ஐக்கிய நாட்டு நிதிப் பத்திரிக்கையான பாப்பூலை வெளியிட்டுள்ள செய்தியில் 15 வயது முதல் 20 வயதுக்குட்பட்ட ஒன்றரைக் கோடி பெண்கள், ஒவ்வொரு வருடமும் குழந்தையைப் பெற்று எடுக்கின்றனர். இதில் 15 வயதுக்குட்பட்ட பெண்களின் கருஅழிப்பு மற்றும் கருச்சிதைவு பற்றிய தரவுகள் உள்ளடங்கவில்லை.31


திருவனந்தபுர மருத்துவ மனையில் நடக்கும் கரு அழிப்பில் 12 சதவீதம் திருமணம் ஆகாத பெண்களுக்கு நடக்கின்றது. சுகாதார அமைச்சகத்தின் தகவல் படி, 1997-இல், நடந்த 41,000 கரு அழிப்பில் 21.7 சதவீதக் கரு அழிப்புகள் 15 வயதுக்குக் கீழ்ப்பட்டோருக்கு நடந்துள்ளது. (23.9.1998)34


இந்தியாவில் ~~டீன் ஏஜ் அபார்ஷன்கள்||, ~~ஆபத்தின் பிடியில் இளமைப் பருவம்|| என்ற தலைப்புகளில் தில்லியில் 1994-இல், சிறுமிகளின் கரு அழிப்பு 676-ஆக அதிகரித்தது. இது 1991-இல், 278 மட்டுமேயாகும்;. சென்னை மருத்துவ மனையொன்றில் செய்த 16,000 கரு அழிப்பில் 20 சதவீதம் திருமணம் செய்யாத சிறுமிகளுக்கு நடந்துள்ளது. மும்பாய் பர்ல் சென்டர் மருத்துவமனையில் நடந்த 25,000 கரு அழிப்பில் 15 சதவீதம் சிறுமிகளுக்கு நடந்தது ஆகும். (6.4.1995)34


கருஅழிப்பில் கூட ஏகாதிபத்தியத் தலையீடுகள் எப்படி ஊக்கியாகச் செயல்படுகின்றது எனப் பார்ப்போம். இந்தியாவில் பஞ்சாப்பும், ஹரியானாவும் ஏகாதிபத்தியத்தால் திணித்த பசுமைப் புரட்சியை அதிகம் பின்பற்றிய மாநிலங்கள் ஆகும். இங்குதான கரு அழிப்பும் வேகமாக அதிகரித்துள்ளது. ஏகாதிபத்தியம் விவசாயத்தில் கருஅழித்து உற்பத்தியைச் சிதைத்தது போல், மனிதனின் இயற்கை வளத்தைச் சிதைப்பதிலும் ஆழமாக ஊடுருவியது. 1978 முதல் 1983 வரை பெண் சிசு என அடையாளம் கண்டு 78,000 கருக்கலைப்புகள் நடந்துள்ளன.


சிசுவில் ஆண், பெண் தெரிவைக் கண்டறியும், முதல் மருத்துவமனை இந்தியாவிலே பஞ்சாபில்தான் முதன்முதலில் தொடங்கப்பட்டது. பஞ்சாபிலுள்ள பெண் மருத்துவர்களில் 84 சதவீதத்தினர் கருக்கலைப்பு மருத்துவராகத் தொழில் செய்கின்றனர். இதைச் சமூகத் தொண்டு என விளக்கமும் கொடுக்கின்றனர்.


தமிழகத்தில் நிலமற்ற கள்ளர்கள் கடந்த 15 ஆண்டுகளாகத் தமது பெண் குழந்தைகளை ஒடுக்கி வருகின்றனர். கடந்த 25 வருடமாகத்தான் இச்சமூகத்தில் சீதனமும் நுழைந்தது. பசுமைப் புரட்சியும், அதன் பண்பாடும் இதன் ஊக்கியாகியது. ஆணுக்கு 13 ரூபாய் கூலியையும், பெண்ணுக்கு 6 ரூபாய் கூலியையும் வழங்கியதால் ஆண் - பெண் பிளவு ஏற்பட்டது. ஏகாதிபத்திய ஆணாதிக்கப் பசுமைப் புரட்சியால் ஆண் - பெண் பிளவை நிரந்தரமாக்கியும், அதிக சீதனத்தைக் கோரியும், பெண்ணின் உழைப்பைச் சமூகப் பெறுமதி அற்றதாக்கியும் பெண்களைக் கொடுமைபடுத்தியது. இவையனைத்தும் ஏகாதிபத்திய ஆணாதிக்கப் பசுமைப் புரட்சியால் விளைந்தது ஆகும்5


