1970-இல், 2 கோடியே 14 இலட்சம் குடும்பங்கள் இருந்த அமெரிக்காவில் இன்று 4 கோடியே 58 இலட்சம் குடும்பங்கள் உள்ளன. அமெரிக்காவில் திருமணம் ஆகாத பெண்களின் எண்ணிக்கை 1970-ஐ விட இன்று எட்டு மடங்காக அதிகரித்துள்ளது. இன்று திருமணம் செய்யாது 50 இலட்சம் பெண்கள் வாழ்கின்றனர். அதாவது 25 சதவீதம் பெண்கள் திருமணம் செய்யாமல் உள்ளனர். இப்படி வாழ்வோரில் 36 சதவீதம் பேருக்கு 15 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளது. 10 சதவீதம் பெண்கள் விவாகரத்துக்குப் பின் மீளத் திருமணம் செய்கின்றனர்.55


பிரான்சில் திருமணத்துக்கு வெளியில் குழந்தை பிறப்பை கீழ்க்கண்ட வரைபடத்தில் பார்ப்போம். (338-1996)43

 

 

இனி பிற நாடுகளிலும் திருமணத்திற்கு வெளியில் பிறக்கும் குழந்தைகளை அட்டவணை: 39-இல் காணலாம்.74


அட்டவணை - 39


நாடு                                 சதவீதம்

ஐஸ்லாந்து                      58 %

 

 

சுவீடன்                              50 %
டென்மார்க்                      47 %
நார்வே                               44 %
எஸ்தோணியா              38 %
நியூசிலாந்து                   38 %
கனடா                               35 %
பிரான்ஸ்                          35 %
இங்கிலாந்து                   32 %
அமெரிக்கா                     31 %
ஜப்பான்                               1 %


திருமணத்துக்கு வெளியில் குழந்தை பெறுவதைத் தவறாக நினைப்போர்.77


அட்டவணை - 40


நாடு                                   சதவீதம்
ஐஸ்லாந்து                          3 %
பிரான்ஸ்                               8 %
ஜேர்மனி                               9 %
ஸ்பெயின்                          21 %
இங்கிலாந்து                      25 %
கனடா                                   25 %
அமெரிக்கா                        47 %


கனடாவில் 1961-இல், குழந்தைகள் உள்ளடங்கிய குடும்பம் 65 சதவீதமாக இருந்தது. இது 1995-இல், 44.5 சதவீதமாக குறைந்துள்ளது. அதே நேரம் திருமணத்துக்கு வெளியில் சேர்ந்து வாழ்தல் 1981-இல், 3,55,000-ஆக இருந்தது 1995-இல், 9,97,000 மாக அதிகரித்துள்ளது. 31 திருமணத்துக்கு வெளியில் 1970-இல், பிரான்சில் 6.4 சதவீதம் குழந்தை பிறப்பு இன்று (1996) 39 வீதமாக உள்ளது. (1998)1 பிரான்சில் 1990-இல், 1,35 கோடி குடும்பங்கள் இருந்தன. 77 இலட்சம் குழந்தைகள் இருந்தனர். 33 இலட்சம் பெண்கள் கணவரை இழந்து காணப்பட்டனர். 13 லட்சம் பெண்கள் விவாகரத்து செய்து இருந்தனர். 10 இலட்சம் குழந்தைகள் விவாகரத்துக் குடும்பத்தில் ஒரு பெற்றோரிடம் வாழ்ந்தனர். இதில் 90 சதவீதம் தாயுடன் வாழ்ந்தனர். 14 இலட்சம் குழந்தைகளின் பெற்றோர் விவாகரத்து செய்து மீள் திருமணம் செய்ததன் மூலம், இக்குழந்தைகளுக்கு அரை சகோதரர், சகோதரிகள் உள்ளனர். இதில் 85 சதவீதம் குழந்தைகள் புதிய பெற்றோருடன் வாழ்கின்றனர்.70 சதவீதமான விவாகரத்து பெண்களால் கேட்கப்பட்டவையாகும்.52 (பக்கம் 11,12)


