மனிதகுல மீட்சியின் விலை - ஹைச்ஐவி (HIV)

 

இன்று எயிட்ஸ் என்ற தேய்வு நோய் மனிதகுலத்திற்கே சவாலாக அமைந்துள்ளது. அதற்கு காரணமாகும் ஹைச்ஐவி நச்சுயிரின் வரவு பல மில்லியன் காலத்திற்கு முற்பட்ட வரலாறு உடையது என்ற ஆய்வை இங்குஅறிய இருக்கிறோம்.

 

கோமாரி நோய் வீட்டுவளர்ப்பு கால்நடைகளை அதிகமாக பாதிக்கின்றது. இந்நோய் மனிதர்களை பாதிப்பது மிகமிக அரிதான ஒன்றே. வைரஸ் என்ற நச்சுயிரி ஒர் இனத்தின் மேல் நோய் ஏற்படுத்த காரணமாக இருக்குமே ஒழிய இன்னொரு இனத்திற்கு அதே நோய் ஏற்படுத்தும் காரணியாக இருக்காது என்பது அரைகுறையாக புரிந்து கொள்ளப்பட்ட உண்மையாகும்.

 

மனிதரில் இல்லாத ஆனால் சிம்பன்ஸி மற்றும் கொரில்லா குரங்குகளின் மரபணுக்களில் எஞ்சியுள்ள நச்சுயிரியை அறிவியலாளர்கள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இவ்வகை நச்சுயிரிகளிடமிருந்து மனிதர்கள் எதிர்ப்பு சக்தியை பெற்றிருக்கின்றனர். இதற்கு மாறாக, மனித உடலில் உயிரூட்டத்துடன் இல்லாத அவ்வகை நச்சுயிரிக்காக ஏற்பட்ட எதிர்ப்புசக்தியின் பரிணாம வளர்ச்சியே இன்றைய ஹச்ஐவிக்கு தோதாக மாறியிருக்கலாம்.

 

குரங்குகளும் மனிதர்களும் பல்வேறு நச்சுயிரிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவைகளில் சில ரெட்ரோ வைரஸ் எனப்படும் நச்சுயிரிகளாக மனித உயிரணுக்களில் கலக்கின்றன. இத்தகைய ரெட்ரோ நச்சுயிரியின் பரவல் அது பாதித்திருக்கும் குரோமசோம்களில் விட்டுச் செல்லும் எச்சங்கள் முன்னோர்களிடமிருந்து பரவும் ரெட்ரோ நச்சுயிரி என அழைக்கப்படுகிறது. இத்தகைய முன்னோர்களிடம் இருந்து பரவுதலுக்கு நமது மரபணுக்கள் சாட்சிகளாகும்.

 

http://tamil.cri.cn/1/2007/09/24/This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.