மனித வராலாறு 60 லட்சம் வருடத்துக்குட்பட்டவை. ஆனால் மனித வரலாற்றை 2000 ஆண்டுகளாக காட்டுவது கிறிஸ்தவ ஆதிக்க பண்பாட்டு தொடர்ச்சியாகும். இயற்கையின் வரலாற்றை மறுத்த மனிதன்,

மனித வரலாற்றை இயற்கை வரலாறாக காட்டுவது போல் மனிதவரலாற்றை மறுத்து, மேற்கின் கிறிஸ்தவ ஆதிக்கத்தை மனித வரலாறாக கட்டுவதே இந்த புதுவருட கூத்துகள்.  கிறிஸ்து பிறந்ததை அடிப்படையாக கொண்டு வரையறை செய்யும் இந்த வரைமுறை, மேற்கின் பொருளாதார ஆதிக்கத்தால் உலகமயமாகின்றது. மனித வராற்றில் எத்தனையோ பண்பாடுகள் எத்தனையோ கலாச்சாரங்கள் (ஒவ்வொரு மக்கள் பிரிவுக்கும் வேறுபட்ட புதுவருடம் உண்டு) இருந்த போதும் அவைகளை; மேற்க்கின் காலனித்துவம் தொடங்கி; இன்றைய ஏகாதிபத்திய ஆதிக்க பண்பாடடு வழிகளில் மறுத்து கொண்டப்படுவதே புதுவருட கூத்துக்கள்.

 

இந்த கிறிஸ்தவம் புதுவருடத்தை வரையறுத்து அடையளப்படுத்திய 2000 ஆண்டு உலகம் அழிந்து போகும் என்று மதப்பிரச்சரத்தை அதன் கொண்டாட்டத்தின் ஊடாக செய்தனர். இதையே பன்னாட்டு நிறுவனம் தனது வர்த்தக நலன் சார்ந்து கம்யூட்டர் உடாக அழிவை பிரமிக்க வைத்தனர். 1999 க்கு அடு;த்தது 2000 என்பது வெறும் எண் என்பதை மறுத்து இந்த மாற்றம் மனிதனுக்கு புறம்பான (கற்பனையான) சக்திகளுக்கு உட்பட்டதாக பிரமிக்கவத்தே இதை அரங்கேற்றினர். இதன் மூலம் மதப்பிரச்சாரத்தை மதவாதிகளும், பன்நாட்டு நிறுவனங்கள் வர்த்தக விளம்பரத்தையும் இந்த அழிவு மிரட்டல் ஊடாக சாதித்தன. இதன் போது வர்த்தக சூறையாடலுக்கு உருவாக்கிய சொந்த கண்டுபிடிப்புகளையே கேலிசெய்த படியேதான் இந்த விளம்பரத்தை மெருகேற்றினர்.

 

மேற்கு நாடுகளிலும், மற்றை நாடுகளின் முன்னணி தலைநகரத்திலும் பணத்தை கோடிகோடியாக வாரியிறைத்து புதுவருட கொண்டாட்டத்தை ஏகாதிபத்திய பண்பாடாக்கினர். பொருளாதாரரீதியாக வசதியான ஏகாதிபத்திய ஆதரவு பிரிவுகளின் கொண்டாட்டம் உலகெங்கும் பண்பாடகிப் போன வக்கிரத்தின் பின்னால் இன்னொரு உலகம் இரத்த கண்ணிர் வடிக்கின்றது.

 

ஒவ்வொரு நாட்டிலும் ஏகாதிபத்திய பண்பாட்டு நடிகர் நடிகைகள் தொடங்கி வைக்க இந்த பண்பாட்டு கலைஞர்கள் முன்னிற்க அந்நாட்டு தலைவர்கள் இரண்டாவது வரிசையில் நின்று புதுவருட வாழ்த்துகளை கூறி கொண்ட போது பன்னாட்டு நிறுவனங்கள் தமது சந்தைக்கான விளம்பரத்தை இலவசமாக சர்வதேசமயமாக்கியது. இந்த வக்கிரத்தின் பின்னால ஒரு உலகம் மூச்சுவிட நேரமின்றி அழுகின்றது.

