book _5.jpgஆணாதிக்கத்தின் இன்னுமொரு வடிவமே முஸ்லிம் மதமாகும். வரலாற்று ஓட்டத்தில் கிறிஸ்தவத்துக்குப்பின் முஸ்லிம் மதம் உருவான போது, அக்காலத்துக்கே உரிய கிறிஸ்தவத்தை விட முற்போக்கான பாத்திரத்தை முஸ்லிம் மதம் ஆற்றியது. இது இருந்த சமூகத்தின் சில மூடப்பழக்க வழக்கங்கள் மீதான மாற்றத்துடன் சமுதாயத்தில் சில முன்னேறிய சீர்திருத்தத்தை முன்தள்ளியது. இது அக்காலத்துக்கே உரிய பல தீர்வுகளைச் சீர்திருத்தத்தினூடாக முன்வைத்தது. இந்த வகையில் பெண்கள் மீது மதத்தை நிலைநிறுத்தும் வடிவில் சில சீர்திருத்தத்தையும் முன்வைத்தது. கிறிஸ்தவம் தோன்றிய போது உந்தப்பட்ட சமூக ஆற்றலைப் பின்னால் அவை இறுகிய இயங்கியல் அற்ற இறுக்கமான ஒழுக்கமாக மாறிய போது, வளர்ச்சி இறுகி ஜடமானது.

இதுபோல் முஸ்லிம் மதமும் சமூகத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியபின் கிறிஸ்தவ மதத்திற்கு எது நடந்ததோ அதுவே இதற்கும் விதியாகியது. இன்று கிறிஸ்தவ மதம் பொருளாதார மாற்றத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் சிதைந்த போதும், மதத்துக்கு வெளியில் சமூகப் பாய்ச்சலைக் கண்டது. முஸ்லிம் மதம் பலம் பெற்ற நாட்டின் பொருளாதாரம், ஏகாதிபத்திய அமைப்பால் பாதுகாக்கப்படுவதால் தகர்ந்துவிடவில்லை. இதனால், அதைப் பாதுகாக்கும் ஆணாதிக்க மதப் பிற்போக்குகளால் பெண்ணின் இழிநிலை மிக ஆழமானதாகத் துன்பகரமானதாக மாறியது.


இதை நாம் திருக்குர்ஆன் மூலம் ஆராய்வோம். அத். 2:222-223 இல், ''அது ஒரு தூய்மையற்ற நிலை. ஆகவே, மாதவிடாய்க் காலத்தில் பெண்களை விட்டு விலகியிருங்கள். ....தூய்மையடைந்துவிட்டால் அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள்.... உங்கள் மனைவியர் உங்களுக்குரிய விளை நிலங்களாவர். எனவே, நீங்கள் விரும்பும் முறையில் உங்களுக்குரிய விளைநிலங்களுக்குச் செல்லுங்கள். மேலும் உங்களுடைய வருங்காலத்துக்காக முன் கூட்டியே ஏதாவது செய்து கொள்வதில் அக்கறை காட்டுங்கள்."19 பெண்ணின் மாதவிடாய் தூய்மையற்றது என்பது அறிவியல் ரீதியில் அன்று விதிந்துரைக்கப ;படவில்லை. ஏனெனின், அக்காலத்தில் மாதவிடாய் இரத்தம் வெளியேறும் ஒரு நிகழ்ச்சியாகவே கருதப்பட்டதுடன், மாதவிடாய்க்கான காரணம் அண்மைய கண்டுபிடிப்பாகும்;. இந்து மதம் மாதவிடாயைத் தூய்மையற்றதாகக் கருதி, பெண்களை விலக்கியது போலவே, இஸ்லாம் மதமும் விலக்கியது. மசூதிக்கு ஆண்கள் செல்வது போல் பெண்கள் ஒட்டு மொத்தமாகவே செல்லமுடியாத இரண்டாம் பிரஜையாக வாழ்வதும், இந்து மதத்தில் பார்ப்பனப் பெண்களே கோயில் உட்பகுதிக்குச் செல்ல முடியாத நிலையையும் இங்கு கவனத்தில் எடுப்பின், பெண்ணின் உரிமையில் மதங்கள் தமது பிற்போக்கைக் காட்டுவதைக் காணமுடியும்;. கிறிஸ்தவம், பெண்கள் பூசாகராக முடியாத ஆணாதிக்கம் போன்று எல்லா மதங்களும் பெண்ணை அடிமைப்படுத்தி வைத்துள்ளது. இதில் இருந்தே மாதவிடாய் போன்றவை பெண்ணின் இழிவாக்கப்பட்டு, அசுத்தமானதாகப் புனைந்து அதை ஆணுக்குப் போதிப்பதும், பெண்ணை ஒதுக்குவதும் அரங்கேறுகின்றது.


பெண்ணை விளை நிலத்துக்கு ஒப்பிடும் திருக்குர்ஆன் பெண்ணைப் பிள்ளை பெற்றுப்போடும் இயந்திரமாகவே கருதுகின்றது. சமுதாயத்தில் பூமியைத் தாயாகக் கருதி மதித்தபோது, பெண்ணின் தாய்மை அதையொட்டி மதிப்புக்குள்ளானது. இதன் பின்னால் பெண்ணை ஆணின் உரிமையாக்கி, சொத்தாக்கிய போது, குர்ஆன் பெண்ணின் உரிமையை மறுக்கின்றது. பெண் மீதான உரிமையை, ஆணுக்கு விலக்கப்பட்ட நிலைமைகள் தவிர்த்து, மற்றைய நிலைமைகளில் விரும்பியவாறு செயல்பட இஸ்லாம் கோருகின்றது. இங்கு பெண்ணின் உரிமை முற்றுமுழுதாகப் புறக்கணிக்கப் ;படுகின்றது. அத்துடன் வருங்கால ஆணின் வாரிசுகளை உருவாக்க இந்தப் பூமி பயன்படுகின்றது என்பதையும் சுட்டிக்காட்டி பெண், பாலியல் நுகர்வுக்கான ஊடகமாகவும், பிள்ளைபெறும் இயந்திரமாகவும் குர்ஆன் நிலைநிறுத்துகின்றது. காலத்தால் இன்று நாம் வெகு பின்தள்ளப்பட்ட நிலையில், குர்ஆன் கூற்றுகள், பெண் மீதான ஆணாதிக்கத்தை அதன் இறுகிய வடிவில் திணிக்கின்றது.


