குளிர்காலம் தொடங்கிவிட்டாலே அழையா விருந்தாளியாக வந்துவிடுகிறது 'ஜலதோஷம்'.

இந்த அவதியில் இருந்து விடுபடுவதற்கு, வீட்டில் சமையலுக்கு உபயோகப்படும் பொருட்களே போதுமானது.

வெள்ளைப் பூண்டின் சில பற்களை பாலில் போட்டு வேகவைக்க வேண்டும். பின்னர், அதை மஞ்சள் தூளுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் என்ற விருந்தாளி மூன்று நாட்களுக்குள் சென்று விடுவார்.

இல்லையேல் பூண்டு, சிறிது புளி, மிளகாய் வத்தல் ஆகியவற்றை எண்ணெயில் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டால்கூட ஜலதோஷம் நீங்கிவிடும்.

 

http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=11101