1. காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான் அவன் யார்?
2. எட்டாத ராணி இரவில் வருவாள். பகலில் மறைவாள் அவள் யார்?
3. நடந்தவன் நின்றான். கத்தியை எடுத்து தலையைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார்?
4. வால் நீண்ட குருவிக்கு வாயுண்டு. வயிறில்லை. அது என்ன?
5. அம்மா போடும் வட்டம்,பளபளக்கும் வட்டம்,சுவையைக் கூட்டும் வட்டம். சுட்டுத் தின்ன இஸ்டம். அது என்ன?
6. வெள்ளை ஆளுக்கு கறுப்புத் தலைப்பாகை. அது என்ன?
7. ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர். அது என்ன?
8. சலசலவென சத்தம் போடுவான், சமயத்தில் தாகம் தீர்ப்பான். அவன் யார்?
9. தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான். அவன் யார்?
10. வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை. அது என்ன?

 

விடைகள்:
1. தென்னைமரம்
2. நிலா
3. பென்சில்
4. அகப்பை
5. அப்பளம்
6. தீக்குச்சி
7. கண்ணீர் 
8. அருவி
9. தொலைபேசி
10. செருப்பு