உ லகிலுள்ள பாராளுமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை ஆராய்வோம். அதனடிப்படையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை ஆண்டுவாரியாக வரைபடம்:2-இல் காணலாம். (8.3.1999)24


வரைபடம்: 2 

1945               3.0 சதவீதம்

1965               8.1 சதவீதம்

1988              14.8 சதவீதம்

1995              11.6 சதவீதம்

1999              13.1 சதவீதம்

 

 

 

உலகில் முதல் முன்னணி பெண் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட நாடுகளையும் அந்நாட்டுப் பிரதிநிதித்துவ எண்ணிக்கையையும் அட்டவணை:21 மூலம் அறியலாம்.
அட்டவணை: 21


நாடுகள்                            சதவீதம்

சுவீடன்                              42.7%
டென்மாhக்                      37.4%
நார்வே                               36.4%
நெதர்லாந்து                    36%
பின்லாந்து                       33.4%
ஜெர்மனி                          30.9%
தென் ஆப்பிரிக்கா       29.5%
நியூசிலாந்து                   29.2%
அர்ஜென்டீனா                27.6%
கியூபா                                27.6%


உலக அளவில் பிரதேச ரீதியாகப் பெண்களின் பிரதிநிதித்துவ எண்ணிக்கையை அட்டவணை:22-இல் இருந்து பார்ப்போம்.


அட்டவணை: 22


பிரதேசம்                                             சதவீதம்
ஸ்காண்டிநேவிய நாடுகள்         37.6%
அமெரிக்க நாடுகள்                        15.4%
ஐரோப்பா (ஸ்காண்டிநேவிய)    15.1%
ஆசியப் பிரதேசம்                           14.1%
ஆப்பிரிக்கா                                        11.3%
பசுபிக் நாடுகள்                                10.7%
அரபு நாடுகள்                                      3.5%


பிராந்திய ரீதியில் பாராளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் சராசரி எண்ணிக்கையையும், அப்பிரதேசத்தில் அதிக பெண் உறுப்பினர்களைக் கொண்ட நாடுகளிலுள்ள எண்ணிக்கையையும் இன்டர்பார்லிமென்டரி யூனியன் அறிக்கையில் இருந்து (6.8.1997)13 கீழே உள்ள அட்டவணை:23-இல் காணலாம்.
அட்டவணை: 23


பிராந்தியம்                               சராசரி%             அதிகம் நாடு உள்ள                  எண்ணிக்கை%
வட தென் அமெரிக்கா         12.7%                    அர்ஜென்டினா                                     25.3
ஐரோப்பா                                    12.6%                     ஸ்வீடன்                                               40.4
பசுபிக் பிராந்தியம்                 11.6%                    நியூசிலாந்து                                        29.2
ஆப்பிரிக்காவின்                      11.4%                   செஷல்ஸ்                                            27.3%
தென் பகுதி
அரபு நாடுகள்                             3.3%                     சிரியா                                                     9.6%
ஆசியா                                          13.1%                   சீனா                                                          21%
-                                                          -%                       இந்தியா                                                  7.1%


பெண் ஆட்சி பீடங்களிலும், நிர்வாகத்திலும் எத்தனை சதவீதத்தில் உள்ளனர் என்பதை அட்டவணை:24-இல் காணலாம். (4.3.1998)33


அட்டவணை: 24


நாடுகள்                             பெண்களின் பங்கு சதவீதத்தில்

கனடா                                                           42.2%
அமெரிக்கா                                                42%
சிங்கப்பூர்                                                     34.3%
தாய்லாந்து                                                 21.8%
இலங்கை                                                   16.9%
மலேசியா                                                   11.9%
சீனா                                                              11.6%
பங்களாதேசம்                                           5.1%
பாகிஸ்தான்                                               3.4%
இந்தியா                                                       2.3% 
வளர்ந்த நாடுகள் சராசரி                 27.4%
வளரும் நாடுகள் சராசரி                 10%


அரசில் பெண்களின் பிரதிநிதித்துவத்தைக் கீழ்க்கண்ட அட்டவணை:25-இல் காணலாம்.34
அட்டவணை: 25