பிரான்சில் எப்படி 15 வயதுக்கு மேற்பட்ட மனிதர்கள் வாழ்கின்றனர் எனப் பார்ப்போம்.6 பக்கம்-25


அட்டவணை - 41


ஆயிரத்தில்                 திருமணம்                திருமணம்            விதவை           விவாகரத்து           மொத்தம்
                                     செய்யாதோர்                செய்தோர்                                           பெற்றோர்
பெண்                                6,138                            12,550                    3,254                       1,260                         23,201
சதவீதம்                          26.5 %                            54.1 %                   14.0 %                        5.4 %                        100  %
ஆண்                                 7,189                            12,703                    647                            938                         21,477
சதவீதம்                          33.5 %                            59.1 %                     3.0 %                         4.4 %                        100  % 


பிரான்சில் மக்கள் எப்படி வாழ்கின்றனர்? எனப் பார்;ப்போம்.72
அட்டவணை- 42


வகைகள்                                                      சதவீதம்
சேர்ந்து வாழ்தல் (குடும்பமாக)              89 %
தனித்தனியாக                                                   6 %
பொதுவாகச் சாதாரணமாக வாழ்தல்     3 %
மற்றவை                                                              2 %


பிரான்சில் இருபது வயதுப் பிள்ளை யாருடன் வாழ்கிறது? என ஆராய்வோம்.72
அட்டவணை - 43


எப்படி                                  சதவீதம்
குடும்பமாக                           58 %
தனியாக                              22.2 %
பெற்றோருடன்                   7.2 %


ஐரோப்பாவில் மக்கள் எப்படி உள்ளனர் என ஆராய்வோம்.75
அட்டவணை - 44


மக்களின் நிலை                                          சதவீதம்
தனியாக                                                              10 %
குடும்பமாக (பிள்ளை இன்றி)                  21 %
குடும்பம் பிள்ளைகள்   1,2                          47 %
குடும்பம் பிள்ளைகள் 3-இக்கு மேல்   22 %


பிரான்சிலுள்ள குடும்பங்களில் பிள்ளைகளின் எண்ணிக்கை.78
அட்டவணை - 45


பிள்ளைகள் எண்ணிக்கை சதவீதம்
1                                      43.8 %
2                                      36.1 %
3                                      14.4 %
4                                        3.8 %
5-ஐ விட அதிகம்     2.2 %


மேலே உள்ள புள்ளிவிபரங்கள் திருமணம், திருமணத்துக்கு வெளியில் வாழ்தல், குழந்தைகளைப் பெற்றெடுத்தல் போன்ற பல விபரத்தை உள்ளடக்கியுள்ளது. பாரம்பரிய மத, நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவத் திருமணங்கள் தகர்ந்து போகின்ற நிலையில் சேர்ந்து வாழ்தல் அதிகரிக்கின்றது. திருமணம் அல்லாத நிலையில் குழந்தைகளைப் பெற்று எடுத்தல் சமூகக் குற்றமாக இருப்பதில்லை. திருமணம் அல்லாத முறையில் பெண்கள் வாழ்தல் அதிகரித்து செல்லுகின்றது. இது குடும்பத்தைப் புதிய வடிவில் ஒழுங்கமைக்கின்றது. சேர்ந்து வாழ்தல் அல்லது ஒருவருடன் நட்பு என ஒன்றாக இல்லாமல் தொடருதல் என்ற வடிவங்கள் பொதுப்போக்காகின்றது.


இது ஆணாதிக்கத்தைத் தகர்க்கும் போராட்டத்தில் உருவான வடிவங்கள் அல்ல. மாறாக 1970-களின் பின் ஏற்பட்ட சுதந்திரம் தொடர்பான பார்வையுடன் உலகமயமாதல் ஏற்படுத்திய தாக்கம்தான் அவர்களின் சொத்துகளைத் தகர்த்தது, குடும்பத்தையும் தகர்த்தது.


