அறிவாளிக்கு, இயற்கையை
உணர்ந்தவனுக்குத் துன்பமே வராது.
உடல் நலத்துக்கு ஊசி
போட்டுக் கொள்வதில் வலி இருக்கிறது.
அதற்காக மனிதன் துன்பப்படுவதில்லை.
வலி இருந்தாலும் அதைப்
பொருத்துக் கொண்டால் தான்
சுகம் ஏற்படும் என்று கருதிப்
பொறுத்துக் கொள்ளுகிறானே,
அதுதான் அறிவின்தன்மை.

(விடுதலை - 13.09.1968)