அமெரிக்காவில் பால் அமாடோ என்ற பல்கலைக் கழகப் பேராசிரியர் விவாகரத்து தொடர்பாகச் செய்த ஆய்வில் சேர்ந்து வாழும் குடும்ப விவாகரத்தை விட, திருமணம் செய்த குடும்ப விவாகரத்து 300 சதவிகிதம் அதிகமாகும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலிய பத்திரிக்கை சிட்னி மார்னிங் ஹொஸ்டு இது போன்ற ஒரு தகவலையும் வெளியிட்டுள்ளது. திருமணத்தில் உருவாகும் குடும்பத்தின் கடமை, உரிமை தொடர்பான கோரிக்கை அதிகமாக, தனிமனித வாதம் முதன்மை பெற்று சமூகக் கூட்டை மறுத்து பிரிவும், முரண்பாடுகளும் திருமணத்தின் பொதுப்பண்பாகின்றது. சேர்ந்து வாழும் குடும்பத்தில் கடமை, உரிமை பின்தள்ளப்பட்டுக் கூட்டுவாழ்வு முதன்மை பெறுவதால் நட்பும், சேர்ந்து வாழும் சமூகத்தன்மையும் அதிகரிக்கின்றது.

 

 

பாலியல் திருப்தி இன்மையால் விவாகரத்து செய்வோரைப் பார்ப்போம்.69
அட்டவணை - 25


நாடுகள்                      சதவீதம்
பிரான்ஸ்                       31 %

 

 

 கிரீஸ்                           22 %
அயர்லாந்து                21 %
nஐர்மனி                       20 %
லுக்ஸ்சம்பேக்          20 %
ஸ்பெயின்                   18 %
இத்தாலி                       18 %
இங்கிலாந்து               18 %
போர்ச்சுக்கல்             17 %
டென்மார்க்                 17 %
பெல்ஜியம்                  16 %
நெதர்லாந்து               13 %

 
மேலே உள்ள புள்ளி விபரம் பாலியல் திருப்தியின்மையால் நடக்கும் விவாகரத்துகளைச் சுட்டிக் காட்டுகின்றது. இது இன்று பாலியல் பற்றிய ஏகாதிபத்திய வியாபார உத்திக்குள் பாலியல் வக்கிரத்தை அடையும் பாய்ச்சலில் கூட, விவாகரத்தில் பாலியல் அம்சம் மிகத் தாழ்வாகவே உள்ளது. பாலியல் பற்றிய சிறந்த கல்வி, மனிதரை மனிதர் மதிக்கும் கம்யூனிசச் சமூகத்தில் சுயநிர்ணய உரிமையைக் கையாள்வதில் உள்ள சமூகம் பற்றிய பார்வையில் பாலியல் பிளவு என்பது இல்லாது அருகிவிடும்.


பெண்ணியல் அமைப்புகள் பொதுவாகப் பாலியலை முதன்மைப்படுத்தி விவாகரத்தை ஊதிப்பெருக்கிக் காட்டும் வாதங்களை இப்புள்ளிவிபரம் தகர்க்கின்றது. ஒருதார மணத்தில் பாலியல் அம்சம் ஆண்சார்ந்து இருப்பதால் பெண்ணின் பாலியல் உணர்வைச் சூறையாடியது. முதலாளித்துவத்திற்கு அடுத்த ஏகாதிபத்தியமயமாதலால் பெண் ஆனாதிக்கமயமாகின்றாள். இந்நிலையே பெண்ணை விபச்சாரத் தளத்திற்குள் தள்ளியது. இது பெண்ணின் பாலியல் அம்சத்தில் புதிய நிலையை அடைந்துள்ளது. பெண் ஆணைப் போல் நுகர்வது சாத்தியமான ஏகாதிபத்திய நாடுகளில், பெண் குடும்பத்தில் அல்லது வெளியில் பாலியல் என்பது நேரடியான ஆணாதிக்க விடயமாக ஆண் சார்ந்திருப்பது அற்றுச் செல்லுகின்றது. மாறாக ஆணாதிக்கம் நுகர்வாகப் பரிணாமித்தலில் இருந்து பெண் சந்தையின் ஒரு பண்டமாக இருக்கும் போது அவளின் ஆணாதிக்க நிலை அவளை நுகரக் கோருகின்றது. இது ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் செய்யமுடியாத போக்கில் பாலியல் நெருக்கடி புதிய வடிவமாக மாறுகின்றது. அதாவது ஆணை விபச்சார நிலைக்குக் கீழ்ச் சென்று அடையும் நுகர்வுப் பண்பாடு, பாலியலின் புதிய நெருக்கடியாகும்.


