான் கருணா கும்பல். அது மேலும் இழிந்து அரசில் கூலிக் கும்பலாகியுள்ளது. மக்கள் பற்றி அதற்கென்று எந்த சொந்த அரசியல் கோட்பாடும் கிடையாது. அதற்கென்றொரு நடைமுறையை நினைத்து பார்க்கமுடியாது. அது எடுபிடிகளை மட்டும் கொண்டது. பொறுக்கி அரசியல் செய்யும் எடுபிடிகளைக் கொண்டு, தமக்குத் தாமே ஜனநாயக முகமூடியை போட முனையும் கூலிக் குண்டர் படைதான்.


ள கருணா தரப்பு இலங்கை அரசின் கீழ் இயங்கும் ஒரு கூலிக் கும்பல் தான். பேரினவாதம் எதைச் செய்ய விரும்புகின்றதோ, அதை நிறைவு செய்யும் ஒரு இழிந்த சீரழிந்த குண்டர் படையாக, அவர்களின் பாதுகாப்பில் உள்ளனர். இதற்கென்று சொந்தமான அரசியல் முன்முயற்சி எதுவும் கிடையாது. மக்கள் பற்றி நினைத்தே பார்க்கமுடியாது.


ள கருணா தரப்பின் செயல்பாட்டை நடைமுறை சார்ந்த அரசியலை நாங்கள் எடுத்தால், அதாவது மக்களுடனான உறவை எடுத்தால் இரண்டும் ஒன்றுதான். புலிகளில் இருந்து எந்த வகையில், எப்படி வேறுபடுகின்றனர் என்று தேடினால், நீங்கள் எதையும் காணமுடியாது. புலிகளில் இருந்து வேறுபட்ட, இவர்களின் மக்கள் பற்றிய பார்வை என்ன? மக்களுடன் எப்படி அணுகுகின்றனர். உங்களால் புலிக்கு மாறாக உள்ளனர் என்று பதிலளிக்க முடியுமா? முடியாது. எடுபிடிகளே!, உங்களைத் தான் கேட்கின்றேன். முடியுமா?


ள கருணா தரப்பு புலிகளில் இருந்து பிரிந்ததற்கு முன்வைக்கும் இன்றைய காரணங்கள், அன்றைய காரணங்களும் வேறுபட்டவை. ஒவ்வொருவரும் ஆளுக்காள் புதிய காரணத்தைக் கண்டுபிடிக்கின்றனர். இந்த கருணா அன்று வைத்த காரணத்தை திரித்து, இன்று அரசியல் செய்ய நினைப்பது தான் உங்கள் ஜனநாயகம். இது கடைந்தெடுத்த ஒரு அரசியல் மோசடி.


அன்று அவர் அதிகாரம் சார்ந்து முன்வைத்த சில காரணங்கள் உண்மையானது. பின்னால் பிரதேசவாசமாகி, இன்று ஐ.நா குலைக்கும் சிறுவர் படை பற்றிய அவர்களின் பார்வை எல்லாம், கருணாவின் பிரிவிற்கான அரசியல் காரணமாகிவிடுகின்றது. இதற்கு ஜெயதேவன் போன்ற சந்தர்ப்பவாதிகளை சாட்சியமாக்கி, அதை குலைக்க வைக்கின்றனர். இப்படி ஒன்றுக்கு பின் ஒன்றாக, பிழைப்புக்காக அரசியல் நாடகம் ஆடுபவர்கள் எல்லாம் மக்களை ஏமாற்றும் அரசியல் பொறுக்கிகள் தான்.