நாடுகள்                                      பெண் பிரதிநிதித்துவம் சதவீதத்தில்

சுவீடன்                                                                        47%
நார்வே                                                                         41%
பின்லாந்து                                                                 35%
அமெரிக்கா                                                               21%
கனடா                                                                         19%
இந்தியா                                                                        9%
ஜப்பான்                                                                        7%
பங்களாதேசம்                                                           5%
பாகிஸ்தான்                                                               4%
சிங்கப்பூர்                                                                     0%
வளரும் நாடுகள்                                                    6%
வளர்ந்த நாடுகள்                                                  12%
உலகம்                                                                         7%


பெண்கள் தற்போதைய நிலையில் எத்தனை சதவீதத்தில் உள்ளனர் என்பதை அட்டவணை:26-இல் காணலாம்.33


அட்டவணை: 26

நாடுகள்               பாராளுமன்றத்தில் ஊழியர்கள்       நிர்வாகிகள் மேலாளர்கள்     அமைச்சர்      தொழில்நுட்ப உறுப்பினர்கள் 

பாகிஸ்தான்                                 3.4%                                                       3.4%                                     4.0%                                   20.1%
பங்களாதேஷ்                              9.1%                                                       5.1%                                     5.0%                                   23.1%
சுவீடன்                                         40.4%                                                     38.9%                                  47.8%                                   64.4%
அமெரிக்கா                                11.2%                                                     42.0%                                   21.1%                                   52.0%
ஈரான்                                              4.0%                                                        3.5%                                     0%                                       32.6%
ஜப்பான்                                         7.7%                                                         8.5%                                     6.7%                                   41.8%
இந்தியா                                        8.8%                                                          2.3%                                    9.0%                                    20.5%


ஐரோப்பிய நாடுகளில் கி.பி. 1998 மார்கழியில் எடுக்கப்பட்ட ஆய்வில் பாராளுமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவ எண்ணிக்கையைக் கீழ்க்கண்ட அட்டவணை:21-இல் காணலாம்.35


அட்டவணை: 27


நாடுகள்                                  சதவீதத்தில்

சுவீடன்                                       42.7%
டென்மார்க்                               37.4%
நார்வே                                        36.4%
நெதர்லாந்து                            36%
பின்லாந்து                               33.5%
ஜெர்மனி                                  30.9%
ஒஸ்ரிஸ்                                 26.2%
ஐஸ்லாந்து                             25.4%
ஸ்பெயின்                               24.7%
சுவிஸ்                                      21%
லுக்சம்பேர்க்                          20%
இங்கிலாந்து                          18.2%
அயர்லாந்து                            13.9%
போர்ச்சுக்கல்                         13%
பெல்ஐpயம்                            12.7%
இத்தாலி                                   11.1%
பிரான்ஸ்                                 10.9%
கிரீஸ்                                         6.3%

 

கி.பி. 1998-இல், ஐரோப்பியப் பாராளுமன்றங்களில் பெண் பிரதிநிதித்துவத்தை அட்டவணை:28இலிருந்து சதவீதத்தில் காணலாம். (16.2.1999)24

 


அட்டவணை: 28


நாடுகள்                               மந்திரிமார்                பாராளுமன்றம்                      ஐரோப்பா பாராளுமன்றம்
சுவீடன்                                       50%                               42.7%                                                     45.4%
டென்மார்க்                               35%                               37.4%                                                      37.5%
ஜெர்மனி                                    35%                               30.9%                                                     33.3%
பிரான்ஸ்                                   34.6%                            10.6%                                                      29.9%
லுக்சம்பேர்க்                           33.3%                            18.3%                                                       33.3%
நெதர்லாந்து                             31%                               36%                                                          29%
பின்லாந்து                                29.4%                            34%                                                          50%
ஸ்பெயின்                                26.7%                            24.2%                                                       26.6%
இங்கிலாந்து                            21.7%                            17.5%                                                       19.5%
இத்தாலி                                    21.7%                            12.1%                                                       13.8%
ஆஸ்திரியா                            18.8%                             25.4%                                                       33.3%
அயர்லாந்து                            15.6%                             12%                                                           26.7%
பெல்ஜியம்                              11.8%                            13.3%                                                        32%
போர்ச்சுக்கல்                          10%                               13%                                                            16%
கிரேக்கம்                                  7.5%                                6.9%                                                          20%