குடும்பத்தைப் பொறுத்த வரையில் ஏகாதிபத்திய நுகர்வுக் கலாச்சாரமும், பலதை நுகரக் கோரும் பாலியல் பண்பாடும் குடும்பத்தின் விவாகரத்தில் பாரிய விளைவை ஏற்படுத்தவில்லை. பாலியல் திருப்தியின்மையைக் காரணமாகக் கூறிய விவாகரத்துகள், மற்ற காரணத்தைவிட மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே நிகழ்கின்றது. பாலியலை முதன்மைப்படுத்தும் ஆணாதிக்கப் பெண்ணியக் கோட்பாடுகள் எதார்த்தத்தில் தவறானவை என்பதை நிறுவுகின்றது. ஏகாதிபத்திய நுகர்வுப் பாலியல் அல்லாத சமுதாயத்தில் பாலியல் விவாகரத்து என்பது வக்கிரமற்ற தன்மையில் அநேகமாக இவை விபத்தாகவே இருக்கும். இன்று விபத்திற்குப் பதில் நுகர்வு விவாகரத்தாகப் பாலியலில் நீடிக்கும் வரை, பாலியல் திருப்தி என்பது ஆண் பெண்ணுக்கு இந்த ஆணாதிக்கச் சமுதாயத்தில் தொடர்வது நீளும். நாம் விவாகரத்துத் தொடர்பாகத் தொடர்ந்து ஆராய்வோம்.


அட்டவணை - 26
வகை/நாடு          பெல்ஜியம்       ஜெர்மனி      கிறீஸ்     பிரான்ஸ்    இத்தாலி     போர்ச்சுக்கல்      இங்கிலாந்து
1970-1974                0.8 %                    1.5 %                0.4 %          0.9 %              0.4 %                  0.1 %                       1.6  %
சராசரி
1995                          3.5 %                     2.1 %              1.1 %             2 %                0.5 %                   1.2 %                       2.9 %


10,000 பேருக்கான விவாகரத்தைப் பார்ப்போம்.70


அட்டவணை - 27


நாடுகள்                             எண்ணிக்கை
ஸ்பெயின்                                   8
ஜெர்மனி                                    18
பிரான்ஸ்                                    20
ஆஸ்திரியா                              21
பெல்ஜியம்                                21
பின்லாந்து                                24
டென்மார்க்                               24
சுவீடன்                                       25
இங்கிலாந்து                            30


பிரான்சில் நடக்கும் விவாகரத்தைப் பார்ப்போம்.52 பக்கம்-29
அட்டவணை - 28

 

1. மொத்த விவாகரத்துகள்

2. 1970-இல் விவாகரத்து குறியீடு 100 எனில் 

3. 100 திருமணத்துக்கு விவாகரத்துகள் 

4. 1970-இல்100 எனில் சதவீத வளர்ச்சி

ஆண்டுகள்                        1                      2                          3                              4
1970                                  37,447            100                      11.3                         100
1975                                  54,306            145                      16.0                         141 

1980                                  79,962            213                      22.5                         199 

1985                               1,05,962            283                     30.0                          265 

1986                               1,06,709            285                     30.6                          271 

1987                                104,997            280                     30.5                          270 

1988                                104,234            278                     30.8                          273


பிரான்சின் விவாகரத்து.71


அட்டவணை - 29
ஆண்டு                                       மொத்த விவாகரத்துகள்
1989                                                                  1,03,600
1993                                                                  1,09,200


பிரான்சில் சட்ட அமைப்பை நாடுவது யார் எனப் பார்ப்போம்.72


அட்டவணை - 30


எதற்காக?                                சதவீதம்
விவாகரத்து                                  28 % 
களவு                                                 -
விபத்து                                             -
ஏமாற்று                                        11 % 
சொத்துரிமை                             11 % 
வாங்குவது,விற்பது                10 % 
பத்திரிகைக்கு எதிராக           9 % 
வேலைப் பிரச்சனை               8 % 
மற்றவை                                    23 % 