மேற்கில் ஏற்பட்ட இந்த நிலைமை ஜப்பானில் ஏன் ஏற்படவில்லை? என்ற கேள்வி மிகமுக்கியமானதாகும்;. சொத்துரிமையைத் தகர்ப்பதில் மேற்குக்கும் ஜப்பானுக்கும் அதிக வேறுபாடு இருக்கவில்லை. ஆனால் மேற்கில் உலகமயமாதலின் ஏகாதிபத்தியத் தன்மை மக்களின் பண்பாடாக்கப்பட்டது. அதாவது உலகைச் சூறையாட உருவாக்கிய வடிவங்கள் மக்களின் நீண்ட விழிப்புணர்ச்சிக்கான போராட்டத்துடன் சமமாகவே மாற்றம் கண்டது. ஆனால் ஜப்பானில் மக்களின் போராட்டம் பின்தங்கிய நிலையில், அதாவது நிலப்பிரபுத்துவ, மதவாத ஆதிக்கத்துக்குட்பட்ட நிலையில் இருக்க, அப்பண்பாட்டுக்குள் காலனிகளை உருவாக்கி மேற்கைவிட அதீதமான ஊக்குவிப்பின் ஊடாக அறிவியல் கண்டுபிடிப்புகளை நடத்தி ஏகாதிபத்தியமயமாதலைச் செய்ய முடிந்தது. ஜப்பானின் சொத்துரிமையற்ற வர்க்கம் தனது வர்க்கநிலையில் இருந்து விழிப்புற்று போராடாத வரலாற்றின் கீழ்நிலைப் பாத்திரம்தான் ஏகாதிபத்திய விளைவுகளைக் கூட வெல்லமுடியாத தன்மையைப் புலப்படுத்துகின்றது. உலகின் தீவிரமான வர்க்கப் போராட்டம் தான் இடைநிலை வர்க்கப் பிரிவுகளின் கோரிக்கைகளை நிறைவு செய்து, ஆளும் வர்க்கங்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்கின்றது. ஜப்பானில் பாட்டாளிவர்க்கப் போராட்டம் வளர்ச்சி பெறாத நிலையில் இடைப்பட்ட பிரிவுகளின் கோரிக்கை வெற்றி பெறமுடியாத நிலை என்பது, ஏகாதிபத்திய உலகமயமாதலின் விளைவைக் கூடப்பெற முடியாமல் சமூகம், விழிப்புறாத் தன்மைக்குள் தரம் தாழ்கின்றது.


முதலாளித்துவம், பாட்டாளிவர்க்கம் என்ற சொத்தற்ற வர்க்கத்தை உருவாக்கியபோது, முதலாளித்துவத்துக்கு எதிரான பாட்டாளிவர்க்கப் போராட்டம் முதலாளித்துவத்தின் விளைவுகளைத் தனதாக்கியது. இந்தக் கோரத்தில் பாட்டாளிவர்க்கம் பல இடைநிலை வர்க்கத்தின் விடுதலைக்குத் தனது போராட்டத்தின் ஊடாகச் சலுகைகளை வழங்க நிர்ப்பந்தித்தது. இது ஜப்பானில் நிகழ்வதற்குப் பாட்டாளி வர்க்கப் போராட்டம் பின்தங்கிய போது, ஏகாதிபத்திய விளைவுகள் அந்த மக்களின் விடுதலைக்கு வழிகாட்டுவதுக்குப் பதில், மேலும் இறுக்கமான சமூக ஒடுக்குமுறையைப் பரிசளிக்கின்றது. இது பாரம்பரியக் குடும்பத்தினைப் பேணுவதை நிபந்தனையாக்குகின்றது. பாட்டாளி வர்க்கம் விழிப்புறாத வரை ஏகாதிபத்தியம் மற்றும் இடைப்பிரிவுகள் கூட வீங்கிப்போன ஏகாதிபத்தியப் பொருளாதார மாற்றத்தை, பண்பாட்டுக் கலாச்சார ரீதியிலான மாற்றத்தைப் பின்தங்கிய ஆளும் வர்க்கத்துக்குச் சார்பாகவே மாற்றுகின்றது. வர்க்கப் போராட்டம் எவ்வளவு தீவிரமாகின்றதோ அந்தளவுக்கு, இடைநிலை மற்றும் ஏகாதிபத்தியச் சக்திகளின் இடைநிலைக் கோரிக்கைகள் வர்க்கப் போராட்டத்தை மழுங்கடிக்க உருவாவது மனித வரலாற்றில் பொதுப்போராட்ட வடிவமாகும்.