 

புதுவருடம் கிறிஸ்தவ பொருளாதார ஆதிக்க பண்பாடு இன்று ஏகாதிபத்திய பண்பாட்டால் கொண்டாப்படுகின்ற போது, இந்த புதுவருடம் பிறந்தையே தெரியாது போன மக்கள் கோடிக்கானக்கில் வாழும் சூனியமான உலகமிது. கொண்டாத்தின் போது கோடிக்கானக்கில் மிதமிஞ்சிய வகையில் உண்டும் குடித்தும் வீணாக நாசமாக்கிய இரவு, 150 கோடி மக்கள் இரவு பட்டினியுடன் இந்த கொண்டத்துக்காக கொண்டாடும் ஐனநாயகவாதிகளுக்காக, தனது வயிற்றை வழமைபோல் சுருக்கி கொண்டனர். ஏகாதிபத்திய புதுவருடம் பிறந்த அந்த வினாடிக்கு முன்பின்னாக 48 மணியளத்தில் உலகில் 3332  பச்சிளம் குழந்தைகள் தமது முதல் ஏழு நாட்களுக்குள்ளாகவே பட்டினியில் துடித்து  சாகின்ற போது, அவர்கள் இந்த கொண்டாத்துக்கு தமது பாலையே தியாகம் செய்தனர். அதே நேரம் ஒருலட்சம் பேர் 48 மணித்தியலத்தில் பட்டினியில் செத்து போகின்றனர். முதல் பத்து நோய்காரணமாக மருந்து வாங்க பணமின்றி உலகில் இந்த 48 மணித்தியலத்தில் 2.9 லட்சம் பேர் இறந்து போகின்றனர்.  இந்த குழந்தைகளின் உறவினர் 50 கோடி பேர் குறைந்த பட்சம் தண்ணீரைக்கூட குடிக்க முடியாது தாகத்தால் தவிர்த்த போது  இதை மறுத்தவன் வில்லங்கமாக வயிற்றை நிரப்பிய போதையில் வக்கிரத்தை வெளிப்படுத்தினர்.

 

எல்லா தலைநகரத்திலும் ஏகாதிபத்திய புதுவருடம் தொடங்கிய போது வாணவேடிக்கைக்கு இடையே பெண் அரைகுறை நிர்வண ஆட்டத்தை ஆடவைத்து ஆணாதிக்கத்தை உலகமயமாக்கினர். ஆனால் புது வருடத்துக்கு முதல் நாளும் அடுத்த நாளும் இந்த வக்கிரத்தால் உருப்பெற்றவர்கள் பெண்களை கற்பழிக்கின்றனர். அமெரிக்காவில் ஒன்றரை நிமிடத்தக்கு ஒரு பெண் கழிபழிக்கபடுகின்றாள் எனின், 1920 பெண்கள் இந்த புதுவருடத்துக்கு முன் பின் என 48 மணித்தியாலத்தில் கற்பழிக்பட்ட போது புதுவருடம் அப்பெண்ணுக்கு ஆணாதிக்கமாகவே பிறந்திருக்கும். உலகில் எத்தனை பெண்கள் இந்த ஆணாதிக்க புதுவருடத்தை சொந்த அனுபவத்தின் ஊடாக கண்டிருப்பர்.

 

முதல்குழந்தை பிறப்பது பற்றிய பிரமிப்புகளும், அதற்கு அள்ளிக் கொடுக்கும் பரிசுகளும் சுரண்டும் ரிக்கற்றை சுரண்டிப் பார்க்கும் சுரண்டும் வக்கிரத்தை கொட்டியது. முதல் குழந்தை பற்றி வருணைகள் பின் பட்டினியில் பிறந்தவுடன் செத்து போன எந்த குழந்தையையும் காட்டிவிடுவதில்லை. புதுவருடம் பிறந்த அந்த நிமிடமே  இரண்டு குழந்தைகள் தமது முதல் ஏழு நாட்களுக்குள் இதை கொண்டாடுபவர்களின் நல்வாழ்வுக்காக தம்மை அந்தநிமிடம் தியாகம் செய்தனர். இதில் பிறந்தவுடன் தியாகம் செய்தவர்களையும் உள்ளடக்கும்;. அதே நேரம் புதுவருடம் பிறந்த அந்த நிமிடம் தொடங்கி ஒவ்வொரு நிமிடமும் கொண்டாட்ட முழக்கத்துகிடையே ஒரு தாய் இந்த புதிய ஏகாதிபத்திய   நுகர்வு வருடத்துகாக தனது பிரசவத்தின் போதே தியாகம் செய்து செத்து போகின்றாள்.