 
மேற்கில் விவாகரத்துகள் 1970-களின் பின்பு வேகமாக அதிகரிக்கின்றது. நேரடியாக ஆணாதிக்கத்துக்கு எதிரான விவாகரத்துரிமை ஆணாதிக்கம் அல்லாத துறைக்குள் ஆழமாகி விடுகின்றது. மனிதர்களுக்கு இடையிலான கூட்டுக் சமூகக் கண்ணோட்டம் எந்தளவுக்கு இழிநிலை பாத்திரத்தை அடைகின்றதோ அந்தளவுக்கு விவாகரத்து சீரழிவாகின்றது. நிலப்பிரபுத்துவக் குடும்பம் பின்னால் முதலாளித்துவக் குடும்பமாகச் சீர்திருந்திய போது, அதைப் பொருளாதார அமைப்பு ஒழுங்கமைத்தது. இது முதலாளித்துவத் தேசியம் என்ற எல்லைக்குள் குடும்பம் என்ற வடிவத்தை ஒழுங்கமைத்தது. ஆனால் ஏகாதிபத்தியம் தனது உலகமயமாதலை வேகப்படுத்தும் போது தேசம் சிதைய அதனுடன் சேர்ந்து முதலாளித்துவக் குடும்பமும் சிதையத் தொடங்கியது. இது தேசம் கடந்த ஆதிக்கப் பொருளாதார அமைப்பை ஏற்படுத்த, குடும்பம் சிதைந்து தனிநபர் ஆதிக்க எல்லைக்குள் தனிமனித வாதம் அதிகரித்தது.


இந்தத் தனிமனிதவாத ஜனநாயகம் கூட்டான குடும்பத்துக்கு எதிராகத் தன்னை முன்நிறுத்திக் கொண்டது. இதன் மேல் நுகர்வுப் பண்பாட்டுப் பொருளாதாரம், குடும்பங்கள் எதையும் வி;ட்டுவிடாத நுகர்வை அடைய நிர்ப்பந்தித்தது. இதுவே குடும்பத்தைச் சிதைக்கும் புதிய வடிவமாகியது. ஆணும் பெண்ணும் தாம் புரிந்து கொண்ட உலகமயமாதல் எல்லைக்குள், நுகர்வுக் கண்ணோட்டத்துக்குள் புதிய முரண்பாட்டைச் சந்தித்தனர். இவை பேசி தீர்ப்பதுக்குப் பதில் முடிவான சில தீர்மானங்கள் மூலம், அதாவது தனிமனிதச் சுதந்திரம் பற்றிய பிரமைகளில் சிதைப்பது பண்பாகியது. இது புதிய பாலியல் நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றது. இதனால் விவாகரத்து விரிந்து செல்கின்றது.


இந்த விவாகரத்து வழங்கும் சலுகைகள், போலி விவாகரத்துகளை வேறு ஒரு கோணத்தில் வளர்ச்சி அடையச் செய்கின்றது. அதே நேரம் சலுகைகளைக் கொண்டு தனித்து சொகுசாக இருக்கமுடியும் என்ற கண்ணோட்டத்தில் திருமணம் செய்து விவாகரத்து எடுப்பது (செய்வது) அடையாளப்படுத்தப்படுகின்றது. அதாவது பொதுவாகப் பெண் விவாகரத்தின் பின் உழையாது சொகுசாக வாழ்ந்து கொள்ள அடிப்படையாகக் கொண்டு ஆணிடம் கோரும் விவாகரத்துப் பணம் சில இடங்களில் விவாகரத்தை ஆதாயமான விடயமாகக் கருதி விவாகரத்தை ஊக்குவிக்கின்றது. இவை மேற்கில் புதிய நெருக்கடிகளை உருவாக்குகின்றது. கடவுச்சீட்டு (ஏளைய) அற்றோர் கடவுச்சீட்டுக்காகத் திருமணம் செய்து விவாகரத்தெடுப்பது என்று பல வடிவ விவாகரத்துகள் நீடிக்கின்றது. இங்கு தனிமனிதச் சுதந்திரம் என்பது ஆணாதிக்கக் கறையால் வக்கரித்துப் போகின்றது.