அத். 2-226-237 இல், விவாகரத்து மற்றும் சொத்துரிமை, பெண்ணின் நிலை தொடர்பாக வரையறுத்துள்ளதைப் பார்ப்போம். ''விவாகரத்து செய்யத் தீர்மானித்த ஆண் குறித்த தவணையில் விடுவிக்க வேண்டும்;. விடுவிக்காது துன்புறுத்தின் குற்றமாகும். இந்த விலகளுக்குப் பின், பெண் விரும்பின் வேறு ஒரு ஆணை மணப்பதைத் (மணந்து கொள்வதைத்) தடுத்தல் குற்றமாகும். பெண்ணின் விருப்பு மதிக்கப்பட கோருகின்றது. இந்த நிலையில் பால்குடிக்கும் குழந்தை இருப்பின் கணவனின் விருப்பப்படி குழந்தைக்கு இரண்டு வருடம் பால் கொடுக்க வேண்டும். அதேநேரம் குழந்தைக்கான செலவும், தாய்க்கான செலவையும் தந்தை கொடுப்பதுடன,; குழந்தையின் வாரிசுரிமை தந்தைக்குச் சேரும்;. இதில் இருந்து விலகின் பரஸ்பர விருப்புடன் விலகமுடியும்;. கணவன் இறந்தால் நாலுமாதம் பத்து நாட்கள் காத்திருந்த பின், மறுதிருமணத்தைச் செய்யமுடியும்;. பெண் கர்ப்பிணியாக இருந்தால் குழந்தை பிறக்கும் வரை காத்திருந்து திருமணம் செய்யமுடியும்;. இத்திருமணம் பகிரங்கமாகச் செய்யவேண்டும்;. இக்காலத்துக்கு முன் அலங்கரிப்பது தடைசெய்யப்பட்டது. விவாகரத்து செய்யும் ஆண் பெண்ணின் வாழ்வுக்கு அடிப்படையாக ஏதாவது கொடுக்கவேண்டும்;. திருமணத்துக்கு முன், கொடுக்கத் தீர்மானித்த பின், அப்பெண்ணுடன் உடலுறவு கொள்ளாது விவாகரத்து செய்யின் அவன் கொடுக்க ஒத்துக் கொண்டதில் அரைவாசியைக் கொடுக்க வேண்டும். கணவன் இறந்தால், அப்பெண் அவ்வீட்டில் வாழும் உரிமையை ஒருவருடம் அனுமதித்தது."19


முஸ்லிம் மதம் இருந்து வந்த சமூகத்தின் மீது, தனது ஒழுக்கச் சட்டக் கோவையைக் குர்ஆன் மூலம் ஏற்படுத்தியபோது, பெண்கள் அனுபவித்த சில சுதந்திரங்கள் மீது சகிப்பு தன்மை காட்ட வேண்டியிருந்தது. முகமதுநபிகள் தனது வாழ்க்கையை விதவையுடன் தொடங்கிய போதும், விவாகரத்து மீது தனது எதிர்ப்பைத் தெரிவித்தே வந்தார். ஆனால் சமூகத்தில் ஜனநாயக எல்லையை அவரால் மீறமுடியவில்லை. ஆண்கள் "தலாக்" கூறிப் பெண்ணைக் கைவிட்டு செல்லுவது அதிகரித்தபோது, விவாகரத்துக்கு எதிராகவே அவர் பல சந்தர்ப்பத்தில் கருத்துரைத்துள்ளார். அதுபோல் ஒரு பெண் தான் விவாகரத்து செய்ய உள்ளதாக நபிகள் இடம் கூறியபோது, அவர் இதை எதிர்க்கின்றார். அப்போது அப்பெண் இது கட்டளையா? அல்லது ஆலோசனையா? என்று கேட்க, நபிகள் ஆலோசனை என்று கூறிப் பின்வாங்குகின்றார். அதேநேரம் அப்பெண் நபிகளின் கூற்றை அலட்சியபடுத்தி விவாகரத்து செய்கின்றார். இத்தகவலை அஸ்கர் அலி எஞ்ஜினியர் எழுதிய ''முஸ்லீம் பெண்களும் அவர்களுடைய உரிமைகளும்" என்ற நூலில் காணமுடிகின்றது.


ஆகவே, அரபு சமூகத்தில்; பெண்கூட விவாகரத்துரிமையை மிகச் சுதந்திரமாக அக்காலத்தில் கொண்டு இருந்தாள். ஆண்கள் எவ்வளவு இலகுவாக விவாகரத்தைப் பெற்றனரோ அதே அளவுக்குப் பெண் பெற்றிருந்தாள். தனிச்சொத்துரிமையின் வளர்ச்சி பெற்ற வழியில் ஆணின் விவாகரத்து பெண்ணைப் பொருளியல் ரீதியில் படுமோசமான வாழ்க்கைக்கு இட்டுச்சென்றது. அதே நேரம் சொத்துரிமையை வைத்திருந்தோர், விவாகரத்தை இலகுவாக எடுத்தனர். தனிச்சொத்துரிமை ஆதிக்கம் பெற்று வளர்ந்த போக்கில், பெண்கள் பாதிக்கப்பட்ட நிலையில், நபிகள் பெண்ணுக்கான சொத்துப் பாதுகாப்பை வைப்பதன் மூலம், பெண்ணின் பொருளாதாரச் சீரழிவைத் தடுக்க பெண்ணின் பங்கு தெளிவாக்கப்படுகின்றது. இது மற்றைய மதங்களில் இருந்து வேறுபட்ட ஒரு முற்போக்கான வடிவமாகும்;. விவாகரத்துக்குள்ளாகும் பெண் மறு திருமணம் செய்யும் உரிமையைக் கொண்டிருந்தாள். இதுவும் மற்ற மதங்களில் இருந்து ஒரு முற்போக்கான பாத்திரமாகும்;. இது நபிகளின் கண்டுபிடிப்போ, அல்லது புதிய புரட்சியோ அல்ல. நபிகள் இருந்த உரிமையைத் தனது போதனைகளில் அங்கீகரித்து ஒழுங்குபடுத்தினார். அவ்வளவே. ஆனால் பின்னால் மாறிவந்த தனிச்சொத்துரிமையின் ஆதிக்கம் பெண்ணின் சொத்துரிமையை முற்றாக ஆணாதிக்க ஜனநாயகத்தில் பிடுங்கியபோது குர்ஆன் அதற்கு இசைவாக இது இன்று மறுவாசிப்பு செய்து, நியாயப்படுத்தியது. பெண்ணின் உரிமைகள் நபிகளின் ஒழுக்கப் பண்பாட்டில், கடவுளுக்கான மதிப்புடன் தனிச்சொத்துரிமையால் விபச்சாரம் செய்யப்பட்டபோது, கடவுள் சொத்துரிமையின் வாரிசாகினார்.


பெண்ணின் விவாகரத்து, மறுமணம், குழந்தையின் எதிர்காலம், பெண்ணின் பொருளாதாரப் பாதுகாப்பு போன்றன தனிச்சொத்துரிமை வளர்ச்சியில் பெண்ணுக்கு எதிராக மாறிச் சென்ற நிலையில், பெண்ணின் சீரழிவைப் பாதுகாக்க நபிகள் இதைச் சீர்திருத்திய ஒழுக்கம்தான் பெண் பற்றிய குர்ஆனின் விளக்கமாகும்;. இந்த ஒழுக்கக் கோவையை நபிகள் ஏற்படுத்திய அதேநேரம், தனிச்சொத்துரிமை ஆதிக்கத்தால் பெண் இழந்து, ஆண் பெற்று வந்த ஆதிக்கத்தையும், அதையொட்டிய நபிகளின் ஆணாதிக்க ஒழுக்கமாக்கியதை, தொடர்ந்து நாம் பார்ப்போம்.


