Mon05202013

Last update05:04:56 PM

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

ஜீவனாம்சம்!

  • PDF

ஏதோ சில சந்தர்ப்பங்களில் மணமான இந்துப் பெண்கள் கணவனிடமிருந்து வாழத் தனி இடமும், ஜீவனாம்சமும் பெற உரிமை தரும் சட்டம் ஒன்று 04-02-1946- இல் மத்திய சட்டசபையில் நிறைவேறியுள்ளது. இது உதவாக்கரைச் சட்டம் என்பதைக் கீழே விளக்கியுள்ளோம். இந்த உரிமைக் கூட பெண்களுக்குத் தரக்கூடாதென இந்து மகா சபைக்காரரும் சனாதனிகளும் எதிர்த்து ஆர்பாட்டம் செய்தார்களாம். இந்த சட்டத்தைச் சட்டசபை நிராகரித்து விட வேண்டுமெனத் தேசபக்த மாளவியாவும் கேட்டுக் கொண்டாராம்.

பெண்களுக்குக் கலியாணம் விடுதலைக்கு அனுமதியில்லாமலும், ஒரு கணவன் இருக்கும் போது மற்றொரு கணவனை மணந்து கொண்டு வாழ உரிமையில்லாத பொழுது கணவனுக்கு மாத்திரம் மற்றொரு மனைவி கட்டிக் கொள்ள அனுமதியிருப்பதுமான சட்டம் எவ்வளவு புரச்சிதரமான மாறுதலானது என்று பேசப்பட்டாலும் அது உண்மையில் பயனற்றது என்பதே நமது கருத்து. இந்தச் சட்டமானது இதுவரையிலும் காந்தியாரும், காங்கிரசுக்காரர்களும் இந்து சீர்திருத்தக்காரரும்- தீண்டாமையைப் பற்றிப் பேசி வந்த சூழ்ச்சியைப் போலும், சூழ்ச்சி இல்லாவிட்டால் அறியாமையைப் போலும் ஒரு வீண் வேலையைப் போல் தான் ஆயிற்றே ஒழிய வேறொன்றுமில்லை. நிறைவேறியிருக்கும் புதிய சட்டத்தில் பெண் தனித்திருக்கலாம் என்றிருக்கிறது. இதனால் பெண்ணுக்கு இலாபமென்ன? தனியே இருந்து வேதனைப் பட வேண்டியது தவிர அல்லது புருஷனால் கருதப்படும் கெட்டகாரிமென்னும் விபச்சாரமென்று சொல்லப்படும் குற்றத்திற்குப் பெண்களை ஆளாக்கக் கணவன் உள்பட மற்றவர்கள் ஆதாரங்கள் கவனிப்பதைத் தவிரவேறென்ன முடியும்?

ஜீவனாம்சம் என்று சொல்லுவதும், இதற்கு முன் இருந்து வருகிற ஜீவனாம்சம் ஒன்றும் இல்லை. ஜீவ சுபாவங்களின் இயற்கை உணர்ச்சியாகிய இன்ப நுகர்ச்சி திருப்திக்கு வசதியில்லாத கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் வைத்துக் கொண்டு எந்தவிதமான மாறுதல் செய்தாலும் வருணாசிரமத்திற்குப் புதிய பாதுகாப்பு வியாக்கியானமும் ஏற்படுவது போலும் புராணங்களுக்குத் தத்துவார்த்தம் சொல்வது போலுந்தான முடியுமே தவிர வேறில்லை. ஆகவே பெண்கள் தங்கள் ஜீவ சுபாவத்துக்காகத் தாங்கள் முயற்சியெடுத்துக் கட்டுப்பாடுகள் என்னும் விலங்குகளைத் தகர்த்தெறிய முற்பட்டாலொழிய தங்களை வாசனைத் திரவியங்கள் போலவும்- உடையணிகள் போலவும் மதித்து அனுபவித்துக் கொண்டு வரும். ஆண்களாலும் எப்படிப்பட்ட சமதர்ம ஆட்சியாலும் பொதுவுடமைக்காரருடைய புரச்சியாலும் விடுதலை ஏற்படாது என்பது எமது கருத்து.

(06-04-1946- "குடிஅரசு" இதழில் தந்தை பெரியார் அவர்கள் எமுதிய துணைத் தலையங்கம்)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/08/blog-post_12.html

Add comment


Security code
Refresh