பிரான்சில் மூன்றில் ஒரு குடும்பம் விவாகரத்து செய்கின்றன. இது பாரிசில் மூன்றில் இரண்டாக உள்ளது. வருடம் 1,20,000 விவாகரத்துகள் நடக்கின்றன. இது 1970-இல், 40,000 மட்டுமேயாகும்.


ஐந்தில் ஒரு விவாகரத்து ஐந்து வருடக் குடும்ப வாழ்க்கைக்குள் நடக்கின்றன. 73 சதவீதமான விவாகரத்துகள் பெண் கேட்டவையாகும். விவாகரத்துகளின் போது பிரிந்த குழந்தைகளில் 15 சதவீதக் குழந்தைகளை ஆண்கள் வளர்க்கின்றனர். (12.11.1998)1 விவாகரத்து நகரமயமாகும் போது நாகரிகத்தின் மையங்களான தலைநகரங்கள் விவாகரத்தின், சீரழிவின் வடிவங்களாகி விடுவது மேற்கில் விதிவிலக்கல்ல. இணைவும் பிரிவும் வேகமாக நடப்பதைப் புள்ளிவிபரம் துல்லியமாக்குகின்றது. இந்தளவுக்குப் பின்னும் பெண், ஆணாதிக்கத்திடம் விடுதலை பெற்றுவிட்டாளா? பாலியல் நெருக்கடி தீர்ந்துள்ளதா? எனின் இல்லை. மாறாக நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது. விவாகரத்து ஆணாதிக்கத்துக்கு எதிரானப் பொதுவாகப் பெண்ணின் உரிமை என்பது தலைகீழாகின்றது. ஆணும் விவாகரத்துக் கேட்குமளவுக்குப் பெண்ணின் ஆணாதிக்கமயமாதல் மற்றும் ஏகாதிபத்திய நுகர்வுமயமாதலுடன் கூடித் தனிமனிதச் சுதந்திரப் போலித்தனமான வாதங்கள் விசுவரூபமாகி வருகின்றது.


பொதுவாகக் குழந்தை மீதான உரிமையைப் பெண் கைவிட்டுச் செல்வது அதிகரிக்கின்றது. தாய்வழிச் சமூகத்தில் இருந்து தந்தைவழிச் சமூகம் வளர்ச்சி பெற்ற போதும், குழந்தையை ஆணின் வாரிசாக அடையாளம் கண்ட போதும் பெண்வழியில் குழந்தை உரிமை பாதுகாக்க பெண்ணின் போராட்டம் தீவிரமானதாக இருந்தது. இந்த உரிமையை அங்கீகரிக்காமல் எந்தமதமும், எந்த அரசும் தமது ஆணாதிக்க அமைப்பைப் பாதுகாத்துக் கொள்வது சாத்தியமற்றதாக இருந்தது. குழந்தை மீதான உரிமையைப் பெண் பெற்றிருந்த நிலையில் இதை ஏகாதிபத்திய உலகமயமாதல் ஆணாதிக்கம் பெண்ணைத் தீவிரமான தனிமனிதச் சிதைவுக்குள்ளாக்கிக் குழந்தையின் உரிமையைப் பெண் தானாகவே நிபந்தனையின்றி ஆணிடம் கைவிட்டுச் செல்வது தீவிரமாகியுள்ளது. தாய்மை மீதான பெண்ணின் எதிர்க் கண்ணோட்டம் பெண்ணுரிமைக்கு எதிரான போக்கில் பெண்ணியக் கோட்பாடுகள் தமது தனிமனிதக் குறுகிய எல்லைக்குள் உருவாக்கி ஆணாதிக்கமயமாகின்றனர். தாய்மை என்பது பெண்ணின் பாலியலைப் போல் ஆணுக்குச் சரணடையவைக்கும் அனைத்து ஆணாதிக்கச் செயல்களையும், கோட்பாடுகளையும் அம்பலப்படுத்திப் போராடாதவரை ஆணாதிக்கத்தை ஒழித்துக் கட்டமுடியாது.