 

இந்தியாவிலுள்ள மாநிலங்களில் சட்டமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தைக் கீழே உள்ள அட்டவணை : 29-இல் காணலாம். (6.9.1998)13


அட்டவணை: 29
மாநிலச் சட்டமன்றம்                  1952             1993-1997
ஆந்திரா                                                 2.9%                2.7%
அசாம்                                                    0.5%                4.8%
பீகார்                                                       3.6%                3.4%
கோவா                                                     -                      10%
குஜராத்                                                    -                      1.1%
அரியானா                                               -                      4.4%
இமாச்சல்                                               0%                  4.4%
ஜம்மு காஷ்மீர்                                 -                       2.3%
கர்நாடகம்                                              2%                  3.1%
கேரளா                                                    0%                  9.3%
மத்தியப்பிரதேசம்                             2.1%               3.8%
மகாராஷ்டிரா                                      1.9%               3.8%
ஒரிசா                                                     9.6%                5.4%
பஞ்சாப்                                                  2.2%                6.0%
ராஜஸ்தான்                                         0%                   4.5%
சிக்கிம்                                                   -                         3.1%
தமிழ்நாடு                                            0.3%                 3.8%
உத்திரப்பிரதேசம்                             1.2%                4.0%
மேற்கு வங்கம்                                0.8%                6.8%
டெல்லி                                                 4.2%                4.3%

 

பிரான்சில் கி.பி. 1945-இல், முதன் முதலில் வாக்களிப்பில் ஈடுபட்ட போது ஆறு சதவீதமான பெண் பிரதிநிதிகள் (33 பிரதிநிதிகள்) தெரிவு செய்யப்பட்டனர். இன்று (கி.பி. 1994-இல்) பெண் பிரதிநிதிகள் 5.6 சதவீதம் மட்டுமேயாகும். இது ஐரோப்பாவில் 11.3 சதவீதம் மட்டுமேயாகும்.22


உலகில் முதன்முறையாகப் பெண் மந்திரி பதவியை, கி.பி.1924-இல், டென்மார்க்கில் பெற்றாள். கி.பி. 1906-இல், ஐரோப்பாவில் பெண்கள் முதல் வாக்குரிமையை பின்லாந்தில் பெற்றதுடன் 10 உறுப்பினர்கள் வெற்றியும் பெற்றனர். அடுத்து நார்வேயில் கி.பி. 1913-ஆம் ஆண்டிலும், டென்மார்க், அயர்லாந்தில் கி.பி. 1915-ஆம் ஆண்டிலும், சுவீடனில் கி.பி. 1920-ஆம் ஆண்டிலும், பிரான்சில் கி.பி. 1945-ஆம் ஆண்டிலும் பெண்கள் வாக்குரிமையைப் பெற்றனர்.22


200 வருட காலமாக ஜனநாயகம் பற்றிய பிரமைகள் ஊடாகக் கட்டி எழுப்பப்பட்ட அமைப்பில் பெண்களின் மீதான சர்வாதிகார நிலைதான் மேல் உள்ளது. பெண்களின் வாக்குரிமைக்கான போராட்டம் மிக கடுமையான நிலைமைகளின் ஊடாகவே வளர்ச்சி பெற்றது.


கி.பி. 1882-இல் பிரான்சில் விக்டர் கியூகோவின் ஆதரவுடன் பெண்கள் உரிமைக் கழகம் தொடங்கப் பெற்றது. கி.பி. 1868-இல், பிரிட்டனிலும், கி.பி. 1869-இல், அமெரிக்காவிலும் பெண்கள் வாக்குரிமை இயக்கம் தொடங்கப் பெற்றது.