ஏகாதிபத்தியப் பண்பாடும், உலகமயமாதல் நாகரிகமும் பொருளாதார ரீதியில் ஊடுருவுகின்ற போது அதுவே சமூகத்தைச் சிதைக்கத் தொடங்குகின்றது. சிறுவர், சிறுமிகளின் அறிவு என்பது மழுங்கடிக்கும் இன்றைய ஏகாதிபத்தியப் பண்பாடான சீரழிவுப் பாலியலும், விளம்பரத்தின் ஊடாக நுகர்வுப் பண்பாடும் போதைகளாகி வக்கிரமாக வீங்கிவிடுகின்றது. ஆரோக்கியமான பாலியல் கல்விக்குப் பதில், பாலியல் வக்கிரத்தை பெற்றுக் கொள்பவர்கள் வயதுக்கு மீறிய பாலியல் நடத்தையில் ஈடுபடுகின்றனர். திரைப்படம், விளம்பரம், செய்திப் படங்கள் என எங்கும் இந்த உறவைத் தூண்டும் ஊடகங்கள் எம்முன் சமூகமயமாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டு, அதன் சீரழிவுக்குள்ளாகும் சிறுமிகள் கரு அழிப்புக்கு உள்ளாவது அதிகரிக்கின்றது.


அண்மையில் பிரான்சில் கணிசமான சிறுமிகளின் கருத்தரிப்பதைத் தொடர்ந்து பாடசாலையில் இலவசமான கருத்தடை, கருஅழிப்பு மாத்திரை வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது. கரு தரிப்பதற்கான காரணத்தைப் புரிந்து இந்த ஏகாதிபத்தியப் பண்பாட்டுக் கலாச்சாரத்தை மாற்றி அமைப்பதற்குப் பதில் இதை வளர்த்தெடுக்கக் கருஅழிப்பு குளிசையை (மாத்திரையை) வழங்கி மேலும் சமூகத்தை இதே பாதையில் கழுத்தைப் பிடித்து தள்ளுகின்றனர். இதுவே உலகின் பல பாகங்களில் பொதுவான நிலைமையாக உள்ளது. சிறுமிகள் கருத்தரிப்பது என்பது எந்த நாட்டுக்கும் விதிவிலக்கற்ற விடயமாக உள்ளது. நாலு அல்லது ஐந்து வயதிலேயே மேற்கில் பாலியலை வக்கிரமாகக் குழந்தை புரிந்து கொண்டு அபிப்பிராயமும் அல்லது விளக்கமும் தருவதற்குக் கற்றுக் கொள்கின்றது.


பாடசாலை மாணவன் ஒருவன் நான் வேலை செய்யும் இடத்தில் பயிற்சி பெறும் மாணவனாக வந்த போது, அவன் எமது நாட்டு ~நீலப்படம்| (புளுபிலிம்) வேண்டும் என்றான். நான் எம் நாட்டில் அது இல்லை, அத்துடன்  அது சட்டப்படி தடை செய்யப்பட்டது என்ற போது, அவன் ~~இது சர்வாதிகாரத் தன்மையான சமூகம் என்றும் ஐனநாயகமற்ற தன்மை|| என்றும் கூறினான். இந்த வகையில்தான் பாலியலையும், ஜனநாயகத்தையும், சர்வாதிகாரத்தையும் அவனுடைய இளமைக்காலம் புரிந்து வைத்துள்ளது. ஆரோக்கியமான பாலியல் கல்விக்குப் பதில் ஏகாதிபத்திய நுகர்வுப் பொருளாதாரப் பண்பாட்டிற்கு இசைவாகப் பாலியல் வக்கரித்து போகின்ற போது அதனால் ஏற்படும் பண்பாடு, கலாச்சாரம் சிறுவர், சிறுமிகளின் பாலியல் வக்கிர நடத்தைகளுக்கும், சிறுமிகளின் கருத்தரிப்புகளுக்கும் வித்திடுகின்றது. இதை மேலும் புள்ளி விபரமாகச் சிறுவர் பகுதியில் ஆராய்வோம்.