அட்டவணை - 31


விவாகரத்துக்குப் பின் வாழும் நிலைமைகள் சதவீதத்தில்.71


வயது                                              தனியாக வாழ்தல்            சேர்ந்து வாழ்தல்                 மீள திருமணம்
35 வயது   வரை                                         51 %                                       34 %                                            15 %
35 - 39                                                             67                                      17%                                             16
40 - 44                                                             79%                                          9%                                             12
45 வயதிற்கு மேல்                                   90                                         5                                              5

விவாகரத்துகளின் பின் பாலியல் நெருக்கடி சார்ந்து மீளத் திருமணம் செய்தல் அல்லது சேர்ந்து வாழ்தல் என்பது வயதுக்குட்பட்ட ஒருமுக்கிய விடயமாகின்றது. பாலியல் நாட்டம் வயதுடன் குறைந்து செல்ல விவாகரத்தின் பின் ஆண் - பெண்ணின் சேர்ந்த வாழ்க்கை முற்றுமுழுதாகச் சிதைந்து போகின்றது. ஆண் - பெண்ணின் திருமணம், சேர்ந்து வாழ்தல் என்பது பாலியல் நோக்கம் ஒன்றுக்காக மட்டுமே என்றளவுக்கு மனிதப் பண்பாடுகள் சிதைந்து போகின்றன என்பதைக் காட்டுகின்றது. அதாவது இது ஒரு விபச்சாரியை நாடிச் செல்லும் வடிவத்திற்கு மாற்றாக நிரந்தரமான (திருமணத்தை) விபச்சாரத்தைக் குறிப்பிட்டு நிற்கிறது.
இரண்டு மனிதர்களுக்கு, அதாவது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமுதாயத்தில் சேர்ந்து சிந்திக்க, வாழ இருக்கும் எல்லையற்ற சமூகக் கண்ணோட்டமானது தனிமனிதச் சுதந்திர ஜனநாயகக் கட்டற்ற தனது வக்கிரத்தால் சமூகத்துக்கு எதிரான கண்ணோட்டத்தை ஏற்படுத்தி சிதைக்கின்றது. இரண்டு மனிதர்களுக்கிடையில் இருக்கும் பல்வேறு விடயத்தில் பாலியலும் ஒன்றே ஒழிய, பாலியலே எல்லாம் அல்ல. அதாவது காதல் ஒன்றே இந்தச் சமுதாயத்தின் எல்லாம் என்று கூறும் திரைப்படம் மற்றும் பிற்போக்கு எழுத்துகள் மனிதச் சிந்தனையாகி பாலியலே ஆண் பெண்ணின் வாழ்க்கையை இணைக்கின்றது. இது மற்ற அனைத்தையும் மறுதலிக்கும் குணாம்சத்துடன் மனிதச் சிந்தனை வளர்கின்ற போது, இதற்காக இணைவதும் பிரிவதும் பொதுப்பண்பாகின்றது.


இன்று ஆணாதிக்கப் பெண்ணியலாகி உள்ள பெண்ணியம் பலவும் பாலியல் அம்சத்தை முன்நிலைப்படுத்தி, அதில் பெண்ணின் உடற்கூறு மீதான கட்டுப்பாடுகள் பற்றிய பிரமைகளை விதைக்கும் போது, இது மேலும் பாலியல் அம்சமாகி ஆண் - பெண் உறவு சிதைகின்றது. ஆண் பெண் உறவு சமூகத்தில் உள்ள பல்வேறு மனிதக் கூட்டுச் செயல்பாடு போல் ஓர் அங்கமாகப் பார்க்க, அதில் விசேடமாக ஆண் - பெண் பாலியல் ஒரு நிகழ்வாக மட்டும் உள்ளதைப் பார்க்காதவரைப் பாலியலுக்காக இணையும் விபச்சாரக் கண்ணோட்டமானது ஆண் - பெண் உறவைத் தீர்மானிக்கவும், விவாகரத்து எடுப்பதை ஊக்குவிக்கவும் செய்யும். பின் இதற்காக இணைவதும் நிகழும்;. இந்தப் பாலியல் தேவையை அடைய வழியிருப்பின் (அது எந்த வகையான வக்கிரமாக இருந்தாலும்) இந்த இணைவு சமூகத்தன்மைக்கு எதிராக முன்நிறுத்தி பிளவுறுவது அதிகரிக்கும்.


