காபி குடித்தால் ஈரல் புற்றுநோயை தடுக்கலாம்
மிலான் நகரின் மருத்துவ பல்கலைக்கழக டாக்டர்கள் காபி குடிப்பவர்கள் மற்றும் காபி குடிக்காதவர்களிடம் ஆய்வு நடத்தினார்கள். கிரீஸ், இத்தாலி, ஜப்பான் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் தினம் ஒரு கப் அல்லது 2 கப் காபி சாப்பிடுகிறவர்களுக்கு ஈரல் புற்று நோய் வரும் ஆபத்து மிகக்குறைவு என்று தெரிய வந்துள்ளது. காபி பிரியர்களுக்கு ஈரல் புற்றுநோய் வரும் வாய்ப்பு மற்றவர்களை விட 41 சதவீதம் குறைவு என்று டாக்டர்கள் தங்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

ஈரல் தசைகளில் உள்ள செல்கள் பாதிக்கப்பட்டு அவை சிதைவடைவதாலும் தாறுமாறான வளர்ச்சியாலும் ஈரல் புற்றுநோய் ஏற்படுகிறது.