வைத்தியத்திலேயே இரண்டு முறை சொல்வார்கள்:
1- Physicians Cure.
2- Surgeons Cure.

அதாவது மருந்து கொடுத்து வியாதியை சொஸ்தப்படுத்துவது ஒருமுறை. கத்தியைப் போட்டு அறுத்து ஆபரேஷன் செய்து நோயாளியைப் பிழைக்க வைப்பது இன்னொரு முறை. என்னைப் பொறுத்தவரையில் நான் நோயாளி செத்துப் போனாலும் பரவாயில்லை, நோய்க்குக் கஷ்டமில்லாமல் மருந்து மட்டுமே கொடுத்து சொஸ்தப்படுத்தலாம் என்று கருதுபவன் அல்ல.


நோயாளிக்குக் கஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, அவன் சாகக்கூடாது என்று கருதி அறுத்து ஆபரேஷன் செய்யும் இரண்டாவது முறையில் நம்பிக்கை உள்ளவன்.

எனது இலட்சியமெல்லாம் கஷ்டமாக இருந்தாலும் ஆள் பிழைக்க வேண்டுமே என்பது தான். நம்முடைய தோல் அப்படி லேசான தோல் அல்ல. 2000- 3,000 வருஷங்களாக தடித்துப்போன கெட்டியான தோல். அதில் உறைக்க வேண்டுமென்றால் சிறிது கடினமாகத்தான் சொல்லியாக வேண்டும். உங்கள் நாட்டு மக்களைப் பாருங்கள்! உலகத்தையும் பாருங்கள்! சிந்தியுங்கள்! பரிகாரம் தேடுங்கள்!

("குடிஅரசு"- 1947)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008_05_01_archive.html