மூன்றாம் உலக நாடுகளில் மேல்மட்ட வர்க்கப் பிரிவுகளில் பெண்ணின் பொருளாதார ஆதாரம், ஏகாதிபத்தியத் தரகுத்தனத்துடன் கூடிய நிலப்பிரபுத்துவக் குடும்ப எச்சமும் எப்படி பாதிக்கின்றன? எனப் பார்ப்போம். இந்தியாவில் 1990-இல், மத்தியதர வர்க்கத்துக்கு மேற்பட்ட பிரிவுகளிடம், அதாவது 3,000 ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் உடைய 20 வயதிற்கும் 35 வயதிற்;கும் இடைப்பட்டோரிடம் திருமணத்தில் நெருக்கடி என்றால் என்ன செய்வீர்கள் என இந்தியா டுடே - மார்க் நடத்திய ஆய்வை பார்ப்போம். (21.12.1996)34


அட்டவணை - 32


என்ன செய்வீர்கள்?    பதில் தந்தவர்கள்                                சதவீதம் 
பேசிச் சமரசம்                                                                                   53 சதவீதம்
விதியை நொந்து பிரச்சினையை மறப்பது                        20 சதவீதம்
ஆலோசகரிடம் ஆலோசனை                                                   11 சதவீதம்
விவாகரத்து                                                                                          8 சதவீதம்
பிரிந்து வாழ்தல்                                                                                8 சதவீதம்


இந்த மேல்மட்டச் சமூகக் கண்ணோட்டம் என்பது சேர்ந்து வாழ்தலுக்கு எதிராக உள்ளது. புள்ளி விபர ரீதியாக விவாகரத்து எண்ணிக்கை குறைவாக இருந்த போதும் மேற்கின் சராசரி விவாகரத்து புள்ளிவிபரம் அதிகமானது. அதாவது விவாகரத்தைப் பெற நினைக்கும் இந்திய மேட்டுக்குடியின் இளையதலைமுறையின் மனநிலை தனிமனித வாதத்தின் சமூக எதிர்ப்புக் கண்ணோட்டம் கொண்டு காணப்படுகின்றது. மனிதர்களுக்கிடையிலான முரண்பாடுகள் இயல்பானது. அவை பரஸ்பரம் புரிந்துணர்வுக்கு உட்பட்டது. இந்தப் புரிந்துணர்வு சமுதாயப் பிளவால் தீர்க்க முடியாத போதே விவாகரத்து ஜனநாயகப் பண்பாகின்றது. இதை மறுத்து அனைத்துக்கும் பிளவு என்ற கண்ணோட்டம் மனிதனின் சமூகக் கண்ணோட்டத்துக்கு எதிரானது.


எப்போதும் தனிமனிதச் சுதந்திரத்தைச் சமூகச் சுதந்திரத்திற்கு எதிராக நிலைநாட்டும் கண்ணோட்டம் மேட்டுக்குடிகளில் தலைவிரித்தாடுவதை இந்தப் புள்ளிவிபரம் காட்டுகின்றது. மேற்கில் நிகழும் திருமணங்களில் விவாகரத்து என்பது மூன்று திருமணங்களுக்கு ஒரு திருமணம் விவாகரத்தைச் சந்திக்கும் அதே நேரம், இந்தியாவில் பத்து திருமணங்களுக்கு ஒரு திருமணத்தை விவாகரத்திற்கு உள்ளாக்க தயாரான பண்பு, நிலப்பிரபுத்துவ இந்து ஆதிக்கப் பண்பாட்டால் கடிவாளம் இடப்படுகின்றது. தொடர்ந்து இந்த மேட்டுக்குடி பெண்கள் இந்து மேலாதிக்க நிலப்பிரபுத்துவப் பண்பாட்டின் சின்னங்களாகத் தொடரும் ஆணாதிக்க வாழ்க்கை திருமணத்தின் பின்னான விவாகரத்தை மட்டுப்படுத்துகின்றது. அதே நேரம் இந்த மேட்டுக்குடியின் ஒருபகுதி தரகுப் பண்பாட்டில் விவாகரத்தை விளையாட்டாகவும் பயன்படுத்துகின்றது. இந்தியா போன்ற நாடுகளில் விவாகரத்துரிமை என்பது மேட்டுக்குடியின் உரிமையாக அதுவும் மேட்டுக்குடி பெண்ணினது உரிமையாக உள்ளதே ஒழிய, அடிமட்டப் பெண்ணின் உரிமையாக இருந்ததில்லை. இதேபோல் மேட்டுக்குடியின் விவாகரத்து என்பது ஆணாதிக்கத்துக்கு எதிரான உரிமையாக அல்லது ஏகாதிபத்தியச் சீரழிவுப் பண்பாடாக இவ்விவாகரத்துரிமை தவறாகச் சீரழிக்கப்படுகின்றது.