அத் 4.3,4,7,11,12, இல், ''அநாதை(பெண்)களுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். ஆனால் நீதமாக நடத்திட முடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின், ஒரு பெண்ணை மட்டும் மணமுடித்துக் கொள்ளுங்கள்; அல்லது உங்கள் கரங்களைச் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையே மனைவியாக்கிக் கொள்ளுங்கள். அத்துடன் நீங்கள் அப்பெண்ணுக்குக் கொடுக்கும் அன்பளிப்பை முற்றாகக் கொடுத்துவிடும்படி கோருகின்றார். அப்பெண்ணின் அனுமதி இருந்தால் மட்டும் ஆண் அப்பெண்ணின் சொத்தில் அனுபவிக்கமுடியும்;. இறந்தவரின் சொத்தில் ஆண், பெண்ணுக்குச் சமப்பங்கு வழங்கக் கோருகின்றது. குழந்தைக்கான விடயத்தில் பெண்ணின் சொத்தைப் போல், ஆண் இருமடங்கு செலவு செய்யக் கோருகின்றது. அதேநேரம் ஒருவரின் சொத்தில் பங்கு பெறுவது தொடர்பாக அவரைச் சுற்றித் தெளிவாகப் பங்கு பிரிக்கப்பட்டுள்ளது."19 நபிகள் பெண்வழி சமூகத்தில் இருந்து ஆண்வழிச் சமூகம் வளர்ச்சி பெற்ற நிலையில் பெண்ணின் துயரத்தில் இருந்து ஆண்வழிச் சமூகத்தில் செய்த சீர்திருத்தமே இவை.


பெண்ணின் பொருளாதாரப் பாதுகாப்பு மீது அதிக கவனம் செலுத்தியே இஸ்லாம் மதத்தை நிறுவ முடிந்தது. நபிகள் தன்வாழ்க்கை முழுக்க நடத்திய பல படையெடுப்புகளில் ஆண்களின் இழப்பு பெண்களை அநாதையாக்கியது. அதே நேரம் கொல்லப்பட்ட எதிரியின் மனைவிகள், குழந்தைகள் அநாதையாதல், மற்றும் சிறைபிடிக்கப்பட்ட பெண்கள், மற்றும் யுத்தத்தால் பெண்கள் ஆண்களைப் பெற முடியாத சீரழிவுகள் எதிர்கொள்ளப்பட்டது. இதனால், ஆணாதிக்கச் சமூகத்தில் ஆண், பெண் மீதான யுத்த வன்முறை, மற்றும் அநாதைகள் மீதான பாலியல் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்த, ஆணுக்குப் பல மனைவிமுறையை ஒழுக்கமாக்கினர். இங்கு பெண்களின் உரிமை பற்றி அக்கறை காட்டப்படவில்லை.


இந்த ஆண்களின் சலுகை, பல மனைவிமாரை வைத்திருக்கும் உரிமை, பெண் விவாகரத்து எடுப்பதை அச்சுறுத்தியது. விவாகரத்துரிமையைப் பெண்ணிடம் இருந்து இந்த ஆணாதிக்கம் மறைமுகமாகப் பறித்தெடுத்தபோது, அது ஆணுக்குச் சலுகையாக மாறியது. சமூகத்தில் அதிகரித்த பெண்ணின் எண்ணிக்கை, பலதாரமணத்தை ஆணுக்கு வழங்கியது. ஆணின் விவாகரத்துரிமை பெண்ணை மேலும் அடிமையாக்கி, பெண் மீதான ஆணின் விவாகரத்து பெண்களைப் பாலியல் ரீதியில் அனுபவித்த பின் விவாகரத்தும், புதிய பெண்ணைப் பலதார மணத்துக்குள் இணைத்துக் கொள்வதும் என்ற நபிகளின் இந்தச் சீர்திருத்தம் ஆணாதிக்க வழியில் மேலும் சீரழிந்து வளர்ச்சி பெற்றது. இது பெண்ணின் சொத்துரிமைப் பாதுகாப்பைக் கேலி செய்தது. பெண்ணைப் பாதுகாக்க வழங்கிய சொத்துரிமை ஆணின் பலதார மணத்தில் சொத்து இழப்புக்கு வழிகாட்டியது.


பெண் குடும்பத்தை விட்டு வெளியேறுவது அச்சத்தை ஏற்படுத்தும் சீரழிவுக்கு இட்டுச் சென்றது. ஆண்களின் கரங்களில் சிக்கிய பெண்ணைத் திருமணம் செய்ய நபிகள் ஆலோசனை வழங்குகின்றார். அந்தளவுக்கு யுத்தக் கைதிகளாகப் பெண்கள் சிக்கியதும், பாலியல் ரீதியில் அனுபவித்ததையும் நபிகளால் தடுக்க முடியவில்லை. யுத்தத்தை நடத்தியவர் முன்னால் பெண்கள் கற்பழிக்கப்பட்டு, சிதைக்கப்பட்டபோது, திருமணம் மூலம் அதைத் தணிக்க முயன்றாரே ஒழிய தடுக்கவே (ஏனெனின் யுத்தத்தில் பெண்ணை அடைவது யுத்த உற்சாகத்தின் வடிவமாக இருந்து வருகின்றது) முடியவில்லை. அதை அங்கீகரித்தபடியே அதைத் திருமணத்தில் சாந்தப்படுத்த முனைந்தார்.


இங்கு பெண்களின் பக்கத்தில் இருந்து நபிகள் இதை அணுகவில்லை. மாறாக, ஆணாதிக்கத்தின் பக்கத்தில் இருந்தே அணுகிய நபிகள், குர்ஆன் மூலம் பெண்களுக்குச் சில பாதுகாப்பை வழங்க முனைந்தார். ஆனால், ஆணாதிக்கச் சமூகத்தின் வளர்ச்சிக்கு முன்னால்; நபிகளின் கோட்பாடுகள் தூக்கியெறியப்பட்டன. அவரின் தொடர்ச்சியான யுத்தம் சமூகத்தைச் சிதைக்க, ஆண் பெண்ணுக்குப் பரிசு கொடுத்துத் திருமணம் செய்தது படிப்படியாக அவசியமற்றதாகி, எதிர் நிலைக்குக் கவிழ்ந்தது. தனிச் சொத்தின் வாரிசுரிமை ஆணுக்கு மாற, அதைப் பெறும் வளர்ச்சியில் ஆண் சொத்தைப் பெண்ணிடம் எதிர்பார்ப்பது அவசியமாகியது.