கி.பி. 1905-இல் பிரிட்டனில் பெண் விடுதலை தொடர்பாகக் கூட்டம் கூடிய போது அன்னிசென்னி கிறிஸ்தபல், பன்கர்ஸ்ட்டு ஆகியோரைக் கைது செய்து சிறையில் தள்ளினர். பிரிட்டனில் எமிலின் என்பவரைப் பல தடவை வாக்குரிமை கோரியதற்காகச் சிறையில் தள்ளினர். அவரின் பிள்ளைகள் கிறிஸ்தபல், சில்வியா, அடேல் ஆகியோர் உண்ணாவிரதம், மறியல் போராட்டம் என பல தடவை ஈடுபட்டுச் சிறை சென்றனர். கி.பி. 1913-இல், பெண் விடுதலை உறுப்பினரான எமிலி டாவின்சன் பெண் உரிமை கோரி அரசின் குதிரைக்கடியில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். (தரவுகள்-11.3.1999)25


இந்த ஜனநாயகச் சுதந்திரச் சர்வாதிகாரம் ஆணாதிக்கம் கொண்டது என்பதைப் புள்ளிவிபரங்கள், சம்பவங்கள் தெளிவாகவே காட்டுகின்றன. சொத்துரிமையில் தனிச்சொத்துரிமை சார்ந்த சுரண்டும் ஜனநாயகமாக இருக்கும் அதே நேரம் பால்ரீதியில் ஆண் ஜனநாயகமாகி ஆணாதிக்கமாக உள்ளது. இந்த நிலைமையை இந்த அமைப்புக்குள் மாற்ற முடியுமா?


இன்று உலகமயமாதல் எதை ஏற்படுத்துகின்றது என்பதுடன் இது தெளிவாகத் தொடர்புடையது. சொத்துரிமை வேகமாகத் தனிப்பட்ட நபர்களை நோக்கி குவிவதே ஜனநாயகமாக உள்ளது. இந்தக் குவிப்பு தேசியச் சொத்தை மறுக்கின்றது. இது தேசிய அரசுகளை மறுக்கின்றது. மாறாகப் பன்னாட்டு அரசுகளை உலகளவில் ஒரே குடையின் கீழ் கோருகின்றது. இந்தப் பன்னாட்டு அரசுகள் சார்ந்து குவிந்து செல்லும் தனிநபர் சொத்துரிமை தனிநபர் அரசுகளைக் கோருகின்றது.


அதாவது தனிப்பட்ட சொத்துடைய விரல்விட்டு எண்ணக்கூடிய நபர்களின் அரசாக மாறுகின்றது, மாற்றுகின்றது. இதன் முன்மாதிரியாகத் தனியான பெரும் பிரதேசத்தைக் கொண்ட தனிப்பட்ட கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை உள்ளடக்கியும், வெளியிலும் தனியார் உளவு பிரிவுகள், தனியார் பாதுகாப்பு பிரிவுகள், பொலிஸ் பிரிவுகள் காணப்படுகின்றன. இதற்கு இன்று இருக்கும் அரசுகள், சட்டப்படி அங்கீகாரத்தை தனது சட்ட அமைப்புகள் மூலம் வழங்குகின்றது.


அரசு நிறுவனத்தில் ஊழல் முதல் அலட்சியமான போக்கு வரையிலான தாமதத்திற்குப் பதில், தனியார் நிறுவனங்களில் வேகமான வேலைக்கு (வேகமான சுரண்டலையும், உபரியைக் குவிப்பதுக்கும்) நடுத்தர மக்களிடம் ஆதரவு இருப்பது போல், தனியார் பொலிஸ் பிரிவுகள் தனியார் உளவு பிரிவுகள் ஆகியவற்றில் மக்கள் உள்ளே ஈர்க்கப்படுகின்றனர்.


தென் ஆப்பிரிக்காவில் தனியார் பொலிஸ் பிரிவில் 45,000 பேருக்கு மேற்பட்டோர் செயல்படுவதும் மக்கள் ஆதரவு இருப்பதும் சட்டத்தை முழுமையாகக் கையெடுப்பதையும் காணமுடிகின்றது.


