இலங்கை, மொத்தம் 65,610 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் ஏறக்குறைய 2 மிலியன் ஹெக்டெயர் அல்லது 30 வீதம் விவசாய நிலமாகும். அநேகமாக 75 வீத விவசாய நிலம் சிறுநில உடைமையாளர்களின் கீழும், ஏனையவை பெருந் தோட்டங்களின் கீழும் காணப்படுகின்றன. சிறுநில உடைமையாளர்கள் வசம் காணப்படும் மொத்த நிலங்கள் ஏறக்குறைய 1.8 மிலியன் ஆகவும் இதில் 90% ஆனவை 2 ஹெக்டெயர் பரப்பிலும் குறைந்தவையாகக் காணப்படுகின்றன. 70% சிறு நிலங்கள் பயிர் செய்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதேவேளை, எஞ்சியவற்றில் பயிர் செய்கையும், கால்நடை வளர்ப்பும் கலந்து நடைபெறுகின்றன. சில நிலங்கள் தனியாக கால்நடை வளர்ப்புக்கு மாத்திரம் பயன்படுத்தப்படுகி்ன்றன.

 

மழை வீழச்சி மற்றும் சாய்வுக் கோணங்களின் அடிப்படையி்ல் இலங்கை மூன்று பிரதான விவசாய காலநிலை வலயங்களாகப் பிரிக்கப்படுகின்றது. அவையாவன, தாழ்நிலம், இடைநிலம் மற்றும் மலைநாடு ஆகும். தாழ்நிலமும், இடைநிலமும் ஈரவலயம், இடைநிலை ஈரவலயம் மற்றும் உயர்வலயம் என மேலும் மூன்று பிர்வுகளாக பிரிக்கப்படுகின்றன.

விவசாயத்துறையானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 16.8 வீதம் பஙகளிப்பு செலுத்துகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கால்நடை உபதுறை 1.2% பஙகளிப்பு வழங்குகிறது. 

 

நாட்டிற்குள், ஏறக்குறைய 1.5 மிலியன் பசுக்கள், 0.3 மிலியன் எருதுகள், 13 மிலியன் கோழிகள் மற்றும் 0.08 பன்றிகளும் செம்மறி ஆடு, வாத்து மற்றும் ஏனைய இனங்கள் சிறு எண்ணிக்கையிலும் காணப்படுகின்றன.

 

இலங்கையில், அநேகமாக எல்லா பிரதேசங்களிலும் கால்நடைகள் பரந்து காணப்படுகின்றன. கலாசாரம் சந்தை முறை மற்றும் விவசாய காலநிலை காரணங்களால் குறிப்பிட்ட பகுதிகளில் விசேட பண்ணை முறைகள் காணப்படுகின்றன. பாற்பண்ணைத் துறையில் ஈடுபடுவதற்கு தனியார் துறைக்கும் பல்வேறு ஊக்குவிப்புகள் வழங்கப்படுகின்றன.