இதை அமெரிக்காவிலும் காணமுடியும்.. அமெரிக்காவில் திருமணத்துக்கு வெளியில் குழந்தை பெறுவது அதிகரித்த சதவீதத்தில் கொண்டிருந்த போதும், அதைத் தவறாக நினைப்போர்களும் அதிகமாக உள்ளனர். வர்க்கப்போராட்டத்தின் கூர்மையான தன்மைகள் இதன் ஏற்றத்தாழ்வை உறுதி செய்கின்றது. அத்துடன் இடைநிலை வர்க்கத்தினைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளின் ஆதிக்கம் போன்றன இதை மட்டுப்படுத்துவதையும், தீவிரமாக்குவதையும் துல்லியமாக்கியது.


பிரான்சில் மொத்தக் குழந்தைகளில் கணிசமானவை இரண்டு பெற்றோரும் இன்றி வாழ்கின்றனர். இதே போல் கணிசமான குழந்தைகள் புதிய தாய் தந்தையுடனும், புதிய அரைச் சகோதர - சகோதரிகளுடனும் வாழ்வதைக் காட்டுகின்றது புள்ளி விவரங்கள். குழந்தைகளை வளர்ப்பதையும், விவாகரத்தைக் கோருவதையும் பெரும்பான்மையாகப் பெண்கள் கொண்டுள்ளனர்.


ஐரோப்பாவில் தனியாக வாழ்வது என்பது மிகக் குறைவானதாகும்.. நவீனப் பொருளாதாரம் தனிமனித வாதத்தையும், நுகர்வையும் தீவிரமாக்கிய போதும் தனித்து வாழக் கோரும் கண்ணோட்டம் பொதுவாக மக்களின் மனநிலைக்கு எதிரானதாகும். ஆணாதிக்கத்துக்கு எதிராகப் பூர்சுவா பெண்ணியல் வாதிகள் எழுப்பும் தனித்துவாழும் கோட்பாடுகள் மக்களின் இயற்கையான உயிராற்றல் மீது விடப்படும் சவாலாக உள்ளது. கூட்டுப்பொருளாதாரம், கூட்டான செயல்பாடு, கூட்டுச் சிந்தனை, கூட்டுப்புரட்சி என்று அனைத்துக்கும் சார்பான மக்களின் சித்தம், இன்றைய உலகின் சுதந்திர அமைப்பு மீது தன்னைப் புரட்சிகரமாக்கிப் புரட்சிக்கு அறைகூவுகின்றது.


தனித்து வாழும் கணிசமானோர்களில் குழந்தைகளால் கைவிடப்பட்ட அல்லது விலகிச் சென்ற பெற்றோரும், பெற்றோரிடம் இருந்து விலகிச் சென்ற அல்லது விலக்கப்பட்ட குழந்தைகளும்தான் பெரும்பான்மையானது. தனித்த வாழ்க்கை என்பது இந்த உலகமயமாதல் சித்தாந்த ரீதியாகப் புரிந்து கொண்டு, சிதைந்து போனவர்கள் மிகக் குறைவானவர்களே. இந்த வகையில் பெண்ணியக் கோட்பாட்டைப் பெற்ற அராஜகவாதிகள், ஆண் எதிர்ப்புடன் கூடிய பெண் சேர்ந்து வாழ்வதற்கு எதிரான பிரிவுகள் அனைவரும் சமூகக் கூட்டுக்கு எதிரான கண்ணோட்டம் கொண்ட பிரிவினர்களே.