அமெரிக்காவில் தனியான பெரிய பிரதேசங்கள் தனியான சட்ட அமைப்பைக் கொண்டு அரசுக்கு வெளியில் செயல்படுகின்றது. இதேபோல் சொத்துரிமை குவிந்த தனிநபர் ஆதிக்கம் வளர்ச்சி பெறுகின்ற போது, தேசிய அரசுகள் என்ற வடிவத்தில் தீவிர மாற்றம் நிகழுகின்றது. இது தனிப்பட்ட நபர்களின் நலனைப் பூர்த்தி செய்வதை முன்பைவிட அதிகமான நிபந்தனையாகின்றது. இதன் போக்கில் அரசு மக்களுக்கானது என்ற மாயையில் இருந்து அரசுவடிவம் தகர்ந்து தனிப்பட்ட அதிகாரம் கொண்ட அதிகாரவர்க்க அரசு வளர்ச்சி பெறுகின்றது.


சொத்துக்குவிப்பு என்பது கட்டவிழ்ந்த மாடு போல் நாலுகால் பாய்ச்சலில் செல்லுகின்றது. உலகில் முதல் 200 பணக்காரக் கும்பலுடைய சொத்தின் பெறுமதி (மதிப்பு) ஒரு லட்சம் கோடி டொலரைத் தாண்டியுள்ளது. இது உலகச் செல்வத்தில் இருபத்தி ஐந்தில் ஒரு பகுதியாகும்.


கி.பி. 1994-இல், 44,000 கோடி டொலர் பெறுமானத்தை வைத்திருந்த இந்தப் பணக்காரக் கும்பல் கி.பி. 1998-இல், 1,00,000 கோடி டொலரை சூறையாடி குவித்துள்ளது.


கி.பி. 1975-ஆம் ஆண்டு உலகளவில் தனிநபர் வருமானம் 2,900 டொலரில் இருந்து கி.பி. 1987-இல், 3,600 டொலராக அதிகரிக்க, கைத்தொழில் அல்லாத நாடுகளின் சராசரி தனிநபர் வருமானம் 287 டொலரில் இருந்து 245 டொலராக குறைந்துள்ளது. இது கைத்தொழில் உள்ள நாடுகளில் தனிநபர் வருமானம் 12,589 டொலரில் இருந்து 19,236 டொலராக அதிகரித்துள்ளது.


இந்த 200 பேரின் வருமானம் உலகில் அடிநிலையில் வாழும் 246 கோடி மக்களின் வருமானத்துக்குச் சமமாகும். அதாவது ஒரு பணக்காரனின் வருமானம் 13 இலட்சம் பேரின் வருமானத்துக்கு சமமாகும். பத்து பணக்காரர்களின் சொத்து உலகமக்களின் 41 சதவீதம் மக்களின் உழைப்புக்குச் சமனாகும். இது 43 வறிய நாடுகளின் மொத்த செல்வத்துக்குச் சமமாகும்.36


அரசுகள் என்பது சொத்துடைமையைப் பாதுகாக்கும் எல்லைக்கு உட்பட்டது. தேசிய மற்றும் பரந்துபட்ட சொத்துடைமை வர்க்கம் அழிந்து பூதங்களாகிவரும் பன்னாட்டு நிறுவனத்தின் நலன் சார்ந்து அரசுகள் மாற்றப்படுகின்றன. இது உலகெங்கும் எல்லா அரசுகளையும் அதன் போலியான ஜனநாயகத் தன்மையை இழக்கின்றது. இது தனிப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் கூலிப்பட்டாளமாக, கைக்கூலி இராணுவங்களாக மாறுகின்றது.


மக்கள் நலன் சார்ந்து இருந்த கல்வி, மருத்துவம், மின்சாரம், போக்குவரத்து, தொலைபேசி போன்ற அனைத்து அரசுத் துறைகளையும் தனியார்மயமாக்கக் கோரும் டங்கல் நிபந்தனைகள் போலித்தனமான ஜனநாயக அரசின் பணியை முடிவுக்குக் கொண்டு வருகின்றது. நிலப்பிரபுத்துவக் காலத்தில் தனிப்பட்ட அரசனைச் சார்ந்து சமூகம் இருந்தது போல், பன்னாட்டு நிறுவனத்தின் தயவு கிடைத்தால்தான் வாழ்க்கை என்ற நிலைக்கு உலகம் சொத்துரிமை குவிப்பால் தலைகீழாக மாறிச் செல்லுகின்றது. தீவிரமாகும் வர்க்கப் போராட்டம் அரசின் பாத்திரத்தை, இன்று இருப்பதில் இருந்து தீவிரமாக மாற்றிவிடும்.


