lankasri.comமழையைக் கொடுக்கும் பேக்டீரீயா எது என்று அமெரிக்காவின் மொன்டானா ஸ்டேட் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள் கணடுபிடித்துள்ளனர். அதன் பெயர் வெளியிடப்படவில்லை. மேலும் பல ஆய்வுகளை நடத்திய பிறகே உறுதி செய்யப்படும்.

இந்த பாக்டீரியா உலகின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகிறது. தாவரத்தின் இலை மீது இவை தங்கியிருக்கும். இவை விண்ணில் பறந்து சென்று ஒரு கூட்டமாக நிலைபெறும். இவற்றைச் சுற்றி உறைந்த பனிக்கட்டிகள் சேரும். அந்தப் பரப்பே இறுகி மேகமாக மாறும். பிறகு அதில் மேலும் பல மடங்கு நீர்த்துளிகள் சேர்ந்து கருமேகமாகி மழை பெய்யும்.

அமெரிக்காவிலேயே மொன்டானா, கலிஃபோர்னியா, கிழக்கு அமெரிக்கா ஆகிய பகுதிகளிலும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மொராக்கோ, பிரான்ஸ், ரஷியா ஆகிய நாடுகளிலும் கூட இந்த பேக்டீரியா காணப்படுகிறது.

வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளில் இந்த பாக்டீரியாவைக் கொண்டுபோய் விட்டால் மழை பெய்யும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

அமெரிக்காவின் மொன்டானா பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் இந்தக் கண்டுபிடிப்பை "சயின்ஸ்' என்ற பத்திரிகையில் சமீபத்தில் பிரசுரித்துள்ளனர். பல்கலைக்கழகப் பேராசிரியர் டேவிட் சேண்ட்ஸ் இந்த பேக்டீரியாக்கள் குறித்து விளக்கும்போது இவை 84 டிகிரி பாரன்ஹைட்டுக்கு மேல் வெப்பம் இருந்தால் வளராது என்கிறார்.

மேகம் குளிர்ந்து மழை பெய்ய ஆரம்பித்தவுடன் இந்த பேக்டீரியாக்கள் அவற்றிலிருந்து இறங்கி ஏதாவது ஒரு தாவரத்தின் இலை மீது படிந்து அங்கேயே தங்கிவிடும். சில வேளைகளில் எந்த தாவரத்தின் மீது விழுந்ததோ அதன் இலையிலிருந்து தனக்கு வேண்டிய உணவை எடுத்துக்கொண்டுவிட்டு அதை அழுகும்படி விட்டுவிடும். மழை பெய்யும்போதெல்லாம் இந்த பேக்டீரியா தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் என்று விஞ்ஞானி தெரிவிக்கிறார்.

 

http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1205739713&archive=&start_from=&ucat=2&