மாறிவரும் சமுதாயம் தனது முதலாளித்துவ அமைப்பின் தோற்றத்துடன் மாறியதை லெனின் குடும்பம் பற்றி கூறுகையில் ''ஒரு புதுக் குடும்ப உருவம், பெண்களின் அந்தஸ்த்தில் புதிய நிலைமைகள், இளம் தலைமுறையினரை வளர்ப்பதில் புதிய நிலைமைகள் - இவை முதலாளித்துவத்தின் இன்றைய மிக உயர்ந்த உருவங்களால் தயாரிக்கப்படுகின்றன. பெண்கள், குழந்தை உழைப்பு, முதலாளித்துவத்தால் தந்தை வழிக் குடும்பம் உடைக்கப்படுவது ஆகியவை தவிர்க்க முடியாமல் நவீனச் சமுதாயத்தில் மிகவும் கொடுமையான, நாசகரமான, அருவருப்பான உருவங்களில் வெளிவருகின்றன. இருந்த போதிலும் ''வீடுகளுக்கு வெளியே சமூகமயமாக்கப்படும் பெண்களுக்கு, இளைஞர்களுக்கு, ஆண் - பெண் குழந்தைகளுக்கு ஒரு முக்கிய பாத்திரத்தை ''நவீனத் தொழில்கள்" அளிப்பதால், அது ஆண் பெண்களிடையே உறவுக்கும், ஓர் உயர்ந்த உருவத்திற்கான ஒரு புதிய பொருளாதார அடிப்படையையும் உண்டாக்குகிறது. டியூடோனிக் - கிறித்துவ வடிவக் குடும்பம் மாற்ற முடியாத இறுதி வடிவம் என்று கூறுவது, புராதன ரோமன், புராதனக் கிரேக்க அல்லது கீழ் நாடுகளின் வடிவங்கள் மாற்ற முடியாதவை என்று கூறுவதுபோல் அபத்தமானதாகும்."60 என்று கூறுகின்றார். இது இன்று உலகமயமாகும் ஏகாதிபத்திய வடிவத்துடன் அதே நிலையை அடைகின்றது. இது தனக்கே உரிய வடிவில் பெண்ணினதும், ஆணினதும் உறவை வளர்த்தெடுப்பதை நாம் மேலே புள்ளிவிபர ஆதாரத்துடன் பார்த்தோம்.
பிரான்சில் குழந்தை பெறும் தாய்மார் எப்படி வாழ்கின்றனர்? எனப் பார்ப்போம்.79

 
அட்டவணை - 46


எப்படி வாழ்கின்றனர்?                                                                      சதவீதம்
தனியாக வாழ்தல்                                                                                    7 %
சிகரெட் குடித்தல் (ஒரு பாக்கெட்டுக்கு மேல்);                     25 %
திருமணத்தின் ஊடாக வாழ்தல்                                                    60 %
திருமணம் செய்யவில்லை ஆனால் ஒன்றாக வாழ்தல்  31 %
வேலை செய்தல்                                                                                    60 %


இது பிரான்சில் தாய்மையடையும் பெண்களின் பொதுத்தன்மையாக உள்ளது. ஆணும் பெண்ணும் சேர்ந்த நிலையில் வாழும் வாழ்க்கையில் குழந்தையைப் பெறுவது 91 சதவீதமாக இருக்க, 7 சதவீதம் தனியாக இருந்தபடி குழந்தையைப் பெறுகின்றனர். இவை சேர்ந்து வாழாத, ஆனால் நட்பான அல்லது ஒப்பந்த உறவால் ஆணுடன் இக்கருத்தரிப்பு நிகழ்கின்றது. இச்சமூக அங்கீகாரம் இதற்கு எதிராக இருப்பதில்லை. அதேநேரம் 60 சதவீதமான பெண்கள் (வேலையில்) தொழிலில் ஈடுபடுகின்றனர். 25 சதவீதமான பெண்கள் மோசமாகப் புகைப்பவர்களாகவும் இருப்பது குழந்தையின் உடல் ஆரோக்கியத்துக்கு எதிராக உள்ளது. குழந்தை சட்டப்படியான திருமணத்துக்கு வெளியில் 38 சதவீதம் சுயேட்சையான தெரிவால் நிகழ்கின்றது. இங்கு மரபான குடும்பச் சுமையைச் சந்திப்பது மட்டுப்படுத்தப்படுகின்றது. அதேபோல் சட்டப்படியான திருமணக் குடும்பத்தில் குழந்தை பிறப்பு ஆணாதிக்க மரபான தளத்தில் நிகழ்வதில்லை.