சொத்துடைய வர்க்கத்தின் நலனைப் பாதுகாக்கும் போராட்டத்தில் அரசு தனிப்பட்ட நபர்களின் அப்பட்டமான பிரதிநிதியாக மாறிவிடும். இது மக்களிடம் இருந்து முற்றாக அன்னியப்பட்டு ரவுடிக் கும்பலாக மாற்றம் காண்பது தவிர்க்க முடியாதது. அந்தளவுக்கு விரல்விட்டு எண்ணக்கூடிய சொத்துரிமை வர்க்கமாக வளர்ச்சி பெற்று வரும் ஒரே வர்க்கமாகப் பன்னாட்டு நிறுவனங்கள் வளர்ச்சி பெறுகின்றன. இந்த வளர்ச்சியின் பின் அரசு சிதைந்து அந்த இடத்தில் தனியார் அரசுகள் உருவாகுவதை நோக்கி உந்தித் தள்ளுகின்றது. அரசு தனியார் கூலிப்பட்டாளமாக இருப்பதுக்கு அப்பால் எதையும் சாதிக்கப் போவதில்லை.


வர்க்கப் போராட்டம் சொத்துரிமை வர்க்கத்துக்கு எதிராக வளர்ச்சி பெறுகின்ற போது இருக்கும் அரசு தனது அதிகாரத்தை இழந்துவிடும். இதற்குப் பதில் தனிப்பட்ட அதிகாரத்தை ஒட்டிய சர்வாதிகார வடிவங்களே சொத்துடைமையைப் பாதுகாக்கும் பணியில் மக்களுக்கு எதிராக இயங்கும். ஏனெனின் மக்கள் சொத்துரிமை அற்றிருப்பதால் அவர்களுக்கும் அரசுக்கு இடையிலான உறவு பகைமுரண்பாடாகவே இருக்கின்றது. அரசு சொத்துரிமையின் கள்ளக்குழந்தை என்பதால் அதன் வாரிசாகி பாதுகாப்பதில் தீவிரமாக அந்த வர்க்கத்துக்கு மட்டுமே சேவை செய்யும் தனது சர்வாதிகாரத்தை அப்பட்டமாக, நிர்வாணமாக வெளிப்படுத்தும்.


ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டம் இந்த வரலாற்று வளர்ச்சியூடாகவே கட்டமைக்கப்படுகின்றது. இன்று இருக்கும் ஏகாதிபத்திய அரசு அமைப்புகளில் ஆணுக்கு நிகராகப் பெண் பங்கு கொள்ளும் உரிமையை, இந்தச் சொத்துரிமை ஆணாதிக்கம் மறுக்கும் இன்றைய நிலையில், இதை எதிர்த்துப் போராடுவதுதான் சரியானது. ஆனால் இந்த ஏகாதிபத்திய அரசு அமைப்பில் பன்னாட்டு சொத்துரிமையை ஆணுடன் பங்குபோட்டுக் கொள்வதன் மூலம், அதிகாரத்தில் பெண் பகிர்ந்து கொள்வது என்பது ஆணாதிக்கத்தைக் கட்டிக்காப்பதாகும். ஒருபுறம் ஆணாதிக்கத்தை மறுப்பதும் பின் சீர்செய்வதும் மறுபுறம் ஆணாதிக்கத்தைப் பாதுகாப்பதற்காகத்தான் இந்த அமைப்பு தன்னைத்தான் ஒழுங்கமைக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளாத வரை ஆணாதிக்கத்தை ஒழிக்க முடியாது.


