உயிருள்ள எந்திரமனிதன்

 

சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்தப் பொறியாளர் இதற்காக உருவாக்கிய செல்கள் ஸ்லைம் வார்ப்பில் சிறப்பாக வளர்க்கப்பட்டவை. இந்த செல்கள் ஒளியைக் கண்டு ஓடி ஒளிபவை. அந்தத் தன்மையை ஸெளனர் பயன்படுத்திக் கொண்டு, நட்சத்திர வடிவில் செல்லை வளர்த்து, அதை ஆறுகால்களைக் கொண்ட ரோபோவுடன் இணைத்து விட்டான். நட்சத்திர செல்லின் ஒவ்வொரு முனையும் ஒரு ரோபோ காலுடன் இணைக்கப்பட்டு, ரோபோவின் இயக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது. அந்த ஒற்றை செல்லின் ஒரு பகுதி மீது வெள்ளை லேசர் ஒளிக் கற்றையைப் பாய்ச்சும் போது, அந்த செல் வெளிச்சத்தைக் கண்டு பயந்து அதிர்கிறது. அந்த அதிர்வுகள் ஒரு கம்ப்யூட்டருக்குள் செலுத்தப்படுகின்றன. அதற்கேற்ப அந்தக் கம்ப்யுட்டர், ரோபோவின் தொடர்புடைய காலுக்கு சமிக்ஞைகளை அனுப்பி இயங்கச் செய்கிறது. ஒற்றை செல் வார்ப்பில் பல்வேறு பகுதிகள் மீது ஒளிக்கற்றைகளை மாற்றி மாற்றி பாய்ச்சம் போது, வெவ்வேறு கால்கள் இயங்குகின்றன. இதை ஒரு ஒழுங்கான முறையில் செய்யும் போது ரோபோ நடக்கிறது.

 

ஸெளனரின் இந்தக் கண்டுபிடிப்புக்கு ஒத்துழைத்வர்கள் ஜப்பானின் கோபெ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள். அவர்கள், உயிரி செல்களை ரோபோவில் பயன்படுத்துவது பற்றி, ஆராய்ச்சி செய்துவந்தனர். ஸெளனர், போபோக்களை இயக்க கம்ப்யூட்டர் புரோகிராமிங் கட்டளைகளுக்குப் பதிலாக மூலகங்களைப் பயன்படுத்தலாமா என்று ஆராய்ச்சி செய்து வந்தார். இரண்டு உயிருள்ள ரோபோ—எந்திரமனிதன் பிறந்து விட்டான். இதில் ஒரு புதுமை என்ன வென்றால், ரோபோவை இயக்கும் செல்லில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், அது தன்னைத் தானே சீர்படுத்திக் கொள்ளுமாம். இதனால் எந்திரமனிதன் சுதந்திரமாக இயங்க முடிகிறது. கம்ப்யூட்டரின் அடிமைத்தளையில் இருந்து விடுதலை பெற்றுவிடுகிறான. எப்படி என்றால், ஒரு கம்ப்யூட்டரில் நாம் ஒரு புரோகிராம் செலுத்துகிறோம். அந்த புரோகிராம்படி செயல்படா விட்டால் எர்ரர் என்று சொல்லி மூடிவிடுகிறோம். அந்தப் பிரச்சினை இந்த உயிரி செல் ரோபோவில் இல்லை. அது தானாகவே செயல்படுகிறது.

 

ஆனால், இந்த சுதந்திரம் அளவுக்கு மீறி போய் விட்டால் ஆப்த்தில முடியுமோ. ஏனென்றால், உயிருள்ள செல்லின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போய், கம்ப்யூட்டர் புரோகிராம் உதவியுடன் அவசரநிலை பிறப்பிக்க வேண்டிய அவசியம் வந்து விடக் கூடாதே.

 

http://tamil.cri.cn/1/2006/03/13/This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.