9_2006.jpg

திருச்சியில் கணினி மையங்களில் கல்லூரி மாணவிகளை ஆபாசப் படமெடுத்த காமவெறியன் லியாகத் அலியைத் தூக்கிலிடக் கோரி கடந்த ஜூன் மாதத்தில் பெண்கள் விடுதலை முன்னணி சுவரொட்டி பிரச்சார இயக்கத்தை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூலை 25ஆம் தேதி லியாகத் அலி சார்பில் அவனை பிணையில் விடக் கோரி நீதிமன்றத்தில் மனு

 தாக்கல் செய்யப் போவதை அறிந்து இவ்வமைப்பினர், அவனுக்கு பிணை வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, முழக்கத் தட்டிகளுடன் மனு கொடுக்கச் சென்றபோது, மனுவை வாங்க மறுத்த நீதிபதி, மனு வாங்கும் முறை கிடையாது என்று சட்டவாதம் பேசினார். இதைக் கண்டித்தும், ""காமவெறியன் லியாகத் அலியை பிணையில் விடாதே, தூக்கில் போடு!'' என்ற முழக்கங்களுடன் பெண்கள் விடுதலை முன்னணியினர் நீதிமன்ற வளாகத்திலேயே ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அரண்டு போன நீதித்துறையும் போலீசுத்துறையும் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததாகக் கூறி அனைவரையும் கைது செய்தது. போலீசு நிலையத்திலும் முழக்கமிட்டு போராடியதால், மாலை வரை போலீசு நிலையத்திலேயே வைத்திருந்து பின்னர் அனைவரையும் விடுவித்தது. இப்போராட்டம் காரணமாக, காமவெறியன் லியாகத் அலிக்குப் பிணை மறுக்கப்பட்டுள்ளதோடு, பெண்கள் விடுதலை முன்னணியின் எதிர்ப்பு காரணமாக பிணை மறுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றமும் பதிவு செய்துள்ளது. இப்போராட்டம், பெண்கள் விடுதலை முன்னணியின் உறுதியையும் போர்க்குணமிக்க செயல்பாட்டையும் நிரூபிப்பதாக அமைந்தது.

 

பு.ஜ. செய்தியாளர், திருச்சி.