இப்படி கருணா என்ற கைக்கூலிக் கும்பலின் மக்கள் விரோத செயல்களை பட்டியலிட முடியும். சில புலியெதிர்ப்பு பொறுக்கிகள் (தேனீ இணையம் முதல் ) 20 வருட பாசிசத்தில் இருந்து வந்தவர்கள், திருந்த கால அவகாசம் தேவை என்றனர். இப்படி தங்கள் ஜனநாயகத்தை, விபச்சாரத்துக்காக முந்தானையாக வரித்து விபச்சாரம் செய்கின்றனர். புலிகள் போன்ற இயக்கத்தில் இருந்து பிரிந்தவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியில், இது போன்றவை நிகழ்வது தவிர்க்க முடியாது என்றனர். இத்னுடன் விட்டார்களா இல்லை, கருணா பிரிந்ததால் தான் இன்று தமக்கு ஜனநாயகம் கிடைத்துள்ளது என்றனர். எனவே அவர்களினதும், தமதும் விபச்சாரத்தை கண்டுகொள்ளவே கூடாது என்பதே அவர்கள் மக்களுக்குச் சொல்லும் செய்தி.


இப்படி அரசியல் விபச்சாரம் செய்வது, ஜனநாயகத்துக்கு நல்லதொரு நகைச்சுவை தான். இந்த கருணா குழுவின் ஜனநாயக விரோத செயலை நியாயப்படுத்தும் அதேநேரம், அதற்கு காரணத்தையும் கற்பிக்கின்றனர். ஆயுதம் வைத்திருப்பது தவிர்க்க முடியாதது, இதனால் தான் ஜனநாயகத்துக்கு பாதகமாய் இருக்கின்றதாம். எல்லோருடைய ஆயுதத்தையும் ஒன்றாக களைவது தான் தீர்வாம். கேடுகெட்ட அரசியல் பிழைப்புதான், இப்படிக் கூற வைக்கின்றது. ஆயுதம் வைத்திருப்பதோ, அல்லது வன்முறையில் ஈடுபடுவதோ, கட்டாயமாக ஜனநாயக விரோதமாக இருக்கவேண்டும் என்பதல்ல. ஆயுதமும், வன்முறையும் தான், ஜனநாயக விரோதத்துக்கான காரணங்களல்ல. மாறாக அவர்கள் கொண்டுள்ள அரசியல் தான் காரணம். இதை சொல்லும் அரசியல் நேர்மை இவர்களிடம் கிடையாது. ஆயுதமும், வன்முறையும், யாருக்கு எதிராக, எப்படி, எங்கே பயன்படுத்தப்படுகின்றது என்பது தான் பிரச்சினை. அதிலும் பேரினவாதத்தின் கூலிக் கும்பல் மக்களுக்கு எதிராகத்தானே எப்போதும் பயன்படுத்தும். இது சந்தேகத்துக்கு இடமற்றது. மக்களைச் சார்ந்த ஒரு இயக்கமா கருணா என்ற கூலிக் கும்பல்! இல்லையே. இது உங்கள் ஜனநாயகத்தக்கு தெரிவதில்லையே ஏன்?


இந்தக் கும்பல் வைத்துள்ள ஆயுதங்கள், அவர்களின் வன்முறை, வெறும் புலிக்கு எதிராக மட்டும் செயல்படுத்தப்படுவதில்லை. மாறாக மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றது. இந்தியா இலங்கை அரசுகளில் கூலிக் குழுவாக இருந்தபடி அதன் அரசியல் நலனுக்காக பிரயோகிக்கப்படுகின்றது. அன்றைய வாதத்தில் இந்தக் கைக்கூலித்தனத்தையும் இந்த புலியெதிர்ப்புக் கும்பல் நியாயப்படுத்தியது. புலிகளிடம் இருந்து தப்பி வாழ, வேறு மார்க்கம் இல்லைதானே என்றனர். நல்லதொரு தர்க்கம். இந்த தர்க்கத்தை சரியென்று நியாயப்படுத்த முடியுமென்றால், அங்கு மக்களைப் பற்றி பேசுவதற்கு என்று எதுவுமில்லை. ஜனநாயகத்தை பற்றிப் பேச என்னதான் அவர்களிடம் மிஞ்சியிருக்கும்.