அதேநேரம் விவாகரத்து அடிமட்டக் குடும்பத்தில் ஆணின் பலதாரத் திருமணத்தைச் சட்டப்படி செய்யும் ஆணின்; உரிமையாகச் சீரழிந்துள்ளது. ''ஊரெல்லாம் விவாகரத்து" என்ற தலைப்பில், உத்திரப்பிரதேசத்தில் பரத்கஞ்ச் கிராமத்தில் மூன்றில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 500 முஸ்லிம் பெண்கள் விவாகரத்துக்கு உள்ளாகியுள்ளனர். பெண்கள் கைவினையர் துணி நெய்யும் தொழிலாளராக இருந்த போது விவாகரத்து நடக்கவில்லை. இயந்திரம் புகுத்தப்பட்ட பின் பெண்கள் வேலையை இழக்க, வேலையற்ற பெண்களைக் கணவன் வைத்திருக்கத் தயாராக இல்லாததால் இவ்விவாகரத்துகள் நடந்துள்ளன. இந்த விவாகரத்து உச்சத்தில் செல்ல, அப்பெண்கள் அதே ஆண்களிடம் பொது விபச்சாரத்துக்கு உள்ளாகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. (19.11.1997)34


விவாகரத்துரிமை என்பது ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழமுடியாத ஒரே ஒரு நிலையில் மட்டும் கையாளப்பட வேண்டியது. ஆனால் இது பெரும்பான்மையாகத் தவறாகக் குறுகிய நோக்கில் கையாளப்படுவதைக் காணமுடியும். மேலுள்ள நிலைமையில் ஆணின் வேலையின்மை அல்லது பெண்ணின் வேலையின்மை எப்படி விவாகரத்தைத் தவறாகப் பயன்படுத்தவும், பெண்ணைப் பொது விபச்சாரத்துக்குள் தள்ளவும் இட்டுச் செல்லுகின்றது. பொருளாதார ரீதியாக நடக்கும் மாற்றம் விவாகரத்தை ஊக்குவிக்கின்றது. சமூகப் பொருளாதார மாற்றங்கள் திருமண உறவுகளில் நடக்கும் திடீர் மாற்றங்கள் பெண் உரிமையின் பெயரில் சுயேட்சையாக நிகழ்வதில்லை.


1800-களில் பெண்களை முதலாளித்துவம் வேலைக்கு அழைத்து வந்த போது ஆண் தொழிலாளர்கள் இதை எதிர்த்துப் போராடியபோது பல காரணங்களை முன்வைத்தனர். பெண் ஆணையும், குழந்தையையும் கவனிக்க முடியாத அதேநேரம் ஆணின் வேலையை, பெண் கவர்கின்றாள் என்று ஆண் தொழிலாளி குற்றம் சாட்டினான். அதேநேரம் ஆணின் சம்பளம் பெண்ணால் குறைந்து, பெண் வேலைக்கு வருமுன் இருந்த வாழ்க்கையை இழக்கவும் காரணமாகின்றது. இந்த வாதத்தில் எவ்வளவோ நியாயங்கள் இருந்த போதும் பெண்ணின் உரிமையை மறுக்கும் கண்ணோட்டம் இருந்தது. இதனால் கம்யூனிசத்தின் முதலாம் அகிலம் இதை விமர்சித்தது. அதே நேரம் தொழிலாளர் வர்க்கத்தின் நியாயமான வாதத்தை ஏற்றுக் கொண்டது.