சமூகத்தில் இருந்து உருவான நபிகள் தனது ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில், பெண்ணை ஆணின் விளைநிலமாகக் கருதியதும், ஆணின் உரிமையை மீள உறுதி செய்ததுடன், இன்றைய நிலைக்கு ஏற்ப ஆணாதிக்கத்தை முஸ்லிம் மதம் குர்ஆன் ஊடாக நிறுவமுடிந்தது. இதை மேலும் பார்ப்போம்.


பாகிஸ்தான் சிறையில் உள்ள 70 சதவீதமான பெண் கைதிகளைப் பொலிசார் பாலியலில் பல்வேறு வன்முறைக்கு உள்ளாக்குகின்றனர். 90 சதவீதமான பெண்களுக்குத் தாம் எந்தச் சட்டத்தின் கீழ் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றோம் எனத் தெரியாது. 50 முதல் 80 சதவீதமான பெண்கள் ''ஹ்தூக்" கீழ் அடைக்கப்பட்டு உள்ளனர். இச்சட்டம் பெண்ணைச் சந்தேகத்துக்குரிய காரணம் மட்டுமே குற்றவாளியாக்குகின்றது. அதேநேரம், ஆண்களுக்கு இச்சட்டப்படி நான்கு சாட்சிகள் மூலமே குற்றவாளி என நிறுவ முடியும்.20 ஆனால் ஹ்தூக் சட்டம், பெண்ணுக்கு எதிரானதாக, மேலும் ஆணாதிக்கமாகத் திரிபடைந்ததையே மேலுள்ளது காட்டுகின்றது. இதன் அடிப்படையான ஆணாதிக்க விளக்கத்தைப் பார்ப்போம்.


அத்.4.15,16,21,22, இல், ''உங்களுடைய பெண்களில் எவர் மானக்கேடான செயல் புரிந்துவிடுகின்றார்களோ, அவர்களின் குற்றத்தை நிறுவ நான்கு சாட்சியைக் கொண்டுவாருங்கள். அவர்கள் சாட்சியளித்து விட்டால் அப்பெண்களுக்கு மரணம்வரை, அல்லது அல்லாஹ் அவர்களுக்கு ஏதேனுமொரு தீர்ப்பை வழங்கும்வரை அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள். விதவைப் பெண்களின் வாரிசுதாரராக இருந்து அப் பெண்ணின் சொத்தை அபகரிக்காது இருக்க கோருகின்றது."19


இந்த ஷரீஆ சட்டமே பெண்ணை இழிவுபடுத்துகின்றது. குர்ஆன் தன்னகத்தே என்னதான் மறுவாசிப்புக்குப் பின்னால் ஜனநாயக வேடம் போட்டாலும், இஸ்லாமியச் சட்டங்கள் என்று வருகின்றபோது, கொடூரமாகத் தன்னை வெளிப்படுத்துகின்றது. உதாரணமாகப் பாகிஸ்தான் ஷரீஆ சட்டத்தைத் தொடர்ந்து பெண்களின் துன்பம் எண்ணில் அடங்காதவாறு அதிகரித்தது. ஆணாதிக்க நிலப்பிரபுத்துவ இஸ்லாமிய ஷரீஆ சட்டங்கள் பெண் மீது தனது கொடூரமான அடக்குமுறையைக் கையாள்வதை ''நாங்கள் ஆண்களுக்காகப் படைக்கப்பட்ட மாணிக்கங்கள்"(188)21 என்ற தலைப்பிலான கட்டுரை தெளிவாக்குகின்றது.


பாகிஸ்தானில் மூன்று மணிநேரத்துக்கு ஒரு கற்பழிப்பு நடப்பதாகவும், 65 சதவீதமான கற்பழிப்பு இளம் வயதினருக்கு நிகழ்வதுடன், நான்கில் ஒன்று கும்பல் பாலியல் கற்பழிப்பாகவும் இருக்கின்றது. நீதிமன்றத்துக்கு வரும் வழக்கில் இஸ்லாமிய ஷரீஆ சட்டம் ஆணாதிக்கம் சார்ந்து பெண்ணைத் துன்புறுத்துகின்றது. பெண் மிகக் கேவலமாகச் சிதைக்கப் படுவதுடன், பெண் குற்றத்தை நிறுவாவிட்டால் அவளுக்குக் கசையடியும், சிறைத் தண்டனையும் பரிசளிக்கப்படுகின்றது. கற்பழிப்புக்கு மேலாகப் பெண் அதற்காகத் தண்டனையும் ஷரீஆ சட்டம் வழங்குகின்றது. இதுதான் நபிகள் பெண்களுக்குக் கொடுத்த ஆணாதிக்கக் கொடையாகும்.


பெண்ணின் மீதான சந்தேகம் மற்றும் ஆணாதிக்க ஒழுக்கம் பற்றிய மதிப்பீட்டை மீறும் பெண்களைத் தண்டிக்கும் உரிமையை நபிகள் அங்கீகரிக்கின்றார். அப்பெண்களை வீட்டில் சிறைவைக்கும் அதிகாரத்தை வழங்கியதன் மூலம் பெண்ணின் நியாயம் மறுக்கப்பட்டு ஆணின் அதிகாரம் மதத்தால் அங்கீகரிக்கப்பட்டது. அத்துடன் இன்று முஸ்லிம் பெண்கள் வீட்டில் பூட்டிவைக்க இதுவே அடிப்படையாகி, முழுப் பெண்களையும் பாலியல் கட்டுப்பாட்டுக் கண்காணிப்புக்குள்ளாக்கிக் குற்றவாளியாக்கத் துணையானது. இது எல்லையற்ற வகையில் ஆணாதிக்க விளக்கம் கொடுக்கவும், சாட்சி என்பது ஆணாதிக்கச் சமூகச் சாட்சியாக, அதுவே ஒழுக்க எல்லையாகியது. இதனால் வீட்டில் தொடர்ச்சியான சிறைக்குள் எல்லாப் பெண்களும் தள்ளப்பட்டுள்ளனர்.


அத்4.22,23 இல், ''தந்தையார் திருமணம் செய்த பெண்ணை மகன் திருமணம் செய்யாது இருக்கக் கோருகின்றது. அத்துடன் இது முன்பு நடந்து விட்டது. ஆனால், இது மானக்கேடானதும், வெறுக்கத் தக்கதும், கீழ்த்தரமானதுமான நடத்தையாகும். திருமணம் செய்ய விலக்கப்பட்ட பெண்கள் தொடர்பாகத் தாய், புதல்விகள், சகோதரிகள், தந்தையின் சகோதரர்கள், சகோதரரின் புதல்விகள், பாலூட்டிய மற்றைய தாய்மார், பால்குடி சகோதரிகள், மனைவியாரின் தாய்மார், மனைவியின் முன்னாள் கணவனுக்குப் பிறந்த பெண், உங்கள் மடியில் வளர்ந்த பிள்ளைகள் உடன் திருமணம், பாலியல் உடலுறவு தவிர்க்கக் கோரப்பட்டது. திருமணம் செய்தும் மனைவியுடன் உடலுறவு கொள்ளவில்லை எனின் அவர்களின் முதல் திருமணத்தில் குழந்தையுடன் உடலுறவு கொள்ளமுடியும். மகன் வழி மனைவியுடனும் மற்றும் மகள் வழி பிள்ளைகளுடன் உடலுறவு தடுக்கப்பட்டது. அத்துடன் இரு சகோதரிகளை மணப்பது தடை செய்யப்பட்டது. ஆனால் இவை முன்பு நடந்து விட்டது."19