 

புதுவருடத்தில் முதல் கற்பழிப்பு, முதல் பட்டினிச் சாவு, முதல் மருந்தின்றி சாவு, முதல் குடிக்க தண்ணிர் இன்மையின் அவலம், முதல் பிரசவ இறப்பு, முதல் குழந்தையின் பிரவச இறப்பு என்ற மனித அவலமும்  முதல் ஏகாதிபத்திய புதுவருட முதல் நிமிடத்தில் நிகழத்தான் செய்தது. இது தொடாந்து ஒவ்வொரு நிமிடமும் தெடாந்த வண்ணம் தான் இந்த புதிய வருடம் நகருகின்றது. இதே போல் நிறம், சாதி, இனம், மதம் ஆதிக்கத்தல் முதல் படுகொலையும், முதல் அவமானமும் தொடரத்தான் செய்கின்றது. இது இரத்தக் கண்ணீரில் இந்த கொட்டும் வக்கிர இசை மழையில், ஆடிக்காட்டும் நிர்வாண ஆட்டத்தில், வெடித்து அதிர்ந்து செல்லும் ஓசையில் புதைந்து போகின்றது. இந்த கொண்டாட்ட வெளிறிப் போன வெளிச்சத்தில் வெளிறிப் போகின்றது. இந்த ஏகாதிபத்திய சமுதாயத்தின் தொடர்ச்சியை போற்றித்தான் புதுவருடம் கொண்டாடப்படுகின்றது. உலகில் எந்த மனிதனும் புதுவருட மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்ததில்லை. எந்த மனிதனுக்கும் (முதலாளிகளைத் தவிர) புதிய வாழ்வும், நம்பிக்கையையும் புதுவருடம் கொடுத்துவிடுவதில்லை. மாறாக மேலும் அவலம் காத்திருப்பதையே யதார்த்த வாழ்வாக கொள்கின்றான்.

 

இந்த வெம்பிப் போன கொண்டாத்தை சந்தைப்படுத்தியதில் பன்நாட்டு நிறுவனங்கள் வெற்றி பெறுகின்றன. ஆடம்பரமாக தின்னவும், குடிக்கவும், பரிசளிக்கவும், கூத்தடிக்கவும் கற்றுக் கொடுத்த இப்புதுவருடம்  பல ஆயிரம் கோடிகளை கோடிஸ்வரர்களுக்கு அள்ளிக் கொடுத்தது. இந்த பண்பாடு அடுத்த நூற்றாண்டில் மக்களை சுரண்டி கோடிகளை திரட்ட கதவை திறந்துள்ளதை இந்த பன்னாட்டு நிறுவனங்கள்  தமது கொண்டாத்தினூடாக வெளிப்படுத்துகின்றன. இதற்காக கோடிக்கான மக்கள் தம்மை தியாகம் செய்வதன் ஊடாக, இந்த கொண்டாட்டம் அழகுபடுத்தி கவர்ச்சி காட்டுகின்றது. ஆனால் புகைந்து கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தின் தீ பற்றும் போது இந்த ஏகாதிபத்திய புதுவருடத்தின் பொய்மை பொய்த்து போகும்;. இந்த ஏகாதிபத்திய புதியவருடத்துக்காக தியாகம் செய்யும் கோடிக்கணக்கான மக்கள் புதியவாழ்வை அந்த புதிய வராலாற்றில் புதிய புதுவருடமாக்குவர். அதுவரை இந்த விபச்சார புதுவருடங்கள் அழகு காட்டும் கவர்ச்சி காட்டும். இதை கண்டு மயங்கி விபச்சாரம் செய்வது பண்பாடாகும்.

1.1.2000