இன்று ஆணுக்கு நிகராக அதிகாரத்தில் அமர்ந்த பெண்கள் ஆணுக்குச் சமமாக அல்லது அதிகமாக அதிகாரத்தில் பங்கு கொண்டாலும் ஆணாதிக்கம் மாறிவிடுவதில்லை. மாறாகப் பெண் மேலும் அதிகாரத்தில் ஆணாதிக்கமயமாகி பெண்ணை ஒடுக்கும் ஆணாதிக்க அமைப்பைப் பாதுகாக்கவே முடியும். இது அரசு பற்றிய அடிப்படையான விவாதத்தை உள்ளடக்கியது. லெனின் எழுதிய "அரசும் புரட்சியும்|| என்ற நூல் மிகவும் துல்லியமாகவே இவைகளை ஆராய்கின்றது.


இந்த அரசு அமைப்பு தனது சொத்துடைய வர்க்கம் சார்ந்து, தன்னை மக்களிடம் இருந்து அன்னியப்படுத்தும் போக்கில் நாம் இதை ஆணாதிக்கத்துக்கு எதிரான அரசியலில் உள்ளடக்கப்பட வேண்டும். பெண்ணின் பிரதிநிதித்துவத்தை மறுக்கும் ஆணாதிக்கத்தை எதிர்த்து அதைக் கோரவும், அதே நேரம் இந்த அதிகாரம் ஆணாதிக்கமானது என்பதை முன்னிறுத்தி அரசியல் மயப்படவேண்டும். இதனூடாகச் சொத்துரிமையை மீளவும் கைப்பற்றும் போராட்டத்தில் ஆணாதிக்கத்தை ஒழிக்கவும், சொந்த அதிகாரத்தை நிறுவவும் போராடும் அரசியல் மார்க்கம் ஒன்றைத் தெளிவாக முன்வைக்கவேண்டும்.


200 வருடங்களாக இந்த ஜனநாயகம் எப்படி ஆணாதிக்கமயமாக உள்ளது என்பதை அம்பலப்படுத்துவதும், இந்த அமைப்பில் பெண் பங்கு கொண்டாலும் இது ஆணாதிக்க அமைப்பாகவே நீடிக்கும் என்பதையும் அம்பலப்படுத்த வேண்டும். இந்த அமைப்பு மக்களிடம் இருந்து அன்னியப்பட்டுச் செல்லும் சொத்துக்குவிப்பில், அப்பட்டமாக மக்களுக்கு எதிராகக் கைக்கூலியமைப்பாக மாறி, தனிப்பட்ட சொத்துடைமை அமைப்பின் சேவகர்களாக மாறிவரும் ஆணாதிக்க அமைப்பை எதிர்த்துப் போராடவேண்டும். இதில் பங்குகொள்வது ஆணாதிக்க மக்கள் விரோத அமைப்பைப் பலப்படுத்தும் என்பதை அம்பலப்படுத்த வேண்டும்.


அதிகாரத்தில் பெண்ணை மறுக்கும் ஆணாதிக்கத்தை அம்பலப்படுத்தும் அதே நேரம், இந்த அதிகார அமைப்பைத் தகர்க்க வேண்டும். புரட்சியூடாக அதிகாரத்தை எதிர்த்துத் தமது சொந்த ஆட்சியை நிறுவிய முன்னைய கம்யூனிச நாடுகள், எமக்குத் தெளிவாக இந்த ஆணாதிக்க அமைப்பின் சுரண்டும் கனவை நிர்வாணமாக்குகின்றது.


ருமேனியாவில் போலி கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்த போது பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம் 33 சதவீதமாக இருந்தது. இன்று 5 சதவீதமாக இந்த ஜனநாயகம் மாற்றியுள்ளது. கங்கேரியில் கி.பி. 1980-இல், பெண் பிரதிநிதித்துவம் 30 சதவீதமாக இருந்தது. இது கி.பி. 1985-இல், 20.7 சதவீதமாகவும், கி.பி. 1990-இல், 7.3 சதவீதமாகவும், கி.பி. 1994-இல், 11 சதவீதமாகவும் இந்த ஜனநாயகம் மாற்றியுள்ளது.22


கிழக்கில் முன்னைய போலி கம்யூனிச ஆட்சியின் போது தெர்வான பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை 20 சதவீதத்தால் இன்றைய உன்னதமான, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு எதிரான ஜனநாயகம் குறைத்துள்ளது. ஏனெனில் இன்றைய இந்த ஜனநாயகம் சுரண்டும் ஆணாதிக்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது.