நபிகளின் தனிச்சொத்துரிமை ஆணாதிக்கச் சமூக ஒழுக்கத்தை மதத்தினூடாக உறுதிப்படுத்தி நிறுவ முற்பட்டபோது, பழைய ஆண் - பெண் உறவில் கட்டுப்பாடு அவசியமாகின்றது. இந்த வகையில் வரைமுறையற்ற புணர்ச்சியைத் தடுப்பது மட்டுமின்றி, பின்னால் உருவான குலத்துக்குக் குலம் நடந்த திருமணத்தின் எச்சச் சொச்சங்களையும் தடுப்பது அவசியமாகின்றது. இந்த வகையில் இரு சகோதரிகளைத் திருமணம் செய்யத் தடை வருகின்றது. அத்துடன் வரைமுறையற்ற புணர்ச்சிக் காலத்தில் நிலவிய அனைத்து வகை உறவுகளின் எச்சச் சொச்சங்களையும் தடை செய்யப்படுகின்றது. ''இது முன்னால் நடந்து விட்டது" என்றதன் ஊடாக இதன் வரலாற்று ஆதாரத்தைக் குர்ஆன் ஏற்றுக் கொண்டு தனியுடைமை ஒருதாரமணத்தைப் பெண்களுக்கும், பலதாரமணத்தை ஆணுக்கும் ஒழுக்கமாக்கியபோது பழையதையும், அதன் எச்சச் சொச்சத்தையும் மறுப்பது கேவலமானதாகக் காட்டி மறுப்பது அவசியமாகின்றது. அது எல்லா ஆணாதிக்க ஒருதாரமணத்தைப் போல் கட்டமைக்கப்பட்டது.


வரைமுறையற்ற புணர்ச்சி எவ்வளவுக்குச் சுதந்திரமாக இருந்ததோ, அந்தளவுக்கும் சமூக இயங்கியல் வளர்ச்சியை மட்டுப்படுத்தி, மிருகத்தின் எல்லையில் நீடித்ததோ, அந்தளவுக்குப் பின்தங்கிய பாலியல் உறவாக நீடித்தது. அதில் இருந்து ஏற்படுத்தப்பட்ட தடை சமூகத்தை வளர்ச்சிக்கு உள்ளாக்கிய அதேநேரம், இது தனிச் சொத்துரிமையூடாக இயங்கியல் வளர்ச்சிகண்ட ஆணாதிக்கத்தின் விளைவால், பெண்ணின் சுதந்திரத்தை மட்டுப்படுத்த அடிப்படையாகியது. இது பெண்ணை, ஆணின் தனிச்சொத்துரிமை சார்ந்து பின்னிழுபட்டு வாழ வைத்ததன் மூலம் சமுதாயத்தின் வளர்ச்சி இயங்கியலுக்கு முரணாக முடமாக்கப்பட்டது.


திருமண விலக்கு என்பது ஆதிக்கத்தாலும் அதிகாரத்தாலும் எல்லைப்படுத்தப்பட்டது. இதை ஆராய்வோம். அத் 4.24,25 இல், ''மேலும் பிறருக்கு மனைவியராக இருக்கின்றவர்களும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளனர். ஆனால் யுத்தத்தில்) உங்கள் கைவசம் வந்து விட்ட பெண்கள் விதிவிலக்கானவர்கள். இது இறைச் சட்டமாகும். இவர்களைத் தவிர பணத்தின் வாயிலாகப் பெண்ணை அடைவது உரிமையாகும்;. ஆனால் இது நிபந்தனைக்கு உட்பட்டது. அதாவது திருமணத்தின் எல்லைவரை கொண்டுவந்து விடவேண்டும்;. இதற்கு முன் உடலுறவு அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இந்த எல்லையில் உடலுறவு அனுமதிக்கப்படுகின்றது."19


யுத்தம் பெண்களின் மீதான புதிய ஆணாதிக்க அடக்குமுறையாக, விதிவிலக்கு பெண்ணுக்குக் கற்பழிப்பாக இருந்துள்ளது. யுத்தத்தில் வெல்பவனின் சொத்தாகப் பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டனர். பெண் மீதான கற்பழிப்பை இறைச் சட்டத்தின் ஊடாக ஜனநாயகப்படுத்தினர். இதன் மூலம் அநீதிகள் இறைச் சட்டத்தினூடாகச் சமூக அங்கீகாரமாகியது. நபிகள் வாழ்ந்த காலத்தில் நடத்திய யுத்தங்களின் உற்சாகமான ஆணாதிக்க வெற்றிக்கு இவை நிறையவே பங்காற்றியுள்ளது. இதனால் தான் யுத்தத்தில் கைப்பற்றிய பெண்ணின் மீதான ஆணின் உரிமை குர்ஆன் சுட்டிக்காட்டியவாறு கற்பழிப்புகளின் மீது பாதுகாத்து நிற்கின்றது. அப்பெண்கள் அடிமையாக, பாலியல் நுகர்வுப் பண்டமாக ஆண்களின் காலடியில் இஸ்லாமின் பெயரில் வீழ்த்தப்பட்டனர். யுத்தப் பெண் கைதிகளின் மீதான பாலியல் அதிகாரத்தைப் பெற்றவர்கள், தமது அதிகாரத்தால் சகமனிதனின் மனைவியைக் கைப்பற்றுவது அதிகரித்ததைத் தொடர்ந்து, இது விலக்கப்பட்டுத் தடைசெய்யப்பட்டது.


இந்தத் தடையிலும் பணம் மூலம் பெண்ணை அடைவது அங்கீகரிக்கப்பட்டது. அதாவது யுத்தத்தில் சூறையாடிப் பணக்காரரான அதிகாரவர்க்கம் பணத்தைக் கொண்டு சக மனிதனின் மனைவியை அடைவது நிபந்தனையுடன் அங்கீகரித்ததன் மூலம், ஆணாதிக்க யுத்தம் வெற்றிகரமாகத் தொடர முடிந்;தது. இதன் மூலம் சொத்துடைய ஆணாதிக்க வர்க்க நலன்களை நபிகள் இறைச் சட்டமாக்கினார். இது பெண் மீதான ஆணாதிக்க அதிகாரத்தை மேலும் மூலதனத்துக்கு உட்படுத்துகின்றது. இதனைத் தொடர்ந்து கவனிப்போம்.


