Font size: Decrease font Enlarge font
image

வாஷிங்டன்,ஜுன். 30-

உலகம் முழுவதுமே விவசாய உணவு பொருட்களின் உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளது. பல பயிர்களில் முன்பு இருந்த விளைச்சலை விட குறையாக உள்ளது.  தேனீக்கள் பெருமளவு அழிந்து விட்டதுதான் காரணம் என்று அமெரிக்காவை சேர்ந்த விவசாய நிபுணர் ராபர்ட் எட்வர்ட்ஸ் கூறி இருக்கிறார்.

அவர் கூறியதாவது:-

 

விவசாய விளைச்சலுக்கு தேனீக்கள், சிறு பூச்சிகள், வண்டுக்கள் போன்றவை மிகவும் உதவியாக இருக்கின்றன. அவற்றில் தேனீக்கள் பங்கு அதிகம்.  தாவரங்களின் பூக்கள் மீது தேனீக்கள் அமர்ந்து தேன் குடித்து விட்டு அடுத்த பூவின் மேல் அமர்கிறது. இதன் மூலம் ஏற்படும் மகரந்த சேர்க்கையால்தான் விளைச்சல் நடக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக தேனீக்கள் பெருமளவு அழிந்து விட்டன. விவசாயிகள் அதிகமாக பூச்சி மருந்துகளை பயன்படுத்துதல், இயற்கை சூழ்நிலை மாற்றம் ஆகியவற்றால் தேனீக்கள் அழிந்து விட்டன. சமீப காலத்திலேயே 35 சதவீதத்துக்கு மேல் தேனீக்கள் அழிந்து இருக்கின்றன.

இதனால் தாவரங்களின் மகரந்த சேர்க்கை சரியாக நடக்கவில்லை. இதன் விளைவால் உலகம் முழுவதுமே விவசாய உற்பத்தி கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.  நான் எனது பண்ணையில் வெள்ளரி பயிரிட்டு இருக்கிறேன். இதில் பாதி விளைச்சல்தான் கிடைக்கிறது. மகரந்த சேர்க்கை சரியாக நடக்காததுதான் இதற்கு காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

உணவு உற்பத்தி வீழ்ச்சியால் உலகம் முழுவதுமே விலைவாசி உயர்ந்து வருகிறது. கடந்த 3 ஆண்டில் மட்டும் 93 சதவீதம் விலைவாசி உயர்ந்து இருப்பதாக உலக பாங்கி தெரிவித்து இருக்கிறது.

http://www.viparam.com/index.php?news=14211