தனிமனிதன் தற்பாதுகாப்புக்காக அவனின் அறியாமையில், இயலாமையில் பேரினவாதத்தின் பாதுகாப்பை நாடுவது வேறு. ஆனால் அவனின் நோக்கத்துக்கு துணை போகமுடியாது. வரலாற்றில் இதை அறியாமல் துணை போனவர்களை மன்னிக்கமுடியும். ஆனால் ஒரு அரசியலை பேரினவாத தயவில், ஒரு கூலிக்குழுவாக செய்ய முனைவதை அங்கீகரிக்க முடியாது. இது மக்களுக்கு எதிரானது. மக்களின் எதிரியுடன் கூட்டுச் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்யமுடியாது. மக்களுக்கு விரோதமாகத்தான் செயல்படமுடியும்.


டக்ளஸ் போன்றவர்கள் மந்திரிப் பதவியுடன் திரிவதும், அதைக் கொண்டு செய்வதும் மக்கள் சேவையல்ல. அரசு மக்களுக்கு செய்ய வேண்டியதை மறுத்து, பின் அதை செய்யும் எல்லைக்குள், எலும்பை வீசி மக்களை அடிமைப்படுத்துவதாகும். மக்கள் சேவை என்ற பெயரில் செய்யப்படுவது அனைத்தும், மக்களின் அடிப்படை உரிமையை மறுத்து, பின் அதைப் பிச்சையாக போடுவதாகும். அதை இயல்பாக கிடைக்கவிடாமல் மறுப்பது, அதை எலும்புத் துண்டாக்கி வீசி ஏமாற்றுவது, கடைந்தெடுத்த ஒரு மனித விரோதக் குற்றமாகும். மக்களுக்கு எதிரான ஒரு அரசை எதிர்க்காது, அரசு வீசும் எலும்பை கொண்டு அரசியல் செய்யும் வக்கிரமே இங்கு அரங்கேறுகின்றது.


புலிகளின் அச்சுறுத்தலுக்குள் அரசியல் செய்வது என்பது, மக்களைச் சார்ந்து நிற்பதன் மூலம் போராடுவது தான். இதில் நீ அழிக்கப்படுவாயானால், போராடி மடி. அதுதான் மக்களுக்கான போராட்டம். வெற்றி என்பது தோல்வியை உள்ளடக்கியது தான். வாழ்வு என்பது மரணத்தை அடிப்படையாக கொண்டதே. போராட்டத்தில் நாம் தோற்றுப் போகலாம், ஆனால் எப்படித்தான் எம் மக்களுக்கு துரோகம் செய்ய முடியும். இதில் என்ன நியாயம் தான் உள்ளது. மக்களுக்காக மடி. கூலி இராணுவத்துக்காக மடிவதை வெறு.


மக்களுக்காக அவர்களில் தங்கி நின்று போராடி வாழ முனைவது தான், மக்களை நேசிப்பதற்கான ஒரேயொரு வழியாகும். இந்த போராட்டத்தில் மரணித்தல் நிகழும் என்றால் அதை ஏற்றுக்கொள். இதைவிடுத்து அதற்காக மக்களுக்கு எதிராக துரோகம் செய்ய முடியுமா! மக்களுக்கான போராட்டத்தில் மரணத்தை கண்டு பயந்து, போராடி வாழமுடியாது என்று கருதினால், அதில் இருந்து ஒதுங்கிப் போய்விடுவது துரோகத்தை விட மேலானது, நேர்மையானது. மக்களின் முதுகில் குத்தித் தான் அரசியல் செய்வது என்பது, இழிவான சொறி நாய் பிழைப்புத் தான். கூலி இராணுவத்துக்காக மடியும் துரோகத்தை மூடிமறைக்க, மக்களை வெறும் மந்தைகளாக, மடையர்களாக வைத்துக் கொண்டு குலைப்பதையே, இன்று இவர்கள் ஜனநாயக அரசியல் என்கின்றனர். இதையே எல்லா புலியெதிர்ப்புக் கும்பலும் அரோகரா போட்டு, சிங்கள பேரினவாத இராணுவத்தின் எடுபிடிகளாகி கூலிக் கும்பலாக குலைக்கின்றனர்.


21.01.2007