சோவியத் பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம் 30 சதவீதம் குறைந்துள்ளது. கி.பி. 1989-இல், சோவியத் பாராளுமன்றத்தில் எட்டு சதவீதப் பெண்களே தெரிவு செய்யப்பட்டனர். முதலாளித்துவ முதல் ஜனநாயகத் தேர்தலில் 5 சதவீதப் பெண் பிரதிநிதிகள் தெரிவாகினர். கி.பி. 1993-இல், 8.5 சதவீதம் தெர்வாகிய போது 42 பெண் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் இருந்தனர். கி.பி. 1995-இல், தேர்தலில் ஒரே ஒரு பெண் பிரதிநிதி மட்டும் தெரிவு செய்யப்பட்டார்.22


இவை எல்லாம் பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தைத் தூக்கியெறிந்ததன் விளைவாகும். முதலாளித்துவ மீட்சியும், அந்த அமைப்பின் ஜனநாயகமும் பெண்ணின் மீதான ஆணாதிக்கத்தைத் தீவிரமாக்குகின்றது, அதைப் பாதுகாக்கின்றது என்பதற்கு இவை நல்ல உதாரணங்கள். போலிக் கம்யூனிசத்தில் கம்யூனிச வெற்றிகளைத் தொடர வேண்டிய எல்லைக்குள் பெண் பெற்றிருந்த உரிமைகள் இந்த ஜனநாயக அமைப்பில் ஜனநாயக விரோதமாகின்றது. இது ஆணாதிக்க முதலாளித்துவச் சர்வாதிகாரமாக நிலவுகின்றது. இந்த நிலைமையை ஏற்படுத்த பல்வேறு கோட்பாட்டுப் பிரிவுகள் கம்யூனிச எதிர்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். பெண் ஏற்கனவே பெற்றிருந்த தொழில், பிள்ளை பாராமரிப்பு, அதிகாரத்தில் பங்கு என எல்லாவற்றையும் இழந்துபோனாள். அதே நேரம் சொந்த ஆயுள் காலத்தைக் கூட காப்பாற்ற முடியவில்லை.


முன்னால் சோவியத் யூனியனில் சராசரி ஆயுள் முதலாளித்துவ மீட்சியின் பின் குறையத் தொடங்கியுள்ளது. உதாரணமாக "கஸகஸ்தானில் 3.4 வயது இழப்பையும், உக்ரெய்னில் 2.8 வயது இழப்பையும்"36 அம்மக்கள் சந்தித்துள்ளனர். எல்லா கிழக்கு ஐரோப்பா நாடுகளிலும் பொதுவான ஆயுள் இழப்பை மக்கள் எதிர் கொண்டுள்ளனர். சீனாவில் புதிதாக வறுமை அதிகரித்துச் செல்லுகின்றது. அது இன்று 21.3 கோடி மக்களுக்கு அதிகரித்துள்ளது. உக்ரெய்னில் 30 சதவீதம் பேர் புதிதாக வறுமையை அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். இதில் பெரும் பகுதி பெண்கள் - குழந்தைகள் என்பதுதான் இந்த ஆணாதிக்கப் பண்பாகும். இதை எந்தத் தனிப்பட்ட ஆணுமல்ல, ஆணாதிக்கச் சுரண்டல் சமூகமே இதை நடைமுறைக்குக் கொண்டு வருகின்றது. மேற்கின் சூறையாடலே கிழக்கு ஐரோப்பிய மக்களைக் கொல்கின்றது. மக்களின் இழப்பு என்பது பொதுவான பண்பாடாக உள்ள போது பெண் விடுதலை என்பது இந்த இழப்பை நிவர்த்திக்கும் போராட்டத்தால் வழிநடத்தப்பட வேண்டும். இருப்பதை இழப்பதுக்கு எதிராகப் போராட அனைத்து மக்களும் ஓர் அணியில் திரள வேண்டியுள்ளது. இதுதான் பெண்ணின் வரலாற்று வெற்றிக்குப் பாதையைச் சமைக்கும்.