அத் 4.34,35 இல், ''ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர். இதற்குக் காரணம் அல்லாஹ் அவர்களில் சிலருக்குச் சிலரைவிட உயர்வை அளித்திருக்கிறான் என்பதும், ஆண்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து செலவு செய்கிறார்கள் என்பதுமாகும்;. எனவே, ஒழுக்கமான பெண்கள் கீழ்படிந்தே நடப்பார்கள். மேலும் ஆண்கள் இல்லாதபோது (அப்பெண்கள்) அல்லாவின் பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் இருக்கின்ற காரணத்தால் அவர்களின் உரிமைகளைப் பேணுவார்கள். மேலும் எந்தப் பெண்கள் குறித்து அவர்கள் (தம் கணவர்கள்) மாறு செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ அந்தப் பெண்களுக்கு, நல்லறிவு புகட்டுங்கள்; படுக்கைகளிலிருந்தும் அவர்களை ஒதுக்கி வையுங்கள்; மேலும் அவர்களை அடியுங்கள்."19 பெண்களை ஆணுக்குக் கீழ்ப்படிந்து நடக்கக் கோரும் குர்ஆன் பெண்ணின் கீழ்ப்படிவுக்கான காரணம் ஆணின் செல்வத்தில் வாழ்பவள் என்பதை விளக்குகின்றது. இந்தச் செல்வத்தை அல்லாஹ் கொடுத்தார் என்ற மூலம் ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமையை இறைச் சட்டமாக்கினர்.


இதன் மீதான போராட்டமின்றி பெண் விடுதலை சாத்தியமில்லை. பெண் இழந்துபோன சொத்துரிமையை மீளப் பெறும் சமூகமயமாக்கல் போராட்டத்தினூடாகவே, பெண்ணின் விடுதலை நிபந்தனையாகின்றது. தனிச் சொத்துரிமையே பெண் அடிமைப்பட்டதற்குக் காரணம் என்பதை, நபிகள் புரிந்து, அதனால் பெண்களை அதற்குட்பட்டு வாழக் கோரிய அளவுக்கு இன்று பெண்ணிலைவாதிகள் தனிச்சொத்துரிமைக்கான காரணத்தைக் காண மறுக்கின்றனர். நபிகள் அனுபவரீதியாக யுத்தத்தில் கொள்ளையடித்த செல்வச் செழிப்பில் பெண் மேலும் மேலும் அடிமையாகச் சிதைந்து சென்றதற்கான காரணத்தை ஒரு தத்துவவாதிக்குரிய அனுபவத்துடன் சரியாகவே புரிந்து கொண்டு விளக்கினார். இதனால் பெண்களின் உரிமைகள் சிலவற்றை நிபந்தனைக்குட்படுத்தி பாதுகாக்க முற்பட்டார். ஆனால், ஆணாதிக்கச் சொத்துரிமை, யுத்தச் செழிப்பால் வேகமாக வளர்ந்த போது, பெண்ணின் அடிமைத்தனத்தை அங்கீகரிப்பது மட்டுமே நபிகளின் அதிகாரத்தை உறுதி செய்யும் சமூக எல்லையாகயிருந்தது.


இந்த அனுபவத்தை எதார்த்தவாதியாகத் தொகுத்துக் கொண்ட நபிகள், பெண்ணின் அடிமைத்தனத்தைச் சொத்துரிமைக்குப் பின்னால் சரியாகவே கண்டார். இதனடிப்படையில் விளக்கியதுடன் சொத்துரிமையை இறைவனின் சட்டமாகக் காட்டியதன் மூலம், ஆணாதிக்கத்தைச் சட்டமாக்கினர். இந்தளவுக்கு நபிகள் புரிந்தளவுக்கு மார்க்சியத்துக்கு எதிரான திருத்தக் கோட்பாட்டாளர்கள், பெண்ணியவாதிகள் புரிந்து கொள்ள, சொந்த வர்க்க நலன்களுடன் பார்க்க மறுக்கின்றனர். அதாவது, மார்க்சியத்துக்கு எதிரான பெண்ணியவாதிகள் தனிச் சொத்துரிமையின் ஆதிக்க, ஆணாதிக்கப் போக்கைக் காண மறுத்து, அது பற்றிய மௌனத்துடன் பெண்ணுக்கு அதற்குட்பட்ட தீர்வை நபிகள் வழியில் மீளவும் வைக்கின்றனர்.


பெண்ணின் சொத்துரிமை இன்மையே பெண்ணின் அடிமைத் ;தனத்துக்குக் காரணம், என்பதைக் குர்ஆன் ஏற்றுக்கொண்டே அடிமைத் ;தனத்தை நியாயப்படுத்துகின்றது. அடுத்து பெண்ணின் மீதான ஆணின் சந்தேகம் அப்பெண்ணைக் கண்காணிக்க முடியும்;. புத்தியும், பாலுறவிலிருந்து விலகியும், அடிக்கவும் அல்லாஹ் அனுமதிக்கின்றார். பெண் மீதான எல்லா மனிதச் சமூகமும் அடிமைப்படுத்தி எதைச் செய்கின்றதோ, அதையே நபிகளின் ஆணாதிக்கக் கட்டளைப்படி, பின்னால் குர்ஆனும் அடிக்க அனுமதிக்கின்றது. பெண்ணின் உரிமை, அவளின் ஜனநாயகம், அவளின் தெரிவு எல்லாம் இஸ்லாம் மறுத்த பெண்ணை அடிக்க அனுமதித்ததன் மூலம் உண்மையில் இஸ்லாம் பெண்களுக்கு எதிராக உள்ள ஒருமதம்தான்;. இதைப் போற்றி வணங்குவதும் பாதுகாப்பதும் சொந்த விலங்கைப் பாதுகாக்கவும், ஆணிடம் அடி வாங்கிச் சிறுமைப்படவும் தான். இன்று ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், அல்ஜீரியா... என்று எங்கும் இஸ்லாமியப் புரட்சியைக் கோருபவர்களும் சரி, தனி நாட்டைக் கோருபவர்களும் சரி பெண்ணின் அடிமைத்தனத்தைக் குர்ஆனின் வழியில் அடக்கி ஒடுக்கத்தான் என்பதை அவர்களின் அதிகாரத்தில் சிக்கிய பெண்களின் நிலை காட்டுகின்றது.