பெண்ணை வெளியில், உழைப்பில் ஈடுபடுத்தியதன் மூலம் பெண் விடுதலை பெற்றுவிடவில்லை. மாறாக மேலும் நசிவுக்குள்ளானாள். முன்பு ஆணின் உழைப்பில் வாழ்ந்த பெண் ஆணின் கடமையை மட்டும் செய்ய வேண்டியிருந்தது. இன்றோ அதனுடன் சேர்த்து, முதலாளிக்காக உழைத்தும், முன்னாள் வாழ்க்கைத் தரத்தைப் பேணமுடியாது நசிந்து போனாள்;. இதனால் முதலாளித்துவம் தன்னை மேலும் ஏகாதிபத்தியமாக்கும் திசையில் வேகமாக முன்னேறியது. பெண் இரட்டைச் சுமையில் மேலும் ஆணாதிக்க வதையைச் சந்தித்தாள். முதலாளித்துவ அமைப்பு இன்று ஏகாதிபத்தியமாகத் தன்னை இன்றைய நிலைக்கு வந்துசேர பெண்ணைக் கடுமையாகச் சுரண்ட, பெண்ணை வீட்டுக்கு வெளியில் அழைத்து வந்து முதலாளித்துவம் அதற்குள் தன்னைத் தகவமைத்துக் கொண்டது.


எப்போதும் நன்மைக்கும் தீமைக்குமிடையில் வர்க்கங்களிடையிலான போராட்டமாக நிகழ்கின்றது. இதில் ஆதிக்க வர்க்கம் எப்போதும் இடைப்பட்ட தீர்வுகளைத் தனக்கு இசைவாகப் பயன்படுத்திக் கொள்கின்றது. விவாகரத்து போன்ற அனைத்துத் தீர்வுகளையும் ஆளும் வர்க்கம் சார்ந்த பிரிவுகளே தனது நலனுக்கு இசைவாக மாற்றிக் கொள்கின்றது. விவாகரத்துரிமை பெண்ணின் நலன் சார்ந்து நியாயமாகக் கோரி வெற்றிபெற்ற போதும் அதன் இன்றைய தன்மையில் ஆணாதிக்கத்துக்குச் சேவைசெய்வதாக மாறிவிடுகின்றது. இதை ஆண் பயன்படுத்தினாலும், பெண் பயன்படுத்தினாலும் ஆணாதிக்கப் பொருளாதார, பண்பாட்டு, கலாச்சார எல்லைக்குள்ளேயே விவாகரத்து சீரழிந்து, மலிந்து கிடக்கின்றது. உண்மையான விவாகரத்துரிமை பயன்படுத்தப்படுவது மிக அரிதாக அல்லது அது மறுப்பதாகவே இன்றைய விவாகரத்துரிமையும், விவாகரத்துகளும் உள்ளன.


விவாகரத்துச் சட்டத்தை மறுக்கும் ஆணாதிக்கம் எப்போதும் ஏகாதிபத்தியப் பண்பாட்டில் சட்டத்தைக் கீழ்த்தரமாகப் பயன்படுத்துகின்றது. ''தட்டினால் திறக்கப்படும்" என்ற தலைப்பில் தீவிரமாகப் போராடி வென்ற விவாகரத்து வெற்றி பற்றி இந்தியா டுடே எழுதுகின்றது. (10.7.1997)34 இந்தளவுக்கு மூன்றாம் உலக நாடுகளில் விவாகரத்து பெறுவது இலகுவான காரியமாக இருப்பதில்லை என்ற உண்மை ஒருபுறமும், அதேநேரம் இலகுவாகப் பெறும் வடிவம் மறுபுறமாகவும் விவாகரத்து விரிச்சல் கண்டுள்ளது. உண்மையில் விவாகரத்து தேவைப்படுவோருக்கு அது கிடைப்பதில்லை. விவாகரத்தை விளையாட்டாகப் பயன்படுத்துவோருக்கு இது ஏகாதிபத்திய ஆணாதிக்கச் சீரழிவாகச் சீரழிந்து போயுள்ளது.