உலகில், மனிதனின் உயிரைப் பறிப்பதில், இதய நோய்க்கும் குறிப்பிடத்தக்க பங்குண்டு. சீனாவில் மட்டும், இப்போது, ஆண்டுக்கு 26 இலட்சம் பேரை அது பலி வாங்குகிறது. ஒவ்வொரு 12 விநாடியில், ஒருவர் இதயநோயினால் மரணமடைகிறார் என்று, மூத்த சீன மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவிக்கிறார். இதய நோயின் பலி வாங்கும் விகிதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆண்களை பொறுத்த அளவில் 2.3 விழுக்காடாகவும் மகளிரைப் பொறுத்தமட்டில் 1.6 விழுக்காடாகவும் அது இருப்பதாக, பீகிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மக்கள் மருத்துவ மனையின் இதய நோய்த் துறை இயக்குநர் ஹூ தாயி தெரிவிக்கிறார். இவர், 30 ஆண்டுகளாக இதய நோய் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

 

சீனாவில், 1960 களில் இதய நோய் மிக அதிகமாக நேரிட்டதற்கு, உயர் அமுக்கமே காரணம், 1990 களில், தொலஸ்ட்ரால் அதிகரிப்பே காரணம் என்கிறார் அவர். "அனைத்து கொலஸ்ட்ராலும் மோசமானவை அல்ல" என்று மருத்துவர்கள் ஒருமித்த கருத்துக்கு வந்துள்ளனர். சீனாவில், 1990 களில், கொலஸ்ட்ரால் மிக கூடுதலாக இருப்போரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. ஆண்களில் 33 விழுக்காட்டாகவும் பெண்களில் 32 விழுக்காடாகவும் இது காணப்படுகிறது என்று ஆய்வாளர் தெரிவிக்கின்றனர்.
இதய நோய் தடுப்பு பணியில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், தீவிரமான சிக்கலை சீனா எதிர்கொள்ள நேரிடலாம் என்று ஹு தாயி கருத்து தெரிவிக்கின்றார். உலகில், ஆண்டுதோறும், ஒரு கோடியே 70 இலட்சம் இதய நோயினால் மரணம் அடைவதாக, உலக நலவாழ்வு அமைப்பு தெரிவிக்கிறது.
இதய நோய் தலைவிரித்தடுவதற்கு என்ன காரணம்? மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றமும் காரணம் என்கிறார் ஹூ தாயி. கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், கலோரி ஆகியவை அதிகமாக உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்வது ஒரு காரணம். உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, அலுவலகத்தில் காணப்படும் அமுக்கம் இந்த இரண்டும் முக்கிய காரணங்களாகின்றன. ஊணச் சதை, நீரிழிவு நோய், இவையும் இதய நோய் அதிகரிப்புக்கு காரணமாகின்றவாம். புகை பிடிப்பது, இதய நோய்க்குக் சாதகமாக அமையலாம். சீனாவில், இயல்பான உடல் எடைக்கு அதிகமாக எடை கொண்டோரின் எண்ணிக்கை 27 கோடியாகும். இத்தகைய பிச்சினைகளைத் தீர்ப்பதில், சீன அரசு முனைப்புடன் ஈடுபட்டுள்ளது.