அத் 24.23,24,25,26,31,33 இல், ''கற்புடைய, கள்ளங்கபடமற்ற, இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் மீது எவர் அவதூறு கூறுகின்றார்களோ அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கப்பட்டுள்ளார்கள். ஒழுக்கங் கெட்ட பெண்கள், ஒழுக்கங்கெட்ட ஆண்களுக்கும், ஒழுக்கங்கெட்ட ஆண்கள், ஒழுக்கங்கெட்ட பெண்களுக்கும் உரியவர்களாவர். தூய்மையான பெண்கள் தூய்மையான ஆண்களுக்கும், தூய்மையான ஆண்கள் தூய்மையான பெண்களுக்கும் உரியவர்களாவர். இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும். தங்களுடைய வெட்கத் தலங்களைப் பாதுகாக்கட்டும். தங்களுடைய அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும். அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர! மேலும், தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முந்தானையைப் போட்டுக் கொள்ளட்டும்... ஒழுக்கக்கேடான பெண் முன் கண்ணியமான முஸ்லிம் பெண் தன் அலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. ஏனெனின், தவறான வேட்கைக்கு அப்பெண் துணியலாம் என்பதால், அவள் முன் அலங்காரம் தவிர்க்கப்பட வேண்டும். ......தாங்கள் மறைத்து வைத்திருக்கும் தங்களின் அழகை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத் தங்களுடைய கால்களைப் பூமியில் அடித்துக் கொண்டு நடக்க வேண்டும். மேலும், உலக வாழ்க்கையில் இலாபங்களைத் தேடிக்கொள்வதற்காக உங்கள் அடிமைப் பெண்களை விபச்சாரத்திற்காகப் பலவந்தப்படுத்தாதீர்கள்."91 இறை வழிபாடு கொண்ட கற்பு பெண்ணின் அணிகலன் ஆகின்றது. அவள் மீது குற்றம் சாட்ட முடியாது. இதற்கு இறைவன் சாட்சியாகிப் பாதுகாப்பார் என்றதன் மூலம் பெண்ணிடம் ஆணாதிக்கக் கற்பைப் பேணக் கோருகின்றது. குர்ஆன். ஆனால், இது ஆணுக்குக் கண்டும் காணாது விடப்படுகின்றது.


இதில் இருந்தே கற்பு இழந்த, ஒழுக்கம் கெட்ட பெண், கற்பு அற்ற ஆணையே திருமணம் செய்ய வேண்டும். அதாவது ஒழுக்கம் ஆணாதிக்க எல்லையால் சமூகத்தை இரண்டாக்கி, ஒழுக்கமுள்ளவன் (இங்கு ஒழுக்கம் சொத்துரிமை அதிகாரத்தால் தீர்மானிக்கப்படுகின்றது.) தனது சொந்த பலத்தால் சமுதாயத்தை ஒழுங்குபடுத்த அதிகாரத்தைக் கையாளும் போது எழுந்ததே குர்ஆன் ஆகும். இங்கு மனித உணர்வுகளை ஆணாதிக்க ஒழுக்கத்தின் முன் புறக்கணித்து அடக்குமுறைகளைப் பரிசளிக்கின்றது. பெண்ணுக்கும் ஆணுக்கும் உடுப்பு, அழகு வெளிப்படுத்துவதில் வேறுபட்ட வகையில் ஆணாதிக்க ஒழுக்கம் முன்வைக்கப்படுகின்றது. பெண்ணின் அழகை மறைக்கக் கோரியும், அவளின் முகத்தை மூடிக் கட்டிய பின் அவளை வீட்டில் பூட்டி வைக்கும் குர்ஆனில் ஆணாதிக்க விளக்கம் ஆதாரமாகவுள்ளது.


முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமேயான ஆணாதிக்க அடக்குமுறையின் வடிவமாக நீடிக்கும் முகத்தை மறைக்கும் ஃபர்தா என்ற ஆணாதிக்க வடிவம், மற்றைய சமூகத்தில் வேறுபட்ட எல்லைக்குள்தான் உள்ளது. இன்று இதையே ஆப்கானிஸ்தான் முதல் தீவிர இஸ்லாமிய மதவாதிகளின் அதிகாரம் ஏற்பட்ட பிரதேசங்களில், பெண் முகத்தை மூடியபடி வீட்டுக்குள் அடைத்து வரும் ஆணாதிக்க அதிகார வடிவங்கள், பெண்ணின் இயல்பான வாழ்க்கையைக் கூட நசுக்கி ஒடுக்குகின்றது. தீவிரத் தேசியவாதம் கொண்ட எல்லா வலது பிரிவுகளும் ஆணாதிக்க எல்லையில் இருந்தே இவைகளைக் கடைப்பிடித்து வருகின்றது. இதையொத்த ஆணாதிக்க ஒடுக்குமுறைகள் பல்வேறு சமுதாயங்களில் காணப்படுகின்றன. உதாரணமாக, கென்யா நாட்டில் பெண் குழந்தைகள் பிறந்தவுடன் அப்பெண் குழந்தையின் பெண்ணுறுப்பில் உள்ள உணர்ச்சிப் பகுதியை வெட்டி எறியப்பட்டுப் பின் பெண்ணுறுப்பைத் தைத்து விடுவார்கள். அப்பெண் திருமணம் ஆன பின்பே அத்தையலை அறுத்து, ஆணாதிக்கக் கற்பை உறுதி செய்கின்றனர். இதற்கும் எம்நாட்டில் இருக்கும் பல்வேறு ஆணாதிக்க ஒழுக்கக்கோவைக்கும் அதிக வேறுபாடில்லை.


ஆண்களின் காமப் பார்வையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் கவசமாக ஃபர்தா உள்ளது என்ற வாதமும், ஃபர்தாவை அணியாமல் விடுவது பெண்ணின் உரிமை என்ற நேர் எதிர் பார்வைகளும் முன்வைக்கப்படுகின்றன. இரண்டுமே சமுதாய ரீதியில் ஆணாதிக்கக் கூறுகளைக் கொண்டவை. அதாவது ஆணாதிக்கத்தின் காமப் பார்வையில் இருந்து பாதுகாக்கும் கவசம் ஃபர்தா என்ற கூற்றின் பின், ஆணாதிக்கம் தன்னையும், தனது ஆணாதிக்க வக்கிரத்தையும் நியாயப்படுத்துகின்றது. ஆணாதிக்கக் காமத்தனத்தைப் பாதுகாக்கவும், அதைக் கண்டிக்கவும் மறுத்து மத ஒழுக்கத்தை ஆணாதிக்க வழியில் கோருகின்றது. மறுபுறம் ஃபர்தா அணியாமல் விடுவது பெண்ணின் உரிமை என்பதன் மூலம், அதைத் தூக்கி வீசும்போது ஆணாதிக்கக் காமக் கண்ணுக்குத் தீனி போடப் படுகின்றது.


இன்று ஏகாதிபத்தியம் பெண்ணை நிர்வாணமாக்கி, சினிமா முதல் கடற்கரை வரை நிறுத்திய எதார்த்த வழியில் ஃபர்தா துறப்பு, ஆணின் காமப் பசிக்குத் துணைபோகின்றது. அதாவது மார்பு தெரிய மேற்கில் பெண் திரிவது போல், முகம் தெரிய முஸ்லிம் நாடுகளில் பெண் திரிவது பெண்ணின் உரிமையாக இருப்பதில்லை. மாறாக, எப்போதும் ஆணாதிக்கத்தின் கோரிக்கையாக உள்ளது. ஆணாதிக்கத்தின் மதப் பழமைக்கும், ஏகாதிபத்திய நவீனத்துவத்துக்குமிடையில் உள்ள முரண்பாட்டில் பெண் மீதான விடுதலை பற்றியும், பெண் மீதான அடக்கு முறை பற்றியும் விவாதங்கள் ஒழுக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன.


பாட்டாளி வர்க்கம் இதை எப்படி அணுகுகின்றது. ஃபர்தாவைப் பெண் அடக்குமுறையின் சின்னமாகக் காண்கின்றது. ஆணாதிக்க ஒழுக்கத்துக்குக் கவசமாகக் காண்கின்றது. பெண்ணின் இருண்ட கண்ணுக்குப் பகலை மறுக்கும் கவசமாகின்றது; முகத்துக்கு முன் போடப்பட்ட இரும்பு வேலியாகின்றது. இதற்கு முன்னால் சமூகம் என்ற இல்லற்றோனிக் கவசம் பெண்ணை மூடி மறைக்கின்றது. ஆனால் இதை ஒழிப்பதில் ஏகாதிபத்தியப் பெண்ணியத்தில் இருந்து திட்டவட்டமாக முரண்படுகின்றது. அதாவது, ஆணாதிக்கக் காமத்தனத்துக்கு எதிரான போராட்டத்தில் ஆணைக் கண்டித்து, எதிர்த்து போராடி அதற்கு முடிவுகட்டுவதன் மூலம் ஃபர்தாவை ஒழிக்க முனைகின்றது. ஃபர்தாவைக் கழற்றுகின்ற ஏகாதிபத்தியக் காமப் பார்வைக்கு எதிரான போராட்டத்தில், ஏகாதிபத்திய வக்கிரத்தை எதிர்த்து அதை ஒழிக்கும் போராட்டத்தில் கோருகின்றது. இந்தப் போராட்டத்தில் பெண்களிடத்தில் ஃபர்தாவை தூக்கியெறியக் கோரும்போது, ஏகாதிபத்திய விபச்சாரப் பெண்ணியத்துக்கு எதிரான போராட்டத்திலும், பழமையான ஆணாதிக்கக் கண்ணோட்டத்துக்கு எதிரான போராட்டத்திலும் கோருகின்றது. அராஜகவாதப் பெண்ணிய நடத்தைகளை எதிர்க்கின்றது. இது ஏகாதிபத்தியப் பெண்ணியத்தில் சங்கமிப்பதைப் பறைசாற்றுகின்றது. மொத்தத்தில் பெண்ணியத்தை ஆணாதிக்கத்துக்கு எதிரான வர்க்க அரசியல் நடைமுறை போராட்டத்தில் ஆயுதபாணியாகியபடி, ஃபர்தாவை ஒழிக்க கோருகின்றது. அவ்வாறு இல்லாத ஃபர்தா ஒழிப்பு விபச்சாரமாக இருப்பதை எதிர்த்து அம்பலப்படுத்துகின்றது.


கலப்பு இன மக்கள் உள்ள நாடுகளில் பர்தாவைக் கழற்றுகின்றபோது முஸ்லிம் மத அடையாளத்தைப் பெண்களிடம் துறக்கக் கோருகின்றது. இது அனைத்துவகை பெண்களையும் சொந்த மத அடையாளங்களைத் துறக்கக் கோருவதன் மூலம், ஆணாதிக்க மத அடையாளக் காமப் பார்வையைச் சிதைக்க கோருகின்றது. இதன் மூலம் மத ஆணாதிக்க அடையாளங்களையும், ஃபர்தா போன்ற பெண் அடிமைச் சின்னங்களையும் போராட்டங்களின் ஊடாக ஒழிப்பதை நிபந்தனையாக்குகின்றது. இதுபோன்று, இஸ்லாம் மதம் பெண்ணுக்கு ஏற்படுத்திய மற்றொரு அடக்குமுறை சின்னத்தை ஆராய்வோம்.


குர்ஆன் அழகை மறைத்த பின் வீதியில் நடக்கும்போது, பெண் வருவதை வெளிப்படுத்த காலால் உதைத்து நடக்கக் கோரும் ஆணாதிக்க வக்கிரம் மதமாகின்றது. இயல்பான நடைக்குப் பதில் துன்பத்தில் நடக்கக் கோரும் வதையில் பெண்ணை நசுக்குகிறது. இந்த இறைக் கோட்பாட்டில் பெண்ணை வீட்டில் பூட்டியும், பல மனைவிகளை வீட்டில் அடைத்தும், அடிமைப் பெண்களால் வீட்டை நிரப்பிய பின் பெண்ணின் பாலியல் உணர்வு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், பெண்கள் தமக்கிடையில் ஓரினச் சேர்க்கையைத் தொடங்குவது தவிர்க்க முடியாதது ஆக்கியது. இதனால் அப்படிப்பட்ட பெண்கள் முன்னும் ஆணாதிக்க இறைமொழி மீளவும் அலங்காரத்தைத் தடுக்கக் கோருகின்றது. இயற்கையான பாலியல் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தி, பின் பக்க விளைவுகளைத் தடுக்க பெண்ணுக்குப் புதிய ஆணாதிக்கக் கட்டுப்பாடுகள் அவசியமாகின்றது.


யுத்தத்திலும், வறுமையிலும் இஸ்லாமிய ஆண்கள் கைப்பற்றிய பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி சம்பாதிப்பது முஸ்லிம் பண்பாடாகியது. இதில் குர்ஆன் சீர்திருத்தம் செய்ய அடிமைப் பெண்களைப் பலாத்காரம் செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்த வேண்டாம் என்று ஆணை வழங்குகின்றது. விரும்பியவளைப் பயன்படுத்த அனுமதித்து குர்ஆன் அதைத் தடுத்துவிடவில்லை. எந்தப் பெண் விரும்பி விபச்சாரத்தை நாடுவாள் என்பதை நபிகள் எழுப்பியதில்லை. உண்மையில் இதனூடாகச் சமுதாயத்தில் பெண்களின் போராட்டத்தை மட்டுப்படுத்த சீர்திருத்தத்தைப் புகுத்தி அல்லது விதிவிலக்கைக் கொடுத்து, ஆணாதிக்கத்துக்குப் பாதுகாப்பு வழங்கியதே நபிகளின் பெண் பற்றிய ஒழுக்கமாக இருந்தது. அடிமைப் பெண் என்பவள் ஆணின் பாலியல் பண்டம்தான் என்பதை எல்லா உலக அடிமை வரலாறுகளும் காட்டுகின்றன. இதைத் தடுக்க எந்தச் சீர்திருத்தமும் முயலவில்லை. சில விலக்குகளை மட்டுமே வழங்கி வந்தனர்.


சில புரட்சிகள,; சில மக்கள் கூட்டத்துக்கு மட்டும் விலக்கு அளித்து புரட்சி செய்தவனுக்குச் சலுகை அளித்தது. தனிச்சொத்துரிமை எல்லைக்குள்ளான ஆணாதிக்கப் புரட்சிகள், பெண்கள் கோரிய சீர்திருத்தங்கள் எல்லாம் சிலவற்றுக்குச் சலுகை அல்லது மாற்றம், இதற்கு அப்பால் எதையும் தாண்டியவையல்ல.